புதன், 17 பிப்ரவரி, 2021

டிக்டாக் பிரபலத்திடம் பணம் பறிகொடுத்த ஆண்கள் .. வேற்று மதம் பொய் பெயர் .. போலி கல்யாணங்கள்

Hemavandhana - tamil.oneindia.com : மயிலாடுதுறை: மீராவுக்கு 40 வயசாகிறது..

மொத்தம் 5 கணவன்கள்.. இந்த விஷயம் தெரிந்ததுமே, அந்த 4வது கணவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.. ஸ்டிரைட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கே ஓடிப்போய் விட்டார்..!
மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாலகுரு.. 27 வயசு ஆகிறது.. இவர் ஒரு டிரைவர்.. டிக்டாக் வீடியோவில்தான் முதன்முதலாக மீராவை பார்த்தார்.. மீராவின் அழகில் மயங்கி விழுந்துவிட்டார். நாளடைவில் இது காதலானது.. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர்..
அதன்படியே திருமணம் நடந்தது.. அப்போதுதான், மீரா என்பது ஒரிஜினல் பெயர் இல்லை, அவர் பெயர் ரஜபுன்னிஷா என்பதும், அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது இதனால் அதிர்ந்து போன பாலகுரு, மீராவின் மீதுள்ள காதலால் அந்த பொய்யை மறந்து வாழ ஆரம்பித்தார்.
அப்போதுதான் இன்னொரு ஷாக் அவருக்கு வந்தது.. தான் வேலைக்கு போனபிறகு, வீட்டுக்கு யார் யாரோ ஆண்கள் வந்து போவது தெரியவந்தது..
இதை பற்றி கேட்டதற்கு தகராறு வெடிக்க ஆரம்பித்தது.. மீரா எந்த கேள்விக்கும் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.. ஒருகட்டத்தில் அம்மா வீட்டுக்கு போவதாக சொல்லி கிளம்பி சென்றுவிட்டார்.
2-வது ஷாக் ஆனாலும் தான் ஏமாந்து விட்டோமோ என்ற சந்தேகம் பாலகுருவுக்கு உறுத்தி கொண்டே இருந்தது.. அதனால், மீராவை பற்றி கண்டுபிடிக்க ஆரம்பித்தார்.. அப்போதுதான், அடுத்த ஷாக் அவருக்கு காத்திருந்தது.. மீராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது என்று தெரியவந்தது.. அதுவும் 3 கல்யாணம் ஆகி இருக்கிறது.. அந்த 4வதாக வாக்கப்பட்டது தான் தான் என்பதை அறிந்து மனம் நொந்து போனார் பாலகுரு.

3வது ஷாக் இதற்கு நியாயம் கேட்கலாம் என்று, மாமியாருக்கு போன் செய்தால், அவர் ஒரு புது குண்டை தூக்கி பாலகுரு தலையில் போட்டார்.. கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு வந்த மீரா, 5வதாக ஒருத்தரை கல்யாணம் செய்து கொண்டாராம்.. அவர் பெயர் பார்த்திபன் என்பதும், இப்போது அவருடன் குடும்பமே நடத்த தொடங்கிவிட்டதாகவும் தெரியவந்தது.. இதற்கு பிறகு ஆத்திரமும், ஏமாற்றமும் பொறுக்க முடியாத பாலகுரு, மயிலாடுதுறை போலீசுக்கே வந்துவிட்டார்.. துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ஒரு மனு அளித்தார்.. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

செல்போன் "மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் ஃபேஸ்புக்கில் என்னோடு அறிமுகம் ஆனார். 6 மாசம் எங்களுக்குள் தொடர்ந்த இந்த நட்பு காதலாகி 2018-ல் நவம்பரில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நான் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவுடன் எனது வீட்டுக்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக எனது சொந்தக்காரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேகமடைந்த நான் அந்த பெண்ணின் செல்போனை சோதனை செய்து பார்த்தேன்

புகார் அப்போது அந்த பெண்ணுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை அறிந்த நான் அந்த பெண்ணை கண்டித்ததால் அவர், தனது தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றார்... அவர் மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. விசாரித்து பார்த்ததில் அப்பெண் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது.

அதிர்ச்சி அதிர்ச்சி எனது வீட்டை விட்டுச் செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் சங்கிலி மற்றும் ரூ.70 ஆயிரத்தை அந்த பெண் எடுத்துச் சென்று விட்டார். பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் தனது பதிவுகளை பதிவிட்டு அதற்கு பதில் பதிவிடும் இளைஞர்களை குறிவைத்து அந்த பெண் ஏமாற்றி உள்ளார். தற்போது வரையில் 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. எனவே என்னை ஏமாற்றிச் சென்ற அந்த பெண்ணைக் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: