திங்கள், 3 ஜனவரி, 2022

தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவரை காப்பாற்றிய பெண் போலீஸ்! வைரல் வீடியோ

 மாலைமலர் : இந்த வீடியோவை இதுவரை 93,000 பேர் பார்த்துள்ளனர். 5,700 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மும்பை: மும்பையில் ரயில் ஓட்டுநர் ஒருவர், தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை காப்பாற்ற திறமையாக ரயிலை நிறுத்திய வீடியோவை மத்திய ரயில்வேதுறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
மும்பையில் நேற்று காலை 11.45 மணி அளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் வருவதை கண்டு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்காக அவ்வாறு செய்தாரா அல்லது குடி போதையில் செய்தாரா என தெரியவில்லை. ஆனால் ரயில் அருகில் வந்துவிட்ட நிலையில், ஒருவர் படுத்திருப்பதை அறிந்த ரயிலின் ஓட்டுநர் சட்டென்று பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்திவிட்டார்.

சைடு டிஷ் லாபம் 90 கோடி: செந்தில்பாலாஜி மாஸ்டர் பிளான்(டாஸ்மார்க்) பின்னணி!

சைடு டிஷ்  லாபம் 90 கோடி:  செந்தில்பாலாஜி  மாஸ்டர் பிளான்  பின்னணி!

மின்னம்பலம் : டாஸ்மாக் மது பான பார் டெண்டரில் முறைகேடு நடப்பதாக இன்று (ஜனவரி 3) பார் உரிமையாளர்கள் அத்துறைக்கான அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன் போராட்டம் நடத்திய நிலையில், அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து, “டெண்டர்கள் இப்போதுதான் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. எந்த முறைகேடும் இல்லாமல் வெளிப்படையாக நடந்திருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.
அதேநேரம், “டெண்டர் நிபந்தனைகளைப் பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் யார், எந்த கட்சி என்பது பற்றிய எந்த விறுப்பு வெறுப்பும் இல்லை” என்றும் சொல்லியிருக்கிறார்.

புதுக்கோட்டை துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு ! சிகிச்சை பலன் அழிக்கவில்லை!

மாலைமலர் :  புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் புகழேந்தி (வயது 11). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து என்பவரது வீட்டிற்கு வந்திருந்தான். சிறுவன் புகழேந்தி தனது பாட்டி வீட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் டெல்லியின் வலைப்பின்னல்! பேராசிரியர் ஜெயரஞ்சன் விலாவாரியாக விளக்கம்

தமிழக  நிர்வாகத்தில் டெல்லியின் வலைப்பின்னல்: போட்டுடைத்த ஜெயரஞ்சன்

மின்னம்பலம் : புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும் தமிழ்நாடு - இந்திய அரசியலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. புத்தகங்களில் இருக்கும் தகவல்களை விட அதிக அதிர்ச்சியான பரபரப்பான தகவல்கள் புத்தக வெளியீட்டு விழாக்களில் எதேச்சையாக வெளிப்பட்டு விடுவதுண்டு.
சென்னைப் புத்தகக் காட்சி ஒமிக்ரான் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டாலும், புத்தக வெளியீடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் தமுமுகவின் பொறுப்புப் பொதுச் செயலாளரும், பேராசிரியருமான கவிஞர் ஆரூர் புதியவன் என்கிற ஹாஜா கனியின், ‘சூடு’ கவிதைத் தொகுப்பு நேற்று (ஜனவரி 2) சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்பட்டது.

ஆறுமுக நாவலர் அருட்பெரும் ஜோதி வள்ளலார் மோதல் .. உண்மையில் நடந்தது என்ன? கவிஞர் வைரமுத்துவின் விளக்கம்

 இராதா மனோகர் : கவிஞர் வைரமுத்து அவர்கள் வடலூர் ராமலிங்க வள்ளலாரின் வரலாற்றை தனது தமிழாற்று படையின் தொடர்களில் ஒன்றாக மேடையேற்றி உள்ளார்  அந்த ஆற்று நீரில் சற்று நனைந்து பாருங்கள் .
கிழக்கிந்திய கம்பனியோடு வந்த கிறித்துவம் ஒரு கோடி மக்களை மதம் மாற்றியதற்கும் ராமலிங்கரின் மனமாற்றத்திற்கு உள்ள தொடர்பு ஊன்றி உணரத்தக்கது .மதமாற்றம் இந்த மண்ணில் எந்தவழி நுழைந்தது? அந்நியர் இம்மண்ணில் எவ்வழி புகுந்தனர்?
வருணங்களென்றும் குலங்கள் என்றும் ஜாதிகள் என்றும் பிளந்து வைத்த சந்து வெளி புகுந்தது.
அந்நியரை ஓட்டவேண்டும்  அதற்கு முன்னால் அந்நியரை வரவழைத்த மதச்சண்டைகளின் பிற்போக்குத்தனத்தின் பிடரியை பிடித்து ஆட்டவேண்டும் என்று சிந்தித்த முதல் புரட்சி துறவி வள்ளலார் என்றே சொல்ல தோன்றுகிறது.
இந்து மதம் துறவின் நிறம் காவி என்றது   வள்ளாளரோ வெள்ளை என்றார்.

சென்னை விமான நிலையம் உலக தரத்தில் எட்டாவது இடத்தில் .. இந்தியாவில் வேறெந்த விமான நிலையமும் இதில் இல்லை

சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை... இந்தியாவிலேயே இந்தப் பெயர் பெற்ற ஒரே ஏர்போர்ட்..!
கலைஞர் செய்திகள்  : சென்னை விமான நிலையத்திற்கு கிடைத்த பெருமை... இந்தியாவிலேயே இந்தப் பெயர் பெற்ற ஒரே ஏர்போர்ட்..!
முதல் 20 விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
சா்வதேச அளவில் 2021ஆம் ஆண்டில் விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது பற்றிய கணக்கெடுப்பில், முதல் 20 விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த பட்டியலில் இந்திய விமானநிலையங்களில் சென்னையை தவிர வேறு விமானநிலையங்கள் இடம் பெறவில்லை.சா்வதேச அளவில் விமான போக்குவரத்து, விமான நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகளை லண்டனை தலைமையிடமாக கொண்டுள்ள சிரியம் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.

மனைவி, 2 மகன்களை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை! ஆன்லைன் விளையாட்டில் ஒரு கோடியை இழந்த சென்னை....

சென்னை: மனைவி, 2 மகன்களை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை

தினத்தந்தி : ஆலந்தூர்,  சென்னையை அடுத்த பெருங்குடி பெரியார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 36). இவருடைய மனைவி தாரா என்ற பிரியா (35). இவர்களுக்கு தரன் (10), தாஹன் (1) என 2 மகன்கள் இருந்தனர்.
இவர்களது சொந்த ஊர் கோவை ஆகும். மணிகண்டன், லண்டனில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் பெருங்குடியில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடிவந்தார். அதன்பிறகு இங்குள்ள ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பிரியாவும், வங்கியில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

மும்பாய் வரதராஜ முதலியார் நினைவு நாள் - தாராவி மக்களின் உள்ளத்தில் வாழ்கிறார்.

May be an image of 1 person and text that says '238.13 Bombay Don Varadharaja Mudaliar வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (01.03.1926-02.01.1988)'

Thulakol Soma Natarajan : 13 ஆசற்றாண்டில்,பிரிட்டனில் வாழ்ந்த ராபின் ஹூட் (Robin Hood)
வசதியுள்ளவர்களிடமிருந்து எடுத்து, வரியவர்களுக்கு வழங்குதல் (Tap The Rich And Pat The Poor) என்ற
கொள்கையுடன் வாழ்ந்தவன்.
20 ஆம் நூற்றாண்டில் அe கொள்கையுடன் ஒருவர்  வாழ்ந்தார்.
அவர்தான் #மும்பை_வரதராஜன்_முதலியார்.
அவரின் நினைவுநாள் இன்று 2, ஜனவரி (1988).  அவரைப் பற்றிய காய்தல் உவத்தல் அற்ற வரலாற்றும் பதிவு உங்கள் பாவைக்கு இங்கே தருகிறேன்.
சற்றே நீண்ட பதிவுதான். ஆனால் ஒரு தமிழனின் இனம், மொழிப்பற்று எப்படி ஒரு புதிய கோணத்தில் இருந்திருக்கிறது என்பதை விளக்கும்,  அரிய செய்திகள் உள்ளடக்கிய பதிவு. தவிர்க்காது படியுங்கள !

சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு!

 Rayar A -  Oneindia Tamil :  சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் இல்லை உட்பட பல புகார்கள் எழுந்தன.
பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் போராட்டம் பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் போராட்டம் அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இருப்பினும், சில பெண்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

கோவை ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்துங்க - கல்வி கூடங்களில் மத நிகழ்வுகளா? மா. கம்யூனிஸ்ட்

 Rayar A -  e Oneindia Tamil News சென்னை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற கோவை துணை ஆணையர் ஜெயச்சந்திரனை, இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறத
இது தொடர்பாக இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுவரை ரூ.1,640 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு... வேட்டை தொடரும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி!

“இதுவரை ரூ.1,640 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு... வேட்டை தொடரும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி!

கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj : நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

தமிழக எம்பிக்களை அமித் ஷா சந்திக்க மறுத்தது ஏன்? டி.ஆர்.பாலு விளக்கம்!

 Vishnupriya R  -   Oneindia Tamil :  டெல்லி: தமிழக எம்பிக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காததில் எந்த அரசியலும் இல்லை என எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சருக்கு ஆதரவாக திமுக எம்பி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் இப்படிப்பட்ட நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடரில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தற்போது பரிசீலனையில் உள்ளது.
இதனிடையே அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் எம்பிக்கள் என தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக குடியரசு தலைவரிடம் மனு அளிக்க முயன்றனர்.
கொரோனா புரோட்டோகாலை காரணம் காட்டி அவரை சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பெங்களூர் - நடுரோட்டில் தாயை வெட்டிக் கொலை செய்த மகள் - சொத்துக்கு ஆசைப்பட்ட மகள்

“செலவுக்கு பணம் தரவில்லை..” : நடுரோட்டில் தாயை வெட்டிக் கொலை செய்த மகள் - விசாரணையில் ‘பகீர்’!

கலைஞர் செய்திகள் : சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற தாயையே, மகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். முதல் கணவருடன் விவாகரத்து ஆனதை அடுத்து நவீன்குமார் என்பவரை இரண்டாவதாக அர்ச்சனா திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த பிள்ளைகளுடன் சேர்ந்தே இருவரும் குடும்பமாக இருந்து வந்தனர். இந்நிலையில், அர்ச்சனா நெடுரோட்டில் கடந்த 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நடிகர் வடிவேலு குணமாகி நலமாக வீடு திரும்பினார்

 மின்னம்பலம் : கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நடிகர் வடிவேலு, தான் நல்ல நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு லேசான சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா தொற்றிக்கான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
பரிசோதனயில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டிசம்பர் 23 அன்றிரவு போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கை வல்லிபுரக்கோயில் 1902 ஆம் ஆண்டுவரை புத்தர் கோயிலாகவே இருந்ததா? அந்த புத்தர் விக்கிரகம் தற்போது தாய்லந்தில் உள்ளது!

செல்லபுரம் வள்ளியம்மை : இலங்கை வடமராட்சியில் பருத்திதுறைக்கு அருகாமையில் உள்ள வல்லிபுரம் பிரதேசத்தில் 1902 ஆம் ஆண்டுவரை இங்கே காணப்படும் இந்த புத்தர் சிலை இருந்திருக்கிறது .
அதன் பின்பு இந்த சிலை யாழ்ப்பாண பழைய பூங்காவில் உள்ள ஒரு அரச மரத்தின் கீழே வைக்கப்பட்டு இருந்தது.
அதன் பின் 1906 ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் சர் ஹென்றி பிளேக் என்பவரால் சியாம் (தாய்லாந்து) மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.
அதற்கு பின் இந்த சிலை பற்றி மக்கள் மறந்தே விட்டார்கள் ..
அப்போதெல்லாம் இலங்கையில் சிங்கள பௌத்தம் என்பதாக அல்லாமல்.வெறும் பௌத்தம் என்றே கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இது பற்றி சுவீடனை சேர்ந்த பேராசியர் திரு பீட்டர் ஷாக் அவர்கள் ஆய்வு செய்துள்ளார் இது பற்றிய நிகழ்ச்சிகளையும் அவர் முன்னெடுத்தது வருகிறார்

அமரர் பெரியசாமி சந்திரசேகரன்! ஒற்றை எம்பி பதவியை வைத்து சந்திரிகா ஆட்சியை அமைத்த மலையக தலைவர்

P. Chandrasekaran - Wikipedia

Periyasaamy Chandrasekaran  :  1994 இல் 'கிங்மேக்கராக' உருவெடுத்து மலையக மக்களின் வாக்குபெறுமதியை தேசிய மட்டத்தில் அடையாளப்படுத்திய அமரர்.பெ. சந்திரசேகரன்!
1994 ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்
நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கிய மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் 23,453 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி 14 போனஸ் ஆசனங்கள் சகிதம் 105 ஆசனங்களே கைவசம் இருந்தன. இந்நிலையில் ஆட்சியமைக்க ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேசக்கரம் நீட்டியது. (6+1) ஏழு ஆசனங்கள்.
இதனால் ஆட்சியமைப்பதற்கு (113) சந்திரிக்கா தலைமையிலான கூட்டணிக்கு மேலுமொரு ஆசனம் (எம்.பியின் ஆதரவு) தேவைப்பட்டது.

சனி, 1 ஜனவரி, 2022

உதயநிதிக்கு அமைச்சர் பதவி? ... துணை முதல்வர் வரை கொண்டு போய்ட்டாங்க - உதயநிதி

 Giridharan N | Samayam Tamil  :  தமக்கு அமைச்சர் பதவியெல்லாம் எதுவும் வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லி வருவது கட்சியில் உள்ள சீனியர்களை சரிகட்டுவதற்கான உதார் தான் என்றும், அவரை அமைச்சராக்குவதற்கான நாள், நேரம் வரை துர்கா ஸ்டாலின் குறித்துவிட்டதாகவும் அறிவாலய வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. அமைச்சர் பதவியை தொடர்ந்து அப்படியே அவரை துணை முதல்வராக்கவும் மெகா திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் சொல்கின்றனர் விவரமறிந்த உடம்பிறப்புகள்.
கொளுத்திப் போட்ட அன்பில்: திமுக இளைஞரணி செயலாளராகவும், சென்னை திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கும் உதயநிதி ல்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் கொளுத்திப் போட்டிருந்தார் அவரின் நெருக்கிய நண்பரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்.

ஸ்ரீ லங்காவுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் இந்தியா கடனாக வேண்டும்

Post Mahinda Rajapaksa​'s swearing-in as Sri Lanka​ PM, Swamy​ says will  visit Colombo soon- The New Indian Express

Subramanian Swamy  :  If India wants an ally for the Indian Ocean long term then India must give deferred interest $10 billion loan to the Rajapaksa government now or face China getting one more junior partner. Modi govt has failed in so many foreign policy issues. Let not Sri Lanka be another

வீரகேசரின் : ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உடனடியாக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்குவதற்கு இந்தியா முன்வரவேண்டும்.
வெளிவிவகாரக்கொள்கையுடன் தொடர்புடைய பல்வேறு விவகாரங்களிலும் தோல்வியடைந்திருக்கும் மோடி அரசாங்கம், இலங்கை விவகாரத்திலும் தோல்வியடையக்கூடாது என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்டவாறு இலங்கைக்கான கடனை உடனடியாக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் ஓர் நீண்டகாலப்பங்காளியை இந்தியாவினால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அவ்வாறில்லாவிட்டால் சீனாவிற்கு மற்றுமொரு கனிஷ்ட பங்காளி கிடைப்பதை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எச் ராஜாவுக்கு ஒரு நீதி..கோவை .ராமகிருஷ்ணனுக்கு ஒரு நீதியா? கி.வீரமணி முதல்வருக்குக் கேள்வி!

ராஜாவுக்கு ஒரு நீதி...ராமகிருஷ்ணனுக்கு ஒரு நீதியா?  கி.வீரமணி முதல்வருக்குக் கேள்வி!

மின்னம்பலம் : கோவை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷாகா பயிற்சி நடைபெற்றதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தடுத்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் சில நாட்களாக நடந்து வருகிறது. தகவல் தெரிந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் டிசம்பர் 30 ஆம் தேதி அந்த பள்ளிக்கு எதிராக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 மாலைமலர் : அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:  கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டமன்ற  கூட்டத்தொடர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டு வந்தது. கடந்த மாதம் வரை கொரோனா பரவல் குறைந்திருந்த காரணத்தால் வருகிற 5-ந்தேதி தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தஞ்சையில் 500 கோடி மதிப்புடைய பச்சை நிற மரகத லிங்கம் மீட்பு

சோதனை

  Shyamsundar -   Oneindia Tamil  :  தஞ்சாவூர்: திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத லிங்கம் ஒன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கடந்த சில மாதங்களாக காணாமல் போன கோவில் சிலைகள் தொடர்பான தீவிர சோதனைகளை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் காணாமல் போன பல்வேறு கோவில் சிலைகளை இவர் தலைமையிலான குழு தேடி வருகிறது.
தொடர் சோதனைகளை அடுத்து பல்வேறு சிலைகள் கண்டிபிடிக்கப்பட்டு சிலை கடத்தல் கும்பல்களும் கைது செய்யப்பட்டு வருகிறது.

காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் நெரிசல்- 12 பேர் பலி!

 நக்கீரன் : ஜம்மு- காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். />புத்தாண்டையொட்டி, வழிபட வைஷ்ணவி தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி டெல்லி, ஹரியானா, ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது.

ஆரிய படையெடுப்பு கட்டுக்கதையா? கரக்பூர் ஐஐடி காலண்டரால் தீவிரமாகும் சர்ச்சை - முழு விவரம்

ஐஐடி கரக்பூர் நாட்காட்டி
BBC -பிரபாகர் மணி திவாரி  -     கொல்கத்தாவில் இருந்து பிபிசி ஹிந்திக்காக : ஐஐடி கரக்பூர் நாட்காட்டி
பட மூலாதாரம், IIT KHARAGPUR
இந்திய தொழில்நுட்பக் கழகம்-கரக்பூரின் 2022 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியில் இடம்பெற்ற ஆரிய படையெடுப்பு கட்டுக்கதையை நிராகரிக்கும் கருப்பொருள், கடந்த வாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியது. ஆனால், இது வெறும் நுனிப்புல் அளவு மட்டுமே என்று கூறுகிறார் அந்த நாள்காட்டியின் கருப்பொருளுக்கு பின்புலமாக இருந்த பேராசிரியர் ஜாய் சென்.
மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூரில் இந்தியாவின் பழமையான இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (IIT), இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து அடிபடுகிறது.

திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி... ஊரடங்கு கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள்..

 கலைஞர் செய்திகள்  : திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
    மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

ராஜேந்திர பாலாஜி இருநாட்களில் கைது? இருவரை கைது செய்த தனிப்படை போலீஸ்!

 Govindaraji Rj - | Samayam Tamil :  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பண மோசடி வழக்குகளில் கைது செய்ய போலீசார் தேடி வரும் நிலையில், அவர் டெல்லி செல்ல உதவியதாக தருமபுரியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3 கோடியை பெற்றுக்கொண்டு பண மோசடி செய்ததாக அவர் மீது விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.