வியாழன், 13 பிப்ரவரி, 2020

ஆம் ஆத்மி வெற்றியும் அரசியல் புரிதலும் .. காங்கிரஸ், பிஎஸ்பி உள்பட 10% இடத்திருட்டை ஏன் ஆதரித்தார்கள் என்று புரிகிறதா?

மாநிலங்களில் பார்ப்பனர்கள் விகிதாசாரம்  
பா.ச. பாலசிங் ; கேஜ்ரிவால் வெற்றியும், நம் அரசியல் புரிதலும்...
97% Vs 3% இது நமக்கு மிகப் பரிச்சியமான கணக்கு. ஆனா, இது இந்தியாளவிலான கணக்கு. மாநில வாரியாக பார்ப்பனர்கள் கணக்கை இணைத்துள்ளேன். FC கணக்கு தனி.
இதில் இருந்து புரிவது?
1% பார்பனர்கள் இருக்கும் தமிழ்நாட்டிலேயே சமூக நீதி அரசியலை பேசுவதற்கு நாக்கு தள்ளுது, 10% கிட்டத்தட்ட 2 கோடி பார்ப்பனர்கள் + மற்ற FC உள்ள உத்தரப் பிரதேசத்தில் சமூக நீதி பேசுவது எவ்வளவு கடினமாக இருக்கும். விளங்குதா?
ஏன் பிஎஸ்பி துணைத் தலைவர்களாக பார்ப்பனர்கள் உள்ளார்கள் என்பது புரிகிறதா?
ஏன் காங்கிரஸ், பிஎஸ்பி உள்பட 10% இடத்திருட்டை ஆதரித்தார்கள் என்று புரிகிறதா?
எங்கெல்லாம் பார்ப்பனர்கள் குறைந்தது 5% உள்ளார்களோ, அங்கெல்லாம் சனாதனா ஆட்சியே நடைப் பெறுகிறது. இல்லையா?
இதற்கு எதிராக எந்த அரசியலை நாம் முன்வைக்கிறோம்?
பார்ப்பனரல்லாத அரசியல் மட்டும் சரியாக வருமா? மற்ற FC, பானியாக்களை எதிர்கொள்வதற்கு என்ன அரசியல் நம்மிடம் உள்ளது?

பிஜேபி மட்டும் பிரச்சினை இல்லை; இது சிந்தாந்தப் போர். அந்த போரில் கேஜ்ரிவாலும் அவர்கள் பக்கம் என்பதை உணர்வோம்.
தேர்தல் அரசியலை கடந்து ஒரு வலுவான கட்டமைப்பை, வலுவான போர் தந்திரத்தை முன்வைத்து முன்னேறுவோம்.
இணைந்து முன்னேற விரும்புபவர்கள், வாருங்கள். கட்டமைப்போம்...
கேஜ்ரிவால் மந்திரத்தில் மயங்கிடாதீர்...

கருத்துகள் இல்லை: