வியாழன், 18 பிப்ரவரி, 2021

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

  daiylithanthi : வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பதிவு: பிப்ரவரி 18, 2021 06:25 AM புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை: