வியாழன், 13 டிசம்பர், 2018

தி.மு.கவின் வெற்றியைத் தடுக்க பெரியார் பெயரில் பேரணி? காவிகளின் கபட நாடகம்

பூனைக்குட்டி_வெளியே_வந்துவிட்டது!
எதிர் வரும் டிசம்பர் 23 இல் பெரியார் இயக்கச் செயல்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து திருச்சியில் காவி மதவாதக் கூட்டத்திற்கு எதிரான மண் தமிழ் மண்- இது தந்தை பெரியார் மண் என்பதை அறிவிக்கும் பேரணி ஒன்று நடத்தப்படப் போவதாக அறிவிப்பு கண்டதும் பல்வேறு கட்சிகள், இயக்கங்களில் பங்கேற்றுள்ள உணர்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.> தந்தை பெரியாரின் இலட்சியச் சுடர் அணையாது காத்திடவும், அதனை முன் னெடுத்துச் சென்றிடவும் பல்வேறு இடர் களை எதிர்கொண்டு, காவி மதவாதத்தை எதிர்த்து தங்கள்வாழ்நாளை ஒப்படைத்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகளும், மேலும் சில பெரியாரை முன்வைத்து செயல்படும் அமைப்புகளும் இதில் பங்கேற்க உள்ளதாக அறிந்து உற்சாகம்
அடைந்தோம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வேண்டி, அவரும் ஆதரவளித்து உள்ளதும், இன நலப் போராட்டங்களில் பல துன்பங்களை ஏற்று பெரியாரே எம் சுவாசம் எனச் செயல்படும் தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை.கு.இராம கிருட்டிணன் உள்ளிட்டோரும், அவர்தம் தோழர்களும், கடுமையான கண்டனத் திற்குப் பிறகு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீ யும், முதுபெரும் தோழர் ஆனைமுத்து அய்யா உள்ளிட்ட சில தமிழர் அமைப்புகளும் இதில் பங்கேற்று மதவாதக் காவிக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் என்றைக்கும் இடமில்லை என அறிவிக்கவுள்ளார்கள்

புதன், 12 டிசம்பர், 2018

பொருளாதாரம் தான் மிகப்பெரிய மதம். . ஒரு செங்கலை அகற்றினால் அகற்றியவன் தலையிலேயே இன்னொரு செங்கல்..

Karthikeyan Fastura : இங்கே எல்லாமே Corporate Game தான். அது தான் 2014ல் மோடி
அலையை ஏற்படுத்தி வாய்ப்பும் பிஜேபிக்கு கொடுத்தது.
ஆனால் அவர்கள் அளவுக்கு மீறி ஆடியதன் விளைவு கார்பொரேட்டுகளுக்கே ஆப்பாக முடிந்தது.
டிமானிட்டைசேசன் நேரடியாக கார்போரெட்டை பாதிக்காவிட்டாலும், வங்கிகளை வெகுவாக பாதித்தது. அது முதல் தவறு.
ஜிஎஸ்டியின் அவசரகோல Implementation மத்திய மற்றும் சிறு குறு வணிகர்களை வெகுவாக பாதித்தது. அதன் எதிரொலி ஆறுமாதங்களுக்கு பிறகு இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. Nifty Midcap 50 பங்குகள் 2018 ஜனவரியில் இருந்து விழுக தொடங்கியது இன்றும் விழுந்துகொண்டே இருக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் ஸ்திரதன்மை இருக்க அந்த நாட்டின் உற்பத்தி திறன், நுகர்வோர் வாங்கும் திறன், சட்டம் ஒழுங்கு, நீதி மன்ற பரிபாலனை, எரிபொருள் விலை குறைவு, போக்குவரத்து துறை, உள்நாட்டு கட்டுமானம், பணம் மதிப்பு எல்லாம் சீராக இருக்க வேண்டும். இது எல்லாவற்றிலும் மோடி அரசு சொதப்பி வைத்தது. பொருளாதார சரிவை நோக்கி இந்தியாவை செலுத்திக் கொண்டிருக்கிறது. இதை மீட்க தவறான முடிவுகளாக தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். அதன் உச்சமாக மத்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலும் கை வைக்கிறது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சமடைய வைத்திருக்கிறது. அவர்கள் மோடி அரசை முற்றிலுமாக வெறுக்க தொடங்கியது இந்த புள்ளியில் தான்.

சீமான் தெலுங்கு மக்கள் மீது அவதூறு பேச்சு ..வழக்கு பதிவு ... பல்வேறு பிரிவுகளில்

பிரிவினைவாத பேச்சு: சீமான் மீது வழக்கு!மின்னம்பலம் : தமிழ் மற்றும் தெலுங்கு
மொழிகளை பேசும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையில் பேசியதற்காக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ், தெலுங்கு பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசியுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தின் காணொளிக் காட்சியை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ராஜ்குமார் யூட்யூப் இணையதளத்தில் கண்டுள்ளார். இரு மொழிகளை பேசும் மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் சீமான் பேசியதாகக் கருதிய ராஜ்குமார் இவ்விவகாரம் குறித்து சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புலனாய்வில் நக்கீரன் போல் எத்தனை பேரால் தாக்குப்பிடிக்க முடியும்? அந்திமழை பத்திரிகையாளர்கள் கருத்து!

nnnakkheeran.in - athanurchozhan : தமிழில் அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், மக்களோடு நின்று மக்கள் பிரச்சனைகளில் அதிகாரவர்க்கத்தின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துவதில் நக்கீரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. நக்கீரனின் புலனாய்வுப் பயணத்தின் விளைவாக அது சந்தித்த அடக்குமுறைகளும், வழக்குகளும் ஏராளம். நக்கீரன் சந்தித்த ஒவ்வொரு வழக்கிலும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும் ஏதேனும் ஒரு தீர்ப்பை பெற்றிருக்கிறது.
இதழியல் துறைக்கு நக்கீரன் பெற்றுத்தந்த சட்டபூர்வ உரிமைகள் இதழியல் வரலாற்றில் முத்திரைகளாக நீடித்திருக்கும். 2018 அக்டோபர் 5 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு, மிகப்பெரிய எதிர்ப்புக்குப் பிறகு நீதிமன்றமே அவரை விடுவித்தது. அதிலும் அவர் வரலாறு படைத்தார். ஆளுநர் மாளிகையின் விருப்பத்துக்காக போடப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டாலும், நக்கீரன் ஆசிரியரை சிறைக்கு அனுப்ப முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது உலக அளவில் பேசப்படும் விஷயமாக பதிவாகியது.

ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குறுதி.. கொங்கு மண்டலம்…

டிஜிட்டல் திண்ணை: கொங்கு மண்டலம்… ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குறுதி!மின்னம்பலம் : “செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணையப் போகிறார் என்ற செய்தியை பிரேக் செய்தது மின்னம்பலம்தான்...
“மின்னம்பலத்தின் இன்றைய 1 மணிப் பதிப்பில், ஸ்பெஷல் டிஜிட்டல் திண்ணையில் முன்னாள் அதிமுக அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி நாளை காலை 10.45 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணையப் போகிறார் என்பதைச் சொல்லியிருந்தேன். அதில் ஒரு சின்ன திருத்தம். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று மும்பை கிளம்பிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். நாளை மதியம் 12.30 மணிக்குத்தான் சென்னை திரும்புகிறார். விமான நிலையத்திலிருந்து நாளை மதியம் நேரடியாக அண்ணா அறிவாலயம்தான் வருகிறார் ஸ்டாலின். அதனால் மதியம் ஒரு மணி அளவில் இணைப்பு விழாவை வைத்துக்கொள்ளலாம் என செந்தில் பாலாஜிக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜாதி அமைப்பு ஒரு "organized crime" இல் ஈடுபட உதவி கொண்டிருக்கிறது.. எவிடென்ஸ் சார்பில் மதுரையில்..

தமிழகத்தில் சாதி வேறுபாடின்றி எந்த பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தாலும் அவர்களுக்கு நீதி வழங்கிட அவர்களுக்கு SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு நிகரான ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட வேண்டும்.
Shalin Maria Lawrence : கடந்த 8 ஆம் தேதி சனிக்கிழமை எவிடென்ஸ் அமைப்பின்
சார்பில் மதுரையில் நடந்த தமிழகமும் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளும் என்கிற தலைப்பில் நடந்த பொது விசாரணையில் கலந்து கொண்டேன்.
தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருட காலமாக பாதிக்கப்பட்ட பெண்களிடையே பணியாற்றினாலும் ஒவ்வொரு முறையும் நடந்த கொடுமைகளை திரும்ப கேட்கும்போது அடிவயிற்றில் கத்தியை வைத்து கிழிப்பதை போல் ஒரு உணர்வு தோன்றுவதை தடுக்க முடியவில்லை.
பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு உடல் கவர்ச்சி மட்டுமே காரணம் இல்லை என்று இது போன்ற போது விசாரணைகளில் நன்றாக தெரியவரும்.

ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி.. ராஜபக்சேவுக்கு மீண்டும் தோல்வி

ரணில் -சந்திரிகா- மகிந்தா - சம்பந்தர்
மாலைமலர் : இலங்கையில் ஓரம்கட்டப்பட்ட
பிரதமர் ரணில்
விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்தது.
கொழும்பு: இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. ராஜபக்சேவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடத்துவதாக சிறிசேனா அறிவித்தார்.

சென்னை வடமாநில கொள்ளை கூட்டம் சிக்கியது .. ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் ..

THE HINDU TAMIL< கைதான நஷேஸ் சிங், கைப்பற்றப்பட்ட பிஸ்டல் சென்னையில் கொள்ளையடித்துச் சென்று ராஜஸ்தானில் சிக்கிய நாதுராம் போன்று இன்னொரு கொள்ளையன் துப்பாக்கியுடன் யானைக்கவுனியில் சிக்கியுள்ளார்.
சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் முத்துசாமி சாலையில் நேற்று நள்ளிரவு இணை ஆணையரின் சிறப்புப்படை போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வடமாநில டிப்டாப் இளைஞர் ஒருவரை போலீஸார் சந்தேகப்பட்டு அருகில் அழைத்து விசாரித்தனர். அவர் போலீஸாரைக் கண்டதும் ஓட ஆரம்பித்துள்ளார்.

ம.பி.யில் காங்கிரஸ்: 121 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது

congress claims support of 121 mlas in madhya pradesh assemblySamayam Tamil : மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 121 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
114 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய அந்தக் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் 5 சுயேட்சைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 109 தொகுதிகளும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 தொகுதிகளும் கிடைத்தன. 5 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையாக 116 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் 114 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் மற்ற சுயேட்சை மற்றும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற முயற்சி எடுத்தது.

ஜெயலலிதா அரசியல் புகழ் பெற தொடங்கியதும் உறவினரை ஊதாசீனம் செய்தார் .. உறவு பெண் பகீர் பேட்டி

ஸ்பெல்கோ  : ;மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கும் அவருடைய நெருங்கிய சொந்தங்களுக்கும் இடையிலான உறவு அத்தனை சுமுகமாக இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே அந்த சுமுகமின்மைக்கான காரணம் ஜெயலலிதாவைச் சுற்றி ஆக்ரமித்த மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் மட்டுமே என்பதாகவே பலரது நினைப்பும் இன்று வரை நீடிக்கிறது.
 ஆனால், உண்மை அது மட்டுமே அல்ல..
ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை ஒட்டி தனியார் டிவிக்கு தனது அத்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது ஜெயலலிதாவின் மாமா மகள் தெரிவித்த விஷயம் என்னவென்றால்,‘அத்தை முதன்முறையாக அரசியலில் காலூன்றி ஜெயிக்கும் வரைக்கும் வெகு ப்ரியமாகவும், சுமுகமாகவும் அவர் எங்களுடன் பழகினார். ஆனால், அதிமுகவின் செயலாளராக ஜெயித்த பிறகு அவருக்கும், எங்களுக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது.

காடுவெட்டி சோழன் என்கின்ற ராஜராஜ சோழனை கண்டு பிடித்த ஹூல்ஸ் Eugen Julius Theodor Hultzsch

Eugen Julius Theodor Hultzsch (29 March 1857 - 16 January 1927) was a German Indologist and epigraphis

சோழனை கண்டு பிடித்த Hultzsch

செ.கார்கி : தமிழ்த் தேசியவாதிகளால் மாமன்னன் என்று கொண்டாடப்படும்
ராஜராஜ சோழனைப் பற்றியும் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். இல்லை என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் என்ற மன்னனை கண்டுபிடித்தவர் ஹூல்ஸ் என்ற ஜெர்மானியர்  ஆவார். இவர்தான் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் முதன்முதலாக பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படித்து இந்த எழுத்துக்கள் தமிழ்தான் என்றும், அவனுடைய காலம் கி.பி 985-1113 என்றும் சொன்னவர். அதற்கு முன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது காடுவெட்டி சோழன் என்னும் மன்னன்தான் என்று பெரும்பான்மை தமிழ்மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆக சீண்டுவார் யாருமின்றி அனாதையாக கல்வெட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜராஜனை அதில் இருந்து எழுப்பிவிட்ட பாவத்தைச் செய்தவர் ஓர் ஜெர்மானியர் ஆவர்.

சந்திரசேகர ராவ் :ஸ்டாலின் மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுக்க வேண்டும்... மாநில கட்சிகள் ...

ஸ்டாலினுக்கு சந்திரசேகர் ராவ் வழங்கிய அறிவுரை!
மின்னம்பலம் : ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (டிசம்பர் 11) நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நிலை உருவானது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய அரசியலில் தீவிரமாகச் செயல்படப் போவதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்டாலினுக்கு ஓர் அறிவுரை வழங்கியிருப்பதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார். நேற்று (டிசம்பர் 11) செய்தியாளர்களிடம் சந்திரசேகர் ராவ் பேசுகையில், “மாநில பலம் பெற்ற கட்சிகள் பாஜக அல்லாத அணி என்று ஏன் தற்போது குரல் எழுப்ப வேண்டும்?

கபாலி, காலா, 2.O ஆகிய மூன்று படங்களிலும் லாபம் கிடைக்கவில்லை..விளம்பர செலவு அதிகமாகிவிட்டது

2.O வசூல்: நிஜமும் நிழலும்!இராமானுஜம் - மின்னம்பலம் : இந்திய சினிமா பிரமிப்புடன் பார்த்து வியந்த நிறுவனம் லைகா. அதிக பட்ஜெட், பிரமாண்ட கூட்டணி, அடிப்படையில் தமிழ்ப் படமாக தொடங்கப்பட்ட 2.O படத்துக்கான இசை வெளியீடு, ட்ரெய்லர் வெளியீட்டை மும்பையிலும், வெளிநாடுகளிலும் நடத்தி கெத்து காட்டியது.
2.O படத்தின் வியாபாரமும் வசூலும் பெருமைக்குரிய சாதனையாக இருக்கும் என்று லைகா நிறுவனம் எதிர்பார்த்தது. அப்படி ஓர் ஆச்சரியத்தை 2.O படத்தின் வியாபாரம் வசூல் நிகழ்த்தவில்லை.
கபாலி, காலா, 2.O இம்மூன்று படங்களும் ரஜினிக்கு இரு மடங்கு லாபகரமானவை. ஆனால் இந்தப் படங்களை தயாரித்த, விநியோகம் செய்த, திரையிட்ட திரையரங்குகளுக்கு இவை லாபத்தைக் கொடுத்ததில்லை.
கபாலி, காலா, 2.O ஆகிய மூன்று படங்களிலும் ரஜினியை முன்னிறுத்த அதிகம் செலவு செய்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால், லாபம் கிடைக்கவில்லை. அதே நிலைமைதான் 2.O படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ப் படங்களுக்கு அதன் பட்ஜெட்டில் பெரும்பகுதியைத் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் வசூல் மூலம் எடுப்பது இயல்பு. 2.O அனைத்து இடங்களிலும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான வசூல் ஆகியுள்ளது. 11 நாட்களில் உலகம் முழுவதும் 2.O படத்தின் மொத்த வசூல், தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தருக்கு கிடைக்கக்கூடிய பங்குத் தொகை உங்கள் பார்வைக்கு:

யார் இந்த சக்திகாந்த தாஸ்? ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் ... ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்

BBC : இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜிநாமா செய்த
நிலையில் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக இருந்த இவர், மூன்று வருடங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் இருந்தவர் சக்திகாந்த தாஸ்.
சக்திகாந்த தாஸ் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பொருளாதார விவகாரங்களின் செயலராக இருந்தவர். மேலும் ரிசர்வ் வங்கியுடன் நெருக்கமாக பணிபுரிந்துள்ளார்.2016-ஆம் ஆண்டில், இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு விவகாரத்தை அமலாக்கும் முதன்மை முகங்களில் ஒன்றாக விளங்கினார்.

சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல.. 1945 ஆம் ஆண்டு பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கி கால் நடையாக ஆராய்ந்து,

சேதம் அடைந்துள்ள கண்ணகி சிலை
Ak Raja : சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு
என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.
சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.எண்ணி துணிந்து இறங்கினார்.
1945 ஆம் ஆண்டு கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் வி்ற்று விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

மத்திய பிரதேசம் காங்கிரஸ் 115,----பாஜக 108 ,..--- பகுஜன் 2 .. -- சுயேச்சைகள் 5

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.. தங்களிடம் ஆட்சி அமைப்பதற்கு வேண்டய பெரும்பான்மை இருப்பதாக ஆளுநரிடம் காங்கிரஸ் தலைவர் கமல் நாத் தெரிவித்து உரிமை கோரினார்
Assembly election results 2018 live updates: Congress leader Kamal Nath declares majority for his party in Madhya Pradesh

Seats INC 115 50%    BJP 108 47%    BSP 2 0.9% GGP 0 0% Other parties 5 2.2% 

காங்கிரஸ் வெற்றியால் எழுச்சியடைந்த பங்குச் சந்தை.. தொழிலதிபர்கள் ஹேப்பியாம்

Many industrialists happy with congress win tamil.oneindia.com - veerakumaran : சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பங்குச்சந்தை எழுச்சி பெற்றது.
5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கி டிரெண்ட் வரத் துவங்கியதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. சென்செக்ஸ்ஸ 533 புள்ளிகள் குறைந்தது. நிப்டி 150 புள்ளிகள் குறைந்தன.< ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை இழந்து காங்கிரஸ் முன்னணி பெறுவது உறுதியானதும், பங்குகள் எழுச்சி பெற்றன. மதியம் 12.06 மணிக்கு, சென்செக்ஸ் 67.29 புள்ளிகள் குறைந்திருந்தது. நிப்டி 6.10 புள்ளிகள் குறைந்திருந்தது. சரிவில் இருந்து மீண்டு, இந்த அளவுக்கு, எழுச்சி பெற காங்கிரசின் வெற்றி டிரெண்டிங் காரணமாக கூறப்படுகிறது.

செவ்வாய், 11 டிசம்பர், 2018

நான்கு வழிச்சாலை திட்டத்தில் 2ஆயிரம் கோடி ஊழல்’ – தேவசகாயம் ஐ.ஏ.எஸ் குற்றச்சாட்டு!

தேவசகாயம் vikatan.com :நான்கு வழிச்சாலை அமைப்பதில் ரூ.2000 கோடி ஊழல் நடந்ததற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தெரிவித்தார்.

ஓகி புயல் பாதித்து ஒரு ஆண்டுகள் ஆகியும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மீண்டெழும் குமரி அமைப்பின் செயலாளர் தேவசகாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இயற்கை பேரிடரை தடுக்க மத்திய அமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யால் நிதி இல்லாமல் அரசு தவிக்கிறது. பேரிடர் ஏற்பட்டால் மத்திய அரசு முழுமையாக ஈடுபட வேண்டும், ஆனால் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஓகி புயலில் அழிந்தவை சீரமைக்கப்படவில்லை. வளர்ச்சி என்ற பெயரில் குமரி மாவட்டத்தை அழிக்கப்பார்க்கிறார்கள். நான்கு வழிச் சாலையால் குமரி மாவட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சாலையால் மாவட்டத்தை இரண்டாகப் பிளந்துவிட்டார்கள். 120 அடி ஆழத்திற்குப் பாறைகளை உடைத்து நிலத்தடி நீர் ஓட்டத்தைத் தடுத்துவிட்டார்கள். எனல்வே நான்கு வழிச் சாலைக்கு மறுபக்கம் தண்ணீர் இருக்காது.

ஜொமோடோ ஊழியர் வீடியோ.. எச்சில் உணவை விநியோகம் செய்யும் அவலம்


மின்னம்பலம் : பிரிக்க முடியாத அளவுக்கு உறுதியான டேப்களைக் கொண்டு உணவுப்பொருட்களை பார்சல் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது ஜொமோடோ நிறுவனம். தற்போது ட்விட்டரில் வைரலாக பரவும் ஒரு வீடியோவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்விட்டர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பகிரப்பட்டது. அதில், வாடிக்கையாளர் விரும்பும் உணவகங்களில் இருந்து உணவை எடுத்துச் செல்லும் ஊழியர் ஒருவர், நடுவழியில் அந்த பார்சலை பிரித்து உண்ணும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. வேண்டுமென்றே அந்த உணவில் இருந்து சிறிதளவு எடுத்துச் சாப்பிடும் அந்த ஊழியர், அதன்பின் அதனை மீண்டும் பேக் செய்து அதே இடத்தில் வைக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. இதனால், ஜொமோடோ ஊழியர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவைச் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் சேர்த்து வருகிறார்கள் என்ற கருத்து பரவியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஜொமோடோ ஊழியருக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பலரும் பதிவுகள் பகிர்ந்தனர். ஜொமோடோவில் ஆர்டர் செய்ய நினைத்த சிலர், இந்த நிகழ்வுக்குப் பின்னர் தவிர்த்துவிட்டதாகக் கூறியிருந்தனர்.

ஸ்டாலின் உத்தரவை மீறி டெல்லியில் சபரீசன்...

ஸ்டாலின் உத்தரவை மீறிய சபரீசன்மின்னம்பலம் : பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 11) சென்னை திரும்பினார். எதிர்க்கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் குறைந்த பட்ச செயல்திட்டம் அடிப்படையில் செயல்பட வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோது, ஸ்டாலினோடு டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இருந்தனர். இவர்களோடு ஸ்டாலின் மருமகன் சபரீசனும் அங்கே இருந்தது திமுகவினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்?

ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்?மின்னம்பலம் : தந்தி தொலைக்காட்சியில் இருந்து அதன் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே விலகியதாகச் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மைதான் என்று தனது யூடியூப் பக்கத்தில் அவர் விளக்கமளித்துள்ளார். இதன் மூலமாகத் தான் ரிஸ்க் எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ரங்கராஜ் பாண்டே எனும் யூடியூப் பக்கத்தில் நேற்று (டிசம்பர் 10) அவர் விளக்கம் அளித்தார். அதில், நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் என்றும், தந்தி டிவியின் தலைமைச் செய்தி ஆசிரியர் என்ற பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறேன் என்றும் தெரிவித்தார். “அந்தப் பதவியிலிருந்து விலகினாலும், பத்திரிகையாளர் என்ற கடமையில் இருந்து விலகவில்லை. நான் விலகியதற்குக் காரணம், சிக்கல், பிரச்சினை என்று எதுவும் இல்லை. தினமும் ஒரே வேலையைச் செய்வதனால் ஏற்படும் அயர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்கான முயற்சி இது. புதிதாக ஒன்றை முயற்சிக்க வேண்டுமென்ற ஆசையில் அங்கிருந்து வெளியேறியிருக்கிறேன்” என்று கூறினார்.

மன்மோகன் சிங் : பணமதிப்பிழப்பு .. எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது!

ரிசர்வ் வங்கி தலைவர் ராஜினாமா மன்மோகன் வேதனை
மன்மோகன் சிங்
குருமூர்த்தி
ஆர் எஸ் எஸ் அடியாள்
vikatan.com - kumaresan- : நாட்டின் மதிப்புமிகு அமைப்புகளில் ஒன்றாக ரிசர்வ் வங்கி கருதப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் மத்திய நிதியமைச்சருக்கு இணையாகப் பார்க்கப்படுபவர். ரிசர்வ் வங்கியின் ஒவ்வொரு செயல்பாடும் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதாரத்தைத் துல்லியமாகக் கணித்து நீண்ட காலத்துக்கு பயன்தரக்கூடிய முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்கள்தான் ரிசர்வ் வங்கியின் தலைவர்களாக வர முடியும்.
தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ள உர்ஜித்துக்கு முன்னதாக ரகுராம் ராஜன் இருந்தார். `மூன்று  ஆண்டுகளுக்கு மேல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்க விரும்பவில்லை’ என்று வெளிப்படையாக ரகுராம் ராஜன் அறிவித்தார்,
தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உர்ஜித் பட்டேல் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

கனிமொழி :பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட 'அச்சே தின்' இன்று வந்துவிட்டது!

tamilthehindu :பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட இனிய நாள் வந்துவிட்டது
என, மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக ஆளும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அதிக வித்தியாசத்துடன் முன்னிலை வகிக்கிறது. மிசோரமில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. ராஜஸ்தானில் ஆளும் பாஜகவை தோற்கடித்து அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை விட காங்கிரஸ் ஒரு சில இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மோடியின் ஏமாற்று வித்தைகளை மக்கள் அடையாளம் கண்டு வீழ்த்தியுள்ளனர்: மார்க்சிஸ்ட் இந்நிலையில், 5 மாநிலங்களிலும் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட AccheDin இதோ இன்று வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள்" என

5 மாநில தேர்தல் முடிவுகள் - 5 மணிவரை முன்னிலை நிலவரம்

மாலைமலர் : நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று மாலை 5 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 115 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4, சமாஜ்வாதி வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 89 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். ஏழு தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 12 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

 சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 59 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் மூன்று தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

மிசோரம் மாநிலத்தில் உள்ள 39 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர்.  1 தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 118 இடங்களில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர் 19 தொகுதிகளில் வெற்றிபெற்று, 69 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று 15 முன்னிலை வகிக்கிறது.  தெலுங்குதேசம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

.பாஜகவின் அத்தனை மோசடிகளையும் மீறி வெற்றி பெற்ற எதிர்கட்சிகள்.. பிந்திய செய்தி ..

Swathi K : பிஜேபி ஆட்சி செய்யும் மூன்று மாநிலங்கள் காங்கிரஸ் கைக்கு 💐.
மாறுகிறது
பிஜேபியின் கோட்டைகள், இந்துத்துவா கூட்டம், ஆயிரக்கணக்கான பொய்யான போலி பிரச்சாரம், பிரதமர், பிஜேபி தலைவர், 7 மாநில பிஜேபி முதல்வர்கள் பிரச்சாரம், 25+ மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம், மதவெறி பிரச்சாரம், ராகுல் மற்றும் காங்கிரஸ் இந்துக்களை அவதூறு செய்வதாக நூற்றுக்கணக்கான போலி வீடியோக்கள் தயார் செய்து பரப்பினார்கள், ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்தனர்..
பிரச்சாரம் முழுவதும் மோடி வாயில் வடை சுட்டார். மோடி அழுதார், மோடி தன்னை ஏழைத்தாயின் மகன் என்றார், ஆயிரம் பொய்கள் சொல்லி இருப்பார் கடந்த ஒரு மாதத்தில்.. கத்தினார், கதறினார்.. இந்திரா, நேரு, காந்தி என்று எல்லோரையும் அசிங்கப்படுத்தினார்..
பிஜேபி MLA வீட்டில் EVM கண்டுபிடிப்பு, பிஜேபி மாவட்ட தலைவர் ஹோட்டலில் EVM கண்டுபிடிப்பு, ரோட்டில் EVM கண்டுபிடிப்பு, EVM பாதுகாப்பு அறையில் 2 பிஜேபி பிரமுகர்கள் லேப்டாப்'புடன் பிடிபட்டனர், EVM பாதுகாப்பு அறையில் சில மணி நேரம் பவர்கட்.. அதனால் CCTV இயங்கவில்லை.. EVM வேலை செய்யவில்லை என்று மத்திய பிரதேசத்தில் மட்டும் 4500 EVM மாற்றப்பட்டது. போலியான வாக்காளர்கள் இணைப்பு, சிறுபான்மை இனமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் லிஸ்டில் விடுபட்டனர்.