புதன், 4 ஜூலை, 2018

மதிமுக முப்பெரும் விழா ... ஸ்டாலின் வைகோ ... ஸ்டெர்லைட் விவகாரம் ஆலோசனை!


மறுமலர்ச்சியுடன் வைகோமின்னம்பலம்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சில மாதங்களாக ஸ்டெர்லைட் நடைபயணம், காவிரி உரிமை மீட்புப் பயணம், போராட்டங்கள் என ஓய்வில்லாமல் தமிழகம் முழுவதும் சென்று வந்துகொண்டிருந்தார். இதனால் அவ்வப்போது சோர்வடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு கதிராமங்கலத்தில் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார். இந்நிலையில் வைகோ,கேரள மாநிலம் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலாவில் ஜூன் 30ஆம் தேதி முதல் 17 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சை முடிந்து புத்துணர்வுடன் திரும்பிய வைகோ, கடந்த 1ஆம் தேதி நடந்த நயினார் நாகேந்திரன் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஜூலை 4) சந்தித்துப் பேசினார் வைகோ.

எடப்பாடி முடக்கிய புதிய பேருந்துகள்... ஜெயா பாணி அடாவடி அல்பத்தனம்

மின்னம்பலம் :சென்னையில் முடங்கிய புதிய பேருந்துகள்!"
நேற்று முதல்வர் கொடியசைத்துத் தொடங்கிவைத்த புதிய பேருந்துகள் வெளியூருக்குச் செல்லாமல், சென்னையிலேயே முடங்கிக் கிடக்கின்றன. பயணிகளின்றிப் பேருந்துகளை அந்தந்தப் பகுதிகளுக்கு இயக்கக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், பேருந்துகள் சென்னையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட புதிய நவீன புதிய 515 பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூலை 3) தொடங்கி வைத்தார். இந்த விழாவுக்காகத் திங்கள்கிழமை இரவே பேருந்துகள் சென்னைக்குக் கொண்டுவரும் பணிகள் நடைபெற்றன. அன்றிலிருந்து ஓட்டுநர், நடத்துநர்களும் இங்கேயே தங்கினர்.
நேற்று விழா முடிந்த பின்னர், புதிய பேருந்துகளை சென்னை கோயம்பேட்டிற்குக் கொண்டு செல்லுமாறு ஓட்டுநர்களுக்குப் போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பேருந்துகளில் பயணிகள் இருந்தால் மட்டுமே அந்தந்த மாவட்டங்களுக்குப் பேருந்துகளை இயக்க முடியும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- 23ம் தேதி மூன்றாவது நீதிபதி விசாரணை ...

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- 23ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார் மூன்றாவது நீதிபதி
மாலைமலர் : தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் வரும் 23-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளார். சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.
புதிய நீதிபதி சத்ய நாராயணன் இன்று மாலை 4 மணிக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் இரு தரப்பு வக்கீல்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வக்கீல்களின் கருத்தை கேட்டறிந்தார்.

தவறுதலாக முழு திரைப்படத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்யத சோனி நிறுவனம்

டிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்த நிறுவனம்மாலைமலர் : சோனி பிக்சர்ஸ் நிறுவனம் யூடியூபில் ரெட்-பேன்ட் டிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருக்கிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரெட்-பேன்ட் டிரெயிலருக்கு பதில் காலி தி கில்லர் முழு திரைப்படத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறது.& இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் சோனி நிறுவனம் 89 நிமிடங்கள் 46 நொடிகள் ஓடக்கூடிய முழு திரைப்படத்தையும் ஜூலை 3-ம் தேதி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. CBR.com எனும் வலைத்தளம் இந்த விஷயத்தை முதலில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

லண்டன் பங்குசந்தையில் இருந்து வேதாந்தா குழுமம் நீக்கம்

தொழிலாளர் கட்சி கோரிக்கை - லண்டன் பங்குசந்தையில் இருந்து வேதாந்தா குழுமம் நீக்கம் மாலைமலர் :பிரிட்டனின் தொழிலாளர் கட்சி கோரிக்கையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. #Sterlite #Vedanta #LondonStockExchange லண்டன்: தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையே, லண்டனில் உள்ள அனில் அகர்வாலின் வீட்டு முன்னர் அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

டெல்லி அதிகாரம் .. அரசுக்கா... ஆளுநருக்கா? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : மாநில நிர்வாகம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது

In Supreme Court the victory of the people of Delhi and after the defeat of the BJP, the delhi secretariat reached Chief Minister Arvind Kejriwal:
விகடன் - சத்யா கோபாலன் : டெல்லியில், துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான வழக்கில், ‘ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது‘ என  உச்ச நீதிமன்றம் அதிரடியாகத்  தீர்ப்பளித்துள்ளது.;
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக உள்ளார். ஆனால், துணைநிலை ஆளுநராக பா.ஜ.க-வைச் சேர்ந்த அஜித் பைஜல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால், அங்கு பா.ஜ.க-வுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நேரடி மோதல் நடந்துவருகிறது. முதல்வர் சொல்வதுபடி நடப்பதா, இல்லை ஆளுநர் சொல்வதுபடி நடப்பதா என்பது தெரியாமல், அதிகாரிகள் குழம்பியிருக்கின்றனர். இந்நிலையில், ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக டெல்லியில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் முடிவில், ஆளுநருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில்  தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மிக முக்கிய வழக்காகக் கருதப்படும் இதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான  5 நீதிபதிகள்கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றுவந்தது.

கச்சநத்தம் .. காலா .. அரசியல் அதிகாரத்தைப் பணிய வைக்கும் சமூக அதிகாரம்

Kathiravan Mumbai : o காலா: சேரி வாழ்வும், நில உரிமையும், விமல் பிரகாஷ்
"அந்த ‘கெயிக்வாட்’ என்ற சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டியதின் அவசியம் என்ன? ரஜினியைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்று அடையாளப்படுத்தவா? அப்படி என்றால் தன்னை ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியின் ஆதரவாளராகவும், ஆன்மீக அரசியல்வாதியாகவும் வெளிப்படை யாகவே காட்டிக்கொள்ளும் ஒருவரை எதற்காக தலித்தாக அடையாளப்படுத்த வேண்டும்."
o கச்சநத்தம்:
அகமுடையார்களின் பார்ப்பனியம் நடத்திய படுகொலைகள்
- இராவணன் - இளையான்குடி தங்க.செங்கதிர், தியாகி இமானுவேல் பேரவை - காளையார்கோவில் முத்துக்குமார், திராவிடர் விடுதலைக் கழகம்
“டேய் பள்ள...... மவனே... நான் வருகிறேன் எழுந்திருக்க மாட்டாயா?” என்பது, இவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளைத் திருடிச் செல்லுவது, விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பது, பால் பண்ணையில் பாலை எடுத்துச் செல்வது, பஞ்சாயத்து தேர்தல்களில் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களை வேட்பாளர்களாக்கிவிட்டு மக்கள் வாக்களிக்க வில்லை எனவே பணம் நிறைய செலவு செய்ததாகக் கூறி வீடு, நிலம் ஆகியவற்றைக் கொடு எனப் பிடுங்கிக் கொள்வது, மிகக் குறைந்த நிலத்தை வைத்துக் கொண்டு குறிப்பாக மூன்று மணி நேரத்தில் நீர் பாய்ச்சப்படும் வயலுக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் வாய்க்காலை அடைத்துக் கொள்வார்கள், அவர்களாகப் பார்த்து திறந்தால் மட்டுமே நீர் பாய்ச்ச முடியும் என்ற நிலை உள்ளது."

பெண்களை தரதரவென்று இழுத்துச்சென்று கைது ... ; எட்டு வழிச்சாலை

p2நக்கீரன் - இளையராஜா : p3சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு நிலம் அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உள்பட 16 பேரை தரதரவென்று இழுத்துச்சென்று காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலைத் திட்டம், விளை நிலங்கள் ஊடாகச் செல்கிறது. இதற்காக விவசாயிகளின் கருத்து அறியாமலேயே சேட்டிலைட் தொழில்நுட்ப உதவியுடன், வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் அத்துமீறி நிலத்திற்குள் நுழைந்து முட்டுக்கல் நடும் பணிகளை முடித்தனர்.< சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரப்பட்டி, கூமாங்காடு பகுதியில் முட்டுக்கல் நடப்பட்டு உள்ள நிலங்களில், இன்று (ஜூலை 3, 2018) 'மேனுவல் சர்வே' பணிகளுக்காக அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக டிஎஸ்பி சங்கர் நாராயணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சென்று இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டு இருந்தது.

7000 சிலைகள் டுப்பிளிகேட் என்று ஐ ஜி பொன். மாணிக்கவேல் கூறியும் பாஜக இன்னும் பொங்காதது ஏன்?

Jothi Murugan : அடேய்ய்ய் மோடுமுட்டி பயலுகளா...!!!
ஆண்டாள் பற்றி வைரமுத்து தவறாக பேசிட்டாருன்னு குய்யோ முய்யோன்னு குதிச்ச பிராமிணர்கள், நான் சோடா பாட்டில் வீசுவேன்னு சொன்ன ஜீயர் எல்லாம்...
7000 கோவில்களின் சாமி சிலைகளை திருவிட்டார்கள் என்று பொன். மாணிக்கவேல் சொல்லி இத்தனை நாளாகியும் பொங்காதது ஏன்...?
ஏன்னா கடவுள் என்ற ஒன்றை பிராமிணர்கள் இருப்பதாகவே நினைக்கவில்லை. கோயிலை அவர்கள் பணம் சம்பாதிக்கும் வணிகத்தளமாகவே பார்க்கிறார்கள்.
 திருடனுக்கு தேள் கொட்டினால் அவன் எப்படி கத்துவான்..??

உப்புக்கும் நமக்கும் உள்ள உறவு

உப்பு நம்மை என்ன செய்யும்?மின்னம்பலம்:  தினப் பெட்டகம் – 10 (04.07.2018)
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று சொல்வார்கள். நம் உணவில் அந்தளவு முக்கியமானது உப்பு. ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்று பழமொழிகூட உள்ளது. உப்பு இல்லாமல் உணவு ருசிக்காது என்பதே இதன் பொருள். உப்பைப் பற்றிய சில தகவல்கள்:
1. நம் உடம்பில் ஒவ்வொரு செல்லிலும் உப்பு இருக்கிறது. ஒருவரின் உடலில் சராசரியாக 250 கிராம் உப்பு இருக்கும்.
2. பல நாடுகளில் உப்பு பணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
3. நம் உடல் எடையில், ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் என்ற அளவில் உப்பை உட்கொண்டால் மரணம் நிகழும்.
4. மொத்த உப்பு உற்பத்தியில் 7%தான் உணவுக்காகப் பயன்படுகிறது. மீதமுள்ளது ரசாயனத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
5. பழங்கால சீன மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு பவுண்டு உப்பைச் சாப்பிட்டுவிடுவார்களாம்.
6. பொலிவியா நாட்டில் ஓர் ஹோட்டல் முழுவதும் உப்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு போலீஸ் மிரட்டல். கக்கூஸ் . மற்றும் ஒருத்தரும் வரல


ஆவணப்பட இயக்குநருக்கு மிரட்டல்: தமுஎகச கண்டனம்!மின்னம்பலம் : ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி வீட்டிற்குள் காவல் துறையினர் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்ததற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கக்கூஸ் ஆவணப்படம் மூலம் மலம் அள்ளும் தொழிலுக்கு நிர்பந்திக்கப்படுகிற மக்களின் துயரங்களைப் பதிவு செய்தவர் திவ்யபாரதி. தற்போது ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கேரளா மற்றும் கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து மீனவர்களை மீட்கத் தவறிய அரசு பற்றியும் தென்னிந்தியக் கடற்கரையில் கொண்டுவரப்படும் திட்டங்களின் பின்னுள்ள அரசியல் பற்றியும் ‘ஒருத்தரும் வரேல’ என்ற ஆவணப்படத்தை இயக்கிவருகிறார். கடந்த வாரம் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருந்தார். இது குறித்து நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

சென்னை ரவுடி சுட்டு கொலை.. போலீஸ் மீது வாளால் வெட்டி அட்டகாசம் செய்த ....

சென்னை,வாலாட்டிய,ரவுடி,சுட்டுக்கொலைதினமலர் சென்னை : போலீஸ்காரரை அரிவாளால் கொடூரமாக வெட்டி, அட்டூழியம் செய்த ரவுடி ஆனந்தனை பிடிக்க சென்ற போலீசார் மீது அவன் தாக்குதல் நடத்தியதால், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டான். சென்னை,ராயப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு, காவல் கட்டுப்பாட்டு அறையைதொடர்பு கொண்டு, ராயப்பேட்டை, பி.எம். தர்கா அருகே, குடிபோதையில் ரவுடிகள் சிலர், பெண்களை கிண்டல் செய்வதாக புகார் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து, ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அங்கிருந்த தலைமைக் காவலர், ராஜவேலு, 35, தன் இருசக்கர வாகனத்தில், சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு, ரவுடிகள் ஆனந்தன், அரவிந்தன் மற்றும் அவனது கூட்டாளிகள், பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இதை, தலைமைக் காவலர் ராஜவேலு தட்டிக் கேட்டார்.

ஒரிஜினல் "பொன்மகள் வந்தாள்" பாடலுக்கு நிகராக டுப்பிளிகேட் / ரீமிக்ஸ் பொன்மகள் வருமா?


எந்த காலத்திலும் கேட்போரை மகிழ்விக்க கூடிய சில பாடலகளில் இந்த பாடலுக்கு ஒரு இடம் இருக்கிறது. இதற்குள் ஒரு கதை இருக்கிறது. மர்லின் மன்றோவை அப்படியே கண் முன்னே கொண்டுவந்த விஜயலலிதாவின் அழகிய முகமும் .. வாள்வீச்சு போன்ற கண் அசைவும் இதுவரை தமிழ் திரை உலகம் கண்டிராத ஒரு மின்னலின் அழகு,
ஏழையின் வாழ்வில் ஒரு பொன்னுலகை பரிசாக கொண்டுவரும் பொன்மகள் அல்லவா ?
எப்படிப்பட்ட கவர்ச்சியும் குதுகலமும் துள்ளலும் இருக்கவேண்டும்?
அடடா இதற்கு மேல் எந்த தேவதையால் இந்த அழகை காட்டிவிட முடியும்?
அவரது ஒவ்வொரு அசைவும் எங்கிருந்தோ அந்த காட்சியின் ஆத்மாவை ஈஸ்ட்மன் கலரில் அள்ளி கொட்டுகிறதே!
ஒவ்வொரு பிரேமுக்குள்ளும் எவ்வளவு நுட்பமான கலையுணர்வு இருக்கிறது!
எவ்வளவு கடும் முயற்சி இருக்கிறது! அழகான கனவை உயிரோடு கண்ணுக்குள்ளும் காதுக்குள்ளும் கொண்டுவர ராமண்ணா ஆலங்குடி சோமு விஸ்வநாதன் ஹீராலால் விஜயலலிதா சிவாஜி போன்றவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்!
இப்படிப்பட்ட பாடல்களில் வழக்கமாக ஆண் பெண் பாத்திரங்கள் காதலில் அல்லது காமத்தில் வீழ்ந்து புரண்டு துள்ளி என்னென்னவோ பண்ணி விட்டு போய்விடுவார்கள். அவற்றில் பெரிதாக ஒரு செய்தியோ கதையோ இருக்காது.

செவ்வாய், 3 ஜூலை, 2018

குகைக்குள் 9 நாள்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தாய்லாந்து வீரர்கள்!,, 13 பேருக்காக களமிறங்கிய 1000 பேர் கொண்ட மீட்புக்குழு

தாய்லாந்து பிரேம் குமார் எஸ்.கே.: தாய்லாந்து நாட்டில் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் குகைக்குள் வெள்ளத்தில் காணாமல் போன 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரும் தற்போது உயிருடன் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், கால்பந்து வீரர்களின் உறுதிக்குச் சான்றாக நடந்துள்ளது ஒரு சம்பவம். வடக்கு தாய்லாந்துப் பகுதியில் உள்ளது தி தம் லுஅங் குகை. சில கிலோமீட்டர் தூரம் செல்லும் அளவுக்கு நீண்ட குகை அது. கனமழை காலங்களில் இங்கு தண்ணீர் தேங்கும். இதன் பாதைகள் நேராக இல்லாமலும் கரடு முரடாகவும் இருக்கும். வடக்கு தாய்லாந்துப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் இந்தக் குகைக்குள் திடீர் வெள்ளம் புகுந்தது.

வீரமணி :கல்வியில் ஆர்எஸ்எஸ்-ன் 11 அம்சத் திட்டம் இந்துத்துவ மயமாக்கும் சதி

tamilthehindu :கல்வியில் ஆர்எஸ்எஸ்-ன் 11 அம்சத் திட்டம் என்பது கல்வியை
இந்துத்துவ மயமாக்கும் சதி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய கல்வித் துறையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொடுங்கரம் ஆக்டோபஸ் - எட்டுக்கால் பிராணி போல் ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே போகிறது. ஏற்கெனவே குருகுல முறை என்ற பெயரில் சமஸ்கிருதம், வேதங்கள் படிப்பை தனியாரிடம் படித்ததாக, தானே சான்றிதழ் வழங்கி, உடனடியாக பத்தாம் வகுப்பு சேர்ந்து 12 ஆம் வகுப்புவரை படித்து, உடனே வேலைக்குப் போகும் வண்ணம் கல்வித் திட்டத்தைத் திணிக்கும் முயற்சியில் மத்திய பாஜக ஆட்சி ஈடுபட்டது. குலக்கல்வித் திட்டத்தைவிட பல மடங்கு ஆபத்தான சமஸ்கிருத, வேத மய ஆரம்பக் கல்வித் திட்டம் ஒன்று உருவாவதை எதிர்த்து, கருவிலேயே அதனை அழித்து, தடுத்துக் காப்பாற்றிட வேண்டிய கடமை அனைத்து முற்போக்காளர்கள், சமதர்மவாதிகள் கல்வியாளர்களின் பெரும் பொறுப்பாகி வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தி எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் வந்துள்ள செய்தி மேலும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

ஸ்டெர்லைட் அரசாணையை எதிர்த்து வேதாந்தா மனு!

அரசாணையை எதிர்த்து வேதாந்தா மனு!மின்னம்பலம்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று (ஜூலை 3) மனுத் தாக்கல் செய்துள்ளது.
வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், . கடந்த மே 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. அன்றைய தினம் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் தமிழக அரசின் உத்தரவின் பேரில், ஸ்டெர்லைட் ஆலைக்கு மே 28 ஆம் தேதி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார்.
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று கூறப்பட்டது

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி கைதுமாலைமலர் :ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூர்: மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.< அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார். தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

11 பேரின் மரணம் - சுவற்றில் 11 பைப்புகள் எதற்கு? தியான மார்க்கம் காரணம்? வாயையும் கண்ணையும் மூடினால் ... சுவர்க்கம் என்று தடைய குறிப்பு ...

handwritten notes found: “the human body is temporary and one can overcome fear by covering their eyes and mouth”.
வீட்டுச்சுவற்றில் 11 பைப்புகள் எதற்கு? - மர்மக் கதைகளை விஞ்சும் 11 பேரின் மரணம்மாலைமலர் : டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்த சம்பவத்தில், போலீசாரே குழம்பும் அளவுக்கு மர்மங்கள் நிறைந்துள்ளன. #BurariDeathMystery புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். 10 பேர் கண்கள் மற்றும் வாயை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சோக சம்பவத்துக்கு உத்தரவு பிறப்பித்ததுபோல், காணப்படும் மர்ம டைரி  அவர்களது வீட்டில் கிடைத்தது.

ராமதாஸ் : எடப்படியின் ஆடம்பரத்துக்காக சென்னை வந்த 542 பேருந்துகள்

முதல்வருக்காக சென்னை வந்த  542 பேருந்துகள்: ராமதாஸ்மின்னம்பலம்: முதல்வரின் ஆடம்பரத்துக்குப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பைச் சந்திக்க வேண்டுமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவை தொடக்கவிழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று (ஜூலை 3) நடைபெறுகிறது. இவ்விழாவுக்காக 542 புதிய பேருந்துகளும் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னைக்குக் கண்டிப்பாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண் ஜெயலலிதாவாக தம்மை நினைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“புதிய பேருந்துகளின் சேவைத் தொடக்க விழா தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

திமுகவின் மண்டகசாயம்.. 24 மணி நேரமும் எ.வ. வேலுவின் கட்டுப்பாட்டுக்குள் ஸ்டாலின்?

பணம் இருக்குன்றதுக்காக கட்சி மாறி வந்தவனை பீடத்துல உக்கார வைச்சி அழகு பாத்தா, 40 வருசமா கட்சியில இருக்குற எங்களை மாதிரி ஆளுக்கு என்ன மரியாதை ? எதுக்கு நாங்க கட்சியில இருக்கணும் ? வேலு மாதிரி ஒரு பச்சோந்தியை தளபதி இப்படி நம்பறாரேன்னு அவ்வளவு வேதனையா இருக்கு. ஆனா நாங்க இதை யாருகிட்ட சொல்ல முடியும். வேலுவை தாண்டி தளபதியை யாரும் நெருங்கக் கூட முடியாது.
savukkuonline.com : இந்த ஆண்டு மார்ச் 15 அன்று, திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மார்ச் 15 அன்றுதான் எவ.வேலுவுக்கும் பிறந்த நாள்.   அப்போது சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தது.   அன்று நடந்த கூட்டத்தில் 35 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.   10 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.  அன்று அந்த கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, வேலுவை பற்றி இப்படி பேசினார் “உங்களை வழிநடத்தும் அண்ணன் வேலு, உங்களை மட்டும் வழிநடத்தவில்லை.   திமுகவையும் வழிநடத்துகிறார்.  தளபதியையும் வழி நடத்துகிறார்.   அண்ணன் வேலு மட்டும் இல்லையென்றால் திமுக 89 எம்எல்ஏக்களை பெற்றிருக்கவே முடியாது.”
வேலுவின் செல்வாக்கு அத்தகையது. இன்று வேலுவை பகைத்துக் கொண்டால், திமுகவில் இருக்கவே முடியாது.  அழித்து நசுக்கி விடுவார்.  திருவண்ணாமலை அருகே உள்ள சே.கூடலூர்.  அதுதான் அவரது சொந்த ஊர்.   வேலு பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார்.   பின்னர் அவர் நடத்தும் பாலிடெக்னிக்கில் படித்த இளங்கோ என்ற மாணவர், வேலுவுக்காக எம்ஏ தேர்வு எழுதினார்.  இப்போது வேலு எம்.ஏ பட்டதாரி.   வேலுவுக்காக தேர்வெழுதிய அந்த இளங்கோ மர்மமான முறையில்  சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து போனார்.
வேலுவின் தொடக்கம் மிக மிக எளிமையானது.    பம்ப் செட் மெக்கானிக்காகத்தான் இருந்தார் வேலு.  பின்னர் திருவண்ணாமலை பகுதியில் பிரபலமாக இருந்த தாமோதரன் பஸ் சர்வீஸில் கண்டக்டராக இருந்தார். 1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அதில் இணைந்தார் வேலு.   தண்டாரம்பட்டு ஒன்றியத்தின் துணை அமைப்பாளர் பதவி கிடைக்கிறது. 

சேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை – 3... மில்லியன் டாலர் கேள்வி?

.savukkuonline.com/ Image of a land owning farmer’s family crying after officials lay marker stones for Salem 8 lane விளம்பரப் பிரியையான சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பாஜிபாக்கரே 22.06.2018 வெள்ளிக்கிழமை கூறியது,”விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடவும், அதோடு சேர்த்து பொருத்தமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்திடவும், மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நிலத்திற்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படமாட்டாது, நிலத்திலுள்ள மரங்கள், கிணறுகள், வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை இவற்றிற்கும் சேர்த்து இழப்பீடு வழங்கப்படும்.  நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் வரையறுக்கப்பட்ட மதிப்பு ஆகியவற்றின் படி, விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.21.5 லட்சம் முதல் ரூ.9.05 கோடி வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நேற்று வரை, 17 கி.மீ தூரத்துக்கு சாலை அளவீடு முதற்கட்ட பணி முடிக்கப்பட்டுள்ளது. 853 பட்டா உரிமையாளர்களின் 126 ஹெக்டேர் நிலங்கள் இந்த சாலைக்காக அளவிடப்பட்டுள்ளன”.
இந்த இழப்பீடு மிகவும் தாராளமான ஒன்றாக  தோற்றமளிக்கிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை  2007-2008ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டதை விட  நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு  சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உரையில் கூறினார்.

பாஜக ஆர் எஸ் எஸ் போலி இணையதளங்கள் .. பொய்களை பரப்பவே முழுநேர பணியாளர்கள்

Thamizh Inian : · கீழே இருக்கும் இணையதளங்கள் அனைத்தும் பீஜேபீ
ஆர்எஸ்எஸ்ஸின் நிதியில் இயங்குபவை,இவர்களின் வேலை கொஞ்சூண்டு உண்மையுடன் ஒரு டன் பொய்யைக்கலந்து வதந்தி மாதிரி பொய்யானதகவலை நிஜம்போலப்பரப்புவது,,,ஆகவே இத்தளங்கள் நம்பகமானவை அல்ல,,எச்சரிக்கை,,

திங்கள், 2 ஜூலை, 2018

11 பேர் மரணத்தில் சிக்கிய கடிதம் .. முக்தி பெறும் மார்க்கம்?

முக்திப்பேறு பெற உயிர் துறப்பா? -  11 பேர் மரணத்தில் சிக்கிய மர்ம கடிதத்தில் அதிர்ச்சி கட்டளைகள்மாலைமலர்: டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவத்தில், 11 பேருக்கும் உத்தரவு பிறப்பித்ததுபோல் உள்ள மர்ம கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். 10 பேர் கண்களை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தில் மனைவிகள் வாடைக்கு விடப்படுகிறார்கள் .. பல ஆண்டுகளாக தொடரும்.

Chandrasekar Jkc : 18 வருடங்களுக்கு முன்பு வெளியான விஜய்-சிம்ரன் நடித்த
படம் 'பிரியமானவளே'
அதில் விஜய் மேற்கத்திய கலாச்சாரத்துடன் தாயகம் வருவார்.
அவரை திருமணம் செய்துக் கொள்ள தந்தை வற்புறுத்துவார்.
அவரோ திருமணம் பத்தாம் பசலித்தனம் என்றும் வேண்டுமானல் ஒரு அக்ரிமென்ட்படி தனக்கு ஒராண்டுக்கு சிம்ரன் மனைவிராக இருக்கட்டும்.அக்ரிமெண்ட் முடிந்ததும்...அவர்யாரோ...தன் யாரோ என்று இருவரும் பிரிந்து விட வேண்டும் என ஒப்பந்தம் போடுவார்...
பிறகு கதை பாரத பண்பாடு என்று போகும்....
நம் நாட்டில் MP மாநிலத்தில் சந்தையில் இத்தகு ஒப்பந்த மனைவிகள் வாடகைக்கு கிடைக்கிறார்களாம்...
தேவையான தனவந்தர்கள் மாத கணக்கிலோ வருட கணக்கிலோ அநதப்பெண்களை தனக்கு வாடகை மனைவியாக முத்திரை தாளில் பதிவு செய்துக் கொள்கிறார்களாம்...
இதற்கு'தாதிசா பிரதா' (Dhadeecha pratha) என்கிறார்கள்.
இதுவும் நம் தேச கலாச்சாரம்தான்.

மக்கள் அதிகாரத்திற்கு எதிராக .. மீனவரகளை ... மிரட்டிய போலீசு !


வினவு பத்திரிகைச் செய்தி :மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.
மேற்படி மனுவை சாக்காக வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பைப் பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி, என  பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்க தக்கது. பாசிச இந்துத்வா கொள்கையை வைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி தீவிரவாதம், பயங்கரவாதம் என பேசுவது, வேடிக்கையானது.
மீனவ பிரதிநிதிகள் கொடுத்த புகார் மனுவில்……காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம். தற்போது அந்த 2 வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.