Devi Somasundaram :
Crime of opinion makers ..
கருத்து சுதந்திரம் என்பதன் எல்லை என்ன என்று நம் சமுகம் அறிவதே இல்லை .
சாதி இருக்கு என்பது கருத்து தான் ..ஆனால் அது ஒரு மனிதனை காய
படுத்தும் என்றால் அது கருத்து சுதந்திரத்தில் வராது .அது குற்றம் .
இந்த சமுகத்தில் சொல்ல படும் கருத்துகளால் நடந்த உயிரிழப்புகளை கருத்தாளரின் குற்றமா நாம் அறிவதில்லை .
சீதா பத்தினியாவா இருப்பா என்ற துணி துவைப்பவர் கருத்து சீதையை
தீயில் இறக்கியது . சீதை தன்னை நிருபித்த்த பின் அந்த துணி
துவைப்பவர்க்கு என்ன தண்டனை கிடைத்தது ..எதுவுமில்லை .
இங்க
நாம் சொல்லும் கருத்துகள் ஒருவரை அழிக்கின்ற அளவு வலிமை வாய்ந்ததுன்னு
நமக்கு தெரியாமலே எனக்கும் வாய் இருக்குன்னு பேசிட்டே போறோம் .
சினிமா தயாரிப்பாளர் ஜீ வி ( மணிரத்னம் சகோதரர் ) தற்கொலை செய்து
கொண்டார் . அவர் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மட்டும் சாகல . இந்த
சமுகம் தன்னை கேவலமா பேசுமேன்னு செத்து போய்ட்டார் ..அது கொலை இல்லயா ?
.
பொது வெளியில் ஒரு பெண் பேச வருவதே மிக கடினமான சூழலில் அதை எல்லாம் தாண்டி பேச வருவதை முடிந்தால் ஆதரிக்கலாம் ..
முடியா விட்டால் கருத்து கூறாமலாவது இருக்கலாம் .
வாயாடி, வீட்டுக்கு அடங்காதது, கண்டவன் கூட படுத்துப்பா, கால்
கேர்ல், அவ அம்மா தேவுடியா, என்று அவள் நிறம், உடல் அமைப்பு, (
மார்பு சின்னதா இருக்குன்னு சப்பைன்னு கலாய்க்க பட்ட சீரியல் நடிகை
தற்கொலை செய்து கொண்டார் ..தற்கொலை தூண்டிய அந்த கருத்துகள் ஏன் முதல்
குற்றவாளியா கருதி தண்டிக்கபட வில்லை ?) .