tamil.news18.com : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்தில் பேசிய ட்ரம்ப், “கமலா ஹாரிஸ் மார்க்சிய சிந்தனையாளராக உள்ளார். அமெரிக்க பொருளாதாரத்தை கமலா ஹாரிஸ் சீர்குலைத்துவிட்டார்.
கடந்த 52 ஆண்டுகளாகவே அமெரிக்காவில் கருக்கலைப்பு பிரச்சினையாக உள்ளது. பைடன் ஆட்சியில் 9 மாதங்களில் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றனர்.” என்று குற்றம் சாட்டினார்.
அதேபோல் கமலா ஹாரிஸ் பேசுகையில், “நடுத்தர மக்களுக்கான பொருளாதார மேம்பாடுதான் எனது லட்சியம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம்” என்று பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாதம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் செய்வது வழக்கமான ஒன்று. அதன்படி, பிலடெல்பியாவில் இருவரும் முதல்முறையாக நேரடி விவாதத்தில் பங்கேற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக