tamiloneindia : சென்னை:
"டேய்.. 53 ரூட்டுக்கு ஜே-ன்னு 108 முறை எழுதுடா" என்று ஒரு கல்லூரி
மாணவனை அரை நிர்வாண கோலத்தில் உட்கார வைத்து, சக மாணவர்கள் சூழ்ந்து
தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மாணவர்களிடையே அடிக்கடி மோதல் வலுத்து வருவது வழக்கமாகி விட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது போய், கத்திக்குத்து, அரிவாள் வெட்டு அளவுக்கு இந்த கல்லூரிக்குள் வன்முறை புகுந்துவிட்டது.
இந்நிலையில்,
நேற்று ரூட் தல பிரச்சனை விவகாரம் இரு தரப்பு மாணவர்களுக்குள்ளும்
வெடித்தது. காலேஜ் முடிந்து ஒரே பஸ்ஸில் மாணவர்கள் சென்றபோது, ரூட் தல
விவகாரம் கிளம்பி இரு தரப்புமே சரமாரியாக மோதிக் கொண்டனர்.
பஸ்ஸில்
இருந்து இறங்கி நடுரோட்டில் ஓடிய மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள்
விரட்டி விரட்டி சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தாக்கி
கொண்டனர். இதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவரை
ஒருவர் அடித்து கொண்டதை பார்த்து மற்ற பஸ்ஸில் இருந்த பயணிகள், பொதுமக்கள்,
சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் என எல்லாருமே அலறி அடித்து கொண்டு
ஓடினார்கள்.
ஆயுதங்களை
கையில் வைத்துக் கொண்டு நடுரோட்டில் அங்கும் இங்கும் ஆவேசமாக நடமாடிய
மாணவர்களை பார்த்து பொதுமக்கள் ஷாக் ஆனார்கள். தகவலறிந்து போலீசார்
விரைந்து வந்து மாணவர்களை பிடிக்க முயன்றும், ஒரு சிலரே பிடிபட்ட நிலையில்,
பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்த மாணவர்கள் தப்பி விட்டனர். இது
சம்பந்தமான வீடியோவும் வெளியாகி சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சியை தந்தது.
ரூட்
தல பிரச்சனையில் எத்தனையோ முறை போலீசார் தலையிட்டு, மாணவர்களுக்கு அட்வைஸ்
தந்திருக்கிறார்கள். எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த
பிரச்சனை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வருகிறது.
அதனால்,
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களை போலீஸ் உயர்அதிகாரிகள் சந்தித்து
ஆலோசனை நடத்த இன்று முடிவு செய்தார்கள் அதன்படி, மாநிலக் கல்லூரி
மாணவர்கள், பேராசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஆலோசனை
நடத்தினார். அதேபோல, நந்தனம் கல்லூரி மாணவர்களுடன் அடையாறு துணை ஆணையர்
பகலவன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில்,
மாணவர்கள் சம்பந்தப்பட்ட இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ஒரு
கல்லூரி மாணவரை கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அரை நிர்வாண கோலத்தில்
உட்கார வைத்து, "53 ரூட்டுக்கு ஜே" என்று 108 முறை இம்போசிஷன் எழுதச்சொல்லி
அவரை சூழ்ந்து நிற்கிறார்கள். அந்த மாணவரும் 53 ரூட்டுக்கு ஜே என்று
ஒவ்வொரு முறை சத்தமாக சொல்லி எழுதுகிறார்.
இருந்தாலும் சக மாணவர்கள் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு தாக்குகிறார்கள். இந்த மாணவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் ரூட் தல விவகாரம் பெரிய அளவுக்கு வெடித்து கிளம்பி உள்ளது என்று மட்டும் தெரிகிறது. நிர்வாணகோலத்தில் மாணவனை சக மாணவர்கள் தாக்கும் இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது
சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மாணவர்களிடையே அடிக்கடி மோதல் வலுத்து வருவது வழக்கமாகி விட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது போய், கத்திக்குத்து, அரிவாள் வெட்டு அளவுக்கு இந்த கல்லூரிக்குள் வன்முறை புகுந்துவிட்டது.
ஆவேசம்
ரூட் தல
ஆலோசனை
இருந்தாலும் சக மாணவர்கள் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு தாக்குகிறார்கள். இந்த மாணவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் ரூட் தல விவகாரம் பெரிய அளவுக்கு வெடித்து கிளம்பி உள்ளது என்று மட்டும் தெரிகிறது. நிர்வாணகோலத்தில் மாணவனை சக மாணவர்கள் தாக்கும் இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக