tamilthehindu :உயிருடன் இருப்பபவர்கள் படங்களை பேனர் , கட் அவுட் வைக்க பயன்
படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
விதிமீறல் பேனர்களை அனுமதிக்கக் கூடாதென்றும், உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர், கட் அவுட் வைக்க கூடாது என கடந்த அக்டோபர் மாதம் நீதிபதி வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் தரப்பில் “உயிரோடு இருப்பவர்கள்” என்ற வார்த்தையால் கமர்ஷியல் விளம்பரங்கள் கூட வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி பேனர்கள், கட் அவுட்கள் வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பேனர்கள் வைப்பது தொடர்பாக அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே தனி நீதிபதி உத்தரவில் "உயிரோடு இருப்பவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது" என்ற பகுதியை மட்டும் ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.
இதையடுத்து உத்தரவுப் பிறப்பித்த நீதிபதிகள் பேனர்களில் ஆபாச படங்கள், கருத்துகள் இருக்ககூடாது என்று தான் விதிகள் உள்ளது. போட்டோ இருக்க கூடாது என்று விதியில்லை . மேலும் பேனர் தொடர்பான விதிகளை அமல்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அரசு எதிர்க்கவில்லை, "உயிருடன் இருப்பவர்களின் புகை படத்துடன் பேனர்கள் வைக்கக்கூடாது" என்ற பகுதியை மட்டுமே எதிர்க்கிறது.
எனவே நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அக்டோபர் 23-ல் பிறப்பித்த உத்தரவில் "உயிருடன் இருப்பவர்கள் படங்கள் கூடாது" என்ற பகுதியை ரத்து செய்து உயிருடன் இருப்பவர்கள் புகை படத்தை பேனர்களில் பயன்படுத்தலாம் என உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக