வியாழன், 18 பிப்ரவரி, 2021

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
maalaimalar.com :புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். <
தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி:புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.

இதற்கிடையே புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
நாராயணசாமி தலைமையிலான அரசு பிப். 22 ந்தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி நடவடிக்கையாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

கருத்துகள் இல்லை: