புதன், 12 பிப்ரவரி, 2020

தமிழக வேளாண் மண்டலம்- நாடகமாடும் எடப்பாடி அரசு!

tamil.news18.com : ஏற்கனவே உள்ள ஹைட்ரோகார்பன் குழாய்கள் என்ன ஆச்சு...எடுத்தாச்சா...? - ஸ்டாலின் கேள்வி
இதற்கு சென்னையில் திருமண விழாவில் பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், இதனை திமுக வரவேற்கின்றது. காவிரி வேளாண் மண்டல அறிவிப்பிற்கு முன்னரே திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால் அந்த அறிவிப்பு மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்,மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் எங்கு ஏற்கனவே உள்ள ஹைட்ரோகார்பன் குழாய்கள் என்ன ஆச்சு, அதனை எடுத்தாச்சா? என கேள்வி எழுப்பினார்.>மேலும் இன்றை காலகட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்னை போல் பணியாற்ற வேண்டும் என சொல்கிறார். ஊழல், அராஜகம் செய்வதை சொல்வதா என கூறிய அவர் விவசாயிகள் என்று சொல்லி விவசாயிகளை துன்புறுத்துகிறார் எட்பாடி என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பிற்கு கேள்வி கேட்க போகிறோம். வேளாண் மண்டல அறிவிப்பு மத்திய அரசு தான் செய்வேண்டும் அதை வற்ப்புறுத்தவும் இந்த தமிழக அரசு தயாராக இல்லை. இந்த ஆட்சிக்கு திமுக முடிவு கட்டும் என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: