திங்கள், 6 ஜூலை, 2020

பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

வெள்ளையும் சொள்ளையுமா இருக்கிறதால இந்த பெண்தான் குற்றவாளிகளை உயிரை பணயம் வைத்து துரத்தி பிடித்தார் என்று நம்ம ஆளு நம்புவான்
பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைதுதினத்தந்தி : பாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் பெண் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். அகமதாபாத் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விவசாய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷா. இதில்பணியாற்றி வந்த 2 பெண்கள் கேனல் ஷா தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
மகளிர் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் சுவேதா ஜடேஜா அப்பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷாவை கைது செய்யவில்லை மேலும் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத சுவேதா, சாதாரண வழக்குப்பதிவு செய்துள்ளார். இதற்காக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். மேலும் ரூ.15 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தொகை கேனால் ஷாவின் தரப்பிலிருந்து இன்னும் வழங்கப்படாததால் அவர்களை சுவேதா தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரியவர, சுவேதாவை கைது செய்தனர். அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுவேதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் விசாரித்த பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள

கருத்துகள் இல்லை: