சனி, 30 அக்டோபர், 2021

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு தாவிய 7 எம்எல்ஏக்கள்

 மாலைமலர் : பாஜக தேர்தல் அறிக்கையின் 90 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாக பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்தார்.
லக்னோ:  உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தயாரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வழக்கம்போல் அதிருப்தி தலைவர்கள் கட்சி தாவும் சம்பவமும் அரங்கேறத் தொடங்கி உள்ளது.
அவ்வகையில், பாஜகவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளனர். கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், அவர்கள் தங்களை சமாஜ்வாடி கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் - மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்

 மாலைமலர் : மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக மோதாமல் என்னுடனும், என் கட்சியை எதிர்த்தும் காங்கிரஸ் மோதினர் என்று மமதா பானர்ஜி கூறினார்.
பனாஜி:  கோவாவில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்  மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ.க. எங்கும் போகாது.  மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அங்குதான் அவருக்குப் பிரச்சினையே இருக்கிறது. ஆனால், அது நடக்காது.
பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது என கூறினார்.

உத்தர பிரதேசத்தில் மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் கைது

 BBC : உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சக மாணவனை கடித்த சோனு யாதவ் என்கிற இரண்டாம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அழைத்து கண்டித்துள்ளார். பிறகு சக மாணவனிடம் மன்னிப்பு கேட்குமாறு சோனுவிடம் அவர் கூறியுள்ளார்.
ஆனால் சோனு மன்னிப்பு கேட்காததால் ஆத்திர மடைந்த தலைமை ஆசிரியர் அச்சிறுவனை தரதரவென்று பள்ளி மேல் தளத்துக்கு இழுத்துச் சென்று,சிறுவனின் காலை பிடித்துக் கொண்டு அச்சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு, மன்னிப்பு கேட்குமாறு பயமுறுத்தியுள்ளார். 

ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 மாலைமலர் : எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்று, தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.
2019 முதல் நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

வெள்ளி, 29 அக்டோபர், 2021

எம்ஜியார் ஒரு சிறந்த புகைப்பட கருணாநிதி .. அதிமுக பொன்விழா மலர் கூத்து ..

May be an image of 3 people and text that says 'பொன்விழா சிறப்பு மலர் அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். 5.எம்.ஜி.ஆர் ஒரு தேர்ந்த புகைப்படக் கருணாநிதி. எந்த நாடடுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்தி ருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப்பிடித்தபானவர்களுக்குப் மகிழ்ர்கார்'

Diwa  :  அதிமுக பொன்விழா சிறப்பு  மலர் புத்தகத்தை அச்சடிக்கும் முன்பாக அச்சகத்தின் ப்ரூப் ரீடரை வர வைத்த அதிமுக இணை துணை இயக்குநர்கள் நல்ல கவனமா ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக படிச்சு பாத்து ப்ரூப் ஒக்கே செய்ங்க ...
 ஏன்னா நம்முடைய அதிமுக கட்சியின் வரலாற்றை பதிவு செய்யும் பொன்விழா மலரில் , பழைய நிகழ்வுகளை எழுதும்போது MGR-ன் வாழ்க்கை வரலாறும் வரும்!
அப்படி அந்த வரலாற்றை எழுதும்போது
கலைஞருடன் - அறிஞர் அண்ணா...
கலைஞருடன்- MGR என அப்போது நடந்த சில வரலாற்று நிகழ்வுகளையும் எழுத வேண்டி இருக்கும் அப்படியான இடத்தில் மறந்தும் கூட கலைஞர்ன்னு எழுதிடாதீங்க... கலைஞரை கருணாநிதி... கருணாநிதி என எழுதிடுங்க என ஆளூமைகள் ப்ரூப் ரீடருக்கு உத்தரவிட...
இரட்டை ஆளூமைகளின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்திய ப்ரூப் ரீடர்...கலைஞர் என அச்சிட வேண்டிய இடத்தில் எல்லாம் கருணாநிதி கருணாநிதி என அச்சு பிசகாமல் அச்சிட்டு பொன்விழா மலரை வெளியிட்டும்விட்டனர்......

உணவு மறுக்கப்பட்ட நரிக்குறவர் பெண்ணோடு உணவருந்திய அமைச்சர் சேகர் பாபு

மின்னம்பலம் : நரிக்குறவர் என்பதற்காக கோயில் அன்னதானத்தில் உணவு தர மறுப்பதாக அண்மையில் புகார் தெரிவித்த அதே பெண்ணுடன் இன்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் அன்னதான உணவை சாப்பிட்டார்.


சமீபத்தில் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி பேசும் பொருளானது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வீடியோவில்,”ஒரு மாசத்து முன்ன, நான் என் தங்கச்சி, அத்தை எல்லாரும் கரெக்ட் டைத்துக்கு வந்து நின்னோம்..
அதான் கவர்மெண்ட் லேடிஸ் பஸ்ஸூன்னு சொல்றாங்களே…அது வந்தது..கையை காட்டி நிப்பாட்டினோம். ஆனால் வண்டி நிக்காம வேகமாக போயிருச்சு…..

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் காலமானார்! மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்

 கலைஞர் செய்திகள் :  மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“கோபாலபுரம் இல்லம் வந்தது நெஞ்சில் நிழலாடுகிறது” : புனீத் ராஜ்குமார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் இன்று காலமானார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த புனித் ராஜ்குமார், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர்.

Face book - Meta பேஸ்புக் நிறுவனத்திற்கு மெட்டா என புதிய பெயரை சூட்டிய மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனத்திற்கு மெட்டா என புதிய பெயரை சூட்டிய மார்க் ஜூக்கர்பெர்க்

தினத்தந்தி : வாஷிங்டன்,  சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி உள்ளதாகத் தெரிவித்தார்.

ரஜினிக்கு ரத்த குழாய் திசுக்கள் இறக்கும் இன்பார்க்சன் பாதிப்பு ! ICUல் சிகிச்சை..

 Mathivanan Maran  -   Oneindia Tamil :  சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த குழாய் திசுக்கள் இறந்துவிடக் கூடிய இன்பார்க்சன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்துக்கு ஐ.சி.யூ.வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதன்பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் மீட்கப்பட்ட பெண் : யார்னே தெரியாத ரெண்டு பேர் வெள்ளத்துல குதிச்சு வந்தாங்க”

“யார்னே தெரியாத ரெண்டு பேர் வெள்ளத்துல குதிச்சு வந்தாங்க” : காப்பாற்றப்பட்ட இளம்பெண் நெகிழ்ச்சி!

கலைஞர் செய்திகள்  : ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து யாரென்றே அறியாத இளைஞர்களால் மீட்கப்பட்ட இளம்பெண் தானும், குழந்தையும் காப்பாற்றப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குழந்தையுடன் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பச்சை பொய் கூறியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார் சிஏஜி தலைவர் வினோத் ராய் .. வெறும் மன்னிப்பு போதுமா?

May be an image of 1 person

  Rayar A -  Oneindia Tamil :   டெல்லி: கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக முன்னாள் சிஏஜி வினோத் ராய் புகார் கொடுத்தார்.
இதன் பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

பெகாஸஸ்: 'உளவு பார்த்தவர்கள் சர்வதேச அளவில் அம்பலப்படுவார்கள்' - 'தி இந்து' என்.ராம்

பெகாசஸ்
என். ராம்

முரளிதரன் காசி விஸ்வநாதன்  -      பிபிசி தமிழ்  :  பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் பின்னணி குறித்தும் தீர்ப்பு குறித்தும் வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழிடம் பேசினார். பேட்டியிலிருந்து.
கே. பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நீங்கள் என்ன கோரியிருந்தீர்கள்?
ப. இரண்டு விஷயங்களைக் கோரியிருந்தோம். முதலாவதாக, இந்தியக் குடிமக்கள் மீது என்.எஸ்.ஓ பெகாசஸ் உளவு செயலியை மத்திய அரசு பயன்படுத்தியிருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டுமெனக் கோரியிருந்தோம். இதற்கு மத்திய அரசு பதிலளிக்கும்போது, இது குறித்து நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என்று சொன்னதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அடுத்ததாக, சுயேச்சையான ஒரு நிபுணர் குழுவை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ, தற்போதைய நீதிபதி தலைமையிலோ அமைக்க வேண்டும் எனக் கோரியிருந்தோம். அதை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.
அரசு தானே ஒரு நிபுணர் குழுவை அமைப்பது, இது தொடர்பான தவறான கருத்துகளைப் போக்குவதாகச் சொன்னது. ஆனால், இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது மிக முக்கியமானது.

கர்நாடகாவில் அதிவேகமாகப் பரவி வரும் புதிய AY.4.2 வைரஸ்... தமிழ்நாட்டுக்கு ஆபத்து?

கர்நாடகாவில் அதிவேகமாகப் பரவி வரும் புதிய AY.4.2 வைரஸ்... தமிழ்நாட்டுக்கு ஆபத்து?

கலைஞர் செய்திகள் -  Vignesh Selvaraj  : கர்நாடகாவில் அதிவேகமாகப் பரவி வரும் புதிய AY.4.2 வைரஸ்... தமிழ்நாட்டுக்கு ஆபத்து?
கர்நாடகாவில் AY.4.2 தொற்று பரவுவதால் அதை ஒட்டியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் மீண்டும் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. AY.4.2 உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கொடநாடு விவகாரம்: தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல்!

கொடநாடு விவகாரம்: தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல்!

மின்னம்பலம் : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கொடநாடு கொலை வழக்கு தூசிதட்டி எடுக்கப்பட்டு மீண்டும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படும் கனகராஜ், கொடநாடு சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் சேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி உயிரிழந்தார்.
அவர் விபத்தால் உயிரிழந்தாரா அல்லது இது திட்டமிட்ட கொலையா என்று போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, கனகராஜ் உறவினர் ரமேஷ் ஆகியோரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

வியாழன், 28 அக்டோபர், 2021

தோழர் நன்மாறன் காலமானார் . 'கண்டக்டர்' முதல் 'கம்யூனிஸ்ட்' வரை!

நக்கீரன் பாரதி நேசன்   :  எளிமையான ஆளுமைகளுக்கு எல்லாம் முகவரி தருவது மரணம் மட்டுமே. அப்படி, மரணம் அறிமுகப்படுத்தி வைத்துள்ள புதிய ஆளுமை நன்மாறன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மதுரை கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான நன்மாறன், உடல்நலக் குறைவால், அரசு மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.
இரண்டு முறை எம்.எல்.ஏ.-வாக இருந்த ஒருவரின் மரணம், அரசு மருத்துவமனையில் நிகழ்வது என்பது, அரசியல் அதிசயம். காலமெல்லாம் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த நன்மாறன், தனி வீட்டில் குடியேற நினைத்தார். ஆனால், அந்த எண்ணம் இறுதிவரை கைகூடவே இல்லை.
சாதாரண குடும்பத்தில் பிறந்த நன்மாறன், 12-ம் வகுப்பைத் தாண்டவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், கண்டக்டராக சில காலம் பணியாற்றினார்.

இத்தாலியில் இரண்டு பிள்ளைகளை கொன்ற பின் ஆற்றில் பாய்ந்த இலங்கைப் பெண்!

Murder Verona, mother kills 11 and 3 year old daughters and disappears:  autopsy tomorrow
Sri+Lankan+mother+in+Italy+kills+two+daughters

எழுகதிர் .காம்  : இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு ஆற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இத்தாலியின் வடக்கு வெனெற்றோ பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 சபாடி(Sabadi) மற்றும் சந்தனி (Sandani) ஆகிய பெயர்கள் கொண்ட 11, 3 வயதுகளுடைய இரண்டு பெண் குழந்தைகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்கள் வீட்டின் படுக்கை அறையில் காணப்பட்டுள்ளன.
இருவரும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சடலங்கள் கிடந்த அறையில் கொலைக் குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் எதுவும் காணப்படவில்லை. குழந்தைகள்இருவரும் தலையணை மூலம் மூச்சிழக்கும் வரை அழுத்திக் கொல்லப்பட்டிருக்கவேண்டும் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். Click here mother kills 2 kids

கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்து! தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் காரணமா? ... மக்கள் கோரிக்கை!

 மின்னம்பலம் : கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்குச் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அருகே உள்ள பட்டாசு கடையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து அறிந்த முதல்வர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஸ்டாலின் ஆட்சியை கலைக்க திருமாவளவன் உள்ளடி வேலை..! TN பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலைச் செய்யாமல் இருப்பது  எதிர்காலத்திற்கு நல்லது" : பாஜக தாக்கு! - TopTamilNews
ஸ்டாலின் ஆட்சியை கலைக்க திருமாவளவன் உள்ளடி வேலை..! பற்ற வைக்கும் பாஜக! |  Thirumavalavan trying to topple MK Stalin's DMK government, says BJP  Treasurer S.R.Sekhar - Tamil Oneindia

  Veerakumar -  Oneindia Tamil :   சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவின், நட்புக் கட்சியா? எதிரிக்கட்சியா? தனிக் கொடி, தமிழர் இறையாண்மை இதெல்லாம் கம்பி எண்ண, களி சாப்பிட முதல் படி, ஸ்டாலின் ஆட்சியை கலைக்காம விட மாட்டாரோ திருமாவளவன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்,
தமிழ்நாடு  பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி அடிப்படையில் மாநிலம் பிரிந்த நாள் என்பதை குறிப்பிட்டு, இந்த ஆண்டு முதல் தமிழக அரசு இந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழுவில் கலாநிதி ஆற்காடு வீராசாமி எம்பி நியமனம்

Live Chennai: Lok Sabha 2019: Chennai (North) Kalanidhi Veeraswamy (DMK) ,  Chennai (North) constituency 2019, Chennai (North) parliamentary  constituency, Chennai (North) candidate Kalanidhi Veeraswamy (DMK),  Kalanidhi Veeraswamy (DMK) Chennai (North ...

  Arsath Kan - e Oneindia Tamil News சென்னை: இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் கனிமொழி எம்.பி.க்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஆற்காடு வீராசாமியின் மகனை நியமித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இது கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதோடு இந்த நியமனம் அதிருப்தியையும் அளித்துள்ளது.
இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த சூழலில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்

 Mageshbabu Jayaram | Samayam Tamil :   முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசு செய்த அதிர்ச்சி செயல்!
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் - கேரளா இடையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. கேரளாவில் மழை கொட்டித் தீர்க்கும் போதெல்லாம், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை, அதனை இடிக்க வேண்டும், நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.

தமிழ்நாடு மேல்சபை ! மீண்டும் அமைகிறது- அடுத்த கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேறுகிறது

 மாலைமலர் : தமிழ்நாடு மேல்சபை ! மீண்டும் அமைகிறது- அடுத்த கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேறுகிறது



தமிழ்நாட்டில்  மேல்-சபையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பா.ஜனதா எம்.எல்ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: : தமிழகத்தில் 1986-ம் ஆண்டு வரை மேல்-சபை இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மேல்-சபையை கலைத்து விட்டார்.
அதன் பிறகு இதுநாள்வரை தமிழகத்தில் மேல்சபை கொண்டு வரப்படவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மீண்டும் மேல்- சபையை கொண்டுவர முயற்சி செய்தார்.

தமிழர்களின் மதமாற்ற வரலாறு சிவசேனாவுக்கு பதிலடி திரு ரத்னஜீவன் ஹூல் Dr. S. Ratnajeevan H. Hoole

 சமணர்கள் மரபில் கண்ணகியையும் பௌத்த மரபில் புத்தரையும் வணங்கினோம். 2000 வருடங்களுக்கு முன்பிருந்து இலங்கையிலும் கிறிஸ்தவம் நாட்டப்பட்டிருந்தது. இதைத் தெடர்ந்து தேவாரகாலத்தில் சைவர்களாய் மதம் மாறினோம். இந்த மாற்றத்தின் போதுதான் தெரிந்த அளவுக்கு முதற் தடவையாக சைவசமயத்துக்கு உக்கிரமாக மாற்றப் பட்டோம். இதற்கு இன்றும் ஆதாரமாக மதுரையில் சமயமாற்றத்துக்கு மறுத்த எண்ணாயிரம் சமணத்தலைவர்கள் கமுகேற்றப்பட்டதைக் கொண்டாடி திருவிழா எடுக்கப்படுகிறது. இறுதியாக கிறிஸ்தவ சமயம் இரண்டாம் தடவை போத்துக்கேயரால் கொண்டு வரப்பட்டது. இந்தக் காலத்தில் வன்முறைகளின் காரணமாகக் கிறிஸ்தவர்களாகினர் என்றும், இதேபோல பலர் தன்னிச்சையாக ஏற்றுக்கொண்டனர் என்றும் சரித்திரப் புத்தகங்கள் கூறுகின்றன.Click - Religion Of The Tamil People

ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்? துரோகி கதிர் ஆனந்த் ஒழிக, அதிமுகவின் கைகூலி கதிர் ஆனந்த் ஒழிக’ என்று...

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

மின்னம்பலம் :  துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?
தமிழ்நாட்டிலேயே வேறு எங்குமில்லாத அளவுக்கு சேர்மன் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக மறுதேர்தல் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு சவால் விடும் வகையில் இந்த கோரிக்கை மனு அனுப்பப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தில் அடுத்த கட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6, 9 தேதிகளில் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை 12 ஆம் தேதி எண்ணப்பட்டது. வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் 20 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அதன்பின் அக்டோபர் 22ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல் நடந்தது.
மிகப் பெரும்பாலான இடங்களில் திமுகவே சேர்மன் பதவியைக் கைப்பற்றிய நிலையில் சில இடங்களில் மட்டும் திமுகவுக்குள்ளேயே போட்டா போட்டி நிலவியது. அதிலும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சொந்த மாவட்டமான வேலூரையடுத்த திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய கலாட்டாவே நடந்தது.

புதன், 27 அக்டோபர், 2021

இல்லம் தேடி கல்வி: கி.வீரமணிக்கு ஸ்டாலின் பதில்.. இதுதான் திராவிடத்தின் கொள்கை மறந்துவிடக் கூடாது!

 மின்னம்பலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் “இல்லம் தேடி கல்வித் திட்டத்தை” இன்று (அக்டோபர் 27) தொடங்கி வைத்தார்.
கொரோனா காரணமாகப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் கல்வியில் இடைவெளி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க, 1 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.
இந்த திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி முதலில் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கல்வியின் மிக்கதாம்

செல்வமொன்று இல்லையே

கண்மணி கேளடா நீ என்றன்

flash back நக்கீரன் : சத்துணவு முட்டையில் சத்துணவு அமைச்சர் சரோஜா கமிஷன் நிக்காலோ!

நக்கீரன் : :வியாழன், 23 நவம்பர், 2017     :குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுங்க என்று உலக சுகாதார நிறுவனம் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறது."
ஏழைக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பை சத்துணவுக் கூடங்களில் வழங்கினார் கலைஞர். ஆனால் இப்போது அதற்கும் ஆபத்து என்று அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.
ஒருபக்கம் முட்டை உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டதாக சொல்கிறார்கள். அதன்காரணமாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக செய்திகள் பீதியைக் கிளப்புகின்றன. தமிழகத்தில் 4 ரூபாய்க்கு விற்ற முட்டை 7.00 ரூபாய் முதல் 7.50 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலை உயர்ந்தது உயர்ந்தபடி இருக்க, இப்போது முட்டை விலையும் உயர்ந்திருப்பது ஏழை எளிய நடுத்தர மக்களின் அசைவ உணவுக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது.