வெள்ளி, 3 செப்டம்பர், 2010

கொத்துறொட்டிக் கடையை விட்டால் நம்மவர்களுக்கு வேறு எதுவுமில்லையோ!


உணவுச்சாலைகள், சில்லறை வர்த்தகங் கள், மதுபானச்சாலைகள், தெருவோர வியாபா ரங்கள் இவை யாழ்ப்பாணத்தின் தற்போதைய பொருளாதாரப் பங்களிப்பில் முதன்மை பெற்றுள்ளன. ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று ஒருவர் செய்யும் தொழில் முயற்சியையே எல்லோரும் செய்கின்ற தன்மையை பார்க்கும்போது எங்கள் முயற்சியில் விரிவுத்தன்மை இல்லாதிருப் பதை காணமுடிகின்றது.

கண்டி தலதா மாளிகைக்கு அண்மையிலுள்ள வாவியைச் சுற்றிப் பார்ப்பதற்கென இயந்திரப் படகுகள், அதற்கென ஒரு தொகை கட்டணம் என்றவாறு வித்தியாசமான முயற்சி நடக்கின்றன. ஹபரண, தம்புள்ள ஆகிய இடங்களில் உள்ள உல்லாசப் பயணிகள் விடுதிகளைச் சுற்றி யானைச்சவாரி நடைபெறுகின்றது. யானையில் சவாரி செய்வதற்கு வெளிநாட்டவர் ஒருவரிடம் இரண்டாயிரம் ரூபாயும், உள்நாட்டவர் ஒருவரிடம் எழுநூற்றைம்பது ரூபாயும் அறவிடப்படுகின்றன.

இதற்கு மேலாக சிறுகைத்தொழில் முயற்சிகளில் கிடைத்த உற்பத்திப் பொருட்கள், மரத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள் என்பவற்றின் விற்பனை ஒருபுறம் களைகட்ட, மறுபுறத்தில் பொலநறுவை - பராக்கிரமபாகு மன்னன் - இலங்கை வரலாறு என்பவற்றை சித்திரிக்கும் புகைப்படங்களின் விற்பனைகளும் தாராளம்.

இப்படியான முயற்சிகள் ஏதேனும் எங்கள் யாழ்ப்பாணத்தில் உண்டா என்று ஒருகணம் சிந்தித்தால் வேதனையைத் தவிர வேறு எது வும் மிஞ்சாது. ஆக, கொத்துறொட்டிக் கடைகளை எங்கும் அமைத்து யாழ். நகரம் முழுவதும் கடகட... கடகடகட...கடகடகடகட... இந்தச் சத்தமே கேட்ட வண்ணம் உள்ளது. றொட்டிக்கடையை விட்டு விலகி, பண்ணைக் கடலில் படகுச் சேவையை ஆரம்பித்து பயணி களுக்கு சிறுத்தீவை காட்டும் முயற்சி ஒன்றை மேற்கொண்டால் என்ன?

மண்டைதீவில் பறவைகள் சரணாலயம் அமைத்து அதனைப் பார்ப்பதற்கு நியாயமான கட்டணம் அறவிட்டால் கூடாதா? இப்படியயல்லாம் முயற்சிகள் தொடங்க யாழ். நகரைச் சுற்றிச் சுற்றி உள்ள தேநீர்ச்சாலைகள் இடம் நகர்ந்து பண்ணையிலும் பறவைகள் சரணாலயப் பகுதியிலும் இயங்குமல்லவா?

இன்னுமொன்று யாழ்ப்பாணத்தில் தற்போது மிகவும் அவசியமாக இருப்பது எங்கள் அருங் கலைப் பொக்கிஇங்களை பாதுகாக்கக் கூடிய அருங்காட்சியகமாகும். இதனை அபிவிருத் திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு (SOND)போன்ற சமூக நல நோக்கு கருதிய அமைப்புகள் உருவாக்கவேண்டும்.

எங்கள் பண்பாட்டு அடையாளங்களை ஆவணப்படுத்தவும் அதனை மக்கள் பார்வையிடு வதற்குமான நிலையத்தை பொருத்தமான இடத்தில் அமைத்தால், அதனை பார்வையிடு வோரிடம் கட்டணம் அறவிடவும் எங்கள் மாண வர்கள் அவற்றைப் பார்த்து எங்கள் பண்பாட் டின் பெருமையை புரிந்துகொள்ளவும் முடியும் அல்லவா? இதுபற்றிய சிந்தனை தேவை.
வலம்புரி தலையங்கம்

கருத்துகள் இல்லை: