வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

அமரர் ராஜீவ் காந்தியும் ஏழுபேர் விடுதலையும்

அமரர்  ராஜீவ் காந்தியை கொலைசெய்தவர்களை மன்னித்து விட்டதாக திரு ராகுல் காந்தி கூறியது அவரின் மேன்மையை காட்டுகிறது  .பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்பதற்கு அமரர் ராஜீவ் காந்தி குடும்பம்தான் நிகழ்கால சான்று .
இங்கே ஒரு விடயத்தை கூறவேண்டும் என்று எண்ணுகிறேன் .
ராஜீவ் காந்தியை கொலை செய்தது புலிகள் இயக்கம்  அது ஒரு killing machine என்பதை தவிர வேறு சுருக்கமான விளக்கவுரை கிடையாது.
அதன் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் போன்றோர் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு உடையவர்கள் ஆகிறார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் புலி ஆதரவு அரசியல் சக்திகள் ராஜீவ் கொலையை கண்டிக்காதவரைக்கும்  அவர்களும் இதற்கு பொறுப்பானவர்கள்தான் .
வெறுமனே ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தால் கூட ஏற்று கொள்ளமுடியுமா என்பது கேள்விக்குறிதான் . ஆனால் பலர் இன்னும் அதை கண்டிக்க கூட இல்லையே?
அது மட்டுமல்ல அதை நியாயப்படுத்தவும்கூட தயாராகவே உள்ளார்களே?
அப்படியாயின் அந்த killing machine இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது என்றுதானே பொருள்?
நடந்த சம்பவத்தை இன்னும் கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பவர்கள் அந்த குற்றத்தை தொடர்ந்து செய்கிறார்கள் என்றுதானே பொருள் ?

வியாழன், 18 பிப்ரவரி, 2021

சசிகலா அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி உள்ளார் .. தினகரன் திவாகரன் மோதல் வெடித்தது

Veerakumar - tamil.oneindia.com : சென்னை: சசிகலாவை சுற்றியுள்ள சொந்தங்கள், அவருக்கு தலைவலியாக மாறியுள்ளன. சசிகலாவின் தம்பி திவாகரன் எந்த பக்கம் போகப் போகிறார் என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரான காலம் முதல், சசிகலாவின் உறவினர்களால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. ஜெயலலிதாவால் சுதாகரன் தத்துப் பிள்ளையாக்கப்பட்டு நாடே வியக்க ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் மக்களிடையே பெரும் அதிருப்தியை சம்பாதித்தது. அடுத்த எம்ஜிஆர் நான்தான் என்று சொல்லும் அளவுக்கு சுதாகரனுக்கு தைரியம் பிறக்க இதுதான் காரணம்.
இப்படி சசிகலா உறவினர்கள் எல்லை மீறி போனதன் காரணமாக, 1996ம் ஆண்டு தேர்தலில் அதிமுக மிக மோசமாக தோற்றது. பிறகு அவ்வப்போது சில உறவினர்களை போயஸ் கார்டன் வீட்டுக்கு வரக்கூடாது என்று உத்தரவிடுவதும், கட்சியில் இருந்து நீக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதும், வாபஸ் பெறுவதும் ஜெயலலிதா வாடிக்கையாக இருந்தது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தி சிறுவன் கொலை: குற்றவாளிக்கு 3 தூக்கு!

minnambalam :  புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் நம்பர்-1 அம்பிகா பார்க் பகுதியைச் சேர்ந்தவர் டானிஷ் படேல் (34). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் அருகே உள்ள ஒரு தனியார் குவாரியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். 2019 டிசம்பரில், ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை டானிஷ் படேல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 18 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.... இதுதொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டானிஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று நீதிபதி ஆர்.சத்யா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
maalaimalar.com :புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். <
தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி:புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

  daiylithanthi : வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பதிவு: பிப்ரவரி 18, 2021 06:25 AM புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

உதயநிதி ஸ்டாலின் : மருத்துவர் லோகோஷ் குமார் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும்

“அரசு மருத்துவர் மரணத்திலேயே இத்தனை அலட்சியம் என்றால் எளிய மக்களின் நிலை?” - உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
“அரசு மருத்துவர் மரணத்திலேயே இத்தனை அலட்சியம் என்றால் எளிய மக்களின் நிலை?” - உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
kalaignarseithigal.com  :  மருத்துவர் லோகோஷ் குமார் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும். அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ முதலாம் ஆண்டு மாணவர் லோகோஷ் குமார் கொரோனா நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவர் லோகோஷ் குமார் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டை வழங்க அடிமைகள் முன்வர வேண்டும் என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பயங்கர வெற்றி ! . பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது

schema.org : வெற்றிக் களிப்பில் காங்கிரஸ் . பாதின்டா மாநகராட்சியை காங்கிரஸ் 53 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியிருக்கிறது
  • இந்த வெற்றி 2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான டீசர் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கருத்து
  • கட்சிகள் செய்த வஞ்சகத்தையும் துரோகத்தையும் மன்னிக்கவோ மறக்கவோ யாரும் தயாராக இல்லை
  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய விவசாயிகள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.                இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 8 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கடந்த 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நீண்ட கால கூட்டணியான சிரோன்மணி அகாலிதளம் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் இரண்டு கட்சிகளுன் தனித்து களம் கண்டன, அது தவிர, ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இருந்தன.

    துபாய் இளவரசி லதீபா சிறையில். மனித உரிமையாளர்கள் கேள்வி

    tamil.samayam.com: துபாய் மன்னர் ஷேக் முகமதுவின் மகளும், துபாய் இளவரசியுமான லதீபா அல் மக்தோம் 2018ஆம் ஆண்டு நாட்டை விட்டே வெளியேற முயற்சித்தார். அவரது முயற்சிகள் தடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்நிலையில், லத்திபா ஒரு தனி வில்லாவில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. லதீபா தான் அடைக்கப்பட்டிருக்கும் வில்லாவில் இருந்து ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ளது. வில்லாவின் பாத்ரூமில் இருந்துகொண்டு அந்த வீடியோவை அவர் பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. தனது விருப்பத்தின் பேரில் பாத்ரூமில் மட்டுமே அவர் தனியாக இருக்க முடியுமென தெரிகிறது. மற்ற கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

    சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் ரூ.11 கோடி மதிப்புடைய நகைகளை... திருடி இந்தியாவுக்கு அனுப்பிய தமிழக குருக்கள் சிங்கப்பூரில் கைது


    Vigneshkumar - /tamil.oneindia.com : சிங்கப்பூர்: கோயில் நகைகளை கையாடியதாக சிங்கப்பூர் நாட்டிலுள்ள மாரியம்மன் கோயிலின் தலைமை குருக்கள் மீது வழக்குப்பிதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டின் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அந்நாட்டின் மிகவும் பழமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. 194 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் அர்ச்சகராக இந்தியவைச் சேர்ந்த கந்தசாமி சேனாபதி தலைமை குருக்களாக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இவர் தலைமை குருக்களாக இருந்த போது கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகளை கையாடிதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

    இந்த நகைகள் வழக்கமாக கோயில் பூஜைகளின் போது பயன்படுத்தப்படும். இந்த நகைகளை அடகு வைத்த கந்தசாமி, சுமார் 1.40 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை தனது சொந்த காரணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார். இந்தப் பணத்தில் பெரும்பகுதியை அவர் பல்வேறு வங்கிகளை பயன்படுத்தி இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.   Singapore news link

    தோடர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞர் நந்தினி.. பழங்குடிகளுக்கு சட்ட உதவிகள் இலவசம்!'

    nandhini with her father
    nandhini with her father
    vikatan.com/ஊட்டி அருகில் உள்ள தவிட்டுக்கோடு மந்துவை சேர்ந்த இளம்பெண் நந்தினி, தோடர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞராகத் தடம் பதித்துள்ளார். ஊட்டியிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தவிட்டுக்கோடு மந்து (தோடர் பழங்குடிகள் வாழும் கிராமத்தை 'மந்து' என்றே அழைப்பர்). இந்தக் கிராமத்தில் தோடர் வளர்ப்பு எருமைகள் மற்றும் மலைக்காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டுவரும் ஸ்ரீகாந்த்-செண்பகவள்ளி தம்பதியின் மூத்த மகளான நந்தினி, தனது வாழ்நாள் லட்சியமான சட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் தோடர் பழங்குடி இனத்தின் முதல் வழக்கறிஞர் என்ற வரலாற்றுச்‌ சிறப்பைப் பெற்றுள்ளார்...நந்தினியை நேரில் சந்தித்தோம். 'பூத்துக்குளி' எனும் பூ வேலைப்பாடுகள் நிறைந்த தோடர்களின் பாரம்பர்ய போர்வையைப் போர்த்தியபடி வந்தார். விகடனின் சார்பாக நந்தினிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தோம்.

    புதன், 17 பிப்ரவரி, 2021

    ரவுடி என்கவுண்டர்- போலீசாரை தாக்கி தப்பி ஓடியபோது அதிரடி . உதயநிதி மன்றத் தலைவர் தலையைத் துண்டித்தவர்

    பிரபல ரவுடி என்கவுண்டர்- போலீசாரை தாக்கி தப்பி ஓடியபோது அதிரடி
    கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா

    .maalaimalar.com :பண்ருட்டி: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் வீரா என்கிற வீரங்கையன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை-கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. கடலூர் உழவர்சந்தை அருகே ரவுடி வீராவுக்கு சொந்தமான பழக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீரா வீட்டுக்கு புறப்பட்டார்.
    அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் வீராவை பின்தொடர்ந்து சென்றனர். இதனை வீரா கவனிக்கவில்லை.
    சுப்பராயலு நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் வீரா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் வீராவை சுற்றி வளைத்தது.உதயநிதி  மன்றத் தலைவர் தலையைத் துண்டித்தவர்  என்கவுன்ட்டர்!

    டிக்டாக் பிரபலத்திடம் பணம் பறிகொடுத்த ஆண்கள் .. வேற்று மதம் பொய் பெயர் .. போலி கல்யாணங்கள்

    Hemavandhana - tamil.oneindia.com : மயிலாடுதுறை: மீராவுக்கு 40 வயசாகிறது..

    மொத்தம் 5 கணவன்கள்.. இந்த விஷயம் தெரிந்ததுமே, அந்த 4வது கணவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.. ஸ்டிரைட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கே ஓடிப்போய் விட்டார்..!
    மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாலகுரு.. 27 வயசு ஆகிறது.. இவர் ஒரு டிரைவர்.. டிக்டாக் வீடியோவில்தான் முதன்முதலாக மீராவை பார்த்தார்.. மீராவின் அழகில் மயங்கி விழுந்துவிட்டார். நாளடைவில் இது காதலானது.. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர்..
    அதன்படியே திருமணம் நடந்தது.. அப்போதுதான், மீரா என்பது ஒரிஜினல் பெயர் இல்லை, அவர் பெயர் ரஜபுன்னிஷா என்பதும், அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது இதனால் அதிர்ந்து போன பாலகுரு, மீராவின் மீதுள்ள காதலால் அந்த பொய்யை மறந்து வாழ ஆரம்பித்தார்.
    அப்போதுதான் இன்னொரு ஷாக் அவருக்கு வந்தது.. தான் வேலைக்கு போனபிறகு, வீட்டுக்கு யார் யாரோ ஆண்கள் வந்து போவது தெரியவந்தது..
    இதை பற்றி கேட்டதற்கு தகராறு வெடிக்க ஆரம்பித்தது.. மீரா எந்த கேள்விக்கும் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.. ஒருகட்டத்தில் அம்மா வீட்டுக்கு போவதாக சொல்லி கிளம்பி சென்றுவிட்டார்.

    ராகுல் காந்தி: "என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்

    ராகுல் காந்தி
    BBC :எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது உருக்கமாகப் பேசினார். தமிழ்நாட்டில் 1991ஆம் ஆண்டு மே மாதம் ராகுல் காந்தியின் தந்தையும் இந்திய முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் கொலை செய்ததாக நடந்த வழக்கில் சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் சிறை தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பரவலாக கோரிக்கைகள் வலுத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசும், எதிர்கட்சியான திமுகவும் அந்த கோரிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனாலும், இது தொடர்பாக குடியரசு தலைவரே இறுதி முடிவு எடுப்பார் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

    கனலரசன் கைது ..`ராமதாஸின் தூண்டுதலே காரணம்..!’ -சொல்கிறார் காடுவெட்டி குரு மனைவி

    vikatan - க.குணசீலன் : அன்புமணியின் வளர்ச்சிக்கு நாங்க தடையாக இருப்போம் என்கிற காரணத்தால் ராமதாஸ் எங்க குடும்பத்தினரை பல வகையில் சித்ரவதை செய்வதாக காடுவெட்டி குரு குடும்பத்தின் தரப்பில் குற்றம் சாட்டி வந்தனர். அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள காடுவெட்டி குருவின் சமாதிக்கு வந்த அவரின் மனைவி சுவர்ணலதா, “என் மகன் கனலரசன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராமதாஸ் தான் காரணம். அவரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த கைது நடந்துள்ளது. உடனடியாக அவனை விடுதலை செய்யவில்லை என்றால், நான் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவேன்” என எச்சரித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சங்க தலைவராக இருந்தவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குரு, கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து குரு குடும்பத்தினருக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

    அதிமுக 171, பாமக 21, பாஜக 20, தேமுதிக 14, தமாகா 5, இதர காட்சிகள் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக உத்தேச பட்டியல்

    Image result for அதிமுக பாமக பாஜக தேமுதிக

    Rayar A - tamil.oneindia.com : சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பட்டியல் உலா வருகிறது. இந்த உத்தேச பட்டியலில் பாமகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, காட்பாடி, செஞ்சி, பண்ருட்டி உள்பட 21 இடங்களில் பாமக போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாக இந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணியையும் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது தெரிந்த ஒன்றுதான். வி.சி.,க. இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெரும் என தெரிகிறது. 

    பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக, தேமுதிக கூடுதல் சீட் கேட்டு காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் பாமக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பாமகவுடன் தமிழக அமைச்சர்கள் பலகட்டம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    108 ஆடுகள் வெட்டி சீமான் கறி விருந்து

    dhinamalar :சிவகங்கை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன்
    Seeman,சீமான்,கறி விருந்து ,நாம் தமிழர் கட்சி

    , பிரபாகரனின் காதணி மற்றும் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. குலதெய்வ கோவிலான சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவிலில் நடந்த விழாவில், பங்கேற்ற கட்சியினர், தொண்டர்களுக்கு சீமான், 108 ஆடுகள் வெட்டி கறிவிருந்து அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயி மட்டும் தான், உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.   இந்த நிலை மாறாத வரை, அரசு பயிர்கடன் தள்ளுபடி செய்தாலும், விவசாயிகள் மீண்டும் கடனாளியாகவே மாறுவர்.சசிகலா வருகை, அ.தி.மு.க.,வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.     நாம் தமிழர் கட்சி எட்டு கோடி தமிழர்களிடம் மட்டுமே, கூட்டணி வைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, தமிழகம் வெற்றி நடைபோடும்.இவ்வாறு அவர் கூறினார்

    கொரோனாவால் 24 மணி நேரத்தில் 18 மாநிலங்களில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை

    dailythanthi.com : புதுடெல்லி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. வலுவான சுகாதார கட்டமைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சுகாதார பணியாளர்களாலும் கொரோனா மீட்பில் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது. நேற்றும் கூட 24 மணி நேரத்தில் நாட்டில் 11 ஆயிரத்து 805 பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் 5,073 பேரும், மராட்டிய மாநிலத்தில் 3,105 பேரும் கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.   நமது நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 33 ஆயிரத்து 25 ஆக உயர்ந்து இருக்கிறது.

    தமிழகம் எங்கெங்கும் வட இந்தியர்கள்! அடையாளம் இழக்கும் தமிழ்நாடு!

    May be an image of one or more people, people standing and outdoors
    தமிழகத்தின் வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம் அனைத்தும் வட இந்தியர் 

     

    சாவித்திரி கண்ணன் : · தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்திலும் இப்படியான ஒரு சூழல் கிடையாது..! ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில் – மக்கள் செல்வாக்கோ, ஆளுமையோ இல்லாத ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் தலைமைக்கு தமிழக அரசின் அதிகாரம் கைமாறியதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5 சதவிகிதம் வட மாநிலத்தவர் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம்…அனைத்தும் வட இந்தியர் வசம் சென்று கொண்டுள்ளதை கவனப்படுத்துகிறது இந்த கட்டுரை! ஆனால், இது குறித்த தமிழக மக்களின் அதிர்ச்சி, கவலை, அச்சம் எதையுமே மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவே தயாரற்ற நிலையும் நிலவுகிறது. 2017-ஆம் ஆண்டுமுதல் ரயில்வே, அஞ்சல்துறை,என்.எல்.சி,பாரத மின்மிகு நிலையம், வருமானவரித் துறை,உளவுத் துறை,வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பொதுப்பணித்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வட மாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருகிறது.

    கொள்கை சார்ந்த அரசியலை மக்கள் புரிந்து கொள்கிறார்களா? Are we deserved for Ideological politics!!

    Kandasamy Mariyappan - திராவிட ஆய்வு : · தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கே திராவிட சித்தாந்தம் மிகவும் முக்கியமான ஒன்று, மாற்று கருத்தில்லை! ஆனால், திமுக தலைவர் திரு. முக. ஸ்டாலின், பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் மற்றும் உதயநிதி அவர்கள் வேலுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த, தங்களை முற்போக்குவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர்... அய்யோ திமுக கொள்கையை விட்டு விலகி சென்று விட்டது! இது திமுகவிற்கும் நல்லதில்லை, தமிழ்நாட்டிற்கும் நல்லதில்லை என்று பதிவிட்டு பேசி வருகின்றனர்! மேலும், திமுக Soft Hindutvaவை கடைபிடிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் வைக்கின்றனர்!
    இதனை எப்படி பார்ப்பது!
    உண்மையில் இந்த மண், கொள்கைக்கான மண்தானா!?
    Are we deserved for Ideological politics!!???!!!
    காரணம், கொள்கை என்பது ஒரு கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மட்டுமே கடைபிடித்தால் போதுமா! மக்களும் அதனை உள்வாங்கிக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் வாழ்ந்து காட்ட வேண்டாமா!
    தமிழ்நாட்டில் நடந்தது மற்றும் நடப்பது என்ன!!??
    கொள்கை, புண்ணாக்கு என்று வாழ்ந்து வந்த கலைஞரையும், திமுகவையும் அழிக்க வேண்டும் என்ற வெங்கட்ராமன்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடமும், மத்திய அமைச்சரவையிலும் திரு. ராமச்சந்திரன் கொடுத்திருந்த பொழுதும், தனது தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிந்த பிறகும்...
    இந்த நாட்டுக்கே ஒரு பிரச்சினையாக இருந்த எமர்ஜென்சியை...
    அச்சுத மேனன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் கட்சியே எதிர்க்காத போதும், கொள்கை, புண்ணாக்கு என்று ஒற்றை மனிதராய் எதிர்த்து நின்று ஆட்சியை பறிகொடுத்தவர் கலைஞர்!

    செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

    கிரண்பேடி பதவி நீக்கம் - நாராயணசாமி வரவேற்பு! ..புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை

    May be an image of 2 people and text that says 'புதிய தலைமுறை உண்மை னுக்கு ன் BREAKING NEWS புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா? புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர் அமைச்சர் கந்தசாமி அரசை கவிழ்க்க சதி நடப்பதாக கூறி, அமைச்சரவையை தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்ய முதலமைச்சர் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது - Puthiya Thalaimural TV PTTVOnlineNews Ûumurai 16/02/2021 dishty Dairtet SUN 一® jongioon T้ดอาม புதிய தலைமுறை BREAKING NEWS உண்மை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பு வகிப்பார் குடியரசுத் தலைவர் அறிவிப்பு Puthiya Thalaimural V PTTVOleNews Ûr Daltal 16/02/2021 Puthyathalaimural'
    நக்கீரன் செய்திப்பிரிவு : பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆளாகி வந்த புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுவை துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஆளுநரின் பதவி நீக்கத்தை அம்மாநில எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் வரவேற்றுள்ளார்கள். இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கிரண்பேடி தன்னிச்சையாகச் செயல்பட்டார். எங்களின் தொடர் போராட்டத்திற்குப் பின் கிரண்பேடியை மாற்றியதை வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளா

    தேவேந்திர குல வேளாளர்கள்- மத்திய அரசு விளக்கத்தின் பின்னணி!

    minnambalam : தங்கள் இனத்தில் இருக்கும் ஏழு பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்று சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலான கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடியும் இதுபற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ஒரு அரசு விழாவில் தமிழ்நாட்டின் ஒரு சமுதாயத்தைப் பற்றி பத்து நிமிடங்கள் நாட்டின் பிரதமர் பேசுவது இதுவே முதல் முறை. மூன்று முறை உரத்த குரலில் "தேவேந்திர குல வேளாளர் " என்று பிரதமர் மோடி அழைத்ததை அடுத்து அந்த சமுதாயப் பிரமுகர்கள் உருகிவிட்டார்கள். பிரதமர் மோடி பொதுப்பெயரை அறிவித்துவிட்ட நிலையில் நாடாளுமன்றத்திலும் அந்த மசோதா விரைவில் நிறைவேற இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 15) மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.      “ ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சமுதாயத்துக்கு தேவேந்திர குலவேளாளர் என்று பிரதமர் பெயர் சூட்டியதை அடுத்து. அவர்களை பட்டியல் பிரிவு (எஸ்சி) வெளியேற்றப் போவதாகவும் அவர்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கப் போவதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் அப்படி ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. அவர்கள் தொடர்ந்து பட்டியல் வகுப்பிலேயே நீடிப்பார்கள்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டூல்கிட் என்றால் என்ன? கிரெட்டா துன்பெர்க் ஷேர் செய்த டூல்கிட்டில் என்ன இருந்தது? யார் இந்த திஷா ரவி? இவர் கைதானது ஏன்?

    Veerakumar - tamil.oneindia.com :டெல்லி: இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் ட்விட்டரில் பகிர்ந்த டூல்கிட் தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த மாணவியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை அரங்கேறியது. இந்த கைதைத் தொடர்ந்து, டூல்கிட் என்றால் என்ன? ஏன் அது குற்றச் செயலாக பார்க்கப்பட்டது, என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 21 வயதாகும் திஷா ரவி கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்சவா இன்று அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் திஷா கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில், கிரெட்டா ஷேர் செய்த டூல்கிட்டை தான் உருவாக்கவில்லை என தெரிவித்தார். திஷா குறிப்பிட்ட டூல்கிட் கிரெட்டா டுவிட்டர் பக்கத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டதும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது

    சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்- உயர்நீதிமன்றம்

    maalaimalar : சென்னை: 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை
    தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை இறுதியாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே முடிவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும். மேலும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ராஜகண்ணப்பனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    ப.சிதம்பரத்தை எதிர்த்து வழக்கு... 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு!

     

     nakkeeran : 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து,  அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்றம் இன்று (16 பிப்.) தீர்ப்பு அளிக்கிறது.   கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    வைகோ : திமுக இணைந்து போராடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம் .. கோவை நிதியளிப்பு விழாவில்

    tamil.samayam.com : சட்டமன்ற தேர்தலுக்காக மதிமுக நிர்வாகிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர்.
  • கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 80.88 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது
  • கோவை சித்தாபுதூர் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் தேர்தல் நிதியளிப்பு விழா நடைபெற்றது. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  கோவை மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவிடம் முதல்கட்ட தேர்தல் நிதியாக மொத்தம் ரூ.80.88 லட்சம் ரூபாயை அளித்தனர். இதில் அதிகபட்சமாக கோவை மாநகர் மாவட்டம் சார்பாக ரூ.30 லட்சத்து 88 ஆயிரம் வழங்கப்பட்டது.