புதன், 26 அக்டோபர், 2016

"அண்ணா" தமிழ்நாட்டில் ஏன் மீண்டும் மீண்டும் திராவிடகட்சிகளே .. ஏன் தேசிய கட்சிகள் தேய்கின்றன? தமிழகம்தான் முன்னோடி ...

அன்றைக்கு கொல்கத்தாவிலுள்ள வங்க அகாடமியில் இருந்தேன். “தமிழக அரசுப் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு இனி ஒன்பது மாதமாக உயர்த்தப்படும்” என்று அப்போதுதான் அறிவித்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. நான் சந்தித்த நண்பர்கள் இதுபற்றிப்பேசலானார்கள். “இது முற்போக்கான முடிவு; இது மட்டும் அல்ல, நிறைய. விலையில்லாஅரிசி, பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள், மடிக்கணினி, ஒரு ரூபாய் இட்லி… தமிழ்நாடு தொடர்பாக மம்தா நிறையக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அவருக்குத் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி” என்றார்கள். கால் நூற்றாண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட மாநிலம் சமூக நலத்திட்டங்களின் தாக்கங்களைப் பற்றி இப்போது நிறைய யோசிக்கிறது. இந்த ஆண்டு ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையும் அவர்களைக் கவனிக்க வைத்திருந்தது. “உண்மையான விடுதலை, பொருளாதாரச் சுதந்திரத்தில் இருக்கிறது” என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்த ஜெயலலிதா, ‘பொதுச் சரக்கு, சேவை வரிகள் (ஜிஎஸ்டி)மசோதா’ விவகாரத்தில் நாட்டிலேயே தனித்து நிற்கும் முடிவை எடுத்ததையும் ஆச்சரியமாகப் பேசினார்கள். தொடர்ந்து நாடு முழுக்க அரசியலில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தாலும் தமிழகம் மட்டும் எப்படி விடாமல் திராவிடக் கட்சிகளுடனேயே பயணிக்கிறது என்று கேட்டார்கள். அவர்களுடைய பெரிய சந்தேகம், “திராவிடக் கட்சிகள் சிந்தாந்த வலுவற்றவை. அவற்றுக்குத் திட்டவட்டமான கொள்கை ஏதும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. எனினும், ஆச்சரியமான காரியங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றனவே எப்படி?’”

வயிறு கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் கௌசர் பானுவும் காப்பாற்ற வேண்டியவர்தான் மோடி ஜீ..!

சம்சுதீன் ஹீராசம்சுதீன் ஹீர ஆமாம் மோடி ஜீ…!
முஸ்லிம் பெண்களின் வாழ்வைச் சூரையாடுவதை நாம் அனுமதிக்க முடியாதுதான். அதெப்படி அந்த உரிமையை முஸ்லிம் ஆண்களுக்கு கொடுக்க முடியும்..?
ஃபாசிசம் தலையெடுக்கும்போதெல்லாம் சாத்தான்கள் வேதம் ஓதக் கிளம்பிவிடுவதை நாம் வரலாறு முழுவதும் பார்த்தே வருகிறோம். இதோ இப்போது நீங்கள் திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள்.
குஜராத் இனப்படுகொலையில் எஞ்சிய முஸ்லிம்களின் அகதி முகாமை, குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று வர்ணித்த உங்கள் வார்த்தைகளில் கூடபெண்கள்மீது நீங்கள் கொண்ட அளப்பறிய மரியாதையை வெளிப்படுத்தினீர் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு இவர்களுக்குதான் இல்லை..
உங்களுக்கு நினைவிருக்கிறதா மோடி ஜீ..ஹுசைன் நகர் என்றொரு பகுதியை..? எப்படி மறப்பீர்கள்? உங்களை உச்சானிக்கொம்பில் ஏற்றி அழகுபார்க்க அந்த மக்கள் சிந்திய உதிரங்களை நீங்கள் எப்படி மறப்பீர்கள்..? நீங்களும் மறக்க மாட்டீர்கள், நாங்களும் மறக்க மாட்டோம்.
ஹுசைன் நகர் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் பகுதி. கூலி வேலை செய்யும் அடித்தட்டு முஸ்லிம்கள் வாழும் பகுதி. அங்கு பெண்கள் அதிகம். குறிப்பாக இளம் பெண்கள். பெருநாள் கொண்டாங்களில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஹுசைன் நகரையும், நூரனி மஸ்ஜித்தையும், புத்தம்புது உடைகள் அணிந்து குதூகலித்துத் திரியும் இளம்பெண்களின் அழகையும் எந்தக் கவிஞனும் முழுதாய் வர்ணித்திட முடியாது.

இலங்கையில் தமிழ் மாணவர்கள் கொலை: யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் கடையடைப்பு

கொழும்பு : இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழக தமிழ் மாணவர்கள் இருவரை அந்நாட்டு போலீசார் சுட்டு கொன்றதை கண்டித்து தமிழர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் ஊடகவியல் துறையில் 3ம் ஆண்டு படிக்கும் தமிழ் மாணவர்கள் விஜயகுமார்,20, சுலேக்சன்,21. இவர்கள் இருவரும் அக்., 21ல் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது யாழ்ப்பாணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மாணவர்களை வழிமறித்துள்ளனர். இருவரும் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் அங்குள்ள தமிழர்கள், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என, இலங்கை அரசுக்கு தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

கேள்வி கேட்ட தொகுதிவாசியை சிறையில் தள்ளிய லொடுக்கு புலி கருணாஸ்!

ராமநாதபுரம் திருவாடனை தொகுதியில் அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் நடிகர் கருணாஸ். ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்னும் பெயரில் சாதிக்கட்சியை நடத்தி வந்தவர், அதிமுக தயவில் எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ-க்களே ஜெர்க் ஆகும் அளவுக்கு அம்மா புராணம் பாடியே காலத்தை ஓட்டும் கருணாஸ், தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. சமீபத்தில் சிறு குழந்தைகளுக்கு இடையில் வந்த சச்சரவில் தலையிட்ட கருணாஸ் கொடுத்த அழுத்தத்தில் எம்.கல்லுப்பட்டி காவல்துறை, தலித் சிறார்கள் ஜெயபிரகாஷ், வல்லரசு, முருகதாஸ், சங்கீதா, சுந்தரபாண்டி ஆகிய ஐவர் மீதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் எட்டு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சர்ச்சைக்குள்ளானது.

நாங்கள் பங்கேற்றால் கூட்டணி உடையும் என்றார்கள்:ரவிக்குமார்!.. காவிரியை விட கூட்டணி முக்கியம்?

‘திமுக கூட்டியிருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இயலாது’ என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் விளக்கமும் கொடுத்திருக்கிறார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், தமிழக அரசு இதை ஏற்கவில்லை. இதனால் பிரதான எதிர்க்கட்சியான திமுக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. ‘இந்தக் கூட்டம் திமுக-வின் தோழமைக் கட்சிகளின் கூட்டம்; நரித்தனமாக செயல்படுகிறது. ஆகையால் மக்கள் நலக் கூட்டணி இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கிறது’ என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்திருந்தார்.

500 கொடுத்து பால்குடம் காவடி அலகு.. கிராமம் கிராமமாக ஜெயாவின் ஆரோக்கியத்துக்காக மக்களை பலிகொடுக்கும் அதிமுக மாபியா .. மூதாட்டி மரணம் .. விஜயகாந்த் அதிரடி

தமிழக முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் முதல்வருக்காக அலகு குத்துதல், மண்சோறு உண்ணுதல், விளக்கு பூஜை நடத்துதல், பால் குடம் எடுத்தல் என பிரார்த்தனைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் நேற்று, திருவண்ணாமலையில் பால்குடம் எடுக்கும் கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். பல பெண்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இதைக் கண்டிக்கும்விதத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உடல்நலம் பெற வேண்டி அதிமுக சார்பாக நடத்தப்படும் பால் குட ஊர்வலங்கள் சிறு பிள்ளைகளுக்கு அலகு குத்துதல், காவடி தூக்குதல், பச்சை குத்துதல் போன்ற தொடர்ந்த நிகழ்வுகளாக நடந்துவருகின்றன.

BBC: ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள் உலகளவு ஆய்வில் தகவல்

மது அருந்தும் விஷயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக ஆண்கள் பிரச்சனைக்குரிய அளவில் மது அருந்துவது பெண்களை விட மும்மடங்கு அதிகம் கல்லீரல் பாதிப்பு போன்ற உடல் நலப் பிரச்சனைகள் ஆண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு பெண்களை விட 3.6 மடங்கு அதிகம் ஆனால் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், இந்த இடைவெளி குறைந்த்து. எனவே 20ம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஆண்கள்: பெண்களைவிட ஆண்கள் மது அருந்தும் வாய்ப்பு என்பது 1.1 மடங்கு மட்டுமே அதிகம்
பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது. கடந்த 1891ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு , ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது. ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது.

தனிமனித விமர்சனங்களை ஏற்க முடியாது: சென்னை ஐகோர்ட் ..இடியமின் ஹிட்லர் எல்லாம் பிச்சை வாங்கணும்

சென்னை: பேச்சுரிமை, கருத்துரிமை என்ற பெயரில் தனிமனித
விமர்சனங்களை ஏற்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளான நவநீதகிருஷ்ணன், ராஜீவ் காந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், முதல்வர் உடல்நிலை குறித்து தங்களுக்கு பேஸ்புக்கில் வந்த தகவலை மட்டுமே பகிர செய்தோம். ஆனால் அதிமுக நிர்வாகியின் பெயரில்போலீசார் தங்களை துன்புறுத்தி வருகின்றனர். பேஸ்புக் பக்கத்தை முடக்கிவைத்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டும் என்ற எண்ணமில்லை. போலீசாரின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர். அப்போது போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்களுக்கு, இடையூறு செய்யப்படவில்லை. கருத்துரிமை என்ற பெயரில் முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. துன்புறுத்தல் இல்லாமல் சட்டப்பூர்வ நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை ..வகுப்பறையிலே மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்... திருவள்ளூர் ..

சென்னை அருகே 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை 40 வயதான ஆசிரியர் ஒருவர் பலவந்தமாக பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் அனுஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் சீனிவாசன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் அவ்வப்போது மாணவிகளிடம் வரம்பு மீறி நடந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி ஆசிரியர் சீனிவாசன் மாணவி அனுஷாவை பொய்யான காரணம் ஒன்றை கூறி வகுப்பறையில் இருந்து தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் யாரும் இல்லாமல் காலியாக இருந்த ஒரு வகுப்பறைக்கு அழைத்து மாணவி அனுஷாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சீனிவாசன். இது குறித்து வெளியே யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியதால் மாணவி பயத்தில் யாரிடமும் கூறாமல் மறைத்து வந்துள்ளார்.

உண்மை நிலையைப் புரிந்து கொண்டேன்: திருமாவளவனுக்கு ஸ்டாலின் கடிதம்

காவிரி நீர் பிரச்சனை பற்றி ஆலோசனை நடத்த செவ்வாய்க்கிழமை நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சிகளுக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ள இயலாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சில காரணங்களைக் கூறி  மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்உண்மை நிலையைப் புரிந்து கொண்டேன் என்று திருமாவளவனுக்கு மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் அனுப்பியிருந்த கடிதத்தில   ;காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மைய அரசை வலியுறுத்தும் வகையில் இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்தமைக்காக தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கலைஞர் உடல்நல குறைவு .. ஒவ்வாமை .. வீட்டில் இருந்தே சிகிச்சை

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை காரணமாக ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள் அவரைக் காண வருவதை தவிர்க்குமாறு கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் வீட்டிற்கே வந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "​தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் அவரைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைமலர்.காம்

திருமாவளவன் பங்கேற்கவில்லை .. அனைத்துகட்சி கூட்டத்தில் பங்கேற்க திருமா மறுப்பு

திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில்
இருப்பதாக திருமாவளவன் சற்றுமுன் மு,க ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததே திருமாவளவன் அவர்கள்தான். நேற்று நடந்த விசிக கூட்டத்தில் கூட பெரும்பாலானோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கருத்து தெரிவித்ததாக அதன் சார்பில் ஊடகங்களில் பேசியவர்கள் தெரிவித்தனர். நான் கடந்த மூன்று நாட்களாக அரசியல் நலன்களை கடந்து தமிழக உணர்வுகளுக்காக திருமா நிற்பார் என்றே ஊடகங்களில் பேசி வந்தேன். திருமாவின் செயல்பாடுகளும் அதையே பிரதிபலித்தன,

இஸ்லாமிய பெண்கள் கல்வி கிடைக்கும் முன்பே கர்ப்பம் ... வேகவேகமாக தலாக் தலாக் தலாக் .. வாசகியின் காட்டமான கருத்து

VIJAYA CHOUMIAN - SCOTLAND,யுனைடெட் கிங்டம் 24
இதை எனது அன்புக்குரிய இஸ்லாமிய அங்கிள்ஸும் சகோதரர்களும் தான் சரி செய்ய வேண்டும். புரட்சி என்பது அவர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அவர்களுக்கு மற்ற மதத்தினர் ஆதரவு நிச்சயம் உண்டு. அபு லுக்மான், காசிமணி போன்ற இஸ்லாத்தில் அதீத பற்றுக் கொண்டோர் அங்கு இளம் பெண்கள் படும் பாட்டை கருதி எங்கு தவறுள்ளது என்று ஆய்ந்து ஏழை சகோதரிகளுக்கு உதவ முன்வரவேண்டும். இஸ்லாத்திலேயே சில அமைப்புகள் உருவாகி அவர்கள் இது போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கிறார்கள். நம் நாடு இஸ்லாத்திற்கு என்று ஒரு தனி சட்டம் வைத்திருப்பதால், இந்திய முஸ்லீம் பெண் தன்னை எதோ வெளிநாட்டில் முஸ்லீம் மத ஆட்சி நடக்கும் நாட்டில் பிறந்ததாக எண்ணி வேதனை பட வேண்டி உள்ளது.

தலாக்கை ஏற்க மறுக்கும் முஸ்லிம் பெண் .. உலகில் 22 நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை ஏற்காத போது இந்தியா ஏன் அதை பின்பற்றவேண்டும்?


புனே: மூன்று முறை தலாக் முறைக்கு 18 வயது முஸ்லீம் பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அர்ஷியா என்ற 18 வயது பெண் கூறுகையில், இஸ்லாமிய சட்டம் மூன்று முறை தலாக் கூறும் சட்டத்தை நான் ஏற்க மாட்டேன். இதற்காக கூறப்படும் காரணத்தையும் நான் ஏற்க மாட்டேன். எனது கருத்து மற்றும் விருப்பத்தை கேட்காமல், என்னை பிடிக்கவில்லை என எப்படி கூற முடியும். உலகில் உள்ள 22 நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை ஏற்காத போது, இந்தியா மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும். 16வயதில் எனக்கு திருமணம் நடந்தது. அப்போது எனது பெற்றோர் வரதட்சணை கொடுத்தனர். எனது கணவர் தரப்பினர் பண வசதி படைத்தவர்கள். பாராமதி பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கடை வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு, மாமியார் என்னை கொடுமைபடுத்தினார். நாய் போல் என்னை வேலைவாங்கினர்.
எனது தாயாருக்கும், மாமனாருக்கும் தவறான தொடர்பு உள்ளதாக மாமியார் கூறினார். கணவரின் உறவினர்களும் என்னை துன்புறுத்தினர். நான் கர்ப்பமாக இருந்த போதும் இந்த கொடுமை நடந்தது. ஒரு நாள் எனது பெற்றோர் வீட்டில் இருந்த போது, தலாக் நோட்டீஸ் வந்தது இது

முதல்வர் மோடியின் அரைவேக்காட்டு அநியாயத்தை அமுக்கிய பிரதமர் மோடி

2005ல் KG BASINல் 20 லட்சம் கோடி கன அடி எரிவாயு இருப்பதாக கூறி அதை
எடுக்க GPSC (Gujarat State Petroleum Corporation) தொடங்கப்பட்டது. 15 பொது துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் பெற்று இந்த நிறுவனம் தொடங்கினார்கள். பத்தாண்டுகளில் ஒரு கன அடி எரியாயுவும் அங்கிருந்து எடுக்கப்படவில்லை. CAGயின் சாட்டையடி அறிக்கையின்படி GPSCயின் இன்றைய கடன் 20,000 கோடி ருபாய், அவர்களால் அதன் வருட வட்டி தொகையான ரு.2000 கோடியை கூட செலுத்த முடியவில்லை.
முதல்வர் மோடியின் தலைமையில் நடந்த இந்த மொத்த ஊதாரித்தனங்களை மூடி மறைக்க பிரதமர் மோடி இந்த நட்ட கணக்கு நிறுவனத்தை லாபம் ஈட்டும் ONGC பொதுத் துறையுடன் இணைக்க திட்டம் தீட்டு வருகிறார்,
இது தான் உண்மையான SURGICAL STRIKE..
 முகநூல் பதிவு   முத்துகிருஷ்ணன்

ஊழல் பெருச்சாளி கேதான் தேசாயை சர்வதேச மருத்துவக் கழகத்திற்குத் தலைவராக மோடி அரசு பரிந்துரை

No automatic alt text available.கேதன் தேசாய்: நினைவிருக்கிறதா?
கேதன் தேசாய் என்பவரைப்பற்றி நினைவிருக்கிறதா? ஆண்டுகள் சில கடந்துவிட்ட காரணத்தால் மறந்திருக்கலாம்; வெகுமக்களின் மறதிதானே அரசியல்வாதிகளுக்கு முக்கிய முதலீடு.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ‘குபேரன்’ அவர்.
கிடைத்த வாய்ப்பை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு வேகமாகப் பயன்படுத்தியவர் கேதன் தேசாய். மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்தான் அவருக்குப் பணம் காய்ச்சி மரமாக இருந்திருக்கிறது. அவரது பணம் கறக்கும் பாணியே அலாதியானது. மருத்துவத் துறையினர் ஒரு மருத்துவக் கல்லூரிக்கான கட்டடம், இதர வசதிகள் செய்த பிறகு, அதன் நிருவாகம், மருத்துவக் கவுன்சி லிடம் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும். அதன் பிறகு மருத்துவக் கவுன்சில், ஒரு குழுவை தொடர்புள்ள கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கும். அவர்களும் தீவிரமாக விசாரணை செய்துவிட்டு, அறிக்கை அனுப்புகிறோம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்கள்.

திங்கள், 24 அக்டோபர், 2016

பிடிபட்ட ஐ.எஸ் வாக்குமூலம : பாரிஸில் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்றவர்தான் தன் தலைவர்

தமிழகத்தைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதியான சுபஹானி ஹாஜா மொய்தீன், பாரிஸில் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்றவர்தான் தன் தலைவர் என விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார். இவர், இராக்கில் ஐ.எஸ். போராளிகளோடு சேர்ந்து போரிட்டிருக்கிறார். மொய்தீன், ஏப்ரல் 8, 2015 சென்னையிலிருந்து இஸ்தான்புல் சென்று, அங்கிருந்து பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் இருந்துவந்த ஜிகாதிகளோடு சிரியா சென்றிருக்கிறார். “துருக்கியிலிருந்து பயிற்சி பெற்று இராக் செல்லும்போது, அவருக்கு மத போதனைகளும், ஏகே-47 துப்பாக்கியை எப்படிப் பயன்படுத்துவது எனவும், வெடிகுண்டு தயாரித்தல், அரிவாள்களை பயன்படுத்துதல் ஆகியவைகள் குறித்து பாடம் நடத்தப்பட்டது. பாரிஸ் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர்தான் குழுவுக்கு தலைமை தாங்கினார்

வதந்தி கைதுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் .. உடனே விடுதலை செய்ய உத்தரவு

மின்னம்பலம்.காம் : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக
வதந்தி பரப்பினார்கள் என்னும் பெயரில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது, இந்தியா முழுக்க விமர்சனங்களை உருவாக்கியது. முன்னாள் நீதிபதி கட்ஜூ, மனித உரிமை ஆணையத் தலைவர் தத்து, ஆமெனெஸ்டி அமைப்பு என பல அமைப்புகளும் கண்டித்தநிலையில், டிராஃபிக் ராமசாமி இந்தக் கைதுகள் தொடர்பாகவும் அவர்மீது பதியப்பட்டுள்ள வதந்தி வழக்கு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கைது நடவடிக்கைகளை கைவிடவும், கைதானவர்களை விடுதலை செய்யவும் கோரியிருந்தார். இந்த மனு, இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வதந்தி பரப்பியோரை கைது செய்தது சரிதானா.. நிலைமையை இப்படித்தான் கட்டுப்படுத்துவீர்களா? என, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. ஆனால் அதேநேரம், மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்துவிட்டது.

குஷ்பு அப்போலோ வருகை .. தீபாவளிக்கு அவர் வீடு வரணும் !

மின்னம்பலம்.காம்  :கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சார மேடையில் குட்டிக் கதைகளைச் சொல்லி அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தவர் குஷ்பு. ஆனால் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காண அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிக்சை பெற்று வருகிறார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தொடங்கி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் முதல்வரைக் காண வந்து சென்றுள்ளார்கள்.

விஷ்ணுபிரியா வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை இல்லை - உச்சநீதிமன்றம்!

minnambalam.com தலித் இளைஞர் கோகுல்ராஜின் மர்ம மரண வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று (24.10.2016) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விஷ்ணுபிரியாவின் மரண வழக்கை சிபிஐ விசாரிப்பதில் இருந்த தடை நீங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி-யாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர் மர்மான முறையில் இறந்த தலித் இளைஞர் கோகுல்ராஜின் கொலை வழக்கை விசாரித்து வந்தார். சேலம், மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.

வைகோ தன்னிச்சையாக அறிவித்ததால் ம.ந.கூட்டணி டமால் !

சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் 3 தொகுதி தேர்தல், திமுக அனைத்துக்
கட்சிக் கூட்டம் ஆகியவை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானம் இன்று அம்பலப்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்தார். அதேபோல் திமுகவின் நாளைய அனைத்து கட்சிக் கூட்டத்தையும் மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அறிவித்திருந்தார். ஆனால் உண்மையில் இந்த 2 விவகாரங்களிலும் ஒருமித்த முடிவெடுக்கப்படும் முன்னரே வைகோ தன்னிச்சையாகவே அறிவித்திருக்கிறார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. சென்னையில் இன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் ஒற்றை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது." 

மேதகு ஆளுநர் அல்ல மாண்புமிகு ஆளுநர் என்றே குறிப்பிடவேண்டும் .. ம்ம் மாண்புமிகு முதலமைச்சர் வித்தயாசாகர் என்றும் அழைக்ககூடாது

ஆளுநரை இனி "மாண்புமிகு ஆளுநர்' எனக் குறிப்பிட வேண்டும் என தமிழக
ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விழாக்கள், அரசு தொடர்பான பணிகள், பிற தகவல் தொடர்புகளில் குறிப்பிடும்போதும் தமிழக ஆளுநரை "மேதகு ஆளுநர்' எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இனி "மாண்புமிகு ஆளுநர்' என்றே குறிப்பிட வேண்டும். அதேநேரம் வெளிநாட்டு பிரமுகர்களுடனான நிகழ்வுகளில் மட்டும் "மேதகு ஆளுநர்' என்ற சொல்லை பயன்படுத்தலாம் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தினமணி,காம்

மராத்தி நடன நடிகை அஸ்வினி எக்போத் மேடையிலேயே மரணம்

பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக்கலைஞருமான அஸ்வினி ஏக்போத் நேற்று இரவு நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மேடையிலேயே கீழே விழுந்து மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 44
நேற்றிரவு புனேவில் நடந்த பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வினி அபாரமாக நடனம் ஆடிக்கொண்டிருந்த போது திடீரென மேடையில் சரிந்து விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் ஏற்கனவே அவருடைய உயிர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
பரத நாட்டியத்தை உயிருக்கு நிகராக மதித்து வாழ்ந்து வந்த அஸ்வினி பரத நாட்டிய நிகழ்ச்சியின்போதே உயிரை விட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தலித் பெண்ணியம் ! கிருபா முனுசாமியின் ( உயர் நீதிமன்ற வழக்கறிஞர்) புதிய தமிழ் ஆய்வு உரை

புதிய தமிழ் ஆய்வுகள் - ஏழாம் அமர்வுக் கூட்டத்தில் "தலித் பெண்ணியம்" என்ற தலைப்பில் நான் நிகழ்த்தவிருக்கும் ஆய்வுரையை கீழே உள்ள இணைப்பில் நேரடியாக காணலாம்.

அதிமுகவை பாஜக கைப்பற்றுகிறதா? தினத்தந்தி.. தினமணி.. தந்தி டிவி.. வரிசையில் அடுத்த ஜாக்பாட் பன்னீரு?

இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பாருங்கள்! பிப்ரவரி 10 ல் எழுதியது...By Villavan Ramadoss முகநூல் பதிவு ://ஜெயாவின் அரசியல் செயல்பாடுகள் போயஸ்கார்டனுக்கு வெளியே ஒரு மணிநேரத்துக்கு மேல் நீடிக்க முடியாத சூழலில், சசிகலா கும்பலை வழிக்கு கொண்டுவந்து அதிமுகவை கைப்பற்ற பாஜகவுக்கு வெகுகாலம் ஆகாது. சாதிச்சங்கங்களை கைப்பற்றி தங்கள் அடிப்படைவாதத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கிறது அக்கட்சி. ஊடகங்கள் கிட்டத்தட்ட முற்றான பாஜக சார்பு நிலையில் இருக்கின்றன. புதிய தலைமுறை – பாஜக கூட்டணிக் கட்சியுடையது, தினமலர், தினமணி , தந்திடிவி ஆகியவை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளால் இயக்கப்படுகிறது. அதற்கு இன்னொரு ஜாக்பாட் ஆக இருக்கப்போவது அதிமுக கட்சிதான். //சின்ன ஸ்கூல் பசங்க படிக்கவில்லை என்றால் பெற்றோரை கூப்பிட்டு ஸ்கூல் நிர்வாகம் கண்டிக்கும் சமூகத்தில் மாநில அதிமுக அரசின்
ஜனநாயகம் தவிர்த்த முடிவுகள் பிஜேபி ஆசைப்படி மட்டுமே நடக்கிறன்றன என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர் ...


தங்கள் தலைவி ஜெயலலிதாவை பொறுப்பற்ற நிலையில் வைத்து கொண்டே #Honorable Governor மூலம் பன்னிர் செல்வம் வழியாக ஜனநாயக விரோத ஜனாதிபதி ஆட்சியை பிஜேபி நடத்துகிறதா #அதிமுக வினர் வேதனை ..