செவ்வாய், 28 ஜூலை, 2020

பா.ஜ.க முருகனின் பச்ச துரோகப் பேட்டி தாழ்த்தப்பட்ட மக்களே எச்சரிக்கை!

Thangaraj Gandhi : · பன்றிகளுக்கு சாக்கடை சொர்க்கமே! மலமள்ளும் சமூகத்தில் பிறந்த எல்.முருகன் சொல்கிறார் #வர்ணாசிரம் சமூகநீதியாம். அதைவிட அது அறிவியலாம்..! நாசாவுக்கு தெரியுமா? எங்க அய்யா அதியமான் சொல்வார். "சாதி அமைப்பினாலும் தலைவிதி முன்ஜென்ம பாவம் போன்ற இந்து மதத்தின் மூடநம்பிக்கையால் தான் மலமள்ளும் தொழிலில் அவர்களை அமிழ்த்து வைத்துள்ளது"
Manjai Vasanthan :  பா.ஜ.க தலைவர் முருகனின்
பச்ச துரோகப் பேட்டி
தாழ்த்தப்பட்ட மக்களே எச்சரிக்கை!
தாழ்த்தப்படடோருக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை  இந்துத்துவா அமைப்பினர் அக்காலத்திலிருந்து இக்காலம் வரைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்களாக ஏற்பதில்லை, சகமனிதர்களாகவும் ஏற்பதில்லை.இன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருக்கும் தாழ்த்தப்பட்டவரான ராம்நாத் கோவிந்தின் நிலையும் அதுவே!
ஆனால், இவற்றையெல்லாம் அறவே மறைத்துவிட்டு, அண்ணல் அம்பேத்காரின் புகழ்பரப்ப பி.ஜே.பி அரசு என்னென்ன செய்துள்ளது என்று பட்டியலிட்டு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை ஏமாற்றுகிறார் முருகன்.
இவர்கூறும் அம்பேத்கார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை இந்துத்வாதிகள் எப்படி கேவலப்படுத்தி அடக்கி, ஒடுக்கி, நசுக்கி,ஒதுக்கி,இழிவுப்படுத்துகின்றனர் என்பதை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்.

சீனாவிடம் கடனில் சிக்கியுள்ள 50 வளரும் நாடுகள்

சிசிலியா பாரியா - பி பி சி :  ஏழை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் சீனா வழங்கும் கடன் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) அல்லது வேறு எந்த அரசாங்கம் வழங்கும் கடனையும் விட அதிகம். பொருளாதார உதவி, தொழில்வளர்ச்சிக்காக வழங்கப்படும் கடன் என்பவற்றை எப்போதுமே உலக நாடுகளனைத்தும் தமது வெளியுறவுக்கொள்கையின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளன.
ஆனால், சீனாவின் விஷயத்தில் 'கடன் ராஜீய உத்தி' என்ற சொல் நடைமுறையில் உள்ளது.
உலகப் பொருளாதாரம் குறித்த கல்வி நிறுவனமான, ஜெர்மனியின் கியெல் இன்ஸ்டிட்யூட்டின் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோஃப் ட்ரெபேஷ் இந்த கடன் ராஜீய உத்தி அல்லது debt diplomacy பற்றிக் கூறுகையில், “வளரும் நாடுகளுக்கு சீனா வழங்கும் கடனில் பாதி மறைந்த கடனாகத் தான் உள்ளது.” என்று குறிப்பிடுகிறார். ட்ரெபேஷ், கார்மென் ரீன்ஹார்ட் மற்றும் செபாஸ்டியன் ஹார்ன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிவந்த முடிவுகளின் ஒரு பகுதி இது. இந்தக் குழு 1949 முதல் 2017 வரை சீனா வழங்கிய 5,000 கடன்களை ஆய்வு செய்துள்ளது.
பல ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், உலகின் நிதி அமைப்பில் சீனாவின் உண்மையான பங்களிப்பு குறித்துக் கண்டறிய

தமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.

Suriya Krishnamoorthy.: இது நூற்றாண்டு கால சமூகநீதி மண் என்று அவ்வப்போது எழுதும்போதும், பேசும்போதும், இப்படியெல்லாம் வீராப்புக்காக எழுதுகிறோமோ.
இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற, சமூகத்தில் பெரும்பகுதி மக்களுக்கு இடஒதுக்கீடு குறித்த நேர்மறையான அணுகுமுறை இல்லாத காலத்தில், இதை சமூகநீதியில் பண்பட்ட மண் என்று சொல்லவதன் வழியே நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமோ என்றெல்லாம் தோன்றும்.
இன்றைக்கு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஆவணத்தை படிக்கும்போது, அப்படி எழுதுவதில் எந்த தவறும் இல்லை என்று அழுத்தமாக தோன்றியது.
மொத்தம் பதிமூன்று வழக்குகள்.
திமுக, அதிமுக, திக, பாமக, மதிமுக, சி.பி.ஐ, சி.பி.ஐ.எம், நாதக, தமிழ்நாடு அரசு, இரண்டு மருத்துவர்கள், புதுச்சேரி தொடர்பில் இரண்டு வழக்குகள். எதிர் தரப்பில் மத்திய அரசு மற்றும் எம்.சி.ஐ.state specific reservation வேண்டும் என்று 12 வழக்குகள். -
மத்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் 27% வேண்டும் என்று பா.ம.க வின் வழக்கு. அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்ற / உயர்நீதிமன்றங்களின் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், MCI விதிகள், தமிழ்நாடு அரசின் 1993 ஆம் ஆண்டு சட்டம் என்று மிக விரிவாக திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டிருக்கிறார்.
முடிவில் state specific reservation வேண்டும் என்பது அவருடைய வாதம். பெரும்பாலும் ஏனைய அனைத்து தரப்புகளும் வில்சன் அவர்களை முன்மொழிந்து கூடுதல் தகவல்களை சேர்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு தரப்பில் திரு. விஜய் நாராயணா விரிவாக வாதிட்டிருக்கிறார்.

சென்னை வி எச் பி அலுவலக உதவி காவல் ஆய்வாளர் சுட்டு கொலை .. தற்கொலையா ?

 தினகரன் : சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் சேகர்(47). இவர் தமிழக காவல் துறையில் 16.3.1994ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து தற்போது சென்னை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்த ஊர் காட்பாடி. இவர், மதுரவாயலில் சொந்தமாக வீடு கட்டி மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். ஆயுதப்படையில் பணியாற்றி வந்த சேகருக்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைவர் வேதாந்தத்துக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை வேதாந்தம் சென்னை தி.நகர் பார்த்தசாரதிபுரம் ராமானுஜம் தெருவில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரும் உடன் வந்தார்.பிறகு அலுவலகத்தில் உள்ள ஓய்வு அறைக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் சென்றார். சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி வெடித்தது.
அதை கேட்டு அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், தனது கையில் வைத்திருந்த சிறிய வகை துப்பாக்கியால் வலது பக்க தலையில் வைத்து விசையை அழுத்தி தற்கொலை ெசய்து கொண்டார்.இதில்

சர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித்து கேள்வி எழுப்பும் ( பார்ப்பன பனியாக்கள்) இந்தியர்கள்.. BBC

வின்ஸ்டன் சேர்ச்சில் : இந்திய பார்ப்பனர்கள் எப்போதும் மேலை நாடுகளின் ஜனநாயகம் சுதந்திரம் தத்துவம் பற்றி எல்லாம் உரத்த குரலில் பேசுவார்கள் . ஆனால் அதே பார்ப்பனர்கள் தங்கள் நாட்டில் உள்ள அறுபது கோடிக்கும் மேலான மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டதகதவர்கள் என்று அந்த மக்களின் உயிர்வாழும் உருமையை கூட மறுத்தே வந்துள்ளார்கள் . அதை விட கொடுமை ஆயிரக்கணக்கான அந்த ஒடுக்குமுறையை அவர்கள் ஏற்று கொள்ளும் மனோ நிலையில் வைத்துள்ளார்கள்
BBC :யோகித்தா லிமாயே -பிபிசி :
நான் குழந்தையாக இருந்தபோது முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி அறிந்து கொண்டேன். எனிட் பிளைட்டன் எழுதிய புத்தகம் ஒன்றில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம் விளக்கின் பிரேமில் இவருடைய படத்தை வைத்திருப்பார். `அந்த அளவுக்கு இந்த தேர்ந்த நிர்வாகியின் மீது அவருக்கு பற்றுதல்' இருப்பதால் அப்படி வைத்திருப்பார். நான் வளர்ந்தபோது, இந்தியாவில் கடந்த கால காலனியாதிக்கம் பற்றி நிறைய உரையாடி இருக்கிறேன். போர்க்கால பிரிட்டிஷ் பிரதமரைப் பற்றி, முற்றிலும் மாறுபட்ட கருத்து என் நாட்டில் பெரும்பாலான மக்களிடம் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்.காலனி ஆட்சிக் காலம் பற்றியும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
சர்ச்சிலின் ஆட்சிரயில் வசதி உருவாக்கியது, தபால் சேவைகள் உருவாக்கியது போன்ற பல நல்ல விஷயங்களை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கியதாக சிலர் கூறுவார்கள். ``தங்களின் சொந்த தேவைகளுக்காக அவற்றை எல்லாம் அவர்கள் செய்தார்கள். அவர்கள் இந்தியாவை ஏழையாக்கிவிட்டனர். இந்தியாவைக் கொள்ளையடித்து விட்டனர்'' என்பது மற்றொரு தரப்பாரின் கருத்தாக உள்ளது. ``கொடுமைக்கார பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு'' எதிராக போராட்டங்களில் பங்கேற்றதைப் பற்றி எனது பாட்டி எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருப்பார்.

திங்கள், 27 ஜூலை, 2020

தனியார் கல்வி நிறுவனங்கள் ’’மனசாட்சியற்ற மாபாதகர்கள்’ ஆன்லைன் கல்விக்கும் அதே கொள்ளை ..

சாவித்திரி ண்ணன் : படுபாவிங்க, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ’’மனசாட்சியற்ற மாபாதகர்கள்’’ என்றொரு பட்டம் வழங்கலாம்!
பள்ளி,கல்லூரிகள் மூடிக் கிடக்கின்றன! பிள்ளைகள் படிக்க வகையின்றி , பேருக்கு ஆன்லைன் கல்வி என்ற ஆகாத்திய வழிமுறை ஒன்று இவர்களுக்கு பணம் பறிக்க கிடைத்துவிட்டது. அதுவும் கொஞ்சமும் குறைக்காமல் முழுப் பணமும் கேட்கிறார்கள்! தாமதிக்க கூடாதாம்!
இன்று காலை என் நண்பர் சொன்ன செய்தி அதிர்ச்சி ரகம்! ’’என் பொண்ணு கோவை பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் படிக்குது கண்ணன். அரசு கோட்டாவில் இடம் கிடைத்தது.ஆனால்,அதற்கே வருடத்திற்கு நான்கு லட்சத்து 77 ஆயிரம் வாங்குகிறார்கள்! இது தவிர, விடுதிக் கட்டணம் மாதம் 16,000. மார்ச் 20 ந்தேதி முதல் காலேஜ் மூடப்பட்டு பொண்ணு வீட்டுக்கு வந்தாச்சு! இப்ப முழு கல்விக் கட்டணத்தோடு,ஆண்டு முழுவதுக்குமான விடுதிக் கட்டணமும் அப்படியே கட்ட சொல்கிறார்கள்!
மருத்துவ கல்வியை ஆன்லைனில் கற்பிக்க முடியாது.அதுவும் குறிப்பாக மூன்றாவது, நான்காவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவமனையில் பிராக்டிக்கலாக நோயாளிகளை பார்ப்பதிலும், பேசுவதிலும்,பெரிய மருத்துவர்களோடு சேர்ந்து இயங்குவதிலும் தான் உண்மையான கல்வியே இருக்குது!

என்னை ஏன் முடக்க பார்க்கிறீர்கள்? ரஜினியின் IPS அண்ணாமலை .... வரலாற்றை தப்பு தப்பாக பேசும் காணொளி ..


Devi Somasundaram : கேள்வி கேட்டா அதுக்கு பேர் முடக்குவதா அண்ணே ? ....பதில் சொல்ல முடியவில்லை என்றால் முடக்குவதாக சொல்லிக் கொள்ளலாம் ..காமராசர் எந்த வருடம் முதல்வரா இருந்தார், கக்கன் எந்த துறை அமைச்சர் பதவி வகித்தார் என்ற சாதாரண விஷயம் கூட அறியாமல் எப்படி ஐ பி எஸ் தேர்வு எழுதினீர்கள் என்பது புரிய்வில்லை . கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் பொலிடிகல் லீடர் என்று சொல்லிக்கொள்வது வெட்கமாய் இல்லயா ? . ஒரு லீடர் என்பவர் வழி நடத்துபவராக இருக்கனும்.. மிஸ் மிஸ் கிள்றாங்க என்று கம்ப்ளைண்ட் செய்பவர் லீடராக முடியாது .. நாங்க் கேக்ற கேள்விக்கே இப்படி பயந்தா நாளை மக்கள் கேப்பாஙகளே ...அப்ப என்ன செய்வீங்க ? ்்.. உங்கள நாங்க அடக்க நினைக்கவில்லை ..அவ்வளவு ஒர்த் நீங்க் இல்லன்னு உங்களுக்கே சுட்டி காட்டுகிறோம் அண்ணா . தற்சார்பு அறிவு தான் அரசியலுக்கு அவசியம் பிரதர் .
அண்ணாமலை  தற்சார்பு பொருளாதாரம் .

ஸ்டாலின் : நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதி

தினகரன் : சென்னை: நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது
இப்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும் என்றும், மேல்முறையீடு தவிர்த்து உடனே இடஒதுக்கீடு வழங்குக எனவும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்ட(பி.சி, எம்.பி.சி) சமுதாயத்திற்கு
இடஒதுக்கீடு உரிமை உண்டு என்று திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நான்கு வருடங்களாக இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத்தியில் உள்ள பாஜக அரசு நிராகரித்து வந்திருக்கிறது.
திமுக சார்பில் எம்.பி. வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார், நேரில் மனு அளித்தார், கழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.

சீமான் கைது? விஜயலட்சுமி வாக்குமூலத்தால் வழக்கு பாயுமா??

ஆர் எஸ் எஸ் பின்னணியில் உள்ள சீமானை கைது செய்ய தயங்கும் போலீசார்
வெப்துனியா :  நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் உள்ளதால் சீமானுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீமான் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.இதனை அடுத்து தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தன்னுடைய மரணத்திற்கு பின்பு யாரும் சீமானை விட்டுவிட வேண்டாம் என்றும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.தன்னை சீமானும் அவரைச் சேர்ந்த கட்சியினரும் மிகுந்த டார்ச்சர் செய்வதாகவும் இந்த டார்ச்சரை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் அதனால் தற்கொலை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்!

ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்!
 மின்னம்பலம் :ராஜஸ்தான் சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அழைப்pு விடுத்துள்ளார்.ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்டதால், சட்டமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேருக்கு தகுதி நீக்க விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பிலிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் 19 பேருக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் தடை விதித்தனர். இதனிடையேபெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற அசோக் கெலாட்டின் கடிதத்தை இரண்டு முறை அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா நிராகரித்தார். அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர்.

மேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்!

மேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்!மின்னம்பலம : இடஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இவ்வழக்கில் இன்று (ஜூலை 27) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மறுக்க முடியாது என தெரிவித்தனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு கூடாது என எந்த விதிமுறையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், “இதுதொடர்பாக தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை அமைத்து 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்புக்கு தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

ஒ பி சி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை உயர் நீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது.
 மாலைமலர் : புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .. தொடக்கக் கல்வித்துறை ..

Thangam Thenarasu  : “மரமேறி விழுந்தவனைக் கடா ஏறி மிதிச்சதாம்!”
“ எங்களிடம் கேட்காமல் உயர்கல்வி படித்துவிட்டார்கள்”, என்று ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது தொடக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, எனக்கு மேலே இருக்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.
ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீதுக் கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது நகை முரணாகத் தோன்றினாலும், அனுமதி பெறவில்லையெனச் சில விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.
ஏற்கனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில் பழிவாங்கப்பட்டு, பலர் மீது குற்ற வழக்குகள் புனையப்பட்டு, மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றது.

முகேஷ் அம்பானி ..கொரோனா காலத்தில் உயர்ந்த சொத்து மதிப்பு ...

hindutamil.in : உலகின் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது சொத்து
மதிப்பு 6,450 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதுவரை ஆசிய பிராந்தியத்தில் பெரும் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்று வந்த முகேஷ், தற்போதுஉலகின் 10 பெரும் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் லாறி எலிசன் மற்றும் பிரான்சின் பிரான்கோயிஸ் பெடென்கோர்ட் மெயர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 42 சதவீத பங்குகள் முகேஷ் அம்பானி வசம் உள்ளது. இந்நிறுவனத்தின் அங்கமான ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில் அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குள்ள கடன் சுமைகள் குறைந்து வருகின்றன.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சூழலில் பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் ரிலையன்ஸ்ஜியோ நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது. இதன் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்தது. இதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இயற்கை வளங்கள் மீது போர் . EIA 2020ஐ மத்திய அரசே திரும்பப் பெறு. வீடியோ ..


பா. ஜீவ சுந்தரி : நாட்டின் எந்தவொரு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கென மரங்களை வெட்டுவதற்கோ அல்லது மலைகளையே பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்த வேண்டுமென்றாலோ இனிமேல் மக்களின் கருத்தையோ, சம்பந்தப்பட்ட ஆய்வாளர் களின் ஆலோசனைகளையோ பெறத் தேவையில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு - 2020ஐ மக்கள் விரோத மத்திய அரசே திரும்பப் பெறு...
இது நிறைவேறினால், யாருடைய நிலமும் பறிக்கப்படும், எட்டு வழிச் சாலை என்ன, 18 வழிச் சாலைகள் கூட எளிதாகக் கட்டமைக்கப்பட்டு விடும். மலைகள் அகழ்ந்து கெல்லி எறியப்படும். சுற்றுச்சூழல் முற்றிலுமாகச் சிதைத்து அழிக்கப்படும். நம் இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் அம்பானி, அதானிகளுக்குத் தாரை வார்க்கப்படும்.
மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த பா.ஜ.க. ஆட்சியில், நாடு முழுமையாக - இயற்கை வளங்கள் உட்பட - தாரை வார்க்கப்படும் அபாய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு கணமும் சிந்தனையில் கொண்டு இவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

திமுகவில் கனிமொழியை ஓரங்கட்டும் முயற்சி?

திமுக கூட்டணி - யாருக்கு எத்தனை சீட்?

மின்னம்பலம் : மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது,
“தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. திமுக வரும் தேர்தலில் தனியாக நின்றாலே ஜெயித்துவிட முடியும் என்று பிரசாந்த் கிஷோர் திமுக தலைமைக்கு ஏற்கனவே ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஸ்டாலின் இதில் தீவிரமாக யோசித்து வருகிறார். வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான காரணிகளில் ஒன்றைக்கூட திமுக தவற விட்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளில் கூட்டணியும் ஒன்று. எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணித் தேரிலேயே சட்டமன்றத் தேர்தலுக்கும் பவனிவர வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினிடம் இருக்கிறது.
ஆனாலும் ஏற்கனவே திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்னதுபோல தேர்தல் நெருங்கும் நிலையில், சிலர் வரலாம், சிலர் போகலாம். அந்த வகையில் திமுகவின் தலைமை வட்டாரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்ற ஓர் உத்தேசக் கணக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவின் பார்வையில் இது உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இருந்த நிலையில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டது.

ஞாயிறு, 26 ஜூலை, 2020

முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை .. பா.ஜ.க முன்னிறுத்தப் போகும்

தோண்ட தோண்ட வெளியே வரும் பூதம் : பா.ஜ.க முன்னிறுத்தப் போகும் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை குறித்த தகவல்கள் !தோண்ட தோண்ட வெளியே வரும் பூதம் : பா.ஜ.க முன்னிறுத்தப் போகும் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை குறித்த தகவல்கள் !kalaignarseithigal.com தோண்ட தோண்ட வெளியே வரும் பூதம் : பா.ஜ.க முன்னிறுத்தப் போகும் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை குறித்த தகவல்கள் போலிகள் எந்த முகமூடி போட்டு வந்தாலும் தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள் என்பதே உண்மை. போலிகளை அடையாளம் கண்டு மக்கள் முன்பு நிறுத்தும் பணியை செய்வோராகவே இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
இந்திய நாட்டின் அரசியலில், வலது சாரிகளின் இந்துத்வா கருத்தியலையும், மனுவாத அராஜகங்களைத் தலைத்தூக்க விடாமால் தமிழகம் தடுத்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆதிகத்தைச் செலுத்தி வரும் வலதுசாரி கும்பல்கள் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னின்றி எதிர்க்கிறது.
இதனால் தமிழகத்தில் தங்களின் செல்வாக்கை பெருக்க பா.ஜ.க பல குறுக்கு வழிகளை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தை ஆன்மிக பூமியாக மாற்றுவதாக கூறி, குஜராத், உத்தர பிரதேசம் போன்ற கலவர பூமியாக மாற்ற கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது.
அதற்காக, அ.தி.மு.க, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மாரிதாஸ் போன்றோரைக் களம் இறக்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்காக காந்திருந்து நொந்துபோன மக்கள் அவரின் அரசியல் பிரவேசத்தை கடந்துப் போகத் துவங்கியுள்ளனர். ஆனாலும் தனது மலிவான அரசியலை ரஜினியை வைத்து தற்போது நகர்த்த தொடங்கியுள்ளது.

கனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது? கட்சியை சீர்குலைக்க முயற்சியா?

puthiyamugam.com : மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்காத எந்த அமைப்பும் முன்னுக்கு வந்ததா சரித்திரமே கிடையாது. அதுவும் மகளிர் உரிமைகளை முன்னெடுக்கும் அமைப்பாக கருதப்படும் திமுக ஏன் மகளிர் அமைப்பை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடத் துடிக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, விவசாயிகள் அணி, இலக்கிய அணி என்று தொடக்க காலத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுவாக்க பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டன.
மகளிர் அணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனிமொழி பொறுப்பேற்ற பின்னர்தான் பாப்புலர் ஆனது. கல்விகற்ற பெண்கள் அதிகமாக பொறுப்புக்கு வந்தது திமுகவில்தான். இப்போது அந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், கனிமொழியின் செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு பிடிக்கவில்லையா?
அல்லது தலைவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. சமீப காலமாக கனிமொழியை டம்மியாக்கும் அளவுக்கு முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

What is OBC? Other Backward Class! .. How many are they? ஒ பி சி இட ஒதுக்கீடு பற்றிய புரிதலுக்காக ..


We Dravidians - Kathir RS ;
What is OBC?
Other Backward Class
How many are they?
Nearly 65crore in India
In Which religion?
Hindu
How you define them in Hindu religion?
The Non Brahmins,Non Dalits & Non Adivasis
You mean the Shudra as per the Varnashrama Drama?
Yes
What happen to them now in India?
Their rights had been stolen by upper caste Hindus
You mean brahmins?
Yes brahmins and Baniyas
Why?
They are unaware of what is their right.
Oh really?
Yes..
Since when it is happening?
Always happening..but the last 4 years it had gone to the peak. 1000s of medical seats have been stolen by the upper caste people.
You mean after BJP came into the power..?
Yes.
BJP & RSS are the supporters of Hindus right?
Yes only the upper class Hindus..
Are you serious?
Yes..

சச்சின் பைலட் .. காங்கிரசை தொடர்ந்து கவிழ்க்கும் பேராசை வாரிசுகள் .

சாவித்திரி ண்ணன் : மீண்டும்,மீண்டும் ஒரே விதமான காட்சிகள் தான் அரங்கேறுகின்றன!
எந்த படிக்கட்டுகளிலும் கால்படாமல் உச்சத்தில் போய் உட்காரத் துடிக்கும் வாரிசுகளின் பேராசை அரசியலின் அவசரக் குடுக்கைத் தனத்தின் விளைவே ராஜஸ்தான் சம்பவங்கள்!
சச்சின் பைலட் 2002 ல் காங்கிரசில் சேர்ந்த போது அழகான தோற்றம், அருமையான ஆங்கிலப் புலமை,
காலஞ்சென்ற ராஜேஸ் பைலட்டின் மகன் ஆகிய தகுதிகள் தவிர்த்து அரசியலின் அரிச்சுவடி கூட அவருக்குத் தெரியாது. ஆனால்,இரண்டே வருடத்தில் 26 வயதில் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு, அதைத் தொடர்ந்து உடனே பாராளுமன்ற உள்விவகாரத் துறை நிலைக் குழு உறுப்பினர்.விமானத் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் தேடி வந்தன .மீண்டும்,மீண்டும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் வாய்ப்பு, 2012 ல் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் பதவி என எல்லாம் வாய்த்தன!.
ஆயினும், 2014 ல் அவரது அஜ்மீர் தொகுதியை தக்க வைத்துக் கொள்ளத் திரானியின்றி வாய்ப்பிழந்தவருக்கு, காங்கிரசின் மாநிலத் தலைவர் பதவி தரப்பட்டது. இதெல்லாமே பல சீனியர்களை ஒவர்டேக் செய்து அவருக்கு கிடைத்த பதவிகள் தான்!

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது நடவடிக்கை இன்மையால் வீடியோ ..


தினகரன் :
சென்னை: 4 மாதங்களாக தான் தெரிவிக்கும் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறி நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி வழங்குவதால் என்ன பயன்?


இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படுவதால் என்ன பயன்?கமலேஷ் - பிபிசி நிருபர் : இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ஐந்தாண்டு குறுகிய சேவை நிரந்தர சேவையாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. இராணுவத்தின் முன்னாள் பெண் அதிகாரிகள், இதைச் சமத்துவத்தை நோக்கிய ஒரு பெரிய படியாகக் கருதுகின்றனர். மேலும், இது அவர்களுக்கு சாத்தியமில்லாத ஒரு கனவு நனவானது போலாகும்.
"நாங்கள் 2008ல் இதற்கான போராட்டத்தைத் தொடங்கியபோது, இந்த நாள் உண்மையில் வரும் என்று நான் நினைக்கவில்லை. பெண்களுக்கு நிரந்தர கமிஷன் (கட்டளைப் பணி) பெறுவது எளிதல்ல, ஆனால், முயற்சி பலன் தரும் என்பது நிரூபணமாகியுள்ளது. இது பெண்களுக்கு அதிக உற்சாகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்." ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் டாக்டர் அனுபமா முன்ஷி, மேலும் பதினொரு பெண் அதிகாரிகளுடன் சேர்ந்து, பெண்களின் நிரந்தர கமிஷன் கோரி, மனு அளித்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணையில், இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வழங்க பிப்ரவரி 17 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இப்போது இந்திய இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்க பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக முறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான்: போலிவூட்டில் என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் – .. வீடியோ

   மாலைமலர் :பொலிவுட்டில் தன்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார். மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ளது. ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பொலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:
“பொலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்தி செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.

தப்புமா சமூக நீதி? - ஜெ.ஜெயரஞ்சன்

மின்னம்பலம் : கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார பாதிப்புகள், புலம்பெயர் தொழிலாளர் விவகாரம், மக்களின் அவதி குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார். தனக்கு வந்த வாசகர்களின் மின்னஞ்சல் குறித்து இன்று (ஜூலை 26) நெகிழ்ச்சியுடன் பேசிய ஜெயரஞ்சன், எத்தனை நாள் இடஒதுக்கீடு தாக்குப்பிடிக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விரிவாக பதிலளித்தார். அவ்வளவு சுலபமாக இடஒதுக்கீட்டை விட்டுக்கொடுத்துவிட மாட்டோம், இந்த போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்று கூறினார். இடஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை பற்றியும் ஜெயரஞ்சன் பேசினார்.