திங்கள், 12 ஆகஸ்ட், 2013
சுப்பிரமணியன் சுவாமி BJPயில் இணைந்துள்ளார் ! ஒட்டகத்தை கூடாரத்துள்ள உட்டுட்டாங்க இனி மத்தவங்க பொறப்பட ரெடியாகுங்க
ஜனதா கட்சியின் தலைவர்
சுப்பிரமணியன் சுவாமி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் சுப்பிரமணியன் சுவாமி கட்சியில் இணைந்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது ஜனதா கட்சியையும், பாரதீய ஜனதாவுடன் இணைத்துள்ளார் என தகவல் தெரிவித்துள்ளது.ஜனதா கட்சியின் தலைவர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!!
விஜய் அதிர்ச்சியில் ! கேளிக்கை வரி விலக்கை நம்பிய சினிமா உலகம் படிக்கிறது அம்மாவிடம் பாடம்
நடிகர் விஜயின், "தலைவா' படத்தினால், தயாரிப்பாளருடன், சென்சார் போர்டு
அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த
படத்திற்கு, "யு' சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள், குழப்பத்தில் உள்ளனர். அதே
நேரத்தில், நடிகர் விஜய் இன்று, முதல்வரை சந்திக்க ஏற்பாடு நடப்பதாகவும்,
தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விஜயின், "தலைவா' படம்,
திட்டமிட்டபடி, கடந்த, 9ம் தேதி வெளியாகவில்லை. சென்னையில் இப்படத்தை
வெளியிட இருந்த தியேட்டர்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால்,
பாதுகாப்பு கருதி, படம் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. "படத்திற்கு,
"யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது; நிச்சயம் கேளிக்கை வரி விலக்கு
கிடைக்கும்' என, படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறினார்.விலை
பேசி வாங்கியுள்ள நிலையில், கேளிக்கை வரியும் செலுத்த வேண்டும் என்றால்,
கூடுதல் சுமை ஏற்படும். எனவே, "கேளிக்கை வரி விலக்கு கிடைத்த பிறகு, படத்தை
வெளியிடலாம்' என, தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர். இதனால், சென்னை உட்பட,
தமிழகம் முழுவதும் படம் வெளியிடப்படவில்லை.எப்படியாவது படத்திற்கு
கேளிக்கை வரி விலக்கு பெற்று விடவேண்டும் என, நடிகர் விஜய்யும், இயக்குனர்
விஜய்யும், முதல்வரை சந்திக்க கொடநாடு சென்றனர். ஆனால், அவரை சந்திக்க
முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தனுஷ்: அய்யோ அய்யோ நான்அரசுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லையே
விஜய் நடித்த தலைவா
திரைப்படம் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வெளியாகவில்லை. மற்ற
மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.தமிழகத்தில்
திரையிடப்படவில்லை என கோவையைச்சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து
கொண்டுள்ளார். இந்தப்படத்திற்கு தொடர்ந்து தடை விதித்தால் இனி
தமிழ்ப்படங்களில் நடிக்க மாட் டேன் என்று விஜய் சொன்னதாக வேறு
இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இந்நிலையில்
நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’ தலைவா படத்திற்கு நிகழ்ந்த
பிரச்சனை நியாயமற்றது. ஒரு படத்திற்கு தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை
நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும்’’ என்று
குறிப்பிட்டிருந்தார்.தனுஷின்
இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சூடு கிளப்பியுள்ளது. இந்த பரபரப்பான
சூழ்நிலையில் தான் கூறிய கருத்து தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.அவர்,‘’தலைவா பட பிரச்சனையில் அரசுக்கு எதிராக நான் கருத்து எதுவும் சொல்லவில்லை.ஒரு நடிகனாக ரசிகனாக திரைப்படம் குறித்துதான் என கருத்தை தெரிவித்திருக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்
காணாமல் போன 87 கம்பெனிகள் ! பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி விட்டு Escape
புதுடில்லி:பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி விட்டு காணாமல் போன
கம்பெனிகள் மற்றும் அவற்றின் இயக்குனர் களை கண்டறிய, மத்திய அரசு நடவடிக்கை
எடுத்துள்ளது. இந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த, 10 கம்பெனிகளின்
இயக்குனர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பொதுமக்களிடம் இருந்து, முதலீடு களைப் பெற்று விட்டு, காணாமல் போகும் கம்பெனிகளின் எண்ணிக்கை, நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்த வகையில்,87 கம்பெனிகளும் அவற்றின் இயக்குனர்களும் காணாமல் போயுள்ளனர்.
இதுதொடர்பாக, மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பொதுமக்களிடம் இருந்து, முதலீடு களைப் பெற்று விட்டு, காணாமல் போகும் கம்பெனிகளின் எண்ணிக்கை, நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்த வகையில்,87 கம்பெனிகளும் அவற்றின் இயக்குனர்களும் காணாமல் போயுள்ளனர்.
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
வேட்பு மனுவில் சாதி பெயரை எழுத மறுத்த நடிகை திவ்யா!
பெங்களூர்: சாதி பெயரை வேட்பு மனுவில் எழுத திவ்யா மறுத்ததால் பரபரப்பு
ஏற்பட்டது.பள்ளி, கல்லூரி என சகல இடங்களிலும் விண்ணப்பங்களில் சாதி பெயரை குறிப்பிடுவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் வரும் 21ம் தேதி எம்பி இடைத்தேர்தல் நடக்கிறது. ‘வாரணம் ஆயிரம், ‘குத்து போன்ற படங்களில் நடித்த திவ்யா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் சாதி பெயர், தந்தை பெயர் எழுத இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இரண்டையும் திவ்யா குறிப்பிட மறுத்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி திவ்யா தரப்பில் கூறும் போது, ‘திவ்யா தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல்முறை என்றாலும் இதற்கு முன்பே துணிச்சலான முடிவுகள் எடுத்திருக்கிறார்.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழர்கள் வாழும் பகுதியில் சென்று தமிழில் பேசி பிரசாரம் செய்ததற்கு அப்பகுதியில் வாழ்ந்த கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல் தமிழில் தொடர்ந்து பேசி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது என்றனர்.
திருப்பதியை தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

திருப்பதி, காளஹஸ்தி,
சித்தூர், சத்தியவேடு மற்றும் கேரள மாநிலத்தில் இந்தியாவில் மொழி வாரியாக மாநிலம் பிரியும் போது இந்த பகுதிகள் விருப்பம் இன்றி ஆந்திரா-கேரளாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. இங்குள்ளவர்களில் அதிகம் பேர் தமிழ்மொழி பேசும், தமிழ் கலாச்சாரத்தை கொண்டவர்களாக உள்ளனர். எனவே மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் போது, ஆந்திரா, கேரளாவில் தமிழ்பேசும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
உள்ள இடுக்கி ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க கோரி தமிழர் நில மீட்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று நடைபெற்றது.
A R ரஹ்மானின் இசைப்பள்ளியை முகேஷ் அம்பானி என்கின்ற புகழ் பெற்ற இசை மேதை தொடங்கி வைத்தார் ?
இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரகுமான் சென்னை அரும்பாக்கத்தில் புதியஇசைக்கல்லூரி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த கல்லூரியில் இசை குறித்தான டிப்ளமோ, பட்டப்படிப்புகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. கே.எம். இசை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி எனும் பெயர் தாங்கிய இக்கல்லூரியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி இக்கல்லூரியை திறந்து வைத்தார். அவருடன் அவரது மனைவி நீடா அம்பானியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆசிரியர் குழுவில் உள்ள 4 பேர் பியானோ போன்ற இசைக் கருவிகளை இசைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
ஷாருக்கானின் அடாவடி ! வாடகை குழந்தையை சட்ட விரோதமாக ஸ்கான் செய்தார் ! பணமிருந்தால் எதுவும் செய்யலாமா ? சமூக ஆர்வலர் வர்ஷா கேள்வி
பெற்றுக் கொண்ட ஷாருக்கான், குழந்தை பிறப்பதற்கு முன்பே பாலின சோதனை நடத்தியதாக குற்றம்சாற்றப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.நடிகர் ஷாருக்கானுக்கு கடந்த மே 27 ஆம் தேதி வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் பாலினம் கண்டறியப்பட்டதாக பரபரப்பு செய்தி வெளியானது.இது தொடர்பாக, சமூக ஆர்வலர் வர்ஷா கேள்வி எழுப்பினார்.
A complaint has been filed in a local court seeking action against ac Shahrukh Khan on and his wife Gauri and others under the Pre-concestic Techniques (Prohibition of Sex Selection) Act in connection with a child born through surrogacy to the couple’
The complaint, filed by lawyer Varsha Deshpande yesterday, alleged that the child‘s gender had been determined before birth, thereby violating the sections of the Act. ‘
சவுதியில் பயங்கர தொத்து நோய் பலர் மரணம் ! ஒட்டகம் மூலமாக பரவியதாக சந்தேகம் !

LONDON — Scientists have found an intriguing clue that suggests camels might somehow be involved in infecting people in the Middle East with the mysterious MERS virus.
Since the virus was first identified last September, there have been 94 illnesses, including 46 deaths, from MERS, or Middle East respiratory syndrome, mostly in Saudi Arabia. Aside from several clusters where the virus has likely spread between people, experts have largely been stumped as to how patients got infected.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் வேகமாக பரவி
வரும் மர்ம நோய்க்கு சவுதி அரேபியா, ஜோர்டன், கர்த்தார், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, துனிசியா ஆகியா நாடுகளில் இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்துச் சென்ற 'சார்ஸ்' கிருமிக்கு இணையான 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் இந்த மர்ம நோய் வருவதாக கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த கிருமியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது என்ற நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது சுமார் 50 பேர் மர்ம நோயிற்கு ஆளாகியுள்ளனர்.
சிம்பு சொல்கிறார் ? சூரிய வெளிச்சம் உதயமாகும்! மழை எப்போதும் பெய்யாது !
அரசியல் வம்புக்கு மட்டும் போகாமலிருந்தார் சிம்பு. அதையும் விடுவானேன்,
அவரையும் இதோ இழுத்துவிட்டுட்டோம்ல.விஜய்யின் தலைவா வெளியாகாததற்கு தனுஷ், சிம்பு போன்றவர்கள் ட்வீட் செய்திருக்கிறார்கள். சிம்புவின் ட்வீட் கொஞ்சம் ஸ்பெஷல்.படத்துக்குப்
படம் அஜீத்துக்கு ஜே போடுறாரே என்று விஜய் ரசிகர்களுக்கு இவர்மீது
வருத்தம். தல-யை பேசுகிறவர் தளபதியை கண்டு கொள்ளவில்லையே என அவர்களுக்கு
ஆதங்கம். சிம்புவிடம் அப்படியான எந்த வித்தியாசமும் இல்லை போலிருக்கிறது.
தலைவா பற்றிய ட்வீட்டில் விஜய் அண்ணா என்று பாசத்தோடு தளபதியை
விளித்திருக்கிறார்.அதில்,
மழை எப்போதும் பெய்து கொண்டிருக்காது, சூரிய வெளிச்சம் உதயமாகும் என்று
குறிப்பிட்டுள்ளார். அதிமுக போய் திமுக வரும் என்பதை சூசகமாக சொல்கிறாரா
சிம்பு?நெருப்பை போட்டுட்டோம், புகையை கிளப்ப வேண்டியது உங்க பொறுப்பு.
நவாஸ் ஷெரிப்பை இந்தியாவுடன் மோதவைக்க பாக் ராணுவம் சதி ?
5 இந்திய வீரர்களை கொன்ற பரபரப்பு ஓய்வதற்குள் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் காஷ்மீர் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு
ஜம்மு:பாகிஸ்தான் ராணுவம், 5 இந்திய வீரர்களை சுட்டுக் கொன்ற பதற்றம்
தணிவதற்குள், காஷ்மீர் எல்லையில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.
நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய பாகிஸ்தான்
ராணுவத்தினருக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை
நடந்தது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம்
பூஞ்ச் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 6ம் தேதி பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் 20 பேர்
மறைந்திருந்து திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள்
கொல்லப்பட்டனர். ஒருவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் இந்தியாவில் பெரும்
பரபரப்பையும் எல்லையில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அரசின் கல்வி கட்டண விதி முறையை மீறி வசூல் வேட்டை அமோகம்
தனியார் மற்றும் சிறுபான்மையின ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில், அரசின்
வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றபடவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசின் கல்வி கட்டண குழு நிர்ணயித்த, ஆண்டு கல்விக் கட்டணத்தை கண்டு
கொள்ளாமல், மாணவர்களிடம் பெருந்தொகை நன்கொடையாக வசூலிக்கப்படுவதாகவும்
புகார் எழுந்துள்ளது
தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல்
கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட
தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும்
கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன.மாணவர் சேர்க்கையின்
போது, பி.எட்., படிப்புகளில் அரசு கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு
உதவி பெறும் கல்லூரிகளில், 90 சதவீத இடங்களும், அரசு உதவி
இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். பெறும் சிறுபான்மையினர்
கல்லூரிகளில், 50 சதவீதபரிந்துரையின்படி, இவை, இட ஒதுக்கீட்டு அடிப்படையில்
பூர்த்தி செய்யப்படும் என, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளில்
தெரிவித்துள்ளது.
தமிழக வருமான வரி : அ.தி.மு.க முதலிடம்! வருமான வரி கணக்கு மூலம் தகவல் வெளியீடு
இந்த கணக்கை பார்த்தாலே புத்தியுள்ளவர்களுக்கு உண்மை புரிஞ்சு போயிரும்.
உண்டியல் வச்சு துண்டேந்தி நிதி திரட்டும் திமுகவை விட அதிமுகவுக்கு இடண்டு
மடங்கு அதிக வருமானமாம். பெரும் தேசிய கட்சிகளில் ஒன்றான பாஜகவின்
வருமானத்தில் சுமார் 63% வருமானத்தை ஒரு மாநில கட்சி நாலாம் பேருக்கு
தெரியாமல் ஈட்டுவதேன்றால் நேர்மையாக அது சாத்தியமா.....? அதிலும் 56
சதவீதத்தை விண்ணப்பங்கள் விற்பனை மற்றும் வேட்பு மனு நிதியாக மட்டும்
பெறுகிறார்களாம். இந்த கட்சியில் மட்டும் இந்த அளவு பணம் கொடுத்து
சீட்டுப்பெற முயற்சிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொள்ளை அடித்தாலும்
தப்பித்து விடலாம் என்ற எண்ணம் தானே காரணம். இத்தனைக்கும் கடந்த 3
பாராளுமன்ற தேர்தல்களில் திமுகவின் வெற்றி விகிதம் அதிமுகை விட மிக அதிகம்.
சட்டமன்ற வெற்றியும் மாறி மாறித்தான் வருகிறது. திமுகவை ஊழல் கட்சியாக
உருவகப் படுத்துபவர்கள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்பது
இதிலிருந்து விளங்கும்.
</
சென்னை:அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானத்தில், தேசிய கட்சிகளான
காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகியன முதல் இரு இடங்களை வகிக்கின்றன. மாநில
கட்சிகளில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் முதல் இரு இடங்களை பகிர்ந்து
கொண்டுள்ளன.
சனி, 10 ஆகஸ்ட், 2013
விஜய் ரசிகர் தற்கொலை! தனது விளம்பரத்திற்காக ஆட்டு மந்தைகளை போஷிக்கும் சினிமாகாரன்
கோவை மாவட்டம் துடியலூர்
பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் தலைவா படம் பார்க்க முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட விக்ரம் என்கிற விஷ்ணு குமார் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு வயது 20.இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகாராம்! எந்த ஒரு விஜய்யின் படத்தையும் முதல் நாளே பார்த்து விடுவதுதான் இவரது வழக்கம் என்று கூறுகின்றனர்.கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார் விஷ்ணு குமார் ஆனால் படம் ரிலீஸ் ஆகவில்லை. அங்கிருந்து பாலக்காட்டிற்கு தலைவா படம் பார்க்கச் சென்றுள்ளார்.ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் இவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.மீண்டும் கோவை வந்து தியேட்டருக்குச் சென்று தலைவா ரிலீஸ் ஆகியுள்ளதா என்று பார்த்த்துள்ளார் இந்த முட்டாள் தனத்தை வளர்க்கும் கதாநாயகர்கள் எல்லாருமே பக்கா கிரிமினல்கள்
சேரன் மகள் காதல் : காவல்துறைக்கு கவுன்சிலிங் தேவைதான் காதலர்களுக்கு தேவை இல்ல
16
வயதுகூட நிரம்பாத சிறுமியை கதாநாயகியாக ஆடை குறைத்து, கிழவர்களுக்கு
ஜோடியாகவும் அதைவிட மோசமாக கவர்ச்சி உடையில் பாலியல் பொருளாகவும்
காட்டுகிறவர்கள் சொல்கிறார்கள்:
“அந்தப் பொண்ணுக்கு 20 வயது. அதுக்கு என்ன விவரம் தெரியும்? பெத்தவனுக்கு இல்லாத அக்கறையா?”
தன்னுடைய தந்தை மேல் காவல்துறையில்
புகார் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு பெண்ணிற்கு தைரியம் இருக்கும்போது,
தன் தந்தையை மீறி தன் காதலனை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்?
கல்யாணம் ஆகி இருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது.
தன் தந்தையை கிரிமினலாக குற்றம்சாட்டி
புகார் கொடுப்பதை விட, தன் மனதுக்கு பிடித்தவனை தந்தைக்கு தெரியாமல்
திருமணம் செய்து கொள்வது தவறில்லை. அதுவே தந்தைக்கு காட்டும்
மரியாதையும்கூட.
ஏன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை?
அதைத் தடுத்தது, தடுப்பது யார்? இந்த முடிச்சை அவிழ்த்தால், இதன்
குற்றவாளிகள் யார் என்று தெரியும்?
கிரானைட் முறைகேடு :பி.ஆர்.பி நிறுவனம் மீது ரூ1,061 கோடி இழப்பு வழக்கு!
மதுரை: பி.ஆர்.பி. நிறுவனம் முறைகேடாக கிரனைட் கற்களைவெட்டி
எடுத்ததில், அரசுக்கு ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளதாக மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் அந்த நிறுவனத்தின் மீது மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள கிரானைட்
முறைகேடு வழக்குகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கீழையூர், கீழவளவு மற்றும் பூரண்குளம் பகுதிகளில்,
பி.ஆர்.பி. நிறுவனம், முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த காரணத்தால்,
அரசுக்கு சுமார் ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த குற்றச்சாட்டின்
பேரில், பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.
நில ஊழல் : சோனியா மருமகனுக்கு சிக்கல் ! 200 கோடி மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 7. 5 கோடி
குர்கான்: அரியானா மாநிலத்தில் அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற சோனியா மருமகன் ராபர்ட் வதோரா போலியான ஆவணங்கள் மற்றும சட்ட மீறல்களை செய்ததாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி அசோக் கேம்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அரியானா மாநிலத்தில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் பூபிந்தர்சிங்ஹூடா முதல்வராக இருந்து வருகிறார். குர்கான் அருகே ஷிக்கோபூர் கிராமத்தில் 3. 5 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தது. இந்த நிலம் முதன்முதலில் டி.எல்.எப்., என்ற நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்கப்பட்டது. அதாவது சுமார் 200 கோடி மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 7. 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு அன்னா ஹசாரேயின் நெருங்கிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நிழல் உலக தாதா தாவுத்....நிஜ உலக தாதா ராபர்ட் வதோரா ..
பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்! உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலம் இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், உலகின் 3ம் தரநிலை
வீராங்கனை ரட்சனோக் இன்டானனை (தாய்லாந்து) சிந்து எதிர்கொண்டார். தொடக்கம்
முதலே ரட்சனோக் முன்னிலையில் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து சிந்து
போராடினார். ஆனால் அடுத்தடுத்து 5 புள்ளிகளை எடுத்து அசத்திய ரட்சனோக்,
முதல் செட்டை எளிதாக வென்றார். அதே வேகத்தில் 2-வது செட்டையும்
கைப்பற்றினார்.
35 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இப்போட்டியில், 10-21, 13-21 என்ற
செட்கணக்கில் சிந்து தோல்வியடைந்தார். இதனால் அவர் வெண்கலப் பதக்கம்
பெற்றார். ராமதாஸ் :ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி தமிழர் இழந்த பகுதிகளை மீட்கவேண்டும் ! 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.
ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராம தாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.;இது
குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’ஆந்திரத்தை இரண்டாக பிரித்து
தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள
நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும்
பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக் கை எழுந்துள்ளது. ஆந்திரத்தில்
உரிமை இழந்து வாடும் நமது தமிழ் சொந்தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற
வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்
உள்ளது.1956-ஆம்
ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும்
பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள்
துண்டாடப்பட்டு அருகில் உள்ள ஆந்திரா, கர்னாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன்
இணைக்கப்பட்டன. இதனால், தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்
பகுதிகளை இழந்தது. இதில் பாதி, அதாவது 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம்
ஆந்திராவிடம் இழந்தோம். தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின்
ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன.
மொழிவாரியாக
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே
ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்கள்
அதிகமாக வாழும் 300-க்கும் அதிகமான கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது
தமிழர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் ஆகும். இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள
தமிழர்களும், இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடியதன் பயனாக 1961-ஆம்
ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன்
இணைக்கப்பட்டன.
தலைவாவுக்கு ஜெயாவின் மிரட்டல் ! கலைஞர் கண்டனம் !
சென்னை: தலைவா திரைப்படம் வெளியிடுவதில் தொடரும் தடங்கலுக்கு திமுக
தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் என்ன
நடக்கிறது என்றே புரியவில்லை. அரசியல் வாதிகள் மேடைகளில் முதலமைச்சரைப்
பற்றி வாயைத் திறந்தாலே போதும், உடனடியாக அவர்கள் மீது அவதூறு வழக்கு
போடப்படுகிறது. பத்திரிகைகள் அந்தப் பேச்சினை வெளியிட்டால் அவர்கள் மீதும்
அவதுhறு வழக்கு. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கே பொதுக் கூட்டமோ,
நிகழ்ச்சிகளோ நடத்த முடியவில்லை.
ஒரு சில அரசியல் தலைவர்கள் ஒரு சில மாவட்டங்களில் உள்ளேயே நுழையக் கூடாது
என்று தடை விதிக்கப்படுகிறது. நெருக்கடி நிலை காலத்திலே கூட இப்படிப்பட்ட
நிலைமைகள் இல்லை. அந்த வரிசையிலே தான் "தலைவா" திரைப்படம் பல கோடி ரூபாய்ச்
செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய்
நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக
எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல
இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம்
வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா கொடைநாட்டில் இருக்கும் வரை தலைவா வராது ! ஜெயலலிதா ஏன் பயப்படுகிறார் ? புரியல்லையே ?

சென்னை: வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குப் பிறகு முதல்வரைச் சந்திக்க
விஜய்க்கு நேரம் ஒதுக்குவார் முதல்வர் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு
சுதந்திர தினத்தில் தலைவா படம் வெளியாகக் கூடும் என்கிறார்கள் திரையரங்கு
உரிமையாளர்கள்.
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாக இருந்த தலைவா ரிலீஸ் தேதி
குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டிக்கெட் புக்
செய்தவர்களுக்கான கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆக 12-ம் தேதிக்குப் பிறகு விஜய் & கோவுக்கு முதல்வர்
அப்பாயின்ட்மென்ட்..15ல் ரிலீஸ்?
தலைவா இன்று தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களோ
கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சென்று படம்
பார்க்கின்றனர்.
'தலைவா' படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்திருந்ததால்
வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. தலைமைச் செயலரிடம் ஜேம்ஸ் வசந்தன் புகார் செய்ய முடிவு
சென்னை: நில விற்பனை விவகாரத்தில் தன் மீது பொய் வழக்கு
போடப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து தலைமை செயலாளரிடம் புகார் செய்யப்
போவதாகவும் இசையமைப்பார் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்.
சுப்பிரமணியபுரம், ஈசன் உள்பட சில திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர் ஜேம்ஸ்
வசந்தன். இவர் மீது ராதா வேணு பிரசாத் (வயது 65) என்பவர் நீலாங்கரை
போலீசில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில், கொலை மிரட்டல், பெண்
வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் வசந்தன் கடந்த 4-ந் தேதி கைது
செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ஜேம்ஸ்வசந்தன், தன் மனைவி ஹேமா
மற்றும் சின்னத்திரை கலைஞர்களுடன் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு
பேட்டியளித்தார். பாக் பாடகி : இந்திய ராணுவத்தினரின் மரணத்தால் இதயம் நொறுங்கிவிட்டது
டெல்லி பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையில் நடத்திய தாக்குதலில் 5
இந்திய வீரர்கள் பலியானது பெரும் வருத்தம் தருகிறது. இந்த செயலுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலமான சுஃபி பாடகி சனம் மார்வி. டெல்லியில் இசைக்கச்சேரியில் பங்கேற்க வந்திருந்தார் சனம். ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் திடீர் தாக்குதலால் ஏற்பட்ட சூழலால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாகிஸ்தான் திரும்பினார். இந்தநிலையில், தனது நாட்டு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு சனம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது.. இந்த தாக்குதலில் தங்களது பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் வேதனையில் நானும் பங்கேற்கிறேன். ஒரு தாயாக அவர்களது வலியில் நானும் பங்கேற்கிறேன். என்னுடைய இதயம் வலிக்கிறது. இப்படிப்பட்ட சோகமான சூழலில் என்னால் பாட முடியாத நிலை
தூர்வாராததால் 4 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில்! தண்ணீர் வந்தும் கண்ணீரில் விவசாயிகள்
சென்னை, ஆறு, ஏரி, கால்வாய்கள் தூர்வாராத காரணத் தால் தண்ணீர் திறந்து விடப்பட்டும் உபரி நீர் கடலில் கலந்து வீணா கிறது.
மழை வெள்ள காலங்களில் காவிரியை, உபரி நீர் கால்வாயாக பயன்படுத்தும், கர்நாடக மாநிலத்தை போல, கொள்ளிடம் ஆற்றை, தமிழகம் பயன்படுத்து வது தொடர்கிறது. நேற்று ஒரே நாளில், கிட்டத்தட்ட நான்கு டி.எம்.சி., தண்ணீர், கொள்ளிடம் வழியாக, கடலில் கலந்து வீணாகி யுள்ளது. முறையான திட் டமிடல் இல்லாததே, இதற்கு முக்கிய காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




