செவ்வாய், 11 டிசம்பர், 2012

Karnataka சட்டசபை கலைப்பு? விரைவில் BJP முடிவு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

புதுடெல்லி: பா.ஜ.வில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக 13 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பல எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கடந்த 30ம் தேதி பா.ஜ.வில் இருந்து விலகினார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘கர்நாடக ஜனதா கட்சி’ என்ற புதிய கட்சியை நேற்று முறைப்படி தொடங்கினார். முன்னதாக நேற்று காலை தனது ஆதரவாளர்களுக்கு அவர் விருந்தளித்தார். அதில் 21 எம்எல்ஏக்கள், 4 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து 13 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இவர்களை தவிர 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் பா.ஜ.வுக்கு 118 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 71, மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 26, சுயேச்சைகள் 7 பேர் உள்ளனர்.http://www.tamilmurasu.org/index.asp

Bihar தாதாக்களுக்காக கடை விரிக்கப்பட்டிருக்கும் ஆயுத கடைகள்

பாட்னா: பீகாரில், குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகளும், தாதாக்களும், தங்களுக்கு தேவையான ஆயுதங்களை, வாடகைக்கு பெறும் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி, தங்களுக்கு தேவைப்படும் ஆயுதங்களை வாங்கி, குற்றச் செயல்களில் பயன்படுத்தி, பின் அவற்றை ஒப்படைக்கும்
வழக்கம், அங்கு உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, பாரம்பரியம், பண்பாடு நிறைந்ததாக விளங்கிய பீகார் மாநிலம், இப்போது, ரவுடிகள், தாதாக்கள், சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குவதை, சமீப கால சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஊர் ஊருக்கு ரவுடி கும்பல்களும், தாதாக்களும், சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.பீகார் மாநில ரவுடிகள் மற்றும் தாதாக்களுக்கு, பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவற்றை வாடகைக்கு விடும் சமூக விரோதிகளும், அங்கு பலர் உள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.சாதாரண, கள்ள துப்பாக்கியை, 3 மணி நேரத்திற்கு, 300 ரூபாய் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம்; நாள் வாடகை என்றால், 500 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த ஆயுதத்தின் உண்மை விலையை அவர்கள், டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.கள்ள துப்பாக்கியின் மார்க்கெட் விலை, 15 ஆயிரம் ரூபாய் என்றால், அதை வாடகைக்கு வாங்குபவர்கள், அந்த தொகையை, டெபாசிட்டாக செலுத்த வேண்டும். 9 எம்.எம்., பிஸ்டலை, ஒரு நாள் வாடகைக்கு வாங்க விரும்புபவர்கள், 1,000 முதல், 2,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும்; தோட்டாக்களுக்கு விலை தனி.ஆயுதங்களை வாடகைக்கு விடுவதற்கு பல கும்பல்கள் உள்ளன. புதிதாக வன்முறையில் இறங்க விரும்புபவர்களுக்கு, இது மிகவும் எளிதாகப் போய்விடுகிறது.http://www.dinamalar.com/

நடிகர் மன்சூர் அலிகானுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

கற்பழிப்பு புகார் கூறிய சினேகா சர்மா என்ற பெண் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூபாய் 50 லட்சம் மான நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை வடபழனியைச் சேர்ந்த சினேகா சர்மா என்ற பெண் கடந்த 1998ல் நடிகர் மன்சூர் அலிகான் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தார். இந்தப் புகார் குறித்து வடபழனி போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட செஷன்ஸ் கோர்ட் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து 2001ல் தீர்ப்பு கூறியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி 2007ல் கீழ்க்கோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். மன்சூர் அலிகான் விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து சினேகா சர்மாவிடம் ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கக் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி மதிவாணன் விசாரித்தார். மன்சூர் அலிகான் மீது வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்தது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்து. இதனால் மன்சூர் அலிகானின் பெருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே பொய் புகார் கூறிய சினேகா சர்மா, மன்சூர் அலிகானுக்கு ரூபாய் 50 லட்சம் மான நஷ்ட இழப்பு தொகையாக கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

காவிரியில் தண்ணீர் நிறுத்தம் : முதல்வர் ஷெட்டர் அறிவிப்பு

பெங்களூரு: ""கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு, காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது,'' என, கர்நாடக சட்டசபையில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தார்.
காவிரி பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இரு மாநில முதல்வர்களும், சந்தித்துப் பேசி, சுமூகத் தீர்வு காண வேண்டும் என, சமீபத்தில் யோசனை தெரிவித்தது. இதன்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் சந்தித்துப் பேசினர்; அதில், தீர்வு கிடைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என, இம்மாதம், முற்பகுதியில் உத்தரவிட்டது. அதன்படி, இம்மாதம், 6ம் தேதி இரவு, தமிழகத்திற்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதற்கு மறு நாள் நடந்த காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், "தமிழகத்திற்கு, டிசம்பர் மாதத்தில், 12 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.
Pugal - covai,இந்தியா

  மிழர்களின் வாழவைக் குலைக்கும் பா ஜ க ஒரு தேசியக் கட்சி என்று சொல்லவே வெட்கப்பட வேண்டும். சுயமானமுள்ள, இன உணர்வுள்ள, சக தமிழனிடம் அன்புள்ள ஒவ்வொரு நிஜத் தமிழனும் இந்த பா ஜ க வையும் அதன் தலைவர்களையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். கர்நாடக பா ஜ க இப்படி அட்டூழியம் செய்கிறதே, பிரதமர், சுப்ரீம் கோர்ட் போன்ற உயர்ந்த அலுவலர்களின் உத்தரவை மதிக்காத அராஜக அரசை ஒன்றும் செய்ய முடியாதோ?

திங்கள், 10 டிசம்பர், 2012

Walmart Tesco முதல் மாநிலம் தில்லி

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததையடுத்து பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ ஆகியவற்றை வரவேற்கும் முதலாவது மாநிலமாக தில்லி திகழவுள்ளது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் அன்னிய முதலீட்டை மேற்கொள்ள ஆர்வம் காட்டும் நிறுவனங்களை வரவேற்கும் வாய்ப்புகளை மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு தொடங்கியுள்ளது.
முதலாவதாக தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

மதுரையில் என்றைக்கும் நாம் தான்: நம்மை மீறி யாரும் நடை போட முடியாது: மு.க.அழகிரி பேச்சு

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனின் மகன் மருது பாண்டியன்-ஆர்த்தி திருமணம் 10.12.2012 திங்கள்கிழமை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா மகாலில் நடந்தது.
மத்திய மந்திரியும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது:-
நமக்கு துரோகம் செய்தவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் எங்கும் போகட்டும். நம்மை விட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நம்மால் பதவியும், பொருளாளதார நிலையில் உயர்ந்தவர்களும் நம்மை விட்டு சென்ற துரோகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை.
மதுரையில் என்றைக்கும் நாம் தான். நம்மை மீறி யாரும் நடை போட முடியாது. நாம் பெற்று கொடுக்காத பதவியா? பட்டமா? நாம் தேர்தலில் உழைத்து வெற்றி பெற்றவர்கள். இது அனைவருக்கும் தெரியும். அவர்களை இயற்கையே பார்த்து கொள்ளும். நம்மிடம் இருந்த போது ஜெயிக்க முடியாதவர்கள் நம்மை விட்டு சென்று ஜெயிக்க போகிறார்களா? அதை பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

எடியூரப்பா விருந்துக்கு 21 MLA க்கள்! வந்தனர். ஆதரவு பெருகுகிறது!

Viruvirupu
“வாயை பொத்திகிட்டு பதவி விலகுங்க”
கர்நாடகாவில் புதிய கட்சி தொடங்கிய எடியூரப்பாவுக்கு ஆதரவு பெருகுகிறது. பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவருக்கு 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய கட்சியாக, ‘கர்நாடக ஜனதா’ கட்சியைத் தொடங்கிய எடியூரப்பாவுக்கு சட்ட மேலவை உறுப்பினர் சிவராஜ் விருந்தளித்தார். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் 21 சட்டமன்ற உறுப்பினர்கள், 7 மேலவை உறுப்பினர்கள் மற்றும் 4 மக்களவை எம்.பி.க்கள் எடியூரப்பாவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
புதிய கட்சியின் தொடக்க விழாவிலும் பாரதிய ஜனதாவின் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கட்சி மேலிடத்திடம் பதவி விலகல் கடிதம் கொடுத்தவர்கள்.
ஆனால், முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அசைந்து கொடுப்பதாக இல்லை.
தாம் பதவி விலகப் போவதில்லை என கூறியுள்ள முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டசபையை கலைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். “பாரதிய ஜனதா அரசுக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது” என்கிறார் அவர்.
எடியூரப்பாவை ‘காகித புலி’ என விமர்சித்துள்ள கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பா, “எடியூரப்பா தமது கட்சி தொடக்க விழாவுக்கு 60 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று கூறினாரே.. அவர் கூறியபடி 60 எம்.எல்.ஏ.க்கள் ஏன் வரவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினி பிறந்த நாள் விழா இடம் மாற்றம்.. வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி மறுப்பு!

சென்னை:  ரஜினியின் 12.12.12 பிறந்த தின விழாவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அரசு அனுமதி மறுத்துவிட்டது.
எனவே இந்த விழாவை வரும் டிசம்பர் 13-ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துகிறார்கள் ரசிகர்கள்.
சென்னை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடக்கும் இந்த விழா முதலில் வள்ளுவர் கோட்டத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே மாற்று இடமாக ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தை மன்ற நிர்வாகிகள் கேட்டுப் பெற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக தொடர்ந்து நடந்து வருகின்றன. விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் போஸ்டர்கள் ஏற்கெனவே சென்னையை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. நாளை முதல் நாளிதழ்களிலும் வெளியாக உள்ளன.
இத்தகவல்களை சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகள் என் ராமதாஸ், ஆர் சூர்யா, கே ரவி, சினோரா அசோக் மற்றும் சைதை ரவி ஆகியோர் தெரிவித்தனர்.

அழகிரியின் சஸ்பென்ஸ்! வெயிட் பண்ணுங்க

விதை விதைத்திருக்கிறேன்.. வெயிட் பண்ணுங்க:

 Union Minister Mk Azhagiri Speaks On Traitors
Posted by:
: மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் துரோகிகளைப் பற்றி நீண்ட நேரம் பேசி மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தப் பேச்சு பற்றி கூறுகையில், விதை விதைத்திருக்கிறேன்.. பொறுத்திருந்து பாருங்கள்" என்றும் அழகிரி சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.
மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க. அழகிரி, தி.மு.க. ஆட்சியிப் பொறுப்பில் இருந்தபோது என்னிடம் பதவிகளை கேட்டு பெற்றவர்கள் பலர். ஆனால் அப்படி பதவி பெற்ற பல கட்சி நிர்வாகிகள் என்னை விட்டு விலகிவிட்டனர். இத்தகைய துரோகத்தை பற்றி கவலைப்படவில்லை. நம்மால் பதவியில் உட்கார்ந்தவர்கள் மாமனார், மச்சான் மூலம் கிடைத்த சொத்து என்று சொல்லிக் கொண்டு திரிகின்றனர். மதுரையில் என்றைக்கும் நாம் தான்.... நம்மை மீறி யாரும் நடை போட முடியாது என்றார்.http://tamil.oneindia.in/

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு முன் ஜாமீன்!

Viruvirupu
கிரானைட் முறைகேடு வழக்கில், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி உட்பட 10 பேருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.
கிரானைட் முறைகேட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, தலைமறைவாக இருந்து வந்தார்.
அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுக்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையிலும், மீண்டும் மீண்டும் முன் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.
துரை தயாநிதி உட்பட 10 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, துரைதயாநிதி உட்பட 10 பேருக்கும் முன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த 10 பேரும், அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலையத்தில் தினமும் வந்து கையெழுத்து இட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

ileana: கல்யாணத்துக்கு முன் சேர்ந்து வாழலாம்

சென்னை: கல்யாணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை என்றார் இலியானா. கேடி தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு தெலுங்கு சினிமாவுக்கு சென்றுவிட்டார். தமிழில் பட வாய்ப¢புகள் வந்தபோது ஏற்க மறுத்தார். இந்நிலையில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் அதிக சம்பளம் பேசப்பட்டதால் அதில் மட்டும் நடித்தார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். ஹாலிவுட் கலாசாரம் மெதுவாக பாலிவுட், கோலிவுட்டுக்கு பரவி உள்ளது. நட்பாக பழகும் ஹீரோ, ஹீரோயின்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும் பின்னர் பிரேக் அப் என்று சொல்லிவிட்டு பிரிந்துவிடுவதும் திரையுலகில் சாதாரணமாகிவிட்டது. இந்த பாணியில் பிரபுதேவா, நயன்தாரா ஜோடி சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிரேக் அப் ஆயினர். அதேபோல் சித்தார்த்ஸ்ருதி ஜோடியும் இந்த பாணியை பின்பற்றினார்கள். பாலிவுட்டில் சைப் அலிகான்கரீனா கபூர் ஜோடி 5 ஆண்டுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்தனர். சமீபத்தில்தான் இவர்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்டனர். மதராசபட்டினம் எமி ஜாக்சன், இந்தி நடிகர் பிரதீக்குடன் இதேபோல் வாழ்ந்து பின் பிரிந்தார்.

ஜாதிக் கலவரங்களின் சூத்ரதாரி யார்? ஏணிப் படிக்கட்டு ஜாதி அமைப்பு

ஜாதி என்பது ஏணிப் படிக்கட்டு மாதிரி - முதல் இடத்தில் மேலே நிற்பவன் ஒரு அசைப்பு அசைத்தால் அடுத்தடுத்து  ஒருவர் மீது ஒருவர் விழுவார்கள்.
அவர்களிடையே சண்டை மூளும் இந்த மூலத்தின் - சூத்திரதாரி யார் பார்ப்பன் சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
23.11.2012 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு.
ஒரு சொம்பை எடுத்துக்கொண்டு கருவறைக்குள் போகிறான்
கோவிலை கட்டி முடித்ததும், செட்டியார் வாள் நகருங்கோ, முதலியார்வாள் நகருங்கோ, நகருங்கோ நகருங்கோ  என்று சொல்லிக்கொண்டு, ஒரு சொம்பை எடுத்துக்கொண்டு கருவறைக்குள் போகிறான்.
ஒரு சின்ன மணியை ஆட்டிக்கொண்டு போய் விடுகிறானே, நம்மாள்களை பெரிய மணியை ஆட்டுவதற்காக அந்தக் கயிறை கொடுத்து விட்டான். சின்ன மணியை அவன் ஆட்டுகிறான்; இதில் கூட பாருங்க, கனமான மணியை அவன் ஆட்டுவதில்லை.

கொலை, கொள்ளை அரங்கேற வசதியாக சிறைகள்

தமிழக சிறைகளில் உள்ள குற்றவாளிகள், வெளியில் உள்ள ரவுடிகளுடன், சர்வ சாதாரணமாக மொபைலில் பேசி, கொலை, கொள்ளை திட்டங்களை வகுப்பதே,குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.தமிழகத்தில் சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொலை செய்யப்படுவது, தொடர் கதையாக உள்ளது. இக்கொலைகள் குறித்து விசாரித்த, காவல் துறையினருக்கு அதிர்ச்சி கரமான தகவல்கள் கிடைத்துள்ளன. பெரும்பாலானக் கொலைகளில், சிறையில் உள்ள குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதும், அவர்கள் கைபேசி மூலம், வெளியில் உள்ள ரவுடிகளை, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுத்துவதும் தெரிய வந்துள்ளது.
சிறையில் கொலை திட்டம்:  http://www.dinamalar.com/

90 சதவித இந்தியர்கள் முட்டாள்கள்' : நீதிபதி கட்ஜு விமர்சனம்

துடில்லி: ""நாட்டின், 90 சதவீத இந்தியர்கள், முட்டாள்கள். மதத்தின் பெயரால் அவர்களை, சமூக விரோத சக்திகள் எளிதில் ஏமாற்றி விடுகின்றன,"" என, பிரஸ் கவுன்சில் தலைவர், நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த, கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற, நீதிபதி கட்ஜு, 66, கூறியதாவது:
நாட்டில் உள்ள மக்களில், 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று, உறுதியாக சொல்வேன்; அவர்கள் தலையில் மூளை கிடையாது; அவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம்.வெறும், 2,000 ரூபாய் இருந்தால் போதும், டில்லியில் பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்திவிடலாம்; தவறாக சைகை காண்பிப்பதன் மூலமும், பிற மதத்தவரின் வழிபாட்டு இடங்களை, அவமரியாதை செய்வதன் மூலமும், எளிதில் மத கலவரத்தை ஏற்படுத்தி விடலாம்.
அந்தத் தகவல் தெரிந்ததும், முட்டாள் ஜனங்கள், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வர். இந்தச் செயலுக்கு பின்னால், சில சமூக விரோத சக்திகள் இருக்கிறது என்பதை, அவர் கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.http://www.dinamalar.com/
பின்தங்கி விட்டோம்:  ஜாதியை மதத்தை வைத்து அரசியல் நடத்துவதை ஆங்கிலேயன் சொல்லி தரவில்லை, அதை சுயமாக இந்தியாவில் உதித்த யுக்தி. முகமதியர்களை ஒதுக்கி சில ஹிந்துகளின் ஜாதிகளுக்கு மட்டும் பதவி உயர்வு கொடுத்ததை திரு அப்பாஸ் அலி கான் என்னும் சட்டமன்ற உறுபினர் 1920 ஆண்டு சட்ட சபையில் இவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை பற்றி மிக தெளிவாக சொன்னார். இதில் ஆங்கிலேயர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை.

ரயில் விபத்துக்கள்: இந்தாண்டு 16 ஆயிரம் பலி- ரயில்வே அமைச்சகம் தகவல்

புதுடில்லி: இந்தாண்டு ரயில் விபத்துக்களில் 16 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக திகழும் ரயில்வே துறைக்கென பார்லிமென்டில் ஆண்டு தோறும் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பல்வேறு ரயில்வே வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் , ஆண்டு தோறும் ரயில் விபத்துக்களால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இது தொடர்பாக ரயில் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது; http://www.dinamalar.com/

Lion Air -victims உடற்பாகங்கள் தோண்டியெடுப்பு…

14 வருடங்களுக்கு முன்  புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் ‘லயன் எயார்’ விமானத்தில் பயணித்தவர்களின் உடற்பாகங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை பூநகரி கௌதாமுனை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. (ரொமேஷ் மதுசங்க)
www.dailymirror.lk/caption-story/24118-bodies-of-lion-air-victims-being-exhumed.html"> Bodies of Lion Air victims being exhumed

The authorities this morning started to exhume the bodies of the victims of the Lion Air passenger plane that was shot down by the LTTE in 1998, at the Iranathivu beach. Police said that after the incident, the bodies were believed to have been buried in the Iranathivu beach by the LTTE. Pix by Romesh Madushanka-Vavuniya

ஒரு மனநோயாளியின் பிறந்த நாள் பரிசு

செட்டிகுளம் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த 70 ஆண்டின் பகுதியில் அது நடந்தது. ஒரு நாள் பிரபாகரன் மைக்கல் அத்துடன் இந்த கதை சொன்ன மூன்றாவது மனிதரும் இருந்தார். அன்றய தினம் மைக்கலின் பிறந்த நாள் ‘தம்பி, எனது பிறந்த நாள் இன்று. எனது நண்பர் அழைத்திருக்கிறார். நான் போய்விட்டு ஆறுமணிக்கு முன்பு வந்து விடுவேன்’ என மைக்கேல் பிரபாகரனிடம் சொன்னார் ‘ஆறுமணிக்கு வந்து விடு. உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.’ என பிரபாகரன் விடைகொடுத்தார் மாலை ஆறுமணியாகிவிட்டது மைக்கலைக் காணவில்லை . ‘அண்ண , இவன் வரவில்லை. இருண்டுவிட்டது’ ‘அவன்ர பிறந்த நாள். கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறான். வந்து விடுவான் என்றார் அந்த மூன்றாவது மனிதர்’ எட்டுமணி. பிரபாகரன் நிலை கொள்ளமல் சுற்றியபடி குட்டி போட்ட நாய் திரிந்தார் ஓன்பது மணியாகியும் மைக்கேலைக் காணவில்லை. காட்டில் இருள் கவிந்து இப்பொழுது எல்லோரும் கவலைப்படத் தொடங்கினர்கள் ஓன்பது அரையாகிய போது மைக்கேல் இருட்டை ஊடுறுத்து வந்த போது புதிய சட்டை பாண்டு எல்லாம் போட்டிருந்தார். நேரடியாக மூன்றாவது நபரிடம் வந்து ‘அண்ணை எப்படி உடுப்பு இருக்கு’ அந்த நேரத்தில் பிரபாகரன் அங்கு இருக்கவில்லை< ‘நல்லா மாப்பிளை போல் இருக்கு’ ‘அண்ணை தலைவர் போல இருக்கெண்டு சொல்லுங்கோ’ ‘அழகாகதான் இருக்கு’ ‘ஏன்னண்ணை தலைவர் போல இருக்கென்று சொல்ல தயங்கிறீர்கள். ‘ஓமடா சரி’ அந்தநேரத்தில் வெளியே இருந்த பிரபாகரன் வந்து மைக்கேலிடம் ‘ஏன் தாமதம்?’ முகத்தில் இருந்த கோபம் தெரியவில்லை. இருளாக இருந்தபடியால் ‘அவங்கள் இருந்துவிட்டு போக சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்’ சரி ஒருக்கா பின்னாலே வா பிரபாகரனை தொடர்ந்து சென்று சிறிது நேரத்தில் இருளில் மூன்று துப்பாக்கி சத்தம் கேட்டது. மூன்றாவது மனிதர் ஓடி சென்று பார்த்தபோது தலையில் இரத்தம் வடிந்தபடி மைககேல இறந்து கிடந்தார். ‘ஏன் தம்பி அவனை கொண்டாய் அதுகும் அவனது பிறந்தநாள்—– ‘அவன் சொன்னதை நான் கேட்டேன். அவன் தலைவனாக ஆசைப்படுகிறன். இதை விட்டு வைத்தால் எனக்கு மடடுமல்ல உங்களுக்கும் பிரச்சனை வரும். இவற்றை ஆரம்பத்திலே கிள்ளி எறியவேண்டும்.’ இந்த கதையை கேட்டதும் மூச்சை இழுத்து என்னை ஆசுவசப்படுத்திக்கொண்டேன். இப்படியான ஒரு மனிதனை தலைவனாக ஏற்று இந்த சமூகம் அவனது புகழ்பாடியதே?. எத்தனை படித்தவர்கள் அறிவாளிகள் இந்த மனிதரின் பின் சென்றார்கள்..http://www.ilankainet.com/2012/12/3_9.html

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

கிடைத்ததைச் சுருட்டுபவன் நானல்ல... டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி

kamal blasting statement on viswaroopam dth release சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் காட்டமான 3 பக்க அறிக்கை
புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.
ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.
ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.http://tamil.oneindia.in/

Walmart இந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ரூ. 125 கோடி செல

வாஷிங்டன்: இந்தியாவில் தனது சூப்பர் மார்க்கெட்டை திறக்க ஆதரவளிக்கக்கோரி, இதுவரை அமெரிக்க எம்.பி.,க்களுக்கு மட்டும் சுமார் ரூ. 125 கோடி (25 மில்லியன் டாலர்) செலவழித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.
இந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சில்லரை வணிக ஜாம்பவான் என கருதப்படும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்ணை மூடிக்கொண்டு அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் முதலில் அம்பானி போன்ற உள்ளூர் முதலாளிகளால் சாதாரண இந்தியனுக்கு என்ன நன்மை விளைந்தது என்று சொல்வார்களா? http://www.dinamalar.com/

கமலஹாசன் பேரன் முறையான நந்தனை ஹாலிவுட் டில் அறிமுகபடுத்துகிறார்

சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குனர் மணிரத்னத்தின் மகனை வைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளாராம். கமலஹாசனின் அண்ணன் மகளான சுகாசினி மணிரத்னத்தின் மனைவி என்பது அறிந்ததே இன்னும் அறியாவிட்டால் இப்போது அறிந்து கொள்ளுங்கள் இனி தமிழகத்தின் எல்லா மீடிஆக்களும் நந்தன் தான் அடுத்த கமல் என்று ஒப்பாரி வைக்கக்கூடும்  எல்லாம் நமது பாக்கியம்
கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பாரி ஆஸ்பர்னுடன் சேர்ந்து கமல் பணியாற்றவிருக்கிறார். உலக தரத்தில் படம் எடுக்கும் உலக நாயகனை ஹாலிவுட் படத்தில் பார்க்க ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.

நாஞ்சில் சம்பத்: வைகோ எங்களையெல்லாம் நாயைப் போல நடத்தினார்...

சென்னை: வைகோ ஒரு சந்தேகப் பிராணி. தன்னுடைய நிழலைக்கூட அவர் சந்தேகிப்பார். எங்களையெல்லாம் ஒரு நாயைப் போலத்தான் நடத்தினார் என்று கூறியுள்ளார் மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக மாறியுள்ள நாஞ்சில் சம்பத்.
மதிமுகவிலிருந்து விலகியது ஏன், வைகோவுடன் என்ன ஊடல், அதிமுகவில் கிடைத்தது என்ன என்பது குறித்து நக்கீரனுக்கு பேட்டி கொடுத்துள்ளார் சம்பத். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது...
 கழுகால் விரட்டப்பட்ட புறா சிபி சக்கரவர்த்தியின் மடியில் அடைக்கலம் நாடியது போல் அதிமுகவில் அடைக்கலம் நாடியிருக்கிறேன். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது மாதிரி உணர்கிறேன். பள்ளத்தில் இருந்து சமவெளிக்கு வந்தது மாதிரி இருக்கிறது. மிகுந்த கனிவோடும் பரிவோடும் என்னிடம் உரையாடிய அம்மா, எனது குடும்பத்து நிலை குறித்து பரிவோடு விசாரித்தார்கள்.  
 என்மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என சொல்லி என்மீது திணிக்கப்பட்ட விலங்குகள் நொறுங்கி விழுந்த பரவசத்திற்குள்ளாக்கினார்கள். எமக்கு வாய்த்த அடிமைகள் நல்ல உழைப்பாளிகள் http://tamil.oneindia.in/

எதியூரப்பா Launch கர்நாடக ஜனதா கட்சி' BJP MLA க்கள் பங்கேற்பு!

Yeddyurappa formally launches Karnataka Janata Party, huge show of strength in HaveriHaveri: Former Karnataka Chief Minister BS Yeddyurappa formally launched the newly minted Karnataka Janata Party (KJP) and took over as its President at a massive rally in Haveri in north Karnataka today. After months of threats, behind the scene bargaining and public displays of strong emotion, Mr Yeddyurappa had finally quit the BJP at the end of November.
In a sign of potential trouble for the BJP government in the state, at least 10 ruling party MLAs attended the rally ignoring the party warnings to legislators and other leaders to keep away from it. Prior to the launch, Mr Yeddyurappa also hosted a breakfast meeting which was attended by at least 21 BJP MLAs, seven MLCs and four Lok Sabha MPs. Actress Pooja Gandhi, who was with the JD(S), was also there to join the KJP.
Today's event can be billed as a show of strength. Thousands of people turned up in Haveri for Mr Yeddyurappa's rally.
ஹவேரி: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எதியூரப்பா முறைப்படி தமது புதிய கட்சியான கர்நாடக ஜனதா கட்சி என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.
கர்நாடகாவின் ஹாவேரியில் இன்று பிற்பகல் நடைபெற்ற பிரம்மாண்டமான மாநாட்டில் பிரம்மாண்ட பேரணியுடன் தமது கட்சியை முறைப்படி தொடங்கினார் எதியூரப்பா. எதியூரப்பாவின் புதிய அரசியல் பயணத்தில் பாஜகவின் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.முன்னதாக எதியூரப்பா கொடுத்த காலை விருந்தில் 21 பாஜக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும் 7 எம்.எல்.சிகளும் 4 லோக்சபா எம்.பிக்களும் பங்கேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சி மேலிடத்தின் எச்சரிக்கைகளையும் மீறி எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் எதியூரப்பாவின் பின்னால் அணி திரள்வதால் பாஜக தலைவர்கள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

Andhra ஆசிரியரின் செக்ஸ் தொல்லையால் 15 வயது மாணவி தற்கொலை

ஆசிரியரின் செக்ஸ் தொல்லையால் மாணவி தற்கொலை 15 வயது மாணவி சந்தியா (15). ஆந்திராவின் கரீம் நகர் மாவட்டம் கொல்லகூடம் கிராமத்தைச் சேர்ந்த இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியின் இந்தி ஆசிரியராக இருக்கும் லட்சுமண சுவாமி மாணவி சந்தியாவுக்கு அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். வெளியில் சொன்னால் தனது மானம் போய் விடும் என்பதால் சந்தியாவும் பொறுமையாக இருந்தார்.
திருப்பதியில் வருகிற 28-ந்தேதி உலக தெலுங்கு மாநாடு நடக்கிறது. இதில் மாணவ-மாணவிகளின் கலாச்சார நடனம் இடம் பெறுகிறது. இதன் ஒத்திகை நிகழ்ச்சிகாக சந்தியா புடவை கட்டி வந்தார். அவளை பார்த்த ஆசிரியர் லட்சுமணசாமி ‘புடவையில் நீ நல்லா இருக்கிறாய்' என்று கூறி தொடக் கூடாத இடங்களில் எல்லாம் தொட்டு தொட்டு பேசினார்.
அதோடு விடவில்லை அதன்பிறகும் ‘‘நீ இன்னொரு முறை புடவை கட்டி வா... நீ அழகாக இருப்பதை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆசிரியரின் தொல்லை குறித்து சந்தியா தனது அக்காளிடம் கூறி அழுதார். அவர் பெற்றோரிடம் கூற அவர்கள் ஆவேசப்பட்டனர்.

சூரிய ஒளி மின்சாரத்தை நேரடியாக வீடுகளில்

மின்சாரப் பிரச்னை + சோலார் தமிழகத்தில் சென்னைக்கு வெளியே உள்ள மக்கள் மின்சாரம் இன்றித் தவிக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட/படாத மின்வெட்டு 10 முதல் 18 மணி நேரம் கூட உள்ளது. சென்னையில் இருக்கும் என் போன்ற பலருக்கு தினசரி 2 மணி நேர மின்வெட்டு + மாதம் ஒரு நாள் 8 மணி நேர மின்வெட்டு. இதை இன்வெர்ட்டர் கொண்டு எளிதாகச் சமாளித்துவிடலாம்.

திடீர் என இவ்வளவு மின்வெட்டு எங்கிருந்து வந்தது என்பது பலருக்கும் புரியவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மக்கள்மீது புகுத்தவே இந்தப் பிரச்னை மக்கள்மீது சுமத்தப்படுகிறது என்று ஒரு கான்ஸ்பிரசி தியரியும் மக்களிடையே பரவியுள்ளது. ஆனால் இதற்காகப் போய் ஒரு மாநிலத்தின் பெருமளவு மக்களை ஜெயலலிதா துன்புறுத்துவார் என்று நான் நினைக்கவில்லை.

தனியார் துறைமீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், இந்தப் பிரச்னைக்கான முழுமுதற் காரணமே, மின் உற்பத்தியைத் தனியார்மயமாக்கியதுதான் என்பார்கள். இதை நான் ஏற்கவில்லை. http://www.badriseshadri.in/

மார்ச் 31க்குள் அனைத்து பள்ளிகளிலும் முழு கழிவறை வசதிகள் வேண்டும்

 அட கொய்யால இன்னுமா கழிவறைகள் இல்லை கல்வி துறைதான்  பணப்புழக்கம் அதிகம் உள்ள துறையாச்சே ?
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் கழிவறை வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கழிவறை வசதி மிக மோசமாக இருப்பதாகவும், அதை சீர்செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறை கட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கழிவறை வசதிகள் குறித்து நூறு சதவீதம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறைகளில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பவை, தண்ணீர் தொட்டி இல்லாதவை, தண்ணீர் வசதி இல்லாதவை குறித்து உடனடியாக கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறை வசதி இருக்கிறதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும். இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிவறை கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் முழு கழிவறை வசதிகள் இருக்க வேண்டும். - இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.