புதன், 11 நவம்பர், 2026

அகல்விளக்கு முகவரியில் இருபது பதிப்பகங்கள்... சீரழிவின் உச்சத்தில் உள்ளதா தமிழ்ச்சமூகம்?

May be an image of text

 Kiritharan Karthigesu Yoganathan  : அகல்விளக்கு முகவரியில் இருபது பதிப்பகங்கள்... சீரழிவின் உச்சத்தில் 
உள்ளதா தமிழ்ச்சமூகம்?
கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்திருக்கும் இந்த கேவலமான உலகில் எவனுமே செய்யாத ஒரு அசிங்கமான மோசடித் தனத்தை அறிந்ததில் இருந்து பெரும் மன உளைச்சலாக இருக்கிறது..
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடித்தக் கதையாக அரசின் அனைத்து அமைச்சுத்  துறைகளிலும் கொள்ளையடித்த ஓங்கோல் திருடர்கள் கடைசியில் அறிவு வளர்க்கும் அறம் விதைக்கும் நூலகத் துறையிலேயே வாயை வைத்து இருக்கிறார்கள்..


இதைவிட பெரிய அதிர்ச்சி என்னவென்றால், கொஞ்சம்கூட அறிவு நாணயமோ, நேர்மைத் தன்மையோ சிறிதுமற்று கையும் களவுமாக பிடிபட்டும் அதற்காக குற்ற உணர்ச்சியோ கூச்சமோ படாமல் கடந்த கால 24ம் புலிகேசி தத்தி திராவிட நைனா ஸ்டாலின் ஆட்சிக்கு பலர் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதுதான்..
எந்த அரசுத் துறைகளாக இருந்தாலும் அதற்கென நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும்.  மக்களின் வரிப்பணத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும், தொழிலதிபர்களும் பங்குதார்களாக இணைந்து திட்டம் போட்டு கொள்ளையடித்து பல நூறு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துக் கொள்வதென்பது காலையில் கிழக்கில் சூரியன் உதிப்பது போலவும் மாலையில் மேற்கில் மறைவது போலவும் நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்வுதான்..

May be an image of text
மக்களாட்சி எனும் நாணயத்தின் இன்னொரு பக்கமே இந்த வரிப்பணக் கொள்ளை. இதன்படி நூலகத் துறையிலும் ஆண்டாண்டு காலமாக எந்த ஆட்சி் நடைபெற்றாலும் நூல்களைக் கொள்முதல் செய்யும் போது திருடிக் கொண்டுதான் இருந்தார்கள்..
நான் பல பத்தாண்டுகளாக எங்களூர் கிளைநூலகத்தின் வாயிலாக நூல்களை இரவல் பெற்று வாசித்துக் கொண்டு இருக்கிறேன்.அங்கு அடுக்கி வைக்கப்பட்டு் இருப்பவைகளில் தொண்ணூற்றொன்பது (99%) விழுக்காடு நூல்கள் எடைக்குப் போடுவதற்கோ அல்லது குப்பைத் தொட்டியிலோ வீசுவதற்கோகூடத் தகுதியற்றவைகள்தான்..
நூல்கள் எனும் பெயரில் இருக்கும் அவைகளை கழிவறை மலத்தொட்டியிலோ கூவம் ஆற்றிலோதான் கொண்டு போய் கொட்ட வேண்டும்..

May be an image of text
இது போன்ற வஸ்துகளைத்தான் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் நூலத்துறையிலிக்கும் ஊழல் பெருச்சாளிகள்  அதிகமாக கமிஷன் தரும் உப்புமா பதிப்பாளர்களிடம் இருந்து நூல்களைப் பெற்று தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் மாவட்ட வட்ட கிளைநூலகங்களுக்கு வழங்கி வருகிறார்கள்..
வழக்கமாக நடைபெற்று வந்து கொண்டிருந்த நூலக ஊழலின் லேட்டஸ்ட் வர்ஷன்தான்(2.0) அகல்விளக்கு பதிப்பகத்தின் மோசடி..
கோவை பெரியார் அறிவுலகத்தில் மட்டும் இந்த மோசடி முடிந்து விடவில்லை.ஏனெனில் அங்கு 
ஒவ்வொரு நூலிலும் ஒரே ஒரு பிரதி மட்டுந்தான் கொள்முதல் செய்து
வாங்கியிருக்கிறார்கள்..
தமிழ்நாடு முழுவதும் 4,635 நூலகங்கள் இருக்கின்றன. இந்த நூலகங்களுக்கும் இந்த அகல்விளக்கு  பல்கொள்ளை பதிப்பகத்தில் இருந்து பல லட்சக்கணக்கான நூல்களை கொள்முதல் செய்து வழங்கியிருப்பார்கள்..

May be an image of text
அந்த பதிப்பகம் இருக்கும் மடிப்பாக்கம் முகவரியில் இருந்தே இருபது வெவ்வேறு பெயர்களிலான பதிப்பகங்களை அதன் உரிமையான் நடத்தி வந்து இருக்கிறான். எனவே பல கோடிகளில்தான் செயற்கை நுண்ணறிவை  வைத்து செட்டப்  செய்யப்பட்ட நூல்களை  விற்று  பகல் கொள்ளை நடந்து இருக்கிறது..
என்ன கொடுமை என்றால்? அந்த பகல்கொள்ளை பதிப்பகத்தான் துயவெள்ளாடை உடுத்தி நெற்றியில் வெண்ணிற விபூதி பூசி நேர்த்தியாக கத்தரித்து செதுக்கிய தாடியுடன் என்னமோ பெரிய காந்தியவாதியைப் போல பதட்டமே இல்லாமல் அலட்டக் கொள்ளாமல் அருளுரை வழங்குவதுபோல பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறான்..
சமூக ஊகடங்களில் கருத்து சொன்னார் என்கிற காரணத்திற்காக ஒரு பொருளாதார பேராசிரியரை அதிகாலையில் வீடு புகுந்து அச்சுறுத்தி கைது செய்து அழைத்துப் போன அதிகார வர்க்கம் இவனை ஏன் கைது  செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது?
நான் ஒவ்வொருமுறையும் எங்களூர் கிளைநூலகத்திற்குச் சென்று நூல்களைத் தேடி எடுப்பது என்பது ஏழு கடலைத் தாண்டி இருக்கும் ஒரு பெருமலையின் குகையின் உள்ளே வசிக்கும் பூதத்தின் கையில் இருக்கும் கூண்டினுள் சிறைப்பட்டிருக்கும்  இளவரசியை மீட்பது போன்றதுதான்..
பல மணி நேரங்களை எல்லா புத்தக அலமாரிகளிலும் செலவிட்டு தேடித்தேடி ஓய்ந்து விடுவேன்.நூல்களில் மேல் பல்லாண்டுகளாக படிந்திருக்கும் தூசுகள் மேகமாக எழுந்து முக்கில் புகுந்து ஒவ்வாமையை ஏற்படுத்தி தொடர் தும்மலை உண்டாக்கி சளி பிடித்துவிடும்.அப்புறம் ஒரு வாரத்திற்கு கைக்குட்டைக்கும் மூக்கிற்கும் சண்டைதான்..
அப்புறம் வேண்டா வெறுப்பாக அறைகுறை மனசோடு ஏதோ ஒரு நூலை எடுத்துக் கொண்டு வருவேன்..
இதற்கெல்லாம் காரணமான நூலகத்துறை அதிகாரிகளும், பதிப்பகத்தார்களும், அமைச்சரும் 
தங்களின் கல்லாப் பெட்டிகளை நிரப்பிக் கொண்டு மலம் துடைக்கக்கூட தகுதியற்ற மை பூசிய தாள்களை நூல்கள் என்று நமக்குக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்..
பாரதியார்தான் நினைவிற்கு வருகிறார்...
'படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்' ..
அவர்கள் எங்கே ஐயோ என்று போகப் போகிறார்கள்.. கொள்ளையடித்த பணத்தை தங்களின் பல 
தலைமுறைகளுக்கு சேர்த்துக் கொடுத்துவிட்டு 'ஆகா...ஓகோ...' என்று  சுகபோகமாக வாழ்வாங்கு  நீண்ட வாழ்க்கை வாழ்ந்துவிட்டு வயது மூப்பின் காரணமாகத்தான் இறக்கப் போகிறார்கள்.. நமது சட்டமும், நீதித்துறையும் அப்படி..

கருத்துகள் இல்லை: