malaimalar :தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று தனது 96-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி அவருக்கு மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று தனது 96-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேற்றிரவு கோபாலபுரம் வீட்டுக்கு சென்று சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
இன்று காலையில் கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடம், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.
கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள வீட்டில் அன்பழகன் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எ.வ.வேலு, ப.ரங்கநாதன், மாவட்டச்செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ம.மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன், பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தி.மு.க. தொழிலாளர் அணி செயலாளரும், மின்கழக தொ.மு.ச. பொதுச்செயலாளருமான சிங்கார ரத்தினசபாபதி, சங்க தலைவர் கணபதி, பொருளாளர் மு.சடாட்சரம், தொ.மு.ச. சண்முகம், ஆர்.கே.நகர் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், துறைமுகம் காஜா, சேப்பாக்கம் பா.சிதம்பரம், லயோலா லாசர், ராமலிங்கம், பரமசிவம், வக்கீல் ரகு உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தன
தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் தனது 96 வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் அவரது இல்லத்துக்குச் சென்று வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். பேராசிரியர் அன்பழகனுக்கு வாழ்த்துச் சொல்ல வைகோவும் அவரது இல்லத்துக்குச் சென்றார். திரண்டிருந்த தி.மு.க தொண்டர்கள் வைகோவை உற்சாகத்தோடு வரவேற்றார்கள். வைகோ உள்ளே சென்றதும், அங்கிருந்த பேராசிரியர் எழுந்து ‘வாய்யா… வாய்யா…’ எனக் கூறி வாஞ்சையாக வரவேற்றார். பேராசிரியரை கட்டித் தழுவிக்கொண்ட வைகோ, ‘நீங்க 125 ஆண்டுகளுக்கு மேல வாழணும்னே’ என வாழ்த்தினார். இதைக் கேட்ட பேராசிரியர் வைகோவின் கண்ணத்தைத் தட்டிக்கொடுத்து, ‘ஆர்.கே.நகர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில நீ பேசியதைக் கேட்டேன். நீ எங்களோட வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது’ என்றார். ‘ஆமாம்ணே… நான் உங்களோட வந்துட்டேன்… இனி உங்களோடத்தான் இருப்பேன்’ எனக் கையைப்பிடித்துக்கொண்டே தழுதழுத்தார் வைகோ. உடன் வந்திருந்த மல்லை சத்யாவும் வாழ்த்துச் சொல்ல, அவரையும் தட்டிக் கொடுத்து, தழுவிக்கொண்டார் பேராசிரியர். அங்கிருந்து புறப்பட்ட வைகோ வீடு சேரும் வரை, பழைய நினைவுகளைச் சத்யாவுடன் அசை போட்டுக்கொண்டே வந்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக