வியாழன், 13 பிப்ரவரி, 2020

நீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்

நீட் தேர்வுநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்மாலைமலர் : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளை பிடிக்க சிபிசிஐடி போலீசார் பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடி உள்ளனர்.
சென்னை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தமிழக மாணவர்கள் பலர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது.
தேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவர் உதித் சூர்யா, தனது தந்தையும் டாக்டருமான வெங்கடேசன் மூலமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டது முதலில் அம்பலமானது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் சிக்கிய உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலமாக டாக்டர் படிப்பில் சேர்ந்து இருப்பது வெட்ட வெளிச்சமானது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காஞ்சி சங்கரமடத்துக்கு வீடு தானம்

tamil.indianexpress.com : பாடகர்  எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெல்லூரில் உள்ள தனது பூர்வீக வீட்டை வேத பாடசாலை அமைப்பதற்காக விஜயேந்திரரை சந்தித்து சங்கர மடத்துக்கு தானமாக அளித்துள்ளார்.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என பல மொழி சினிமாக்களில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவருடைய இசை சேவையை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருந்து வழங்கி கௌரவித்துள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் இவர் ஒரு தமிழ் சினிமா பாடகராகவே அறியப்படுகிறார். திரைப்பட பின்னணி பாடகராக வளர்ந்த பின் அவர் சென்னைக்கு குடியேறிவிட்டாலும் அவருடைய பூர்வீக வீடு நெல்லூரில் அப்படியே இருந்து வந்தது.

துருக்கியில் எச்சில் துப்பி பீட்ஸா டெலிவரி செய்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை! -(வீடியோ


 வெப்துனியா :  துருக்கியில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த பீட்ஸாவில் எச்சில் துப்பி டெலிவரி செய்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் மத்திய அனடோலி பகுதியில் உள்ள எஸ்கிசர் நகரை சேர்ந்தவர் புராக்ஸ். இவர் பீட்ஸா டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டுக்கு சென்று ‘பீட்ஸா’ டெலிவரி செய்தார். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர் தனது அப்பார்ட்மெண்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவான வீடியோவை போட்டு பார்த்தார். அதில் இவர் டெலிவரி செய்த பீட்ஸாவின் மீது எச்சில் துப்பியது பதிவாகி இருந்தது. இது குறித்து புராக்ஸ் மீது பொலிஸாரிடம் புகார் செய்தார். பொலிஸார் இவரை கைது செய்து இஸ்தான்புல் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் புராக்ஸ்சுக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: கவர்னரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: கவர்னரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியதுதினத்தந்தி :  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் கவர்னரின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி, புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடியை சந்தித்து மனுவும் கொடுத்தனர். இதையடுத்து கவர்னர் கிரண்பெடியும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பாக புதுவை சட்டசபையில் விவாதிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

வீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்?

வீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்?
 மின்னம்பலம் :  பிப்ரவரி 3 ஆம் தேதி திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, மாநில தேர்தல் பிரிவு செயலாளர் என்ற டம்மி பதவிக்கு மாற்றப்பட்டார் வீரபாண்டி ராஜா. இந்த ஆபரேஷன் நடந்து பத்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வீரபாண்டி ராஜா கூடாரத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வருகின்றன. அதேநேரம் ராஜா மீதான தலைமையின் கோபம் தீரவில்லை என்பதற்கான நிகழ்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ராஜாவின் மாவட்டப் பொறுப்பு பறிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சிலர் சேலத்திலுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து அங்கே தலைமைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். ராஜா மீதான நடவடிக்கையை பரிசீலனை செய்யுமாறு தலைமைக்கு கோரிக்கையும் வைத்தனர். இந்நிலையில் வீரபாண்டி ராஜாவின் பதவிப் பறிப்பைக் கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரும் பதவி விலகினார்கள். இந்நிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி சந்திரமோகனை இளைஞரணியில் இருந்து நீக்கி முத்தனம்பாளையம் பி.அன்பழகனை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமித்தார் உதயநிதி. இதேபோல ஐடி விங் நிர்வாகிகளும் பிப்ரவரி 10 ஆம் தேதி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு - அதிர வைக்கும் கொரோனா வைரஸ்

ஒரே நாளில் 242 பேர் பலி - அதிர வைக்கும் கொரோனா வைரஸ் மாலைமலர் :  சீனாவில்  நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது.
பீஜிங சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த  வைரஸ் பரவியுள்ளது.
சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த  வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.; இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 1,113 பேரும், ஹாங்காங் மற்றும் பில்ப்பைன்சில் தலா ஒருவரும் என மொத்தம் ஆயிரத்து 115 பேர் உயிரிழந்திருந்தனர்.

ஷாலின் ஒன் டூ த்ரீ எண்ணிக்கோங்க ". "ஒன்..டூ ..." நிசப்தமானது! .ஆஸ்பத்திரி டைரி- பாகம் 1.

Shalin Maria Lawrence : ஆஸ்பத்திரி டைரி- பாகம் 1
நேரம் சரியாக காலை 7 மணி 8 நிமிடங்கள் .அந்த உயர்தர அதிநவீன ஆஸ்பத்திரியின் மூன்றாம் தளத்திலுள்ள லேபர் வார்டிலிருந்து பச்சை நிற கவுன் உடையணிவித்து தலையில் பிளாஸ்டிக் உறையில் மூடப்பட்டு ஒரு நீண்ட ஸ்ட்ரெச்சரில் என்னை வைத்து ஒரு வார்டுபாய் தள்ளி கொண்டு இரண்டாம் தளத்திற்கு சென்றுகொண்டிருந்தார். இதயம் திக் திக் என்று அடித்து கொண்டிருந்தது .காலையில் நடந்த ஆஸ்பத்திரி சடங்குகளில் இந்த நிலை ஏற்பட்டிருந்தது .
உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் வாய்த்திருக்கும் என்று தெரியாது .அதிகாலை கண் விழித்ததும் ஆசனவாயில் நெருப்பு மாத்திரைவைக்கப்படும் .காலை கடனை முடித்து ,குளித்து முடித்த பின்னே அந்தரங்க இடங்களில் சர்.... சர்... என்று சவரம் செய்வார்கள் .பொதுவாக சோப்பைக்கொண்டு ஈரப்படுத்தி செய்யும் சவரம் போல் இது கிடையாது .காய்ந்த தோளின்மேல் ஒரு மெல்லிய பிளேடால் சிறு முடிகளை மழிக்கும்போது சர்..சர்..சர்..என்கிற சத்தம் அந்த அதிகாலை நிசப்தத்தை கிழிக்கும் .யாரோ ஒருவர் நமது அந்தரங்கத்தை எந்த ஒரு விருப்பும் வெறுப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டு அதை சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறார் என்கிற ஒரு சிந்தனை அப்படி ஒரு ஆசுவாசத்தை கொடுக்கும் .அந்த நொடியில் நாம் என்ன பாலினம் என்று மறந்துபோவோம் .ஆணும் இல்லை பெண்ணும் இல்லை நான் ஒரு உடல் மட்டும். .

ஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கிரஸ், பிஎஸ்பி உள்பட 10% இடத்திருட்டை ஏன் ஆதரித்தார்கள் என்று புரிகிறதா?

மாநிலங்களில் பார்ப்பனர்கள் விகிதாசாரம்  
பா.ச. பாலசிங் ; கேஜ்ரிவால் வெற்றியும், நம் அரசியல் புரிதலும்...
97% Vs 3% இது நமக்கு மிகப் பரிச்சியமான கணக்கு. ஆனா, இது இந்தியாளவிலான கணக்கு. மாநில வாரியாக பார்ப்பனர்கள் கணக்கை இணைத்துள்ளேன். FC கணக்கு தனி.
இதில் இருந்து புரிவது?
1% பார்பனர்கள் இருக்கும் தமிழ்நாட்டிலேயே சமூக நீதி அரசியலை பேசுவதற்கு நாக்கு தள்ளுது, 10% கிட்டத்தட்ட 2 கோடி பார்ப்பனர்கள் + மற்ற FC உள்ள உத்தரப் பிரதேசத்தில் சமூக நீதி பேசுவது எவ்வளவு கடினமாக இருக்கும். விளங்குதா?
ஏன் பிஎஸ்பி துணைத் தலைவர்களாக பார்ப்பனர்கள் உள்ளார்கள் என்பது புரிகிறதா?
ஏன் காங்கிரஸ், பிஎஸ்பி உள்பட 10% இடத்திருட்டை ஆதரித்தார்கள் என்று புரிகிறதா?
எங்கெல்லாம் பார்ப்பனர்கள் குறைந்தது 5% உள்ளார்களோ, அங்கெல்லாம் சனாதனா ஆட்சியே நடைப் பெறுகிறது. இல்லையா?
இதற்கு எதிராக எந்த அரசியலை நாம் முன்வைக்கிறோம்?
பார்ப்பனரல்லாத அரசியல் மட்டும் சரியாக வருமா? மற்ற FC, பானியாக்களை எதிர்கொள்வதற்கு என்ன அரசியல் நம்மிடம் உள்ளது?

இலங்கையில் 2 வருடங்களில் இரண்டாயிரம் மாணவ மாணவிகள் ராகிங் காரணமாக வெளியேறி உள்ளனர் ..


Kamali Teps : கடந்த இரண்டு வருடங்களில் சுமார் இரண்டாயிரம் மாணவ மாணவிகள் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். அவர்களின் கல்வியை தொடர வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்ததுள்ளது. அப்படியானால் இன்னும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பயம் காரணமாக பல்கலைக பக்கம் போகாமல் இருந்திருப்பார்கள்? எத்தனை ஆயிரம் மாணவர்கள் தங்கள் கல்விக் கனவு மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவமானங்களை சகித்துக் கொண்டு கல்வியை தொடர்ந்திருப்பார்கள்.இந்த முகநூலில் பதிவிறக்கி உள்ள இதற்கு முந்தைய வீடியோ பதிவை பாருங்கள்.
சட்டத்தின் ஆட்சிக்கு அப்பால் ஒரு அராஜக சாம்ராஜ்யத்தை இந்த பகிடிவதை மனநோயாளிகள் நடத்துகிறார்கள் என்று புரியும். நாளைக்கு உங்கள் ஊரில் உங்கள் உறவில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படலாம். சக மாணவர்களின் கல்வியை சிதைப்பவர்களை இந்த சமூகம் மெளனத்தின் ஊடாக ஊக்குவிக்க முடியாது.

ஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்? அனுமான் கருணையால் வென்றோம் அர்விந்த் கேஜ்ரிவால்

Jeeva Sagapthan : வென்றது ஆம்ஆத்மி, தோற்றது காங்கிரஸ், தடுக்கப்பட்டது பாஜகவின் வெற்றி.
டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றியில் , நாம் கவனிக்க வேண்டிய நுட்பமாக அம்சங்கள் இருக்கின்றன. .
ஆம் ஆத்மி கட்சி தொடங்குவதற்கு முன்பு பாஜகவின் வாக்கு விழுக்காடு 36.3.ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது பாஜகவின் வாக்கு விழுக்காடு 38.4. ஆம் ஆத்மி தொடங்கிய பிறகு, கட்சி அளவில் பாஜகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை. இரண்டு விழுக்காடு வாக்கு அதிகரித்திருக்கிறது.
ஆம் ஆத்மி தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வாக்கு விழுக்காடு 48.1. ஆம் ஆத்மி தொடங்கி ஏழாண்டுகள் கழித்து, காங்கிரஸ் கட்சி வெறும் 4 விழுக்காடாக சுருங்கி விட்டது.
ஆம் ஆத்மிக்கு சிறுபான்மையினரின் ஆதரவு முழுமையாக கிடைத்திருக்கிறது. அதே சமயம் காங்கிரசுக்கு கிடைத்து வந்த இந்துக்களின் வாக்குகளையும் முழுமையாக எடுத்துக் கொண்டது. அந்த இந்துக்கள் யாரென்றால், சிறுபான்மை ஆதரவு மனநிலையில்லாமல், அதே சமயம் பாஜகவிற்கும் வாக்களிக்க மனமில்லாதவர்கள். அதாவது ஊழல் ஒழிப்பு என்ற மனநிலையில் வாக்களித்தவர்கள்.

பாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்! 13.2.2014 அன்று மறைந்தாலும்,என்றும் மறையாத ஆளுமை!


nakkheeran.in -t;கதிரவன் : கேமரா கவிஞர் என்று கொண்டாப்படும் பாலுமகேந்திரா இலங்கையில் பிறந்த தமிழர்.  ஆனாலும், அவர் ஈழப்பிரச்னை பற்றி எதையும் அவர் தனது படைப்புகளில் பதிவு செய்ய வில்லை என்ற விமர்சனம் உண்டு.
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு,  ’’பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. ஆனால், அதிகபட்ச நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விசயம் இது. வியாபாரத்தைத் தாண்டியது. படைப்பாளிகள் தயார் தான். அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர் எங்கே?’’என்று பதிலளித்திருக்கிறார்.
’’சாவதற்குள் ஈழப்பிரச்சனை பற்றி ஒரு திரைப்படத்தை எடுத்துவிட வேண்டும்.  அதுதான் எனது கடைசி படைப்பாக இருக்க வேண்டும்’’ என்றும் சொல்லிவந்தார்.  அது கடைசிவரை நடக்கவே இல்லை.   சிங்களர்களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதை சிறு வயதிலேயே அறிந்தவர் பாலுமகேந்திரா. கவிஞர் காசிஆனந்தனும், கேமரா கவிஞர் பாலுமகேந்திராவும் இலங்கை மட்டக்களப்பில் இருந்த போது பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவரும் இணைபிரியா நண்பர்கள். கல்லூரியிலும் இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.  அழியாத கோலங்களில் வரும் மூன்று சிறுவர்களின் ஒருவர் காசி ஆனந்தன் என்று பாலுமகேந்திராவே சொல்லியிருக்கிறார்.

புதன், 12 பிப்ரவரி, 2020

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

tamil.indianexpress.com :ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை! பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, அவரை சேவை வரி செலுத்தும்படி, ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு...
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, அவரை சேவை வரி செலுத்தும்படி, ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஒருவர் தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின், அந்த உரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., ஆணையர், கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த அப்பாவு

மின்னம்பலம் : ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் தான் வெற்றிபெற்றதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.
ராதாபுரத்தில் நான்தான் வென்றேன்: சஸ்பென்ஸை உடைத்த அப்பாவு
2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகளையும் 19,20,21 சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனினும் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை விசாரிக்கப்படாமலேயே பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாலை­தீவில் நீச்­ச­லு­டை பெண்ணின் உடலை மறைக்கக் முயன்ற பொலிஸார்!- (வீடியோ)

metronews.lk:  மாலை­தீவில் நீச்­ச­லு­டை­யுடன் காணப்­பட்ட வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­yinயின்  உடலை மறைப்­ப­தற்கு பொலிஸார் பல­வந்­த­மாக நட­வ­டிக்கை மேற்­கொண்­டமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இதனால் மாலை­தீவு பொலிஸ் திணைக்­க­ளத்தின் தலை­வ­ரான பொலிஸ் ஆணை­யாளர் மன்­னிப்பு கோரி­யுள்ளார்.
 Cecilia Jastrzembska மேற்­படி யுவதி பிரிட்­டனைச் சேர்ந்த தொலைக்­காட்சிப் பிர­ப­லங்­களில் ஒரு­வ­ரான சிசி­லியா ஜஸ்­டிர்­ஸெம்ஸ்கா என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.> உல்­லாசப் பய­ணத்­துக்குப் பிர­சித்தி பெற்ற நாடு­களில் ஒன்­றான மாலை­தீவின் உல்­லாசப் பகு­தி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இடங்­களில் பெண்கள் பிகினி எனும் நீச்­ச­லு­டைய அணிய அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால், சுற்­றுலாப் பிர­தே­சங்கள் தவிர்ந்த இடங்­களில் நீச்­ச­லுடை அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை.
Cecilia-Jastrzembska-1 மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) Cecilia Jastrzembska 1Police-commissioner மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ) Police commissionerஇந்­நி­லையில் மாலை­தீவின் தீவு­களில் ஒன்­றான மாபு­ஷி­யி­லுள்ள கடற்­க­ரையில் கடந்த வியா­ழக்­கி­ழமை நீச்­ச­லு­டை­யுடன் சிசி­லியா காணப்­பட்டார்.
அப்­போது மாலை­தீவு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் அவரின் உடலை மறைப்­ப­தற்கு முயற்­சித்­தனர்.
துவாய் ஒன்றின் மூலம் சிசி­லி­யாவின் உடலை மறைப்­ப­தற்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் முயற்­சித்­தனர்.
இதனால், மேற்­படி ஆண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் சிசி­லி­யா­வுக்கும் இடையில் இழு­பறி நிலை ஏற்­பட்­டது.

தமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு!

tamil.news18.com : ஏற்கனவே உள்ள ஹைட்ரோகார்பன் குழாய்கள் என்ன ஆச்சு...எடுத்தாச்சா...? - ஸ்டாலின் கேள்வி
இதற்கு சென்னையில் திருமண விழாவில் பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், இதனை திமுக வரவேற்கின்றது. காவிரி வேளாண் மண்டல அறிவிப்பிற்கு முன்னரே திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால் அந்த அறிவிப்பு மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்,மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் எங்கு ஏற்கனவே உள்ள ஹைட்ரோகார்பன் குழாய்கள் என்ன ஆச்சு, அதனை எடுத்தாச்சா? என கேள்வி எழுப்பினார்.>மேலும் இன்றை காலகட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்னை போல் பணியாற்ற வேண்டும் என சொல்கிறார். ஊழல், அராஜகம் செய்வதை சொல்வதா என கூறிய அவர் விவசாயிகள் என்று சொல்லி விவசாயிகளை துன்புறுத்துகிறார் எட்பாடி என தெரிவித்தார்.

ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்தியருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 2 இந்தியருக்கு கொரோனா பாதிப்புமாலைமலர் :யோகோஹாமா துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 2 இந்தியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டோக்கியோ: ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3,711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  நேற்றைய தகவலின்படி சொகுசு கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

"டயர்" தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்கும்- முதலமைச்சர் பேச்சு

சியேட் டயர் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மாலைமலர் : சென்னை: ஸ்ரீபெரும்புத்தூர் கண்ணன் தாங்கல் பகுதியில் “சியேட் டயர்” தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
இன்று நான் துவக்கி வைத்துள்ள இந்தத் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி எனது முன்னிலையில் செய்யப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு பதினெட்டே மாதங்களில், உத்தரவாதம் அளித்த மொத்த முதலீடான 4,000 கோடி ரூபாயில், முதல்கட்டமாக, 1,400 கோடி ரூபாயை முதலீடு செய்து, இன்று முழு அளவிலான வணிக உற்பத்தியை துவக்கியுள்ளது சியேட் நிறுவனம்.
வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையகமாக விளங்கும் தமிழ்நாடு டயர் உற்பத்தியிலும் முதலிடம் பெற்றுள்ளது. அப்பல்லோ, ஜே.கே., மிஷ்லின், எம்.ஆர்.எப்., டி.வி.எஸ்., யோகோ ஹாமா என திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை, பல டயர் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

கேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வழக்கு

மாலைமலர் : கேரளாவில்  கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்றோர் மீது 15 ஆயிரத்து 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
திருவனந்தபுரம்: வயதான மற்றும் நோய் பாதித்த பெற்றோரை பிள்ளைகள் பராமரிக்காமல் அவர்களை தவிக்க விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் பலர் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் அவலமும் நடந்து வருகிறது.
அதேபோல பெற்றோரின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டு அவர்களை நடுவீதியில் விட்டுச் செல்கிறார்கள். இதுபோன்ற புகார்கள் சமீபகாலமாக அதிகரித்து உள்ளதால் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரளாவிலும் வயதான பெற்றோரை பிள்ளைகள் ஆதரவற்ற நிலையில் விடும் சம்பவங்கள் நடைபெறுவதால் அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரள சட்டசபையில் சமூக நலத்துறை மந்திரி சைலஜா பேசும்போது கூறியதாவது:- வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு.

கொட நாடு கொலை ..காணாமல் போன சாட்சி கோர்ட்டில் ஆஜர்.. சூடுபிடிக்கும் வழக்கு!

kodanadkodanad casevikatan.com - சதீஸ் ராமசாமி = கே.அருண் காணாமல் போனதாக தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த கொடநாடு கொலை வழக்கின் முதல் சாட்சியான கிருஷ்ண தாப்பா நீதிமன்றத்தில் இன்று திடீரென ஆஜரானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நுழைந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்து மற்றொரு காவலாளியைத் தாக்கிவிட்டு உள்ளே சென்றது.
பின்னர் பங்களாவில் இருந்த சில ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகில் வாகன விபத்தில் உயிரிழந்தார். அன்றைய தினமே பாலக்காட்டில் ஏற்பட்ட விபத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய சயான் காயங்களுடன் தப்பினாலும் சயானின் மனைவி, மகன் உயிரிழந்தனர்.

ராமேஸ்வரம் ..`கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்டி!’ – மிரளவைக்கும் கடத்தல் கதைகள்

கடத்தல் பீடி இலைகளை கைப்பற்றிய கடலோரக் காவல்படை.;கஞ்சா இலைகளைக் கொடுத்தால் தங்கக் கட்டி!’ – சுங்கத்துறையை மிரளவைக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் vikatan.com = இரா.மோகன்; = உ.பாண்டி : கடத்தல் பீடி இலைகளை கைப்பற்றிய கடலோரக் காவல்படை.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து கஞ்சா மற்றும் கடல் அட்டை, கடல் பல்லி போன்றவையும் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளிலிருந்து பீடி இலைகளும் கடத்தப்பட்டு வருகின்றன.
ராமேஸ்வரம் கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக அடுத்தடுத்து பீடி இலை மூட்டைகள் ஒதுங்கி வருகின்றன. கடல் பகுதி கண்காணிப்பினை உறுதி செய்யும் ‘சாகர் கவாஜ்’ ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொடர்ந்து பீடி இலை மூட்டைகள் சிக்கி வருவதால் கடத்தல் வேட்டையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும் சுங்கத்துறையினரும் திணறி வருகின்றனர்.

சீனாவில் 1,110 பேர் கொரொனோ வைரஸ் தாக்குதில் உயிரிழப்பு .. மேலும் தொடரும்?

தினமலர் : பீஜிங்; அண்டை நாடான சீனாவில் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 1,110 பேர் பலியாகியுள்ளார்.
சீனாவில் 'கொரோனா' எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 42,200 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் மூன்று எச்சரிக்கைகள்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி- உதயநிதி- அமித் ஷா: திமுகவுக்கு பிகேவின் மூன்று எச்சரிக்கைகள்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனுக்கு வந்தது.
“திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதை ஒட்டி திமுக மீது பல்வேறு விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாந்த் கிஷோர் திமுகவை வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கான வியூகப் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
ஸ்டாலினுடன் பிகே நடத்தியிருக்கும் முதல் கட்ட உரையாடலில், ‘தமிழ்நாட்டில் திமுகவுக்கு இப்போது சாதகமான அம்சங்களே இருக்கின்றன. ஆனால் கட்சி அளவில் சில வேலைகளை செய்ய வேண்டும். எல்லா விஷயங்களுக்கும் தலைவரான உங்களையே முன்னிலைப்படுத்தும் போக்கு இருப்பதாக நிர்வாகிகள் நினைக்கிறார்கள். இதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு


தினத்தந்தி : டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
புதுடெல்லி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் மெஹ்ராலி தொகுதியில் இருந்து புதிய எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.

பழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு .. 28 January 1997 நினைவு நாள்

palanibaba_340கீற்று.com : எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்க்கதிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...
தனக்கென பெரிய அமைப்பில்லை... தனியான அலுவலகமில்லை... பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படையில்லை... சொந்த சமுதாயதிற்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரப் பதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா...
கண்ணியத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை, உரிமைகளை அரசுக்குக் கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிப் போனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங் பரிவாரங்கள் தங்களது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்கப் பொருமல்கள் முஸ்லிம் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது, தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா. "நாங்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைத்தன‌த்தில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம். மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல..." என வீரியமாக முழங்கி இஸ்லாமிய மக்களின் இந்தியப் பற்றை பறைசாற்றியவர் பழனிபாபா.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு .. தண்ணீர் மின்சாரம் கல்வி ஆகிய மூன்று முக்கிய .. ..

Shalin Maria Lawren : இன்று உலக வாக்குறுதிகளின் நாள் (global promise day)
இந்தியாவில் அதிகமாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு அவை
நிறைவேற்றப்படாத இடமாக அரசியல் இருக்கிறது. அரசியல் என்றாலே கொடுத்த வாக்குறுதிகளை நிவர்த்தி செய்யாத ஒரு இடமாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் என்றாலே பொய் வாக்குறுதிகள் என்று மக்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
இத்தகைய சூழலில்தான் 2015ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 70 வாக்குறுதிகளை கொடுத்து இருந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அதில் 30 சதவிகிதம் நிறைவடைந்து உள்ளதாகவும், 60 சதவிகிதம் வேலைகள் நடந்து வருவதாகவும், 10 சதவிகிதம் எதுவும் நடைபெறவில்லை என்றும் இந்தியா நடத்திய ஆய்வு கூறுகிறது.
தில்லியில் காங்கிரஸ் கட்சி செய்த சேதாரம் மிக பெரியதாக இருந்தது. அந்தக் காரணத்தினால்தான் கேஜ்ரிவால் முதல்முறை இராஜினாமா செய்துவிட்டு சென்ற போதும் அதற்கு அடுத்த தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார்.
அப்பொழுது அவர்கள் மூன்றே மூன்று விஷயத்தை திரும்பத் திரும்ப கூறினார்கள்
"நாங்கள் உங்களுக்கு தண்ணீர் கொடுப்போம், உங்கள் மின்சாரத்தை பாதுகாப்போம் மற்றும் கட்டணங்களை குறைப்போம், உங்கள் கல்வி தரத்தை உயர்த்துவோம்".