செவ்வாய், 23 ஜூலை, 2019

Crime of opinion makers .. கருத்து சுதந்திரத்தின் எல்லை ... நம் சமுகம் அறிவதே இல்லை!

Devi Somasundaram : Crime of opinion makers .. கருத்து சுதந்திரம் என்பதன் எல்லை என்ன என்று நம் சமுகம் அறிவதே இல்லை .
சாதி இருக்கு என்பது கருத்து தான் ..ஆனால் அது ஒரு மனிதனை காய படுத்தும் என்றால் அது கருத்து சுதந்திரத்தில் வராது .அது குற்றம் .
இந்த சமுகத்தில் சொல்ல படும் கருத்துகளால் நடந்த உயிரிழப்புகளை கருத்தாளரின் குற்றமா நாம் அறிவதில்லை .
சீதா பத்தினியாவா இருப்பா என்ற துணி துவைப்பவர் கருத்து சீதையை தீயில் இறக்கியது . சீதை தன்னை நிருபித்த்த பின் அந்த துணி துவைப்பவர்க்கு என்ன தண்டனை கிடைத்தது ..எதுவுமில்லை .
இங்க நாம் சொல்லும் கருத்துகள் ஒருவரை அழிக்கின்ற அளவு வலிமை வாய்ந்ததுன்னு நமக்கு தெரியாமலே எனக்கும் வாய் இருக்குன்னு பேசிட்டே போறோம் .
சினிமா தயாரிப்பாளர் ஜீ வி ( மணிரத்னம் சகோதரர் ) தற்கொலை செய்து கொண்டார் . அவர் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மட்டும் சாகல . இந்த சமுகம் தன்னை கேவலமா பேசுமேன்னு செத்து போய்ட்டார் ..அது கொலை இல்லயா ? .
பொது வெளியில் ஒரு பெண் பேச வருவதே மிக கடினமான சூழலில் அதை எல்லாம் தாண்டி பேச வருவதை முடிந்தால் ஆதரிக்கலாம் ..
முடியா விட்டால் கருத்து கூறாமலாவது இருக்கலாம் .
வாயாடி, வீட்டுக்கு அடங்காதது, கண்டவன் கூட படுத்துப்பா, கால் கேர்ல், அவ அம்மா தேவுடியா, என்று அவள் நிறம், உடல் அமைப்பு, ( மார்பு சின்னதா இருக்குன்னு சப்பைன்னு கலாய்க்க பட்ட சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்டார் ..தற்கொலை தூண்டிய அந்த கருத்துகள் ஏன் முதல் குற்றவாளியா கருதி தண்டிக்கபட வில்லை ?) .

சார்ந்த விமர்சனங்கள் அவளை திருப்பி அடுப்படி நோக்கி விரட்டும் செயலை குற்றம்னு எடுத்துகாம
எப்படி எடுத்துகனும் ..
எல்லாத்துக்கும் ஒபினியன் சொல்ற இந்த அதீத தனம் எத்தனை உயிரை பலி வாங்கி இருக்கு ..அவை ஏன் குற்றமாக கருத படுவதில்லை .
கடவுள் நம்பிக்கையை பேசினால் புண்படுகிறதென்றால் ஒரு பெண்ணின் ஒழுக்கம் சார்ந்த விமர்ச்னம் அவளை புண்படுத்தாதா ?/. அதற்கு என்ன தண்டனை ?
தனக்கு பிடிக்காத கருத்தை சொல்பவரை APU ந்னு விமர்சிப்பது அவர் மீதான தனி பட்ட விமர்சனம் இல்லயா ? ..
அவர் தன்னை மூத்த பெண்ணிடம் பேசுவது குற்றம்னு பார்கிற மன நிலை பகுத்தறிவானதா ? .
சென்ற மாதம் திருவள்ளூர்ல ஒரு ஆணும் பெண்ணும் பெட்ரோல் ஊத்தி வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.அந்த தீ பரவி அடுத்து இருந்த 6 வீடுகள் எரிந்து போனது .
அந்த பெண் திருமணம் ஆகி கணவனுடன் சண்டை போட்டு ஒரு குழந்தையுடன் பிரிந்தவர் , அவர் தன் வீட்டுக்கு அருகில் இருந்த தன்னை விட பத்து வய்து சிறிய ஆணுடன் பழகியுள்ளார் .
அது அவர் இருவர் தனிபட்ட விஷயம் .
கண்வன் விருப்படாவிட்டால் விவாகரதது பெறலாம் .அது தவிர யார்க்கும் உரிமை இல்லை .
ஆனா ஊர் கேவலமா பேச் அவர்கள் வீட்டுகுள் தற்கொலை செய்து கொண்டனர் , அது கொலை, இந்த சமுகம் உருவாக்கிய கொலை ..அந்த கொலைகான தண்டனை ஏன் வழங்க படவில்லை .
ஒரு புறம் ஆணுக்கு திருமணத்திற்கு பெண்ணே கிடைப்பதில்லை . டோலி இல்லயே க்ருப் .இன்னொரு புறம் ஆண் யார் கிட்டயாவது பேசினா APU ந்னு கிண்டல் செய்யும் க்ருப் . .
.பெண் என்பவள் இப்படி தான் வாழனும்னு துப்பட்டா போடுங்கள் தோழி க்ருப்க்கும் ஆண் இப்படி தான் வாழனும் APU ந்னு கிண்டல் செய்யும் க்ருப்புக்கும் என்ன வித்தியாசம் ..

நாம சொல்ற கருத்துக்கு எதிர் கருத்தே வர கூடாது என்பது
ஒரு எதேச்சதிகார மனனிலை .. மீறி வரும் கருத்தை எதிர் கொள்ள தன்னை அறிவு பூர்வமா வளர்த்துக்காம அவரை உருவம், குடும்பம், விருப்பம் சார்ந்து விமர்சிப்பது பகுத்தறிவில்லை .நீங்கள் கருத்தை எதிர்க்கும் அளவு வலுவற்றவர் என்று அர்த்தம் .
கிண்டலுக்கு எப்பொழதாவது ஒருவர் உடல் அமைப்பை பற்றி பேசுவது சாதாரணமா எடுத்துகலாம் என்றாலும் அது அவர்க்கு என்ன பாதிப்பை தரும்னு கருத்தில் கொள்ளனும் .
கருப்பு அழகில்லை என்று கூறுவது எத்தனை அயோக்கியதனமோ அத்தனை அயோக்கியதனம் சிவப்பா இருக்கும் பெண் வெற்றி பெற்றாள் அதற்கு அவள் நிறம் தான் காரணம் என்று கூறுவதும் .
பெண் பொதுவெளியில் பேச வந்தால் அவளை கருத்தால் எதிர் கொள்ளுங்கள் ..தனி பட்ட விமர்சனம் அவளை பாதிக்காது உங்கள் அறியாமையை பறைசாற்றும் .
ஒருவர் மனம் நம் அவர் பற்றி தனிபட்ட கருத்தால் பாதிக்கபட்டால் அதுவும் கிரிமினல் குற்றமே .
#தேவி .
#இது யாரோ ஒருவர் பற்றி தனிபட்ட பதிவில்லை .மொத்த சமுகத்தின் மனனிலை விமர்சிக்கும் பதிவு .யாரையாச்சும் ஒருவரை கைகாட்ட நினைப்பவர் தன் சொந்த தவறை மறைக்க முயல்கிறார்ன்னு அர்த்தம்...

கருத்துகள் இல்லை: