வியாழன், 21 டிசம்பர், 2017

பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் சாட்டையடி


Our stand has been vindicated, it was a scam by Vinod Rai: Kapil Sibal post 2G verdict 2ஜி விவகாரத்தில் தொடர்ந்து ஊழல் ஊழல் என்று பேசி வந்த பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியுள்ளார். 2ஜி வழக்கு தீர்ப்புகுறித்து கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது நிலைப்பாடு வென்றுள்ளது. வினோத் ராய் கற்பனையாக கூறிய கணக்கு பொய் என்று உறுதியாகியுள்ளது. நான் இது ஊழலே அல்ல என்று தொடர்ந்து கூறி வந்தேன்.
இது உண்மையில் முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் செய்த ஊழல். அதைத்தான் தற்போதைய தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. வினோத் ராயின் செயல்பாட்டால் தொலைத் தொடர்புத் துறையே சீரழிந்து போய் விட்டது.
வினோத் ராய் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு மத்திய அரசு கொடுத்த பதவி பறிக்கப்பட வேண்டும். பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சிபல். tamiloneindia. sutha

2 G..அம்பலமான வினோத் ராய் அபாண்ட பொய்.. பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா?

மானநஷ்டம் tamiloneindia -veerakumar :டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 1.76 லட்சம் கோடி இழப்பு என போலியான தகவலை அளித்த முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய்க்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி அப்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கையளித்தார். அந்த அறிக்கையில், இழப்பு மதிப்பு ரூ.1.76 லட்சம் கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது.
பெரிய குற்றச்சாட்டு இவ்வாறு ஒரு பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டை அதுவரை இந்தியா பார்த்ததே இல்லை. பலராலும் இந்த ஊழல் கணக்கை எழுத்தால் கூட எழுத முடியவில்லை.
ஒரு பிரபல ஆங்கில செய்தித்தாள், இவர் கூறிய ஊழல் கணக்கின் வீரியத்தை சொல்ல, எண்ணுக்கு பின்னால், பூஜ்யம், பூஜ்யம் என முழுபக்க அளவில் எழுதி தலைப்பிட்டது. மக்கள் மனதில் கொந்தளிப்பு வினோத்ராயின் இந்த தகவலால், நாட்டில் பெரும் குழப்பமே உருவானது.
இவ்வளவு பெரிய ஊழல்வாதிகளா நம்மை ஆண்டார்கள் என்பது போல மக்கள் மனதில் கொந்தளிப்பு ஏற்பட்டது. எனவேதான் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்பேரில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது.
பொய் குற்றச்சாட்டு இதோ இன்று தீர்ப்பு வெளியாகிவிட்டது. குற்றச்சாட்டுகள் பொய் என நீதிமன்றம் கூறிவிட்டது. உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் ஒரு வழக்கு என்பதால் நீதிபதி ஓ.பி.ஷைனி எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் தீர்ப்பை வழங்கியிருக்க வாய்ப்பே இல்லை.

2ஜி தீர்ப்பு பார்ப்பனிய ஆட்களிடம் ஏன் பதற்றத்தை ஏற்படுத்துகிறது?


Sivasankaran Saravanan : நிகழ்தகவு 1 : இதில் ஊழல் என்பதே இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. இனி பார்ப்பனிய லாபி எதிர்காலத்தில் யார் மீதாவது ஊழல் இமேஜை ஏற்படுத்த முயன்றால் அதை எளிதில் நம்பமாட்டார்கள். டிடிவி தினகரன் மீது ரெய்டு விட்டபோது அதை ரசிக்காமல் பாஜகவை பார்த்து பலர் கேள்வி கேட்டது சமீபத்திய ஒரு உதாரணம்.
நிகழ்தகவு 2: இல்லை ஊழல் நடந்திருக்கலாம். ஆனால் பாஜக, திமுகவிற்கு சாதகமாக தீர்ப்பு வரவைத்துவிட்டது. அப்படியென்றால் இதில் திமுக Upper hand. திமுகவோடு கூட்டணி வைப்பதற்காக இந்தளவுக்கு பாஜக திமுக காலில் போய் விழுமென்றால், த்தா திமுக என்ன அவ்ளோ பவர் புல் லான கட்சியா? நாட்டின் 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிற பாஜக, அதிலும் காங்கிரசை எழுந்திருக்க விடாமல் அடிக்கும் மோடி+ அமித் ஷா இணை திமுக காலில் விழுகிறது என்றால் அந்தளவுக்கு திமுக ராட்சச பலத்துடன் இருக்கிறது. முதல் விஷயத்தை விட இரண்டாவது தான் அவர்களை ரொம்பவே பயமுறுத்துகிறது.

ஆர் ராசா ,கனிமொழி விடுதலை ... 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அனைவரும் விடுவிப்பு

முழு விபரம் இன்னும் சில மணிநேரத்தில் வெளியாகும், தற்போது வாய் மொழியாக அறிவிப்பு  வெளியானது. டெல்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்ற   நீதிபதி  ஒ பி சயினி தனது தீர்ப்பில் :   இந்த வழக்கில் சி பி ஐயினால் எந்த குற்றமும் நிருபிக்க கூடிய சாட்சியம் கிடையாது என்றும்  குறிப்பிட்டுள்ளார்.. நீதிமன்ற வழக்கத்தில் திமுக ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்
Sivasankaran Saravanan :  176000 கோடி என்ற ஒரேயொரு எண்ணை வைத்துக்கொண்டு ஒரு கட்சியின் மீதும் ஆ.ராசா என்ற தனி மனிதர் மீதும் வன்மத்தை கட்டமைத்து காழ்ப்புணர்ச்சியை பரப்பிய அத்தனை ஊடகங்களும், பார்ப்பனிய லாபியும் அண்ணன் ராசா விடம் மன்னிப்பு கேட்பார்களா?!
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரயும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10.30மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார்.

2 ஜி வழக்கில் இன்று தீர்ப்பு... இன்னும் சில மணி நேரங்களில் ..


தினமணி மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளின் தீர்ப்பு வியாக்கிழமை ( டிசம்பர் 21) அறிவிக்கப்படவுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் 2011, ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால், மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டிருந்தது.

அமைச்சர் சரோஜா 30 லட்சம் லஞ்ச வழக்கு .... பணி நிரந்தரம் செய்ய அதிகாரி ராஜமீனாட்சியிடம்

tamilthehindu :பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் கேட்டதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் வழக்கு ஜனவரி 4-ம் தேதி விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ராஜமீனாட்சி. இவரின் பணியை நிரந்தரம் செய்வதற்கும், பணிமாற்றம் செய்வதற்கும் 30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அமைச்சர் சரோஜா மீது சென்னை காவல் ஆணையரகத்தில் ராஜமீனாட்சி புகார் அளித்தார். இதையடுத்து அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாமல் செப்டம்பர். 21-ம் தேதி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜெயா விடியோவை பார்த்து பயப்படும் தேர்தல் ஆணையம் + இபிஎஸ் + ஒபிஎஸ் ?

`டீ கடை’ ஆணையம்..! ``இட்லி தின்னாரா.. இடியாப்பம் தின்னாரா.. இறந்தாரா.. அல்லது கொல்லப்பட்டாரா..” என்று பெரும் மர்மமாக இருந்த ஜெயாவின் மர்ம மரணத்தில் இன்று வெளியான ஜெயாவின் வீடியோவின் மூலம் மிக முக்கியமான முடிச்சு ஒன்று அவிழ்க்கப்பட்டிருக்கிறது.
என்னளவில் அது உண்மையான வீடியோவாகவே தோன்றுகிறது.
அது உண்மையானதா போலியானதா என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டியது அவரது மரணத்தை விசாரிக்கும் ஆணையத்தின் வேலை.
நாம அந்த ஏரியாவுக்குள் போக வேண்டியதில்லை.
ஆனால் அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பன்னீர் செல்வம் பழனிசாமி வகையராக்கள் பதட்டமடைந்ததுக்கு சமமாக தேர்தல் அணையமும் பதட்டமடைகிறது.
அந்த வீடியோவை ஊடகங்கள் ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிடுகிறது..
தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது..

"அருவி" படம் எழுப்பி இருக்கும் அரசியல் .... பேசப்படவேண்டும்... பார்க்கப்படவேண்டும்.. படிக்கப்படவேண்டும் ..

Karthikeyan Fastura " அருவி படம் குறித்து நான் பேசப்போவதில்லை. அது எழுப்பி இருக்கும் அரசியலை பேச வேண்டும்.
குடும்ப உறவுகளில் ரத்த பந்தங்களில் முகச்சுழிப்பை ஏற்படுத்துவது எய்ட்ஸ் நோய் மட்டும் தானா.. வேறு என்னெல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாமா
1. சாதி கலப்பு திருமணம்
2. மதக் கலப்பு திருமணம்
3. திருநங்கையாக உணர்வது
4. ஓரினசேர்க்கை
5. வேலையின்மை
6. சினிமா ஆர்வம்
7. சுயதொழில்
8. தீவிர அரசியல்
9. பகுத்தறிவு/கடவுள் மறுப்பு
10. மனநலம் பாதிப்பு
11. முதுமை
12. தீவிர ஊனம்
13. தீராத நோய்மை
14. ஐந்தாவது பெண் குழந்தை
மேற்சொன்ன சிலவற்றில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறிய ஆண், பெண்களை சந்தித்திருக்கிறேன்.
மேற்சொன்ன எதுவும் சட்டப்படியோ, தார்மீகப்படியோ குற்றமில்லை. நம் வீடுகளில் இவை குற்றமாகவும், சகிக்கமுடியாததாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். இன்னும் சிலர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். மேற்சொன்ன காரணிகள் சிலவற்றில் குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்படுகிறார்கள்.
இதையெல்லாம் செய்வது யார். நாம் தான் நாமே தான். நமது அன்பில்லாத மனமும் என்பில்லாத அறிவும் தான்.

Flashback காமராஜர்தான் ஓட்டுக்கு பணம் பார்மூலாவை இந்தியாவிலேயே முதன்முதலாக அறிமுகபடுத்தியவர்

ஆலஞ்சியார் : காமராஜரை தோற்கடிக்க முடிந்தது மோடியை தோற்கடிக்க முடியவில்லை என்ற எச்.ராசாசர்மாவின் கருத்தையொட்டி சிலர் காமராஜரை தோற்கடித்தது பாவம் என்றளவிற்கு பேசிகிறார்கள்..
காமராஜர் தோற்கடிக்கபடவேண்டியவர்தான்
ஆம்.. காமராஜருக்கென்று தனிமுகம் இருப்பதாக சிலர் வரிந்துகட்டிக்கொண்டு வருகிறார்கள் உண்மையில் காமராஜரை இந்த நிலைக்கு உருவாக்கியதே பெரியார்தான்.. ..
சத்தியமூர்த்தி ராஜாஜியும் கோலோச்சிய காங்கிரஸில் பெரியார் காமராஜரை கொண்டுவந்தார்.. குலக்கல்விக்கு எதிராக பெரியார் மண்ணெண்ணை கேனோடு தயாராக இருங்கள்.. நான் சொல்லும் போது அக்ரஹாரத்தை கொழுத்துங்கள் என்ற போது ஆடிப்போனார் ராஜகோபாலாச்சாரி.. உடனே குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.. அப்போதுதான் பெரியார் யோசித்தார் பார்பனன் கையில் அதிகாரம் இருப்பதால் தான் துள்ளுகிறார்கள் அதை பிடிங்கவேண்டுமென்பதற்காகவே குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜரை நிற்க சொன்னார்..
காமராஜரோ .. முதலியார்களும் முஸ்லிம்களும் நிறைந்த தொகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்னை நிற்க சொல்கிறீர்களே என்ற போது நான் பார்த்துக்கொள்கிறேன் நில் என்று சொல்லிவிட்டு பச்சை தமிழனை நிறுத்தியிருக்கிறேன் அவரை ஆதரியுங்கள் என்றார் அண்ணாவும் குணாளா குலக்கொழுந்தே சென்றுவா குடியாத்தம் வென்றுவா கோட்டைக்கு என்றார் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் காமராஜரை ஆதரித்து வெற்றிபெற செய்தார்

இயங்கிக்கொண்டே இருக்கும் தி.மு.க பொதுசெயலாளர் பேராசிரியர் அன்பழகன்!

பெரியார் திடலில் அன்பழகன்இரா.தமிழ்க்கனல்
தேர்தலில் வென்று மக்கள் பிரதிநிதியாகி கட்சியிலும் ஆட்சியிலும் பதவியைப் பிடிப்பதே அரசியல் என்பவர்களுக்கு மத்தியில், அதோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு கொள்கைக்கார தி.மு.க.காரராக 95 வயதிலும் இயங்கிக்கொண்டு இருப்பவர், க. அன்பழகன். முன்னாள் அமைச்சர் என்பதைவிட தி.மு.கவின் பொதுச்செயலாளர் என்பதே இவரின் முக்கிய அடையாளம்!
தி.மு.கவின் தலைவர் கருணாநிதி இவருக்கு இளையவர் என்றாலும் கட்சித் தலைவராக கருணாநிதியை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுவருவது அன்பழகனின் கட்டுப்பாட்டு உணர்வு. அதைப்போலவே கலைஞர் கருணாநிதியும் கட்சியின் பொதுச்செயலாளரும் தன்னைவிட மூத்தவரான அன்பழகனுக்கு கொடுக்கும் மரியாதையை என்றும் விட்டுவைத்ததில்லை!
கருணாநிதியின் உடல்நிலை நலிவடைவதற்கு முன்புவரை, அன்பழகனின் பெரும்பாலான பிறந்தநாள்களுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டப் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டுக்குப் போய் வாழ்த்துக்கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்,

புதன், 20 டிசம்பர், 2017

4.85 லட்சம் கோடி ஊழல் ... யார் தெரியுமா? பாஜகவின் 2016- ஸ்பெக்ட்ரம் ஏலம் !

ராஜா ஜி : இந்தவார களேபரத்தில் ஊடகங்கள் வேண்டுமென்றே கவனிக்காமல் விட்டது ஸ்பெக்ட்ரம் விற்பனை - மீள்வாசிப்பு
5.5லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் விற்கவேண்டும் என்பது மோடி அரசின் இலக்கு. விற்றது 65,789கோடிகளுக்கு . அப்பொழுது மூனே முக்கால் லட்சம் கோடிகள் இழப்புதானே?
2G வாதத்தின் படி 1,80,000கோடி இழப்பு, ஊழல் என்றால் (பிறகு வினோத் ராய்30,000கோடியாக இருக்கலாம் என்றார்) 3,75,000,கோடிகள் இழப்பும் ஊழல்தானே?
Please read carefully officer....
http://www.livemint.com/…/Spectrum-auction-ends-after-lukew…
ஆக மோடி 3,75,000கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் செய்திருக்கிறார்!
எங்கே வினோத் ராயும்,ஊடகங்களும்? இருவரும் பிஜேபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். பிறகு உண்மை எப்படி வெளிவரும் ?
இப்போது நடந்தது ஊழலா இழப்பா?
விருது வாங்கிய விநோத்ராய் அவர்கள் மூஞ்சியில் கரி அப்பியதற்கு நன்றி நன்றி!
*4.85 லட்சம் கோடி ஊழல்*
2016- ஸ்பெக்ட்ரம் ஏலம்
வரவேண்டிய தொகை 5.5 லட்சம் கோடி....
வந்தது வெறும் 65000ஆயிரம் கோடி....
இது தான் உலகத்தில் இதுவரை நடைபெற்ற மாபெரும் ஊழல்.....
ஊழலை செய்துள்ளவர் மோடி!
*4.85 லட்சம் கோடி ஊழல

கேரளா .. கட்டிப்பிடித்த மாணவனையும் மாணவியையும் இடைநீக்கம் செய்த பள்ளிக்கூடம்


tamil.oneindia.com-lakshmi-priya. நீண்ட நேரம் கட்டி பிடித்த மாணவன் இடைநீக்கம்... திருவனந்தபுரம்: மாணவியை பாராட்ட நினைத்து அவரை நீண்ட நேரம் கட்டிப் பிடித்த மாணவனை கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புரிந்த சாதனையை பாராட்ட நினைத்தார். இதையடுத்து அந்த மாணவியை அவர் கட்டிப்பிடித்து தனது வாழ்த்துகளை கூறிக் கொண்டார்.
எனினும் மாணவியை காம நோக்கத்துடன் நீண்ட நேரம் மாணவன் கட்டிப்பிடித்ததாக புகார் கூறிய பள்ளி நிர்வாகம் அவரை கடந்த ஜூலை மாதம் முதல் 5 மாதங்களுக்கு பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது.

உயிருடன் இருப்பவர்களின் கட்டவுட் வைக்க தடை இல்லை ,,, நீதிமன்றம்/

tamilthehindu :உயிருடன் இருப்பபவர்கள் படங்களை பேனர் , கட் அவுட் வைக்க பயன் படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
விதிமீறல் பேனர்களை அனுமதிக்கக் கூடாதென்றும், உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர், கட் அவுட் வைக்க கூடாது என கடந்த அக்டோபர் மாதம் நீதிபதி வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் தரப்பில் “உயிரோடு இருப்பவர்கள்” என்ற வார்த்தையால் கமர்ஷியல் விளம்பரங்கள் கூட வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி பேனர்கள், கட் அவுட்கள் வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பேனர்கள் வைப்பது தொடர்பாக அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே தனி நீதிபதி உத்தரவில் "உயிரோடு இருப்பவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது" என்ற பகுதியை மட்டும் ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

வெற்றிவேல் மீது தேர்தல் / பாஜக ஆணையம் நடவடிக்கை! .. ஜெயலலிதா விடியோவால் பாஜக அதிர்ச்சி ...

வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!மின்னம்பலம் :ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்குப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உலாவரும் நிலையில், மரணம் குறித்த உண்மை நிலையைக் கண்டறிய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அப்போலோ விடியோ ... மீதி 14 விடியோக்கள் எப்போ வருமோ ?

பின்னணியில் சிவாஜி கணேசன், ராதா நடித்த முதல் மரியாதை படத்தின் இசை ஒலிக்கிறது. நீ தானா அந்த குயில் என்ற பாடலின் இசை அது. அதனைத்தான் ஜெயலலிதா பழச்சாறு அருந்தியவாறு பார்க்கிறார் என தெரிகிறது. மின்னம்பலம்: ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. ’இந்த வீடியோவை நான் வெளியிட்டது தினகரன் சாருக்கோ, சின்னம்மாவுக்கோ தெரியாது. அவங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்’ என்று சொன்னார் வீடியோவை வெளியிட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல். தினமும் தினகரன் வீடே கோயில் எனச் சுற்றி வரும் வெற்றிவேல், அவருடைய அனுமதி இல்லாமல் இப்படியான ஒரு வீடியோவை வெளியிட முடியுமா, என்ற கேள்வி வருவது இயல்பு. என்ன நடந்தது என விசாரித்தோம். ‘ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமே சின்னம்மாவும், தினகரனும் என்பது போலச் சித்தரிக்கப்பட்ட ஒரு நோட்டீஸை நேற்று வீடு வீடாகக் கொடுத்தார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். இதில் தினகரன் ரொம்பவே நொந்துட்டாரு. நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் விசிட்டர்ஸ் எல்லோரும் வந்து போன பிறகு வெற்றிவேல் மட்டும் தினகரன் வீட்டுக்குப் போயிருந்தார்.
நீண்ட நேரம் இருவரும் பேசியபடி இருந்தார்கள். அப்போது வெற்றிவேல்தான், ‘சார் இந்த சூழ்நிலையை சமாளிக்க ஒரே வழிதான் இருக்கு. நம்மகிட்ட இருக்கிற அம்மாவோட ஹாஸ்பிட்டல் வீடியோவை ரிலீஸ் பண்ணிடலாம்...’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு தினகரனோ, ‘அய்யோ... வேண்டாம்! அதை வெளியிடுவதாக இருந்தால் சின்னம்மா எப்பவோ வெளியிட்டிருப்பாங்க. அம்மாவோட இமேஜ் அத்துடன் காலியாகிடும் என்பதால்தான் அதை வெளியிடாமல் இருந்தாங்க.

ஸ்டாலின் : ஜெயலலிதாவின் விடியோவை முன்பே வெளியிட்டு இருக்கலாமே? கலைஞர் கேட்டாரே !


நக்கீரன் :அரசியலுக்காக வீடியோவை வெளியிட்டது கீழ்தரமான செயல் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமிஷன் கண்டும் காணாமல் இருந்தது. அதுகுறித்து நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்? ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை அப்போது அவர் சிகிச்சை பெறும்போதே வெளியிட்டிருந்தால் இந்த பிரச்சனை இப்படி வந்திருக்காது. ஜெயலலிதா மரணத்தை பொறுத்தவரையில் அவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக நினைத்தேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தை இப்படி அரசியலுக்கு பயன்படுத்தும் அளவுக்கு இவ்வளவு கீழ்தரமாக இருப்பார்கள் என நினைக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயிலலிதா சிகிச்சை வீடியோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

அப்போலோவில் ஜெயலலிதா ! விடியோ வெளியீடு ... தொடரும் கேள்விகள் !

தன் மீது
tamilthehindu :கொலைப்பழி விழுந்தபோதும் சசிகலா வீடியோவை வெளியிடவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன் கொடுக்குமாறு சசிகலா ஒப்படைத்த வீடியோவை எப்படி வெற்றிவேல் வெளியிட்டார்? அவருக்கு யார் அனுமதி கொடுத்தது? என்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் வீடியோ காட்சிகளை இன்று டிடிவி.தினகரனின்  ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா பேட்டி:
"டிடிவி தினகரனிடம் கொடுக்கப்பட்ட வீடியோ எப்படி வெற்றிவேலிடம் சென்றது. வெற்றிவேல் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார். உண்மையான அம்மாவின் தொண்டர் என்று சொல்கிறார். அப்படி தொண்டனாக இருந்தால் இப்படி ஓர் உடையில் ஜெயலலிதா படத்தை வெளியிட வேண்டும் என்றால் சசிகலாவே அதை செய்திருப்பார். வீடியோவை வெளியிட வெற்றிவேல் யார்.
அதை செய்துவிட்டு கொஞ்சமும் கவலையில்லாமல் பேசுவது இன்னும் கவலையாக இருக்கிறது.  

ஜிக்னேஷ் மேவானி குஜராத்தில் ஒரு திருமாவளவன்?

சவுக்கு :ஜிக்னேஷ் மேவானி. இவரது வெற்றி முற்போக்கு சிந்தனையாளர்க்கு புதியதோர் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
அண்மையில் கொல்லப்பட்ட கர்நாடக மாநில செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷுடன் காணப்படும் புகைப்படத்தைத் தான் அவர் தனது ட்விட்டர் முகப்பாகவும் வைத்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் ஊனாவில் பசு வெறியர்கள் இறந்த மாடுகளின் தோலை உரித்துக்கொண்டிருந்த தலித்துக்களை சவுக்கால் அடித்த அந்த  கொடூரம் அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலு சரவையா என்பவரின் வீட்டில் நுழைந்து அவர், மனைவி, இரு மகன்கள், வேறு இரு உறவினர்கள், நண்பர் ஒருவர், ஆக ஏழு பேரை தாறுமாறாக அடித்து, 25 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்று மீண்டும் விளாசினர். இன்னமும் அந்தக் குடும்பம் பரிதவிக்கிறது.

குஜராத் தேர்தல் – வெற்றி பெற்றது யார் ? by Savukku

குஜராத் தேர்தல் பிஜேபியின் வாழ்வா சாவா போராட்டம் என்பது போன்ற ஒரு பிம்பத்தை பிரதமர் மோடி அவர்களே முன்னின்று உருவாக்கினார்.   அமித் ஷாவோ, மொத்தம் உள்ள 182 இடங்களில், 150ல் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.   150 இடங்கள் வெல்ல முடியாத ஒரு எண்ணிக்கை அல்ல என்றார்.    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அதே ராகுல் காந்தியை மனதில் வைத்தே இந்த எண்ணிக்கையை அமித் ஷா சொல்லியிருப்பார்.
ஆனால், ஓட்டப்பந்தயத்தின் எல்லைக் கோட்டை, தொடுவதற்குள், தட்டுத் தடுமாறி, மூச்சுத் திணறி, தொட முடியுமோ இல்லையோ என்ற மலைப்போடே பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.     வெளிப்புறத் தோற்றத்துக்கு புன்னகையோடு பேட்டியளித்து, இனிப்புகளை பரிமாறிக் கொண்டாலும், உள்ளுக்குள் பிஜேபியினருக்கு  இந்த வெற்றி நூலிழையில் கிடைத்த வெற்றி என்பதும் நன்றாகவே புரிந்திருக்கும்.    3000 வாக்குகளுக்கும் குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் 16 தொகுதிகளில் தோற்றுள்ளனர்.  இந்தத் தொகுதிகளில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் பிஜேபி வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம்.    அந்த வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருந்தாலும் பிடித்திருக்கும்.   மிக மிக மெல்லிதான ஒரு கயிற்றின் மீது நடக்க வேண்டிய நெருக்கடிக்கு பிஜேபி தள்ளப்பட்டிருக்கிறது.

சு .சாமி :EVM ஒட்டு இயந்திர மோசடி காங்கிரஸ் செய்தது ! பாஜகவும் செய்கிறது?


ராஜா ஜி : 2018 லேயே நாடாளுமன்ற தேர்தல் வரலாம்.
பாஜகவோடு இரட்டை இலையும், நிதிஷ் மட்டுமே புதிய கூட்டாளிகள்.
காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்பது விரைவில் தெரியும்.
மிண்ணனு வாக்குப் பதிவு இயந்திரத்தை மாற்றாமல் நா.ம தேர்தலை சந்தித்தால் நாமம் தான் கிடைக்கும்.
இன்று சித்தராமையா பேசிவிட்டார் - அடுத்த வருட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்.
நேற்று உ.பி தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்திய இடங்களில் 15 % வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றது.
இயந்திரம் 45 % வாக்குகளை அளித்தது.

இன்று குஜராத்தில் வெற்றியைப் பறி கொடுத்தது போன்று வரும் நா.ம தேர்தலிலும் நடந்துவிடக்கூடாது.
காங்கிரசின் அகில இந்தியத் தலைவர் ராகுலின் செயல்பாடுகள் இனிமேல் தான் தெரியவரும்.
#BanEvm இதுதான் தீர்வு.

குஜராத் தேர்தல் பாஜக ரூ1000 கோடி + ஆயிரக்கணக்கான முழுநேர ஊழியர்கள் கம்யூட்டரில் செல்பேசி

தாரைப்பிதா :வெற்றியா_காவி_கபோதிகளே< காங்கிரஸ் இன்னும் சரியாக வியூகம் அமைத்திருந்தால் ஆட்சியை பிடித்திருக்கும் குஜராத்தில்!
ரூ1000 கோடி; ஆயிரக்கணக்கான  முழுநேர ஊழியர் மூலம் கம்யூட்டரில் செல்பேசிமூலம் வாக்காளர்களுடன் நேரடி உரையாடல்; பறக்கும் ரயில் உள்ளிட்டு பல்வேறு வெத்துவேட்டு அறிவிப்புகள்; எல்லாவற்றிக்கும் மேலாக பாகிஸ்தான் சதி; அது இதுன்னு மோடியின் மாய்மாலம் பேச்சு!
இது வெற்றியல்ல; தோல்வியே பாஜகவுக்கு! குப்புற கவுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழியே நினைவுக்கு வருகிறது!
15% ஓட்டு சரிவு; 116 இல் இருந்து 98 ஆக சீட்டு சரிவு! 18 சீட்டு அவுட்! இதற்கு பெயர் வெற்றியா காவி கபோதிகளே! மோடியின் குஜராத் மாடல் கோவிந்தா... கோவிந்தா...!
இமாசலப்பிரதேசத்தில் சிபிஐஎம் 16 ஆயிரத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் தன்னந்தனியாக நின்று வென்றதுதான்டா வெற்றி!

கன்னட மொழி பேசாத இளைஞர்கள் மீது தாக்குதல் பெங்களூரில் காஷ்மீரை சேர்ந்த ,...

மாலைமலர் :கன்னட மொழி பேசாததால் காஷ்மீரைச்சேர்ந்த மாணவர் மற்றும் அவரது சகோதரர் மீது பெங்களூருவில் ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த மாணவர் தனது சகோதரருடன் காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அதிகாலை வேளை என்பதால் ஆள் நடமாட்டமும் குறைவாக இருந்துள்ளது. காரில் சென்று கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு வந்ததால், காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு, காஷ்மீர் மாணவரின் சகோதரர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் , கன்னட மொழியில் பேச்சு கொடுத்துள்ளனர். ஆனால், தங்களுக்கு கன்னட மொழி தெரியாது என்று இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த கர்நாடகத்தை சேர்ந்த இருவரும் மேலும் சிலரையும் அழைத்து, இரு காஷ்மீர் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செவ்வாய், 19 டிசம்பர், 2017

பேராசிரியர் அன்பழகன் 96 வது பிறந்தநாள் .. வைகோ :நான் உங்களோட வந்துட்டேன்… இனி உங்களோடத்தான் இருப்பேன்’

நாளை கர்ணன் விடுதலையாகிறார்!

நக்கீரன் :கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் இருந்து நாளை விடுவிக்கப்படுகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறினார். இதனால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இவர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. கர்ணனை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை.

மகாராஷ்டிரா ஆறு மாதங்களில் 2,965 சிறுமிகள் காணமல் போயுள்ளனர் ... பாஜக சிவசேனா ஆட்சியின் வண்டவாளம்


மின்னம்பலம் :மகாராஷ்டிராவில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 2,965 சிறுமிகள் காணாமல் போனதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று(டிசம்பர் 19) சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டசபையில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ரந்தீர் சாவர்கர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார். அதில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை 2,881 சிறுமிகள் காணாமல் போயினர். இந்த எண்ணிக்கை 2,965 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை பதவியிலும் இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ், “சிறுமிகள் காணாமல் போவது குறித்த வழக்கில் குறிப்பிட்ட எந்தவொரு கும்பல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.