செவ்வாய், 7 ஜூலை, 2020

குணசேகரன், செந்தில், நெல்சன் சேவியர் . கார்த்திகை செல்வன் ... தொலைக்காட்சி விவாதங்களில் ஆர் எஸ் எஸ் ..கள்

Kandasamy Mariyappan : பொதுவாக, ஊடகங்கள் திமுகவிற்கு எதிராக அல்லது
குறைந்தது ஆதரவில்லாமல் இருக்கும் நிலையைதான் எப்பொழுதுமே தமிழ்நாட்டில் நாம் காண முடியும்.
2016 மற்றும் 2019 தேர்தல் காலங்களில் கூட இந்த ஊடகங்களின் தீவிர அதிமுக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை, ஊடகவியாலர் திரு. மணி மட்டுமே கடுமையாக விமர்சித்திருப்பார்.
ஆர் எஸ் எஸ் கும்பல்
உண்மையில்,  ஊடகங்கள் திமுகவிற்கு ஆதரவாக இல்லாமல் இருந்தாலும் கூட எதிராக இல்லாமல் இருந்திருந்தாலே இன்று தமிழ்நாட்டின் GDP 30 லட்சம் கோடியாக இருந்திருக்கும்.
70களில் தி ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினமலர், துக்ளக், விகடன், குமுதம் என்று ஆரம்பித்து 2011களில் புதிய தலைமுறை, தந்தி, நியூஸ் 7, நியூஸ் 18 வரையிலும், திமுக ஆதரவில்லா அல்லது எதிர் நிலைப்பாடுதான்.
எமர்ஜென்சி காலத்தில், திமுகவையும் கலைஞரையும் திட்டிய துக்ளக் பத்திரிகையை முரசொலி அலுவலகத்தில் Print போட்டுக்கொள்ள அனுமதித்தது முதல் அதிமுக ஆட்சி காலத்தில் ஹிண்டு, விகடன் பத்திரிகைகள் மீது தாக்குதல் நடந்த பொழுதும், அவர்களுக்கு ஆதரவாக இருந்தது கலைஞரும் திமுகவும்.

ஆனாலும் இவர்கள், திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
பல நேரங்களில் புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் மற்றும் கார்த்திகேயன் போன்றவர்கள் நேரடி விவாத நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று அந்த நிகழ்ச்சியை பார்த்தாலே புரியும்.
தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் மற்றும் தமிழ்நாடு சீரழியும் நிலையை பார்த்து அவர்களுக்கே பொறுக்க முடியாமல் இப்பொழுதுதான் அதிமுக RSS/BJP மீது சில விமர்சனங்களை பயந்து பயந்து வைக்கின்றனர்.

அதற்குள் எந்த ஒரு இயக்க பின்புலம் கூட இல்லாத மாரிதாஸ், மதன் போன்றவர்களெல்லாம் இவர்களை மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
இவர்களே இப்படி என்றால் ராகவன், நாராயணன், ஆசிர்வாதம் ஆச்சாரி, கோலா, கோம்ஸ், மாலன் போன்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்!
இப்பொழுதும் இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றால் அது திமுக மட்டுமே!
அதுதான் திமுகவின் பண்பு.
ஊடகவியாலர்களை நான் வேண்டிக் கொள்வது திமுகவின் தவறுகளை விமர்சியுங்கள், ஆனால் திமுகவில் தவறுகள் மட்டுமே உள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
திமுகவின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்கள்தான் இன்றும் 21 லட்சம் கோடி GDPயுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.
#Savejournalist
#Savejournalism

கருத்துகள் இல்லை: