வியாழன், 21 டிசம்பர், 2017

Flashback காமராஜர்தான் ஓட்டுக்கு பணம் பார்மூலாவை இந்தியாவிலேயே முதன்முதலாக அறிமுகபடுத்தியவர்

ஆலஞ்சியார் : காமராஜரை தோற்கடிக்க முடிந்தது மோடியை தோற்கடிக்க முடியவில்லை என்ற எச்.ராசாசர்மாவின் கருத்தையொட்டி சிலர் காமராஜரை தோற்கடித்தது பாவம் என்றளவிற்கு பேசிகிறார்கள்..
காமராஜர் தோற்கடிக்கபடவேண்டியவர்தான்
ஆம்.. காமராஜருக்கென்று தனிமுகம் இருப்பதாக சிலர் வரிந்துகட்டிக்கொண்டு வருகிறார்கள் உண்மையில் காமராஜரை இந்த நிலைக்கு உருவாக்கியதே பெரியார்தான்.. ..
சத்தியமூர்த்தி ராஜாஜியும் கோலோச்சிய காங்கிரஸில் பெரியார் காமராஜரை கொண்டுவந்தார்.. குலக்கல்விக்கு எதிராக பெரியார் மண்ணெண்ணை கேனோடு தயாராக இருங்கள்.. நான் சொல்லும் போது அக்ரஹாரத்தை கொழுத்துங்கள் என்ற போது ஆடிப்போனார் ராஜகோபாலாச்சாரி.. உடனே குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.. அப்போதுதான் பெரியார் யோசித்தார் பார்பனன் கையில் அதிகாரம் இருப்பதால் தான் துள்ளுகிறார்கள் அதை பிடிங்கவேண்டுமென்பதற்காகவே குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜரை நிற்க சொன்னார்..
காமராஜரோ .. முதலியார்களும் முஸ்லிம்களும் நிறைந்த தொகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்னை நிற்க சொல்கிறீர்களே என்ற போது நான் பார்த்துக்கொள்கிறேன் நில் என்று சொல்லிவிட்டு பச்சை தமிழனை நிறுத்தியிருக்கிறேன் அவரை ஆதரியுங்கள் என்றார் அண்ணாவும் குணாளா குலக்கொழுந்தே சென்றுவா குடியாத்தம் வென்றுவா கோட்டைக்கு என்றார் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் காமராஜரை ஆதரித்து வெற்றிபெற செய்தார்

..
காமராஜர் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததும்
நேராக பெரியாரை நான் சந்தித்து என்ன வேண்டுமென்றார்.. ராஜாஜி 6000 பள்ளிகளை மூடிவிட்டார் அதை திறக்க வழிசெய்யுங்கள் ‍‍‍‍அதேபோல் தாழ்த்தப்பட்டவரை அறநிலைத்துறை அமைச்சராக்குங்களென்றார்.. கல்விக்கண் திறந்தவர் காமராஜர் என்கிறீர்களே..அவரின் அறிவு கண்ணை திறந்தவரே பெரியார்தான்.. பதவி வந்தவுடன் மமதையும் தலைக்கேறியது.. 1957 ல் 15 பேர் திமுகவினர் அண்ணா கலைஞர் நாவலர் உட்பட வென்று சட்டமன்றத்திற்கு சென்றார்கள் அனைவரையும் வரும் தேர்தலில் தோற்கடிப்பதாக சொல்லி.. இந்தியாவிலேயே முதன்முதலாக வாக்கிற்கு பணம் என்ற பார்மூலாவை அறிமுகபடுத்தியவர் காமராஜர் தான் அதுவரை பண்ணையார்கள் தங்கள் கூலித்தொழிலாளிகளை சுடுசோறு போட்டு குடும்பத்திற்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாக்களிக்க சொன்னது நடந்ததுண்டு ஒட்டுமொத்தமாக வெங்கடாஜலபதி படத்தில் சத்தியமே வாங்கிக்கொண்டு ₹5 விநியோகம் நடந்தது அண்ணாவை தோற்கடிக்க பணம் கொடுத்து அப்போதுதான் ..தஞ்சையில் கலைஞரை தோற்கடிக்க நெய்சோறு போட்டு ₹5 வழங்கியதும் அப்போதுதான்.. ஆனால் கலைஞரை தோற்கடிக்க முடியாமல் போனது வேறுகதை..
..
1962 ல் பெரியாரிடம் 15 வேட்பாளர் பட்டியலை தருகிறார்.. அதெல்லாம் சரி கருணாநிதியை எதிர்த்து யாரை நிறுத்துறே.. என சொல்லி பரிசுத்த நாடாரை நிறுத்த சொல்கிறார் நானே பிரச்சாரத்திற்கு வருகிறேன் என்று வந்தவர். கருணாநிதியை புகழ்ந்து 10 நிமுடம் பேசுகிறார் கருணாநிதி எனது நேரடி சீடன் அவனிடம் ஒரு பொறுப்பை தந்தால் அதை செய்துமுடிக்கிறவரை உறங்கமாட்டான் என பேசிவிட்டு திமுகவை விமர்சித்து ஒன்றரை மணிநேரம் பேசினார் அந்த பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கலைஞர் அருகிலுள்ள வெற்றிவேல் பிரஸில் .. பெரியார் தன் சீடன் கருணாநிக்கு புகழாரமென பெரியார் பேசியதை துண்டு சீட்டில் அச்சடித்து பெரியார் பேச்சை முடிப்பதற்குள்ளாகவே அந்த கூட்டத்தில் விநியோகம் செய்தார்.. ஒரு திமுக தொண்டர் மேடையேறி பெரியார் மடியில் போட்டுவிட்டு போய்விட்டார்.. பெரியார் அந்த துண்டு பிரசுரத்தை படித்து பார்த்து சிரித்துக்கொண்டே பேச்சை முடித்து அறைக்கு வந்தவர் ..மீண்டும் அந்த துண்டை பிரித்து படித்து விட்டு சிரித்துக்கொண்டே சொன்னார்
கருணாநிதியை தோற்கடிக்கமுடியாது..
எவ்வளவு தீர்க்கமான பார்வை.
..
காமராஜர் பஸ் முதலாளிகளையும் மிராசுகளையும் வேட்பாளராக்கினார் .. சாமானியர்கள் சட்டமன்றத்திற்கு நுழைய திமுகதான் வழிசெய்தது.. தேர்தலில் பணம் என்ற சொல் காமராஜரின் பெருந்தொண்டில் ஒன்று .. அதே பார்மூலாவை
1967 ல் விருதுநகரில் தான் நின்றபோது வாக்கிற்கு ₹10 வழங்கியும் காமராஜரால் வெல்லமுடியவில்லை.. அதே காமராஜரை அண்டங்காக்கையை டெல்லியை விட்டே துரத்துகிறேன் என்றவர் ராஜாஜி .. அதன்பிறகுதான் அவரை கொல்ல முயற்சித்தார்கள்... அப்போதும் பெரியார்தான் துணைநின்றார்..
..
காமராஜர் சுயம்பல்ல.. சுயமாக சிந்தித்து நல்லதிட்டங்களை செயல்படுத்தியவரல்ல அவரை பின்னிருந்து இயக்கியது எங்கள் பேராசான் பெரியார் ..ஆம்..
அவரை பெரியார் உருவாக்கினார்.. இயக்கினார் அவ்வளவுதான்
..
Aalanci Spm
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: