திங்கள், 22 ஜூலை, 2019

பெரிய புராணத்தில் நாயன்மார்கள் ஜாதிவாரியாக : FC 65, - BC 27 , - SC / ST 8 ..முழு விபரம்

Krishnavel T S : பெரிய புராணத்தில் சாதிகள்
பெரிய புராணத்தில் பல சாதிகள் குறிப்பிடப்படுகிறது, இந்த நூல் எழுத்தப்பட்ட காலம் இரண்டாம் குலோத்துங்கன் காலாம் அதாவது கிபி 12ஆம் நூற்றாண்டு. அதாவது ராஜராஜன், ராஜேந்திரன் மற்றும் முதல்லாம் குலோத்துங்கன் காலத்துக்கு பின்னர் எழுதப்பட்டது
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் தோன்றிய சாதிகளை அதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் காலத்தில் இருப்பது போல கதையில் சித்தரிக்கப்படும்.
சாதிகள் சரியாக நிலை பெறவில்லை என்பதை மகாமாத்திரர் மற்றும் வெளிர் அதாவது மந்திரி பதவி வகித்ததை கூட சாதியாக சொல்கிறார்கள், ஒரு களப்பிரர் தலைவனை களப்பாளர் என்ற சாதி என்று வேறு குறிக்கிறார்கள்
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிகள் பின்வருமாறு:
அதில் FC
பார்பனர் 17
பல்லவ அரசர் 2
சேரர்-அரசன் 1
சோழர்-அரசன் 1
பாண்டிய அரசர் 2
மந்திரிகள் 4
வேளாளர் 14

அதில் BC
இடையர் 2
களப்பரர் 1
குயவர் 1
குறும்பர் 1
சாலியர் 2
சான்றார் 1
செக்கார் 1
செங்குந்தர் 1
முத்தரையர் 2
வணிகர் 5
அதில் SC/ST
பரதவர் 1
பாணர் 1
புலையர் 1
வண்ணார் 1
வேட்டுவர் 1
அதாவது மொத்தம்
FC - 41
BC - 17
SC/ST - 5
இன்றும் ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் விகிதாச்சாரம் இப்படித்தான் இருக்கிறது
பர்சென்டேஜ் படி பார்த்தால்
FC - 65
BC - 27
SC/ST - 8
இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால்
இந்த FC-யை சேர்ந்த 17 பார்ப்பனர்களுக்கு சிவன் பெரிதாக எந்த சோதனையையும் வைக்க மாட்டார்,
அதுமட்டுல்ல அவர்களுக்கு நேரில் வந்து காட்சி கொடுக்கமாட்டார் கனவில் தான் வருவார், நேரடியாக கயிலாய பதவியும் கொடுத்துவிடுவார்.
ஒருசிலருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பார், தாசிகளின் கனவில் சென்று இவர்களுடன் இணக்கமாக இருக்க சொல்லுவார் சிவன்
அது போல மன்னர்களுக்கும், மந்திரிகளுக்கும் சிவன் பெரிதாக எந்த சோதனையையும் வைக்க மாட்டார்,
பார்ப்பான் தந்திரம் பலித்தவரை என்று சொல்வார்கள் அதுபோல, ஒரே ஒரு பாண்டிய மன்னனுக்கு மட்டும் வயிற்றுவலி,
ஒரே ஒரு பல்லவ மன்னனுக்கு மட்டும் மனைவியின் மூக்கு மற்றும் கைகை வெட்டுதல், தானே தீப்புகுந்த ஒரு சோழன்
தன் பிள்ளையை வெட்டி கறிசமைத்த ஒரு பல்லவ மந்திரி என்று இருக்கும், அவர்களுக்கு நேரில் வந்து காட்சி கொடுக்கமாட்டார் ஆனால் பார்ப்பனர் கனவில் சிவன் சொன்னதை செய்வார்கள்.
அடுத்தபடியாக வெள்ளாளருக்கும் மிகப்பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது, அதிகப்பட்சம் அவர்களின் சொத்துகளை சிவன் கோயிலுக்கு பார்ப்பனர் ஏமாற்றி வாங்கி கொள்வதுடன் திருவிளையாடல் முடிந்துவிடும்
இந்த BC-யை சேர்ந்த 27 பேருக்கும், பல கடுமையான சோதனைகள் வைப்பார், பெரும்பாலும் அந்த சோதனைகள், அவர்களது பொருள், வீடு மனை, மனைவி, செல்வங்களை
காலி செய்வதாகவே அந்த சோதனைகள் இருக்கும், அதிலும் அந்த சொத்துகள் பார்ப்பன வேதியருக்கு கொடுக்கும் படி செய்ததாகவும் இருக்கும்
அப்புறம் இந்த SC/ST-யை சேர்ந்த 8 பேருக்கும், பார்த்தால் இருப்பதிலேயே கடுமையான சோதனைகளாக இருக்கும், கண்ணை நொண்டி பிடுங்குவது,
உயிரோடு நெருப்பில் எரிப்பது, பார்ப்பனருக்கு பல்லக்கு தூக்கவ்து, ஓசியில் அவரகளது உழைப்பை திருடுவது என்று இருக்கும்.
பெரிய புராண கதைகள் அனைத்தையும் படித்தால் பார்ப்பனர் அன்றும் இன்றும் எப்படி அடுத்தவரை சுரண்டுகிறார்கள் என்று நன்கு புரியும்
அவை பற்றி ஒவ்வொன்றாக வரும் தொடர்ந்து பார்ப்போம்

கருத்துகள் இல்லை: