ராதா மனோகர் : திராவிட கருத்தியலின் முக்கிய முழக்கம் சுயமரியாதை கோட்பாடுதான்
சுயமரியாதை கோட்ப்பாடு உருவாகி வளர்ந்த தமிழ்நாட்டில் இன்று சர்வ சாதாரணமாக சங்கிகள் பல போர்வைகளில் மேடைகள் தோறும் இந்துத்துவா கருத்துக்களை விதைத்து கொண்டு வருகிறார்கள்
உதட்டில் மட்டும் திராவிட கருத்துக்களை பேசும் பல அரசியல்வாதிகள் அந்த கூட்டங்களின் முன் வரிசைகளில் அமர்ந்திருக்கிறார்களே?
தொலைக்காட்சிகளில் தெரியும் அந்த காட்சிகள் சங்கிகளுக்கு ஒரு அங்கீகாரம் தருகிறதே ?
இது எங்கே கொண்டு போய் விடும் என்பதை பட்டுத்தான் தெரியவேண்டும் என்றால்
பெரியார் அண்ணா கலைஞர் என்ற பெயர்களை ஏன் உச்சரிக்க வேண்டும்?
இன்றைய தமிழகத்திற்கு குறைந்த பட்சம் திராவிட வரலாறு கூறப்படவேண்டும்
திராவிடம் என்பது வெறும் கொள்கை முழக்கம் மட்டும் அல்ல
அது மனித உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு!
அந்த மாந்தநேய உணர்வை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் காலம்தான் உங்களுக்கு அதை கற்று கொடுக்கவேண்டும்.
பர்மா மலேயா இலங்கை போன்ற நாடுகளில் செயல்பட்ட திராவிட இயக்கங்களின் வரலாறு தமிழ்நாட்டுக்கு இன்னும் கூட சரியாக தெரியவில்லை .
இலங்கையில் 1927 யிலேயே திராவிட பத்திரிக்கை திராவிட பள்ளிக்கூடம் திராவிட சித்தாந்த அமைப்பு எல்லாம் தோன்றியது
தமிழகத்தில் சுயமரியாதை இயக்கமும் பின்பு திராவிடர் கழகமும் தோன்றிய அதே காலகட்டங்களில் பர்மாவிலும் மலேயாவிலும் அவை விரிவாக்கம் கண்டன
அந்நாடுகளில் எல்லாம் மிக பெரிய அளவில் திராவிட கருத்துக்கள் முழங்கியது.
பெரியாரே அங்கெல்லாம் சென்று சுயமரியாதை கருத்துக்களை பரப்பினார்
தமிழகத்திற்கு அப்பால் திராவிடம் ஒலித்த வரலாறு தமிழக மக்களுக்கு எப்படி தெரியாமல் போனது?
மறுபுறத்தில் சங்கிகளின் ஒவ்வொரு அசைவும் பதிவு செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் பூதாகரமாக தமிழ்நாட்டில் படம் காட்டப்படுகிறது
இந்த கொடுமைகளுக்கு உதட்டில் திராவிடம் பேசும் கட்சிகளை சேர்ந்த பலர் காவடிகள் எடுக்கும் கொடுமைகளையும் நாளாந்தம் பார்க்கிறோம்.
கொஞ்சம் இடம் கொடுத்தால் முழு இடத்தையும் சங்கிகள் நிச்சயம் பிடிப்பார்கள்
அதுதான் தற்போது நடக்கிறதோ என்ற அச்சம் அதிகமாகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக