நக்கீரன் :கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் இருந்து நாளை விடுவிக்கப்படுகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறினார். இதனால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இவர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. கர்ணனை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை.
உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான் தன் முன் ஆஜராக வேண்டும் என்று கர்ணன் கூறினார். இதையடுத்து கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதன்பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை முடிந்து நாளை கர்ணன் விடுதலை ஆகிறார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக