ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

ஈரானில் ஹிஜாப் அணியவில்லை என்று 22 வயது பெண்ணைஅடித்தே கொன்ற போலீஸ் ஹிஜாபிற்கு எதிராக ஈரான் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஈரானில் ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று  கூறி 22 வயதே நிரம்பிய  மஹ்சா அமினியை மதப் பொலிசார் அழைத்து கொண்டுபோய் அடித்தே கொன்றுவிட்டனர்
ஈரானின் மதவாத அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் பொதுவெளியில் தங்கள் ஹிஜாப்பை அகற்றி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஈரானிய  “சர்வாதிகாரிக்கு மரணம்” என்றும் கோஷமிடுகிறார்கள்

தமிழ் மிரர் : ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார்  அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் பெண்களுக்கான இஸ்லாமிய உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

சங்கரன்கோவில் சிறுவர்களுக்கு இனிப்பு விற்க மறுத்தவர் கைது.. தீண்டாமை - கடைக்கு சீல்! | Sankarankovil

மின்னம்பலம் - monisha :  சங்கரன் கோவில் தீண்டாமை பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் இந்நிகழ்விற்கு இன்று (செப்டம்பர் 17) விளக்கம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலின பள்ளி குழந்தைகளுக்குத் தின்பண்டம் அளிக்க கடைக்காரர் ஒருவர் மறுத்தார். ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் கடைக்காரர் குழந்தைகளுடன் கூறினார்.
கட்டுப்பாடு என்றாலே என்னவென்று தெரியாமல் குழந்தைகள் “கட்டுப்பாடுன்னா என்ன?’ என்று கேட்க, ’ஊர் கூடி முடிவெடுத்துள்ளது. அதனால் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. உங்கள் வீட்டிலேயும் சென்று சொல்லுங்க” என்று குழந்தைகளிடம் கூறினார்.

திருப்பத்தூர் - 5 கோடி கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தல்.. போலிஸார் நெருங்கியதால் இளைஞர் தற்கொலை

5 கோடி கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தல்.. போலிஸார் நெருங்கியதால் கேரளாவில்  இளைஞர் தற்கொலை: நடந்தது என்ன?
5 கோடி கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தல்.. போலிஸார் நெருங்கியதால் கேரளாவில்  இளைஞர் தற்கொலை: நடந்தது என்ன?

  கலைஞர் செய்திகளை : திருப்பத்தூர் - 5 கோடி கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தல்.. போலிஸார் நெருங்கியதால் இளைஞர் தற்கொலை: நடந்தது என்ன?
திருப்பூர் அனுப்பர்பாளையம் சொர்ணபுரி அவென்யூ மகாலட்சுமி கார்டன் 2வது வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு அஜய் பிரணவ் என்ற 14 வயது மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும் , சிவக்குமார் பெருமாநல்லூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கணக்காளராகக் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட கான்ட்ராக்டர் ராகேஷ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சனி, 17 செப்டம்பர், 2022

ஒரே நேரத்தில் 13 ஆயிரம் வழக்குகள் ரத்து - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

 தினத்தந்தி  : பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் அதிரடியாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.உச்ச நீதிமன்றம்ல் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நடவடிக்கையாக ஒரே நேரத்தில் 13 ஆயிரத்து 147 பழைய வழக்குகள் அதிரடியாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் சிராக் பன்னுசிங் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்த வழக்குகள் 2014-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டவை. 1987-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அடங்கும். இவற்றுக்கு டைரி எண் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்யுமாறு மனுதாரர்களிடம் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், பல ஆண்டுகள் ஆனபோதிலும் அவர்கள் குறைபாடுகளை சரிசெய்யவில்லை. எனவே, விதிமுறைப்படி, அந்த வழக்குகள் ரத்துசெய்யப்பட்டு இருப்பதாக சிராக் பன்னுசிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்காக பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிறார்

Indian Court Hands Down Symbolic Sentence for Outspoken Lawyer - The New  York Times

மின்னம்பலம் : சவுக்கு சங்கருக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் பிரசாந்த் பூஷன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யு ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மதுரை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 15)  ஆறு மாத கால சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் உடனடியாக அடைக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பேராசிரியர் சுப வீரபாண்டியனின் திராவிட பள்ளியில் சேது சமுத்திர எதிரிகளுக்கு என்ன வேலை?

 Ravishankar Ayyakkannu  :    திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் திராவிடப் பள்ளியில் சேரலாம் என்று அதன் பாடத்திட்டத்தை நோட்டம் விட்டேன்.
பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன் எழுதிய போலி சூழலியவாதம் குறித்த ஒரு பாடத்தையும் கற்பிக்கிறார்கள் என்பதை அறிந்த உடன் என் எண்ணத்தைக் கைவிட்டேன்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே, திராவிடம் என்னும் அரசியல் பாடத்தில் போலி சூழலியவாதத்தைக் கற்பிப்பதற்கான தேவை என்ன? அந்தப் பாடத்திட்டத்தை எழுதிய பூவுலகின் நண்பர்களின் தகுதி என்ன?
ஆள்வது திமுகவாக இருக்கும் போது, இப்படி அரசை எதிர்க்கச் சொல்லித் தந்து திராவிட இளைஞர்களை மூளைச் சலவை செய்ய வேண்டிய தேவை என்ன?
இதைப் படித்து விட்டு வருகிறவர்கள் தான் நாளை துறைமுகம், விமான நிலையம், ஏன் கலைஞர் சிலை கூட வேண்டாம் என்று போராடத் துவங்குகிறார்கள்.   

சிங்கராயர் ஆரோக்கியசாமி :  கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டிய கடும் நோய் பிடித்த நாயை நாம் என்ன செய்ய நினைப்போம்?
இது அந்த ரகம்தான். விடுங்கள். நமக்கு வேலை அதிகமாக உள்ளது.
எப்பொழுது எப்படி என்பதைக் காலம் நமக்குக் கட்டளையிடும்.
அப்போது பார்க்கலாம். உண்மையில் நேரமில்லாமல் அய்யா சுபவீயோடு ஓடிக்கொண்டிருக்கிறோம்.

ரோஷனாரா பேகம் - குடியிருந்த கோயில் குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடலை எழுதிய ரோஷனாரா பேகம் யார்?


 vikatan.com  : `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடலை எழுதிய ரோஷனாரா பேகம் யார்?
விகடன் டீம்
குடியிருந்த கோயில்' என்றாலே ரசிகர்கள் மனத்தில் `குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடல் சட்டென நிழலாடும்; கூடவே வெண்ணிற சேலையில் நளினமாக ஆடும் ஜெயலலிதாவும், அலட்டலில்லாத காதலை வெளிப்படுத்தும் எம்.ஜி.ஆரும் மனக்கண் முன்வந்து போவார்கள். இரு முன்னாள் முதல்வர்கள் நடித்த அந்தப் பாடலை எழுதியவர், நம் முதல் பெண் ரோஷனாரா பேகம்!

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

சவுக்கு சங்கர் கைதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா..? சாவித்திரி கண்ணன்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பொய் செய்தி வெளியிட்டதாக பத்திரிகையாளர் சாவித்திரி  கண்ணன் கைது - Senior Journalist Savithri Kannan arrest Kallakurichi |  Indian Express Tamil
aramonline.in   :  பல அநீதிகளைத் தட்டிக் கேட்ட, சமூக நீதிக்காக பேசிய சவுக்கு சங்கரின் கைது, ”நியாயமா? அநியாயமா?” என பலமாக விவாதிக்கப்படுகிறது!
இதற்கான பதிலை ஒற்றை வரியில் சொல்ல முடியாது.
தனி நபர் சார்ந்து பார்க்க வேண்டிய விவகாரமல்ல, இது!
சற்று ஆழமான புரிதலோடு அணுக வேண்டிய விவகாரமாகும்!
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவசரப்பட்டு உள்ளது!
”இந்தக் கைது ஏற்புடையதல்ல” என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.
சவுக்கு சங்கர் கைதின் வழியாக ஜனநாயகத்திற்கான வெளியை  நீதிமன்றம் முற்றிலும் முடக்க முன்னெடுக்கும் வாய்ப்புகள் தொடர ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது!    நான் கைது செய்யப்பட்ட போது சவுக்கு சங்கர் அதை மிக, மிக நியாயமான நடவடிக்கை என்றார். ”பத்திரிகை சுதந்திரம் என்று தட்டை தூக்கிட்டு வருவாங்க. ரெண்டு மிதிமிதிச்சி விடுங்க” என டிவிட் போட்டிருந்தார்! அதில் எனக்கு தனிப்பட்ட வருத்தம் எதுவுமில்லை.

மதுரையில் ரூ.600 கோடியில் Tidal Park: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - மக்கள் மகிழ்ச்சி!

kalaignarseithigal.com  :  மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத் தாவணியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' தெற்கு மண்டல மாநாடு தொடங்கியது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் தொழில்துறையின் பங்கேற்றுள்ளனர்.
கரூர், ராமநாதபுரம் தொழிற்பேட்டையில் ரூ.2.83 கோடியில் பொது வசதி கட்டிடங்கள் திறக்கப்பட்டது. வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கு ஆன்லைன் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

சவுக்கு சங்கர்! "பேசிய கருத்துக்காக ஒருவரைத் தண்டிக்க முடியாது - நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி

முரளிதரன் காசி விஸ்வநாதன்  -      பிபிசி தமிழ் :  
சவுக்கு சங்கர் நீதிமன்றம் குறித்தும் நீதிபதிகள் குறித்தும் வெளிப்படுத்திய கருத்துகளுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது. ஆனால், ஒருவர் பேசுவதற்காக சிறை தண்டனை விதிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.
ென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரை சந்தித்த பிறகுதான் யூடியூபர் மாரிதாசுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட இடுகையை மேற்கோள்காட்டி, ஜூலை மாதம் மதுரை உயர் நீதிமன்ற கிளை அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

உ.பி.| பட்டியலின சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு தூக்கிட்டு படுகொலை; 6 பேர் கைது

 hindutamil.in : லக்கிம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் புதன்கிழமை மாலை 17, 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் உத்தப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, சுஹைல், ஜூனைத், ஹபிசுல், ரஹ்மான், கரிமுதீன், ஆரிஃப் மற்றும் சோட்டு ஆகிய ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திமுக முப்பெரும் விழாவில் . கலைஞரின் 4041 கடிதங்கள் நூல் தொகுப்பு வெளியீடு

மின்னம்பலம்  : பிரதமர் மோடிக்கே பிடித்தவர் நம் முதல்வர் ஸ்டாலின்” என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக நிர்வாகிகள் என தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழாவில் ’கலைஞரின் கடிதங்கள்’ மற்றும் ‘திராவிட மாடல் ஆட்சி’ ஆகிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சிறப்பாக கட்சி பணியாற்றியவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும், கழக முன்னோடிகளுக்கு விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பேசினர்.

வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? வீட்டு உரிமையாளர்கள் நிலை என்ன..?

18 சதவீத வரி

tamil.goodreturns.in  -  Prasanna Venkatesh  :   புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்டோர் ஒரு வீடு, அலுவலகம் என எந்தச் சொத்தை வாடகைக்கு எடுத்தாலும் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்த வேண்டும்,
இந்தப் புதிய வரி ஜூலை 18 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்புகளும், தொடர்ந்து செய்யப்பட்டு வரும் மாற்றங்களும் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

கனடா சுவாமிநாராயண் கோவிலில் சேதம் .. காலிஸ்தான் ஜிந்தாபாத் வாசகங்கள்

மாலைமலர்  :  டொரன்டோ: கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில் பாப்ஸ் சுவாமிநாராயண் கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில், சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டு, கோயில் சுவரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று எழுதப்பட்டிருந்தது. டொராண்டோவில் உள்ள சுவாமி நாராயண் கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு கனடாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மலேசியா முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு காலமானார்

BBC Tamil : மலேசிய முன்னாள் அமைச்சரும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான ‘துன்’ சாமிவேலு இன்று காலமானார். அவருக்கு வயது 86.
துன் என்ற மலேசிய நாட்டின் உயரிய பட்டத்தை அவர் பெற்றிருந்தாலும், அதற்கு முன் அவர் பெற்ற டத்தோ என்ற பட்டமே அவரது அடையாளமாக மாறியது. தமிழ்நாட்டில் பரவலாக அவர் டத்தோ சாமிவேலு என்றே அவர் அறியப்பட்டார்.
மலேசியாவில் நீண்ட காலம் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர் சாமிவேலு. சுமார் 29 ஆண்டுகள் நாட்டின் தொழில்நுட்பத் துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல அமைச்சுகளுக்கு பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்ட அவர், மலேசிய இந்திய சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்ந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வியாழன், 15 செப்டம்பர், 2022

பசியோடு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக்கூடாது..” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம் !

கலைஞர் செய்திகள் : “பசியோடு பள்ளிக்கு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக்கூடாது என்று தான் இன்றைய தினம் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.
காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைத்த பின் மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் சேர்ந்து காலை உணவும் சாப்பிட்டார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதன் முழுப்பயனை இன்றைய தினம் நான் பெற்றுவிட்டதாகவே நினைக்கின்றேன். 

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

மாலை மலர்  :  மதுரை  அரசியல் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வரும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக யூடியூபில் விமர்சித்திருந்தார் சவுக்கு சங்கர். அவர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது.
கடந்த 8ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதுடன், ஒரு வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கைவிரித்தது .. சட்டத்தில் இடமில்லையாம்

மாலை மலர்  : புது டெல்லி   சட்டத்தில் இடமில்லை... உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கைவிரித்தது .. சட்டத்தில் இடமில்லையாம்
இந்தியாவில் இருந்து உக்ரைன் சென்று மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000 மாணவர்கள் இந்தியா திரும்பி இருந்தார்கள். அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, அவர்கள் தங்கள் கல்வியை இங்கேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சோனியா காந்தி : பாஜகவினர் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடுகின்றனா்:

தினமணி : கடந்த 8 ஆண்டுகளாக அதிகாரத்தை மட்டுமே மையமாக கொண்டு ஆட்சி நடத்தி வருவதாகவும், ஜனநாயகத்தையும் அதன் அமைப்புகளையும் மோடி அரசு குறைத்து மதிப்பிடுவதாகவும் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டினாா்.
இதுதொடா்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவா் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நாட்டின் வளமும் வாய்ப்புகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென நாங்கள் கருதினோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், தகவலறியும் உரிமை சட்டம், ஆதாா் அட்டை என பொதுமக்களின் நலனில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதலீடு செய்தது.

பஞ்சாப் தனிநாடு கோரி செப்.18ல் பொதுவாக்கெடுப்பா? கனடாவில் பரபரப்பு

பஞ்சாப் தனிநாடு கோரி செப்.18ல் பொதுவாக்கெடுப்பா? கனடாவில் பரபரப்பு Uthayamugam

uthayamugam.com  :  பஞ்சாப்பை பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு வேண்டும் என்று 1980களில் சீக்கியர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினார்கள். பொற்கோவிலையே தலைமையிடமாகக் கொண்டு பிந்தரன்வாலே என்பவர் தலைமையில் ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகி வந்தனர்.
     இந்தப் போராட்டத்தை அடக்கவே, அன்றைய பிரதமர் இந்திரா பொற்கோவிலுக்குள் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அந்த நடவடிக்கையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அந்த நடவடிக்கைக்கு எதிராகவே பிரதமராக இருந்த இந்திராவை சீக்கிய பாதுகாவலர்கள் சிலர் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.
இந்திரா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் வாழ்ந்த சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.

மீண்டும் இந்தி? அமித் ஷா பிரதமர் பதவிக்கு குறிவைத்து இந்தி வெறியை கையிலெடுக்கிறார்

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  சென்னை : இது இந்தியா. அதனை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக, கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் இந்தியைக் கொண்டாடும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு தென் மாநிலங்களில் இருந்து பரவலாக எழுந்துள்ள வன்மையான எதிர்ப்பு,
அமித்ஷாவின் இன்றைய பேச்சு மூலம் இன்னும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாடுகள் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை முன்னிறுத்தும் வகையில் தொடர்ந்து இருந்து வருகிறது.

“சென்னை அண்ணா விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” அப்புறப்படுத்த படுகின்றன

“சென்னை ஏர்போர்ட்டில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” :  அதிரடி முடிவு எடுத்த அதிகாரிகள் !
“சென்னை ஏர்போர்ட்டில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” :  அதிரடி முடிவு எடுத்த அதிகாரிகள் !

கலைஞர் செய்திகள் : சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, முன்னாள் விமான நிறுவனங்களை சோ்ந்த 12 பழைய விமானங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, என்.இ.பி.சி., கிங்பிஷர்,ஜெட் ஏா்வேஸ், டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களை சோ்ந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில்லை.

காரைக்கால் சிறுவனுக்கு எலி மருந்தை கொடுத்தது கொன்றதாக சிறுமியின் தாயார் பரபரப்பு வாக்குமூலம்

karaikaal schol student issue; accust confession

நக்கீரன்  : காரைக்கால் சிறுவன் மரணம்; சிறுமியின் தாயார் பரபரப்பு வாக்குமூலம்
காரைக்காலில் தனது மகளை விட அதிக மதிப்பெண்கள் எடுத்ததாகக் கூறி சிறுவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த வழக்கில் சகாயராணி விக்டோரியா என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் அந்த மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவரின் குடும்பத்தார், குற்றவாளியைக் கைது செய்தாலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் சிறுவன் உயிரிழந்ததாக போராட்டம் நடத்தினர்.

பாகிஸ்தான் பெண் டாக்டர் துப்புரவு தொழிலாளியை திருமணம் செய்தார்

தினத்தந்தி : வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை… ! பெண் டாக்டர் ஒருவர் துப்புரவு பணியாளரை மணந்தார்.
இந்த சமபவம் வைரலாகி உள்ளது. இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் ஆஸ்பத்திரி ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணிபுரிந்த ஒருவரை அதே ஆஸ்பத்திரியில் டாகடராக பணிபுரியும் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த ஜோடி தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
பாகிஸ்தானில் கிஷ்வர் சாஹீபா என்ற பெண் டாக்டர் தெஹ்சில் ஒகாரா மாநிலத்திலுள்ள திபால்பூரில் வசித்து வருகிறார் அவர் அங்கேயே ஆஸ்பத்திரில் ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

புதன், 14 செப்டம்பர், 2022

இலங்கை - தலைமன்னார் டாலர் பரிவர்த்தனை பிரதேசமாக .. மக்காவ் ஹாங்காங் போல ..? Sri Lanka dreams of dollarized tourism hub in Mannar?

தலைமன்னார் டாலர் பரிவர்த்தனை பிரதேசமாக மாறப்போகிறது?
திறந்த பொருளாதார கொள்கையை போன்று அமெரிக்க டாலர் மட்டுமே பயன்படுத்தும் பிரதேசமாக தலைமன்னாரை மாற்றும் ஒரு திட்டம் இலங்கை அரசின் ஆலோசனையில் உள்ளதாக தெரிகிறது
இது பற்றி இலங்கை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியதாவது  - மக்காவ் போன்று டொலரை தனது நாணயமாகப் பயன்படுத்தும் பொழுதுபோக்கு நிறைந்த சுற்றுலாப் பிரதேசமாக மன்னார் தீவை இலங்கை உருவாக்க முடியும்!
சிங்கப்பூர்  துபாய்  அல்லது ஹொங்கொங்  போன்ற பொருளாதார மையங்களாக இலங்கை அமையக்கூடிய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது .தலைமன்னார் டாலர் பரிவர்த்தனை பிரதேசமாக .
மன்னார் தீவை மக்காவ் தீவைப் போன்று பொழுதுபோக்கு இடமாக மாற்ற முடியும் என அமைச்சர் கமகே தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் தெரிவித்தார்.