திங்கள், 3 மே, 2021

கோயில்கள் தோறும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி

கோவில்கள் நிறைந்த இடத்தில் எல்லாம் தி மு க வே வெற்றி. அதான் தமிழகம். அதனால் தான் சொல்லுகிறோம் சங்கிகள் கூச்சல் இங்கே பலிக்காது பழனி
திருவாரூர்

திருச்சந்தூர்
ஸ்ரீ ரங்கம்
மதுரை
கும்பகோணம்
தஞ்சை
மைலாப்பூர்
ராமேஸ்வரம்
திருவையாறு
திருத்தணி
திருவண்ணாமலை
கடவுளையும் மதத்தையும் பிரதானமாக வைத்து பிரச்சாரம் செய்தது பாஜக அதற்கு துணை நின்றது அதிமுக.
தமிழகத்தில் முக்கிய கோவில் திருத்தலங்கள் உள்ள இடங்களில் எல்லாம் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
பாஜவின் வெறுப்பு பிரச்சாரம் இங்கு தோல்வியில் முடிந்துள்ளது.
திமுக தான் இனி மக்களுக்கான இயக்கம் என்பதை மக்கள் தங்கள் வாக்கால் சான்று கூறி இருக்கின்றார்கள் shared

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை..” - திருமாவளவன் பெருமிதம்!

"This is the first time in the history of Tamil Nadu elections .." Thirumavalavan
nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு : இந்தியாவில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அதன் மாநில கட்சிகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.;தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் திமுகவிற்கும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன், மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தும், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக மீது அவதூற்றை பரப்பிய பத்திரிகையாளர் கே ஆர் அதியமான் மீது சட்ட நடவடிக்கை?

May be an image of 1 person, outdoors and tree
May be an image of text that says 'σσο ps://eservices.tnpolice.gov.in Name Gender BALAMURALI Date of Birth MALE 28/02/1987 Address Mobile No. E-Mail ID Subject Detalls of Complaint Date of Occurrence CYBER OFFENCES (இனை 03/05/2021 Place of Occurrence SOCIAL MEDIA. Description REGARDING THE NEWLY ELECTED GOVERNMENT OF THE STATE OF TAMILNADU AND ITS MEMBERS OF THE DMK PARTY, SOME ANTISOCIAL ELEMENTS HAVE SPREAD FALSE NEWS WITH Want to attach documents [Max. 500KB (PDFPNG,JPEG) files allowed] Yes No File Upload ChooseFile No file chosen social ipg 159.0 KB Available File 341.0KR'கார்த்திக் புகழேந்தி  :காலை ஏழுமணியளவில் பத்திரிகையாளர் அதியமான் ஒரு பதிவு எழுதுகிறார். புதிதாக அமையவுள்ள அரசு பற்றித் தன் தொழிலதிபர் நண்பருடனான செல்போன் உரையாடல் குறித்தது அந்தப் பதிவு. ;"கேள்விப்பட்டேன். சொன்னேன்" என்கிற ரீதியிலான புறணி பேசும் பதிவு அது.
48 நிமிடங்கள் கழித்து அது என் கண்ணில்பட்டபோது, அதை நான் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனது பக்கத்தில் "Fiction writer எல்லாம் பிச்சை வாங்கணும்" என்று பதிந்திருந்தேன்.
அதில் ஏன் தன்னை Tag செய்யவில்லை என்று கேட்ட அதியமானுடன் உரையாடல் முற்றியது.
அந்த உரையாடலிலே நான் அவருடைய பதிவினை Cooked Up Story என்றேன். (கற்பனைக் கதை என்ற சொல்லாடல் அப்போதுதான் எழுந்தது. ) அவர் அதனை மறுத்தார்.
கோபமடைந்தார். என் முட்டாள்தனம் என்றெல்லாம் வார்த்தைகளைச் சிதறவிட்டார். அதன்பிறகே, அதிமுக எஸ்.பி.வேலுமணி அரசு நிலத்தை அபகரித்த பதிவை புகைப்படத்துடன் பதிந்தேன்.
தொடர்ச்சியாக அதியமானின் கருத்து ட்விட்டர் - ஃபேஸ்புக்கில்  விமர்சனத்திற்கு உள்ளானது. பிறகு தான் எழுதிய  பின்னூட்டங்களை நீக்கத் துவங்கிய அதியமான் இறுதியாக, எழுதிய பதிவையும் நீக்கிவிட்டார்.

திமுக மேல் அவதூறு பரப்புவோர் மீது ஏன் வழக்கு போடுகிறார்கள்

 சக்தி ராஜேஸ்வரி  :  KSR பொறியியல் கல்லூரியை கனிமொழி அவர்கள் எழுதிவாங்கியதாக 2013 வாக்கில் ஒரு புரளி கிளம்பியது... அப்போது நான் அங்கே படித்ததால் சில பேர் என்னிடமே கனிமொழி காலேஜா எனக் கேட்டார்கள்..
நான் அப்படி எல்லாம் இல்லை எனச் சொன்னாலும் யாரும் நம்பத் தயாரில்லை.. இதோ நான் அங்கே படித்து முடித்து ஏழு வருடங்கள் ஆகிறது. அதன் நிறுவனர் ரங்கசாமிதான் இப்போதும் தலைவர்.
இதேப் போலத்தான் அன்றைய காலங்களில் திமுக அந்த மெடிகல் காலேஜ் பிடிங்கிடுச்சு, இந்த இன்ஜினியரிங் காலேஜ் பிடிங்கிடுச்சு, சரவண பவனை வாங்கியாச்சு எனப் பேசினார்கள்.. யாரும் அது பொய் என நினைக்கவில்லை..தங்கள் விருப்பப்படி அதைப் பேசி பரவலாக்கினார்கள். அதனால் திமுக மீது ஒரு பயமும் எதிர்ப்பும் வந்தது.
இன்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதனால் திமுக இழந்தது அதிகம்.. எதைப் பொது வெளியில் பேச வேண்டும், எதை சமூக வலைத்தளங்களில் பேச வேண்டும், கேட்ட செய்தியை எப்படி எழுத வேண்டும், உண்மை செய்தியை எப்படி எழுத வேண்டும் என வரையறை உள்ளது..

A.R.ரஹ்மான் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடைய வாழ்த்துகள்

அரசியல் ரீதியாக வாழ்த்திய A.R.ரஹ்மான் - சம்பிரதாயமாக வாழ்த்திய ரஜினிகாந்த்

 

மின்னம்பலம்  :தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடைய இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அது சார்ந்த வெற்றி தோல்வி சம்பந்தமாக இதுவரை ரஹ்மான் வாழ்த்து செய்திகள் தெரிவித்தது இல்லை. முதல்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் சார்ந்து வாழ்த்து செய்தியை வெளியிட்டிருப்பது திரையுலகில் மட்டுமல்லாது அகில இந்திய அரசியல் வட்டாரத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனக்கு என்று தனித்துவமான அரசியல் நிலை இருந்தாலும் பொதுவெளியில் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதில் நடிகர் ரஜினிகாந்த் எல்லா அரசியல் கட்சியினருக்கும் பொதுவானவராக வெளிக்காட்டிக்கொள்ள தவறியதில்லை.

முதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

முதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
maalaimalar :தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
ம >சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.    தி.மு.க. 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.    வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலையில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர்.     தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கும் தலைவர் ஸ்டாலினுக்கும் திரு மனோ கணேசன் வாழ்த்து

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.-தமுகூ

Mano Ganesan : தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.-தமுகூ தலைவர் மனோ கணேசன்!

நமக்கு, தமிழக-இந்திய திமுக பற்றி தெரியும். அப்படியே அஇஅதிமுக, பிஜேபி, காங்கிரஸ், நாம் தமிழர், பாமக, மதிமுக, விசிக பற்றியும் தெரியும். அங்கே மாநில கட்சிகளுக்கு இருக்கின்ற அரசியல் அதிகாரம் பற்றியும் தெரியும். இலங்கை முழுக்க செயற்படும் தமிழர், முஸ்லிம் கட்சிகளையும் தெரியும். நமது ராஜ-தந்திர அரசியல்வாதிகளையும் தெரியும் 2005ல் முதன் முறையாக எப்படி மஹிந்த வென்றார் என்றும் தெரியும். ரணில் எப்படி தோற்றார் என்றும் தெரியும்.     பிறகு, இறுதி யுத்தம் எப்படி நடந்தது என்பதும் தெரியும். அப்பாவி மக்கள், எப்படி கொல்லப்பட்டார்கள் என்றும் தெரியும்.

பிறகு, 2010ல் மஹிந்த எப்படி மீண்டும் வென்றார் என்றும், இறுதி யுத்தம் நடத்திய ராணுவ தளபதி சரத் பொன்சேகா தேர்தலில் வேட்பாளரானதும், அவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததும் தெரியும்.
ஆயுத வரலாறு முழுக்க நிகழ்ந்த படுகொலைகளையும், சகோதர படுகொலைகளையும் தெரியும்.
யுத்தம் நடத்திய கட்சி சார்பாக நேரடியாகவே தமிழ் எம்பிக்கள், தேர்தலில் வாக்கு பெற்று, தெரிவாகி, இன்றைய இலங்கையின் 9வது பாராளுமன்றத்தில் என்னுடன் இருப்பதும் தெரியும். Mano Ganesan greet Stalin

தமிழ்நாட்டின் மொத்த 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள் திமுக கூட்டணி பக்கமே சாய்ந்திருக்கின்றன .

திமுகவின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று... மு.க. ஸ்டாலிதான் அடுத்த  முதல்வர்... கனிமொழி தாறுமாறு கணிப்பு..! | DMK victory is certain ... Stalin  is the next Chief ...

Joe Milton  : திமுகவின் வெற்றியை குறைத்து மதிப்பிட களமாடிக் கொண்டிருக்கும் போராளிகள் கவனத்துக்கு ..
தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள் திமுக கூட்டணி பக்கமே சாய்ந்திருக்கின்றன .
சென்னை (16/16)
திருவள்ளூர் (10/10)
திருச்சி (9/9)
காஞ்சிபுரம் (4/4)
ராமநாதபுரம் (4/4)

பிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம்

பிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம்

minnambalam :ராஜன் குறை

நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி பிரிட்டிஷ் அரசின் கீழ் இரட்டையாட்சி முறையில் அன்று மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று அழைக்கப்பட்ட ஆட்சிப் பகுதிக்குப் பொறுப்பேற்றது. திராவிட, தமிழ் தனித்துவம் குறித்த சிந்தனை அதற்கு முன்பே பல பெரியோர்களால் முன்மொழியப்பட்டிருந்தாலும், பார்ப்பனதல்லோதார் அறிக்கையை 1917ஆம் ஆண்டு வெளியிட்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றபோதே திராவிட அரசியல் சகாப்தம் என்பது துவங்கியது எனலாம். நூறாண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்கும் தருணத்தை, திராவிட அரசியலின் புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றே வரலாறு குறித்துக்கொள்ளும்.

ஸ்டாலினுக்காக நள்ளிரவில் 'விழித்திருந்த' கலைஞர்

ஸ்டாலினுக்காக நள்ளிரவில்  'விழித்திருந்த'    கலைஞர்

 கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2019 minnambalm : நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றார். அதன்பின் இப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தைத் தாண்டிய பலத்தோடு திமுக வெற்றி பெற்று ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்கிறது.

மே 2ஆம் தேதி இரவு தனது வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் இரவு 11.55க்கு அங்கிருந்தே கலைஞர் நினைவிடத்துக்குத் திரும்பினார். ஸ்டாலினின் வெற்றிச் சான்றிதழை சேகர் பாபு பத்திரமாக எடுத்துக்கொண்டு பின் தொடர, நள்ளிரவில் கலைஞர் நினைவிடத்தை அடைந்தார்.

தேர்தல் நாளிலும், வாக்கு எண்ணிக்கை நாளிலும் கலைஞர் முற்று முழுதாக உறங்குவதில்லை. அதேபோல நேற்று இரவு நினைவிடத்தில் சிரித்துக்கொண்டிருந்த கலைஞரின் ஓவியம் முன்னே கண்ணீர் கசிய சில நிமிடங்கள் நின்றார் ஸ்டாலின். அப்போது அருகே இருந்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் போன்றோர் ஸ்டாலினின் உணர்ச்சிகளைக் கண்டு சிலிர்த்துப் போய் நின்றனர்.

சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. 10 வருட "வெயிட்டிங்கும்".. 10 "சக்ஸஸ்களும்".. தனிப்பெரும் தலைவரானார்..!

May be an image of 1 person

Hemavandhana  - /tamil.oneindia.com : சென்னை: இது எதிர்பார்த்த ரிசல்ட் என்றாலும், திமுக வரலாற்றில் வைரத்தால் சூட்டப்படும் இன்னொரு மணிமகுடம் ஆகும்..
இந்த வைர கிரீடத்துக்கு சொந்தக்காரர் முக.ஸ்டாலின்..!
10 வருடமாக ஆட்சியில் இல்லை திமுக..சென்ற முறை 1.1 சதவிகித வாக்கு சதவீதத்தை நூலிழையில் தவறவிட்டது..
அந்த கடைசி ஒரு வாரம் ஒருசில தொகுதிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது..
64 ஓட்டுகளில் இருந்து 2000 ஓட்டுகளுக்கு திமுக கூட்டணி 28 இடங்களில் தோல்வியை தழுவியது ஜீரணிக்க முடியாத ஒன்று.
ஆனால், இந்த 5 வருடம் அதிமுக ஆட்சிதான் திமுகவுக்கு பிளஸ் ஆக அமைந்துவிட்டது..
நீட் தேர்வு அமல்படுத்தியதன் விளைவு,
முதல் தலைமுறை வாக்காளர்கள் அதாவது கிராமத்து இளைஞர்கள் அப்படியே அதிமுகவுக்கு எதிராக திரும்பியதுதான் திமுகவின் முதல் சக்சஸ்!

பாஜக பாஜக ஆளும் தரப்பு மீதான அதிருப்தியும், பாஜக மீதான உச்சக்கட்ட கோபமும், திமுகவுக்கு சாதகமான சூழலை பெற்று தந்தது.
அதிலும், லேடியா? மோடியா சவால் விட்ட கட்சியே இன்று, பாஜகவிடம் சரணடைந்ததை அதிமுக தொண்டர்களே ஏற்று கொள்ளவில்லை..
இதுவும் திமுகவின் இரண்டாவது சக்சஸ்..!

நந்திகிராம் முடிவு மமதா பானர்ஜி தோற்றது உண்மையா?

மமதா பானர்ஜி
BBC :மேற்கு வங்க தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 294 இடங்களில் 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதையடுத்து, அக்கட்சி மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகி விட்டது.ஆனால், நந்திகிராம் தொகுதியில் தேர்தல் களம் கண்ட முதல்வர் மமதா பானர்ஜிக்கும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரிக்கும் இடையே தேர்தல் முடிவுகளில் யார் வென்றது என்ற சர்ச்சை தொடர்ந்து நிலவியது.

தொடக்கம் முதலே ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், மாலையில் மமதா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக தகவல் வெளியானது. பிறகு இரவு 8 மணியைக் கடந்த வேளையில், மமதா பானர்ஜியை விட சுவேந்து அதிகாரி 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மறு கூட்டலுக்கு மமதா பானர்ஜி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மார்வாடிகளின் தமிழ்நாட்டு அரசியல்... சமூகவலையில் ஒரு விவாதம்

 நூர் கா.மு  : தமிழக மார்வாடிகள் ஆதிக்கம் பற்றி கொஞ்சம் கவனிக்க வேண்டிய தேவை உள்ளது.   .
நேற்று அசந்த நேரம் சேகர் பாபு அண்ணணிற்கே விபூதி அடிக்க பார்த்தார்கள்.இவர்களின் பெருக்கம் மற்றும் இவர்கள் அரசியல் நிலைப்பாடு தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல.
எல்லா ஊரிலும் கணிசமான அளவில் இவர்கள் எண்ணிக்கை அதிகமாக ஆகிறது.அதிலும் இவர்களின் சில பண்டிகைகளுக்கு இறைச்சி கடையை சாத்த சொல்லும் நிலைக்கு இவர்கள் தலையீடு இருக்கிறது.இதை எல்லாம் இனி அனுமதிக்கவே கூடாது.1,2 குடும்பங்கள் என்று இருந்தவர்கள் இன்று ஊருக்கு 1000 குடும்பங்கள் என்று வளர்ந்து விட்டார்கள்.
இவர்கள் இங்கு இருக்க கூடாது என்று சொல்லவில்லை அவ்வாறு சொல்வது தவறு.ஏனெனில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இந்திய ஒன்றிய குடிமகன் ஒன்றியத்தில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என அனுமதி அளித்து இருக்கிறது.
ஆனால் இவர்களின் மதவாத அரசியல் சரி செய்யப்பட வேண்டும், இவர்கள் அரசியல்ரீதியாக இந்த மண் சார்ந்த அரசியலில் ஈடுபட செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இவர்களின் வியாபாரத்தையும் நெறிமுறைப்படுத்த வேண்டும்.நிச்சயமாக நம் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும் சில தொழில் வாய்ப்புகள் இவர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்பது உண்மை.
சண்முக நாதன்  : இவர்களுக்கு இரட்டை வாக்குரிமை உள்ளது
இங்கு இவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும்
நூர் கா.மு   : ஆம் அண்ணா.. இவர்களின் அரசியல் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.
Md Ibrahim B  :நூறு சதவீத உண்மை



ஞாயிறு, 2 மே, 2021

வன்னி அரசு மற்றும் கௌதம் சன்னா ஆகியோரின் தோல்வி... ஒரு விரிவான அலசல்

Meena Somu : அரக்கோணத்தில் கௌதம் சன்னா மற்றும் வானூரில் வன்னி அரசு ஆகியோரின் தோல்வி. அமைப்பாய் திரளாத பட்டியலின மக்களின் ( அரக்கோணம் 60% மக்கள் தொகை பட்டியலினம்) தோல்வி. ஒவ்வொரு தேர்தலிலும் சும்மா குறுக்கு மறுக்காக ஓடிட்டு இருக்கிற BSP ஒரு தொகுதியிலாவது குறைந்தபட்சம் வாக்காவது பெறுகிறார்களா ? பின் எதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் நின்று தனித்தொகுதிகளின் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு விழவேண்டிய அந்த குறைந்த அளவு ஓட்டையும் பறிக்கிறார்கள் ? அவர்கள் மட்டுமல்ல, பட்டியலின மக்களின் ஒருங்கிணைப்பை தடுக்க அந்தந்த பகுதியில் பிஜேபியின் லெட்டர் பேட் கட்சிகள் இன்று பல கிளைகள்விட்டு இருக்கின்றன. அவை பிஜேபியை நோக்கி பட்டியலின மக்களை இழுக்க பல ஆண்டுகளாக களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. இத்தனை back up இருந்தும் அருந்ததியர் என்ற tag வைத்துக் கொண்டிருந்தும் எல்.முருகனை வீழ்த்தியது... ஒருவிதத்தில் பிஜேபியின் வியூகத்திற்கான சறுக்கல் என சொல்ல வேண்டும்.
அடுத்து, நாம் தமிழர் கட்சியில் தஞ்சம் புகுந்து, சீமான் அரசியல் பேசும் பட்டியலின இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
முக்கியமாக இரட்டை இலை, உதய சூரியன் என காலம் காலமாக ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்களுக்கு, இன்றிருக்கும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

ஸ்டாலின் வீட்டுக்குப் படையெடுக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்!

minnambalam : சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 156 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது. சில தொகுதிகளின் முடிவுகளே இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தின் உயர் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பிற்பகல் முதலே சென்னை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு பொக்கேக்களோடு சென்று அவரை வாழ்த்தத் தொடங்கிவிட்டனர்.

முன்னாள் ஐஜி சந்திரசேகர், முன்னாள் டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஒருபக்கம் என்றால்... இன்னொரு பக்கம் தற்போது பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டுக்கு பொக்கேக்களோடு போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரிகளில் ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரி சங்கர் ஜியால் ஐபிஎஸ், டிஜிபி ரேங்க்கில் இருக்கும் கந்தசாமி, வருண் குமார் ஐபிஎஸ், ஐஜி சாரங்கன், டிஜிபி ரேங்க்கில் இருக்கும் ஷகில் அக்தர் ஐபிஎஸ், ஐஜி பிரமோத்குமார், டிஜிபி ரேங்க் கரன் சிங், டிஜிபி ரேங்க் சைலேந்திரபாபு ஐபிஎஸ், ஏடிஜிபி ரேங்க் மஞ்சுநாத் உள்ளிட்டோர் ஸ்டாலினை சென்று சந்தித்து அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

மம்தாவின் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வி என அறிவிப்பு! நீதிமன்றம் செல்கிறர் மம்தா திடீரென மாறிய முடிவுகள்

 நக்கீரன் செய்திப்பிரிவு :   :தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
 மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 213 இடங்களில் முன்னணி வகிக்கிறது.
பாஜக கூட்டணி 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் வெற்றி உறுதியாகியுள்ளது.
 அதுநேரத்தில் 1200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட மம்தா பானர்ஜி, திடீரென தோல்வியடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவிட மாநிலங்களின் எழுச்சி!

May be an image of 2 people

தமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவிட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் உலகுக்கு ஒரு உரத்த செய்தியை கூறியிருக்கின்றன!
உபகண்டத்தில் மதவாதிகளுக்கும் பாசிஸ்டுகளுக்கும் இனி இடமில்லை என்ற செய்தியை முரசறைந்து கூறியுள்ளார்கள் ..
கேட்க செவி இருப்போர் கேட்டுக்கொள்வார்கள்!
புரிந்து கொள்ளும் மனமுடையோர் தங்கள் கண்களை அகல திறந்து கண்டு கொள்வார்கள்!
சமூகநீதி பாதையில் பயணிக்க இந்த மண்ணின் மைந்தர்கள் தீர்மானித்து விட்டார்கள்!
இம்மாநிலங்களின் இன்றைய தீர்ப்பை உலகம் எழுந்து நின்று வரவேற்கும்!
இந்த மாநிலங்களின் சமூகநீதி பயணம் இனி எந்த தடைகளையும் உடைத்து ஏறிய தயங்காது.
இவர்களின் பயணத்தை தடுக்க கருதும் எந்த சக்தியும் அடையாளம் இழந்து காலாவதியாகும்.
இன்றைய நாள் இவர்கள் புதிய உலகுக்கு கூறிய செய்தி மானுட மேன்மைக்கானது!
நான் வட அமெரிக்க கண்டத்தில் தற்போது இருக்கிறேன்!
ஆனால் மனதளவில் எப்போதும் இந்த திராவிட மாநிலங்களின் மக்களுக்கு நெருக்கமாகவே இருக்கிறேன்  
இம் மூன்று மாநிலங்களும் இன்று முழங்கிய அறைகூவலை  நான் எழுந்து நின்று இரு கரம் நீட்டி முழு மனதோடு வரவேற்கிறேன்   
வாழ்க சுயமரியாதை!
வாழ்க சமூகநீதி!
வாழ்க திராவிடம்! செல்லபுரம் வள்ளியம்மை

கலைஞர் செய்திகள் .. 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேரலையில்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் சத்தியம் செய்திகள் நேரலையில் SathiyamTV | TN Election Results |

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாலிமர் செய்திகள் நேரலையில் Polimer T N Election Results live

கேரள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேரலையில் Kerala Assembly Election Results Malayalam News

மே.வங்கம் தமிழ்நாடு கேரளம் புதுவை அசாம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியா டுடே நேரலையில் Assembly Results Live Bengal, Tamil Nadu, Kerala Results India Today Live

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேரலையில் LIVE: Sun News TN Election Result

உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட 706 ஆசிரியர்கள் கோவிட் காரணமாக உயிரிழப்பா?

சமீராத்மஜ் மிஷ்ரா லக்னெளவிலிருந்து இந்தி பிபிசிக்காக     உத்தரபிரதேசத்தில் கொரோனா அலைக்கு இடையே பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படுவது குறித்து ஆரம்பத்திலிருந்தே கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் இப்போது கொரோனா தொற்று காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவது வேறுவிதமான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டு உயிரிழந்ததாக கூறப்படும் 706 ஆசிரியர்களின் பட்டியலை , மாநில தேர்தல் ஆணையம் மற்றும் உ.பி. முதலமைச்சரிடம் ஒப்படைத்த ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சங்கம், மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறும் கோரியுள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரியுள்ளன. அதே நேரத்தில் ஆசிரியர் சங்கத்தின் இந்த கூற்று குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

பயிற்சி அளிப்பதிலிருந்து வாக்குப்பதிவு வரை மாநில தேர்தல் ஆணையம் எங்குமே கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறத்தவில்லை என்று ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக நிலைமை மோசமானது.

ஜெர்மனியில் ஒரு அகதியின் மரணம் ... Hemsbach என்னும் கிராமம்;

May be an image of 2 people, people standing and text that says 'PYBIRTA NYC74 மரணத்தை தழுவிய அந்த இளைஞர்..!'

Martin Jeya  : iஓர் அகதியின் மரணம்...!
ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..!
அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும் பாதித்திருந்தது...!
அவர் வாழும் பொழுது தனக்கு எந்த உறவுகளும் ஜேர்மனியில் இல்லையென்பதை ஒரு முறை எனது மனைவியுடன் உரையாடும் பொழுது தெரிவித்தாராம்..! தனக்கு என்ன வேலையென்றாலும் எடுத்து தரச்சொன்னாராம்..!
அதுதான் முதலும் கடைசியுமாக என் மனைவி அவரை வீதியில் கண்டது.
அதன் பின்னர் துணைவியார் என்னிடம் இது தொடர்பாக கதைத்திருந்தார்; முடிந்தால் அவருக்காக வேலையொன்று பெற்றுக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன்..!