
அதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்றைய தகவலின்படி சொகுசு கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜப்பானில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 6 தமிழர்கள் உட்பட சுமார் 100
இந்தியர்கள் உள்ள நிலையில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டைமண்ட்
பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக