மின்னம்பலம் : சாத்தான்குளம் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினர் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவுள்ளதாக முதல்வர் அறிவித்தார். இதுதொடர்பான தகவலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டதுஎனினும், சிபிஐ விசாரிப்பதற்குள் தடயங்கள் அழிக்கப்படலாம் என்பதால் உடனடியாக சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.


















