செவ்வாய், 7 ஜூலை, 2020

சாத்தான் குள போஸ்ட்மார்ட்டம் தில்லுமுல்லு! நக்கீரன் 'EXCLUSIVE'...

sathankulam   nakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் :
பேராசிரியர் ஒருவரை இடம் பெற வைத்திருக்கலாம். அப்படி எந்த முயற்சியும் செய்யாமல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தடய அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் படிக்கும் ஒரு மாணவரை வைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ எடுக்கப்பட்ட உடற்கூறாய்வில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய மரணங்களை உடற்கூறாய்வு செய்யும்போது பின் பற்றவேண்டிய டிஜிட்டல் அட்டாப்சி எனப்படும் நவீன உடற்கூறாய்வு முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
இறந்தவரது சடலத்தை சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு உட்படுத்தினால் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் தெளிவாகத் தெரியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முறையில் முதுகுத் தண்டுவடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியும். அவர் எதனால் இறந்தார் எனத் தெளிவாக தெரிந்துவிடும். அந்தப் பதிவுகள் எலக்ட்ரானிக் முறையில் அழிக்கப்பட முடியாத வகையில் இருக்கும்.
இங்கிலாந்தில் சமீபத்தில் சந்தேகப்படக்கூடிய விதத்தில் நடந்த மரணங்களை 'டிஜிட்டல் அட்டாப்சி' முறையில் மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அதில் மரணத்திற்கான காரணம், மரணம் அடைந்தபோது இருந்த உடல்நிலை ஆகியவை மிகத் தெளிவாக தெரிந்தது. அந்த முறையில் இந்த இருவரது உடற்கூறாய்வும் மேற்கொள்ளப்படவில்லை.


பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் உடற்கூறாய்வின் அடிப்படையில் இருவரது மரணத்திற்கான காரணம் (Homicide due to prolonged physical and psychological torture) நீண்ட நேரம் உடல் மற்றும் உளவியல் சித்திரவதை மூலமாக மரணம் ஏற்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் தங்களது ரிப்போர்ட்டில் எழுதியிருக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக அவர்களது பின்தொடை மற்றும் ஆசன வாயிலுக்கு அருகே உள்ள பகுதி மற்றும் ஆசன வாயில் பல இடங்களில் சதை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.(Multiple contusions all over the gluteal and rectum region and in the upper and middle part of thigh). rectum எனப்படும் குடலின் கடைசிப் பகுதியான 12 செ.மீ. நீளமுள்ள மலக்குடல் எனப்படும் ஆசனவாய் வழியாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. (rectal bleeding) இதனால் அவர்களுக்கு ரத்தக் கசிவு அதிர்ச்சி (Haemorrhagic shock) ஏற்பட்டுள்ளது. இந்த ரத்தக் கசிவால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவர்களது ரத்த அழுத்தம் குறைந்திருக்கிறது. இதனால் இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கிறது என அந்த அறிக்கையில் மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய உடற்கூறாய்வு மருத்துவ நிபுணர் ஒருவர், "அவர்களது விதைப்பை, ஆணுறுப்பு (scrotum, penis) ஆகிய பகுதிகளில் காயங்கள் இல்லை. அவர்களது வயிறு மற்றும் மார்பு கூட்டிற்குள் (abdomen, thorax) எந்தப் பாதிப்பும் இல்லை. எந்தக் காயமும் இல்லை. மரணத்திற்கான காரணம் அவரது இடுப்புப் பகுதியில் இருந்த ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட ரத்தப்போக்குதான்'' என்றார்.



நாம் இதுபற்றி கருத்தறிய புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கருணாநிதியிடம் கேட்டோம். "இந்த ரிப்போர்ட்டின்படி மரணம் நிகழ்ந்திருக்குமானால் இது கொடுமையான, சித்ரவதையினால் ஏற்பட்ட மரணம். இதைச் செய்தவர்கள் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தால்தான் இதில் உண்மைகள் வரும் என்றார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் சுப்ரீம் கோர்ட், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்'' என்றார்.

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என எடப்பாடி அறிவித்திருப்பதில், டாக்டர் கருணாநிதி போன்றவர்களின் நியாயக் குரலும் அடங்கியுள்ளது

கருத்துகள் இல்லை: