வியாழன், 12 செப்டம்பர், 2024

மனைவியை கழற்றி விட்ட ஜெயம் ரவி, அடுக்கடுக்கான புகார்களை குவித்த ஆர்த்தி!! பக்கா பிளான் போட்டு ...

tamil.asianetnews.com :   ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு குறித்து மௌனம் கலைத்துள்ள ஆர்த்தி இன்று வெளியிட்ட  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை பார்க்கும் போது...
ஜெயம் ரவி பிளான் பண்ணி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழில் கடந்த 2003-ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கிய 'ஜெயம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி.
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருடைய அடையாளமாக ஜெயம் என்கிற சொல் மாறியதை தொடர்ந்து 'ஜெயம் ரவி' என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

புதன், 11 செப்டம்பர், 2024

Donald டிரம்ப் கமலா Haris நேரடி debate

 nakkheeran.in :  நானா? நீயா?- நேரடி விவாதத்தில் மோதிய அதிபர் வேட்பாளர்கள் அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாதத்தில் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகியோர் தங்களது கருத்துக்களை நேருக்கு நேர் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடக்கும் நேரடி விவாதத்தில் ட்ரம்ப் பேசுகையில், ''கமலா அதிபர் ஆனால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு விடும். ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேல் நாடே இல்லாமல் போகும். பைடனின் தவறான கொள்கைகளை கமலாவும் பின்பற்றுகிறார்.

மது போதையில் மாணவன் மீது தாக்குதல்: பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு

 மாலை மலர் :  பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கி உள்ளனர். கால்பந்து விளையாடிவிட்டு உணவருந்த சென்ற மாணவனை பாடகர் மனோவின் மகன்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அவர்கள் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் 2 மகன்களும் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதானிக்காக வங்கிகளை திவாலாக்கிய மோடி!

aramonline.in  :    பார்க்கும் நிறுவனங்களை எல்லாம் அதானியின் உடமையாக்குவதற்கும், அவர் கேட்கும் கடன் தள்ளுபடிகளை எல்லாம் வாரி வழங்கி, வங்கிகளை திவாலாக்குவதற்கும் என்றே உருவாக்கப்பட்டது தானா இந்த ஆட்சி..? மக்களின் சேமிப்பை எல்லாம் மன்னவரே திருடனுக்கு தாரை வார்ப்பதா?
சேமித்த பணத்தை சுருட்டியவர்களுக்கும், கடன் வாங்கி கம்பி நீட்டியவர்களுக்கும் இந்த நாட்டில் பஞ்சமில்லை என்றாலும், அரசாங்கமே ஒரு சிலர் கொள்ளையடிக்க உதவ முடியுமா? என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்!

  tamil.news18.com  : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்தில் பேசிய ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் மார்க்சிய சிந்தனையாளராக உள்ளார். அமெரிக்க பொருளாதாரத்தை கமலா ஹாரிஸ் சீர்குலைத்துவிட்டார்.
கடந்த 52 ஆண்டுகளாகவே அமெரிக்காவில் கருக்கலைப்பு பிரச்சினையாக உள்ளது. பைடன் ஆட்சியில் 9 மாதங்களில் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றனர்.” என்று குற்றம் சாட்டினார்.
அதேபோல் கமலா ஹாரிஸ் பேசுகையில், “நடுத்தர மக்களுக்கான பொருளாதார மேம்பாடுதான் எனது லட்சியம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம்” என்று பேசியுள்ளார்.

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்!

மதுரையில் உதயநிதி- தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகள்..என்னாச்சு?

 tamil.oneindia.com  - Rajkumar R  : மதுரை : மதுரையில் நேற்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தியதன் எதிரொலியாக, 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் தொய்வு காணப்பட்டதால் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், சமையலர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு சென்றார்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

ஓட்டல்களில் உணவு பார்சல் . உணவு சூடு ஆறாமல் இருக்க சில வழிமுறைகள்

May be an image of 1 person, dim sum, tofu and text

வெங்கடேஷ் ஆறுமுகம் :  பார்சல் என்னும் கலை
ஓட்டல்களில் உணவுகளை பார்சல் செய்ய, உணவு சூடு ஆறாமல் இருக்க இன்றைக்கு நவீன பேக்கிங் மெட்டீரியல்கள் ஏராளமாக வந்து விட்டன.
இருந்தாலும் அன்றைக்கு எல்லா ஓட்டல்களிலும் பார்சல் என்றால் நியூஸ் பேப்பரும், வாழையிலையும் தான். அந்த பார்சல் கட்டுவதும் ஒரு தனிக்கலை என்பதே உண்மை.
“இட்லிக்கு வலிக்காம கட்டுப்பா” என என் தந்தை அடிக்கடி சொல்வார்.
பார்சலில் முதலில் இட்லியிலிருந்து வருவோம். இட்லி ஒரு பார்சலுக்கு 2 அதிகபட்சம் 4 இருப்பதே சரியான பார்சல் முறை ஆகும்.
10 இட்லி பார்சல் கேட்டாலும் அப்பா இரண்டு 4 இட்லிகள் பொட்டலங்களும் ஒரு 2இட்லிகள் பொட்டலமும் தான் தருவார்!

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! -

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

tamil.news18.com  - Malaiarasu M  : தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணுவை பேசச் சொன்னது யார்? சிக்கிய கல்வி அதிகாரி வாக்குமூலம்!

மின்னம்பலம் -Selvam :  மகாவிஷ்ணு விவகாரம் பற்றி தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் விசாரணை நடத்திய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளி ஆகியவற்றில் சர்ச்சையாக பேசி தற்போது சிறையில் இருக்கிறார் பரம்பொருள் ஃபவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு.
தற்போது பள்ளிக்கல்வித் துறைக்குள் ஆசிரியர்கள் மற்றும் மாண்வர்களிடையே முக்கியமான பேசுபொருள், ‘அந்த மகாவிஷ்ணுவை பள்ளிக்கு அழைத்து வந்தது யார்?  அவர் பேச அனுமதி கொடுத்தது யார்?  பரிந்துரைத்தது யார்?’ என்பதுதான். ெப்டம்பர்  6 ஆம் தேதி சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் பள்ளி வாசலில் போராட்டம் நடத்தினார்கள்.

திங்கள், 9 செப்டம்பர், 2024

சாரு நிவேதா : டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…

 charuonline.com  : என் வாழ்வில் இரண்டே இரண்டு அதிர்ஷ்டக்காரர்களைத்தான் பார்த்திருக்கிறேன்.  அந்தக் காலத்து மனிதர்கள் புதையல் என்ற விஷயத்தை நம்பினார்கள்.  
கோடியில் ஒருத்தருக்குப் புதையலும் கிடைத்தது.  
அதற்குப் பிறகு லாட்டரிச் சீட்டு.  இது அல்லாமல் நடக்கும் அதிர்ஷ்டக் கதைகளும் உண்டு.  
நம் அனைவருக்குமே தெரிந்த கதை ஒரு கன்னடத்து பஸ் கண்டக்டர் இந்தியா முழுவதும் பிரபலமான சூப்பர் ஸ்டாராக மாறியது.  
ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரின் கதை அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல.  அவரிடம் அதீதமான திறமையும் இருந்தது.  
கோடீஸ்வரனான பிறகும் அவர் கண்டக்டராக இருந்தபோது அடித்த மக்டவல் விஸ்கியையே அடித்தார் என்றாலும், மற்ற பொதுவான விஷயங்களில் அவர் ஒரு கோடீஸ்வரரைப் போலவே நடந்து கொண்டார்.   திடீர்ப் பணக்காரர்களுக்கு இது ஒரு தலையாய பிரச்சினை.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  இரவு ஏழு மணிக்கு அழைத்தார் அந்த இயக்குனர்.  தமிழ் சினிமாவின் நம்பர் ஒன்.  கமல், ரஜினி இருவரையும் வாடா போடா என்று அழைக்கக் கூடியவர்.  ரெமி மார்ட்டினா, விஸ்கியா என்று கேட்டார். 

வவுனியாவில் 14 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; முன்னாள் போராளிக்கு எதிராக முறைப்பாடு

May be an image of 1 person, beard and smiling

ilakkiyainfo.com : வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்து 6 மாதம் ஆன நிலையில், முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (07) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முன்னாள் போராளியும், போராளிகள் நலன்சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான இளைஞர் துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

மத்திய பிரதேசத்தில் நடு ரோட்டில் பாலியல் வன்புணர்வு! தடுக்கமால் வீடியோ எடுத்த மக்கள்

நடு ரோட்டில் இளம்பெண் வன்கொடுமை... தடுப்பதற்கு பதிலாக வீடியோ எடுத்த கொடூரர்கள்... பாஜக மாநிலத்தில் அவலம்!

கலைஞர் செய்திகள -KL Reshma  :  பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது. குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதில் முதன்மையாக திகழ்கிறது.
இந்த சூழலில் தற்போது பாஜக ஆளும் ம.பியில் பெண் ஒருவர் நடு ரோட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முற்போக்காளர்களுக்கு அவங்க கேட்கும் வடைகள் சுட முடியாது

May be an image of 5 people and people studying

Loganayaki Lona  :  முற்போக்காளர் பள்ளிக்குள் வர வேண்டும் வர வேண்டும்..நீங்கள் வராமல் அரசைக்குறை சொல்லாதீர்கள் என திமுகவினர் சிலர் முற்போக்காளர்களை  சாடுகின்றனர்.
இந்தப்பள்ளி நான் பணி செய்த கிராமத்துக்கு அருகில் உள்ள அரசுப்பள்ளி.
ஆனால் என்னோட பணி இட எல்லைக்குள் இல்லை.அருகில் உள்ள பள்ளி தான்.அந்தகிராம மாணவிகள் பேருந்தில் தினமும் கவனித்ததால்,பேசியதால் தங்கள் ஊர் மாணவர்கள் ஹார்ன்ஸ்,கூல்லிப் பயன்படுத்துவதாக கூறினர்.
இது குறித்து துறை அதிகாரிக்கு அறிவித்தோம்.அவர்களது நடவடிக்கை எந்த அளவு முழுமை பெற்றது என்பது தெரியாது.
மீண்டும் அதே பள்ளி குறித்து புகார்கள் வந்தன.அந்த தலைமை ஆசிரியரிடம் பள்ளி இடைநின்ற எங்கள் பகுதி மாணவர்களை சேர்ப்பது குறித்து ஏற்கனவே சிலமுறை  பேசியிருக்கிறேன்.

சனி, 7 செப்டம்பர், 2024

ஜேவிபியினர் மீண்டும் வெறுப்பு அரசியலை செய்கிறார்களா?

May be an image of 5 people, street and text

 jaffnamuslim.com :  திசைகாட்டியினர் வெறுப்புணர்வை ஏற்படுத்த முயற்சி, இவ்வாறு அரசியல் செய்ய முடியாது
நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையின் வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழிற் துறையினர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்த போதிலும், இலங்கை செய்துள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை இரத்துச் செய்வதகாக  அவரின் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாமல்  ஏற்றுமதிப் பொருளாதாரத்தை எவ்வாறு  உருவாக்க முடியும் என கேள்வி எழுப்பினார்?

பர்மா மலேயா இலங்கை நாடுகளில் செயல்பட்ட திராவிட இயக்கங்களின் வரலாறு


May be an image of map and text
May be an image of text
May be an image of text
May be an image of 2 people

ராதா மனோகர் : திராவிட கருத்தியலின் முக்கிய முழக்கம் சுயமரியாதை கோட்பாடுதான்
சுயமரியாதை கோட்ப்பாடு உருவாகி வளர்ந்த தமிழ்நாட்டில் இன்று சர்வ சாதாரணமாக  சங்கிகள் பல போர்வைகளில்  மேடைகள் தோறும் இந்துத்துவா கருத்துக்களை விதைத்து கொண்டு வருகிறார்கள்
உதட்டில் மட்டும் திராவிட கருத்துக்களை பேசும் பல அரசியல்வாதிகள் அந்த கூட்டங்களின் முன் வரிசைகளில் அமர்ந்திருக்கிறார்களே?
தொலைக்காட்சிகளில் தெரியும்  அந்த காட்சிகள் சங்கிகளுக்கு ஒரு அங்கீகாரம் தருகிறதே ?
இது எங்கே கொண்டு போய் விடும் என்பதை பட்டுத்தான் தெரியவேண்டும் என்றால்
பெரியார் அண்ணா கலைஞர் என்ற பெயர்களை ஏன் உச்சரிக்க வேண்டும்?
இன்றைய தமிழகத்திற்கு குறைந்த பட்சம் திராவிட வரலாறு கூறப்படவேண்டும்

இலங்கை மீது இந்திய அரசின் தொடர் கண்ணாமூச்சி விளையாட்டு

May be an image of 1 person and text
May be an image of 4 people

ராதா மனோகர் :  இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்காக கூட்டணிகளை ஒழுங்கமைக்கும் பணியில் இந்திய ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது!
குறிப்பாக வடக்கு மற்றும் மலையக தமிழ் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் சஜித் பிரேமதாசா அணிக்கு  கொண்டு வந்து சேர்ப்பதில்   ஒன்றிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது.   
அஜித் தோவல் மற்றும் இந்திய தூதரங்களின் ஆலோசனைகள் செவி மடுத்து அரசியல் செய்யும் சிறுபான்மையினரின் கட்சிகளும் அவற்றின்  தலைவர்களும் இந்திய அரசின் தூதுவர்களோடு பேசும் பொழுது  ·
தமிழகத்தில்  சுமார் தொண்ணூறு ஆயிரம் தமிழர்கள் இன்னும் குடியுரிமை அற்று பெரும் கேள்விக்குறியான் வாழ்வு வாழ்கிறார்கள்
இந்திய அரசுக்கு இதை எடுத்து கூறவேண்டிய கடமையும் வாய்ப்பும் தற்போது இலங்கை தமிழ் தலைவர்களுக்கு உண்டு
முதலில் இதை செய்யுங்கள் ..
அப்புறம் இலங்கை ஜனாதிபதியாக சஜித் வருவதா விஜய் வருவதா அஜித் வருவதா என்பதை பற்றி பேசலாம் என்று உங்கள் எஜமானர்களுக்கு கூறுங்கள்

டெல்லியில் பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவி தற்கொலை ? - கொலை?


தினமணி : “டெல்லி துவாரகாவில் உள்ள சட்டப்பல்கலைக்கழக விடுதியில், தமிழக மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த அமிர்தவர்ஷினி என்ற மாணவி பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாணவியின் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று மாணவி எழுதி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.படிப்பு சம்பந்தமாக மாணவி ஒருவித பதற்றத்தில் இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

அசோக் நகர் பள்ளியில் சங்கி சொற்பொழிவு; தட்டிக்கேட்ட ஆசிரியர்- என்னதான் நடந்தது?

 நக்கீரன் : சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி, தமிழக முதல்வர் வரை சென்று விவகாரமாகியுள்ளது.
பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதகரமானத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார்?
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தாரா?
அல்லது தன்னிச்சையாக இவர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா?
என்பது குறித்து முழுமையாக விசாரணை தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ஆக்சிஜன் சப்போர்ட்- ஐ துண்டித்து கணவன் கொலை

UP Horror: Ambulance Driver & Helper Allegedly Molest Woman, Remove  Husband's Life Support Leading To His Death

மாலை மலர் :   உயிருக்குப் போராடும் கணவனுடன் ஆம்புலன்சில் வந்த மனைவிக்கு ஆபுலன்ஸ் ஓட்டுநரும் உதவியாளரும் பாலியல் தொல்லை அளித்து கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஆகஸ்ட் 29 அன்று உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவனுக்கு வைத்தியம் அளிக்க தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவை சமாளிக்க முடியாததால் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். கணவனின் சகோதரனும் அவர்களுடன் சென்றுள்ளார்.

பள்ளிக்கல்வி துறையா சங்கிக்கல்வி துறையா

May be an image of 2 people, beard and text

சாவித்திரி கண்ணன் :   அசோக் நகர் அரசு பள்ளியில் ஆதிக்க சக்திகள் நடத்திய சம்பவம் வெளியில் தெரிய வந்ததால் இவ்வளவு பரபரப்பு!
கடந்த ஓராண்டாகவே இது போல தமிழகம் முழுக்க பல பள்ளிகளில் சில அமைப்பினர் கல்வித் துறை அனுப்பியதாக யோகா பெயரிலும், உடற்பயிற்சி பெயரிலும் உள் நுழைந்து கேட்பாரற்ற வகையில் செயல்படுகின்றனர் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.
ஆன்மீகத்திற்கோ, யோகாவிற்கோ நான் எதிரானவன் இல்லை. அதற்கென தனி பள்ளிகள் நடத்துங்கள். மகிழ்ச்சி. தேவைப்படுவோர் வந்து கற்கக்கட்டுமே!
‘’புத்தகப் படிப்பு மட்டும் போதாது, மத்தகப் படிப்பு வேண்டும்’’
‘’இதையெல்லாம் உணர மறுத்ததால் தான், பேச தயங்குவதால் தான் இந்த நாடு நாசமாகப் போனது.’’

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

சென்னை அசோக் நகர் பள்ளிக்கூடத்தில் இந்துத்வா பிரசாரத்தில் இறங்கிய பாலியல் குரு மகாவிஷ்ணு

 மாலை மலர் :  சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பாகப் பேசியதாக கூறப்படுகிறது. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று பேசியுள்ளார்.

May be an image of 1 person and text
அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மிகத்திற்கு இடமில்லை என்று கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு ஆன்மிகம், மறுபறவி, பாவ-புண்ணியம்" ஆகியவை பற்றி பேசினார்.

வியாழன், 5 செப்டம்பர், 2024

திரைத்துறையில் பாலியல் புகார் உறுதியானால் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரை

 dinakaran.co : சென்னை: பாலியல் புகார் உறுதியானால் திரைத்துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரை செய்ய தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நடிகர் சங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்! காளீஸ்வரனின் கையில் மாவுக் கட்டு!

 tamil.oneindia.com - Rajkumar R :   விருதுநகர் அருகே கொலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் டிஎஸ்பியை போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதோடு அவரது தலை முடியை பிடித்து இழுத்து ரகளை செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண் போலீஸ் அதிகாரி தலைமுடியை இழுத்த காளீஸ்வரன், தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததால் கை உடைந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 மீனவர்களுக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் : இலங்கை நீதிமன்றம்

 மின்னம்பலம் -christopher  :  தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்த இலங்கை அரசின் நடவடிக்கைக்கு  மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”இலங்கை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரில் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி (இந்திய மதிப்பு ரூ. 1 கோடி) அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அபராதத்தை செலுத்தத் தவறினால் மீனவர்கள் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.