வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ரேஷனில் ரூ.25 மளிகைப் பொருள் : வாங்க மக்கள் ஆர்வம்

தமிழக அரசின் 25 ரூபாய் மளிகை பாக்கெட் விற்பனை ரேஷன் கடைகளில் அமோகமாக நடந்து வருகிறது. தேவைக்கேற்ப எத்தனை பாக்கெட்டுகள் வேண்டுமானாலும் பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். விலையை கட்டுப்படுத்தக்கோரி வீதிக்கு வந்து, பல்வேறு அமைப்புக்கள் போராடும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில், மக்களுக்கு குறைந்த விலையில் ரேஷன் மூலம், மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தனியா, மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பட்டை, லவங்கம் கொண்ட பாக்கெட் 50 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய மக்கள் பின், தயக்கம் காட்டினர். இவற்றை 25 ரூபாய் பாக்கெட்டுகளாக குறைத்து வழங்கினால், வாங்க வசதியாக இருக்கும் என கிராமப்புற மக்கள் கருத்து தெரிவித்தனர். அதன்படியே, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு பொருட்களின் அளவை குறைத்து, 25 ரூபாய் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி 25 ரூபாய் மளிகை பாக்கெட்டுகள் ரேஷன் கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதில் தனியா தூள் 100, மிளகாய் தூள் 100, மிளகு தூள் 25, சீரகம் 25, சோம்பு 25, வெந்தயம் 25, கடுகு 25, கடலை பருப்பு 50, உளுந்தம் பருப்பு 50, கரம் மசாலா தூள் 15 கிராமும் பாக்கெட்டில் உள்ளன.

இந்த பாக்கெட்டுகள் 25 ரூபாய்க்கு கிடைப்பதால், இவற்றை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தனியார் ஏஜன்சியிடமிருந்து, கோபாலபுரத்தில் உள்ள கிடங்கிற்கு, மளிகை பாக்கெட்டுகள் வந்து குவிந்துள்ளன. இங்கிருந்து சென்னையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும் போது, "பொதுமக்கள் எத்தனை பாக்கெட்டுகள் வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம். மற்ற பொருட்கள் வாங்கும் போது தான் வாங்க வேண்டும் என்று இல்லை. தேவைக்கேற்ப ரேஷன் கடைகளுக்கு மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது' என்றனர்.
முருகன் - சென்னை,இந்தியா
2010-09-03 05:57:26 IST
அரசு பொருட்களை விற்பனை செய்யும் அரசு அங்காடிகளில் இந்த ஆட்சியை நடத்தும் கருணாநிதி யின் படத்தை போடுவது ஏன். அவருடைய வீட்டு பணத்தை செலவளித்த இதை விநியோகம் செய்கிறார். மக்களே சிந்தியுங்கள்....
R நயினார் - Khartoum,இந்தியா
2010-09-03 05:52:45 IST
என்ன தெரன்ஸ் அண்ணா நம்ம முதல்வர் கலக்குறாரு. எது எப்பிடியோ மக்கள் நல்ல இருந்தா சரி தான்....
தமிழன் - சவுதிArabia,இந்தியா
2010-09-03 05:16:11 IST
அதெல்லாம் சரி கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் தரம் எப்படி? ரேஷன் கடையை பற்றி எங்களுக்கு தெரியாதா என்ன....
NRN - சென்னை,இந்தியா
2010-09-03 05:04:27 IST
தேர்தல் முடிந்ததும் காணமல் போகும் இந்த 25 ரூபாய் திட்டம் அல்லது அடுத்த மாநிலத்துக்கு பறந்துவிடும்...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-09-03 05:02:07 IST
அந்த பாக்கெட் ல இருக்குற போட்டோ வ பார்த்தா கனிமொழி மாதிரி தெரியுது.... அய்யா மஞ்சள் துண்டு உத்தம ராசா, அப்படியே அந்த பாக்கெட்டில் அழகிரி, ஸ்டாலின், ராஜாதி அம்மாள், தாயாளு அம்மாள், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் போட்டோவையும் போடுங்கள். என்னமோ நீங்க கொள்ளையடித்த காசுல கொடுக்குற மாதிரி உங்க குடும்பத்து மக்களின் போட்டோவை போடறீங்க.... எல்லாம் தேர்தல் பயம்... அன்பான வாசகர்களே, இந்த இணையதளத்துல பாருங்க. இந்திய டுடே நாளிதழில் மஞ்சள் துண்டின் வாரிசுகளும், கொள்ளையடித்த சொத்துக்களும் செய்தியாக வெளிவந்துள்ளது, savukku.net...
True Indian Abu Dhabi - abudhabi,இந்தியா
2010-09-03 04:55:59 IST
இதிலுமா அரசியல்? வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்பது தமிழர் நாகரிகம். வரலாறு கூறும் சான்று. ஆனா ரேஷன் கவரிலும் கருணாநிதியின் போட்டோ தேவையா? இது விளம்பரத்திர்காகவா இல்லை எந்த நோக்கத்திற்காக? சற்று சிந்திக்கவும் மக்களே ! Jai Hind...
சாமி - கோவை,இந்தியா
2010-09-03 04:47:02 IST
தேர்தல் வரபோகுது. மக்களை திருப்தி படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டிஇருக்கு பாருங்க. பொது சந்தையில் விலை கூடி இருக்கு. அதை கட்டுபடுத்தாம மக்களை அரசு பொருட்கள் மட்டுமே வாங்கும் நிலை. எனக்கென்னமோ கம்யூனிஸ்ட் ஆட்சி மாதிரி தெரியுது. எப்படியோ போகட்டும். தரமான பொருட்களாக இருந்தால் சரி....
சரவணன் - மதுரை,இந்தியா
2010-09-03 03:30:08 IST
ஹ்ம்ம் மறுபடியும் மக்கள ஏமாத்த ஒரு பரம அஸ்திரம். மக்கள் சிந்தித்தால் நல்லது...
சௌந்தர் - சென்னை,இந்தியா
2010-09-03 02:37:05 IST
இந்திய உணவு கிடங்கில 25 லட்சம் உணவு கெட்டு போச்சு. அதை இலவசமா கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவு போட்டது,...
Nawaz - Sakaka,சவுதி அரேபியா
2010-09-03 02:20:08 IST
இந்தியாவில் மக்களுக்கு தேவை அறிந்து செயல்படும் ஒரே அரசு இந்த அரசுதான். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் நடக்கத்தான் செய்யும். ஆனால் தனது பையை மட்டுமே நிறைத்துகொண்டு மக்களை கைவிட்டுவிடும் அரசுகளே அதிகம். " நீ சாப்பிடுவதை சாப்பிட்டுக்கோ உன்னை தேர்ந்தெடுத்த மக்களையும் கவனி."...
raja - London,யுனைடெட் கிங்டம்
2010-09-03 01:22:10 IST
It is astonishing to see this humanitarian attitude of Tamilnadu Chief Minister in helping the middle class and lower middle class to get their day-to-day needs. Karunanithi is the suitable name for this wonderful man who always think and work for people’s welfare. No one in this world in the age of 87 is working for public needs like our CM. Everyone in this world have bow before this magnificent CM....
இளமாறன் - சென்னை,இந்தியா
2010-09-03 01:15:11 IST
நான் முதல்வர் திரு. கருணாநிதியின் எதிர்பாளன்..!!! ஆனாலும் இதனை மனமார பாராட்டுகிறேன்! இந்த நல்ல திட்டத்தில் ஊழல் பெருச்சாளிகளை நுழையவிடாமல் முதல்வர் திரு. கருணாநிதி கண்காணிக்க வேண்டும்....
kumar - chennai,இந்தியா
2010-09-03 01:02:36 IST
எலெக்சன் வருதுல்லே. மக்களுக்கு மயக்க மருந்து கருணாநிதி தர்றார். மக்கள் திரும்பவும் எமாற போறாங்க....
M .Balakrishnan - chennai,இந்தியா
2010-09-03 00:47:43 IST
ஒவ்வொரு பொருளும் தனி தனி பாக்கெட்களில் கிடைத்தால் அவரவர் தேவைக்கேற்ப வாங்க எளிதாக இருக்கும். மக்களை கட்டாய செலவினங்களுக்கு உட்படுத்தக்கூடாது....

கருத்துகள் இல்லை: