வியாழன், 15 செப்டம்பர், 2022

பஞ்சாப் தனிநாடு கோரி செப்.18ல் பொதுவாக்கெடுப்பா? கனடாவில் பரபரப்பு

பஞ்சாப் தனிநாடு கோரி செப்.18ல் பொதுவாக்கெடுப்பா? கனடாவில் பரபரப்பு Uthayamugam

uthayamugam.com  :  பஞ்சாப்பை பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு வேண்டும் என்று 1980களில் சீக்கியர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினார்கள். பொற்கோவிலையே தலைமையிடமாகக் கொண்டு பிந்தரன்வாலே என்பவர் தலைமையில் ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகி வந்தனர்.
     இந்தப் போராட்டத்தை அடக்கவே, அன்றைய பிரதமர் இந்திரா பொற்கோவிலுக்குள் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அந்த நடவடிக்கையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அந்த நடவடிக்கைக்கு எதிராகவே பிரதமராக இருந்த இந்திராவை சீக்கிய பாதுகாவலர்கள் சிலர் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.
இந்திரா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் வாழ்ந்த சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.

அத்துடன் காலிஸ்தான் கோரிக்கை அடங்கிவிட்டதாக தோன்றியது. ஆனால், இப்போது, கனடாவில் உள்ள ப்ராம்ப்டன் நகரில் உள்ள கோர்மிடோஸ் கம்யூனிட்டி சென்டரில் செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பஞ்சாப்பை விடுதலை செய்து, காலிஸ்தான் அமைப்பதற்கு ஆதரவு கோரி பொது வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டர்கள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் கொள்கைகள் இந்தியாவில் உள்ள பல மொழி பேசும் மக்களையும், பல மதங்களைச் சேர்ந்த மக்களையும் அச்சுறுத்துவதாக கூறப்படும் நிலையில் மீண்டும் உருவெடுத்துள்ள காலிஸ்தான் கோரிக்கை எங்கு கொண்டுபோய் முடியுமோ தெரியவில்லை என்று நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: