சனி, 4 செப்டம்பர், 2010

இலியானாவை ஓரங்கட்டிய த்ரிஷா: பவன் கல்யாணுடன் ஜோடி

இலியானாவை ஓரங்கட்டிய த்ரிஷா: பவன் கல்யாணுடன் ஜோடி

இந்தியில் வெளியான லவ் ஆஜ் கல் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தில் நடிக்க பவன் கல்யாணும், இலியானாவும் ஒப்பந்தம் ஆகியிருந்தனர்.

படப்பிடிப்பு கூட விரைவில் தொடங்கவிருக்கிறது என்று செய்திகள் வந்தன. இந்நிலையில் படத்தின் நாயகி திடீரென பின்வாங்கியுள்ளார். என்னாச்சு இலியானா இப்படி ஒரு முடிவு என்று கேட்டால் கால்ஷீட் ப்ராப்ளம்பா என்கிறார்.

இதையடுத்து இலியானா விலகிய கையோடு புது நாயகியைத் தேடும் பணி தொடங்கியது. பல நடிகைகள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் நாயகியைத் தேர்வு செய்தாகிவிட்டது என்றனர் படக்குழுவினர். நாயகியாகத் தேர்வாகி இருப்பவர் தெலுங்கு நடிகை அல்ல நம்ம ஊர் த்ரிஷா. அவரை அனுகியபோது உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம்.

தெலுங்கில் திரிஷா இருந்த முதலிடத்தைத்தான் இலியானா பிடித்திருந்தார். இதனால் அப்செட்டில் இருந்த திரிஷாவுக்கு இலியானா நடிக்கும் பட வாய்ப்பு கிடைத்ததும் கப்பென பிடித்துக் கொண்டார்.

எப்படியோ, விட்டதைப் பிடித்தால் போதும்!

கருத்துகள் இல்லை: