ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ரஜினி ஏப்ரலில் புதிய கட்சி- மக்களை சந்திக்க ரஜினி தயார் ... இந்த முறை நிச்சயமாம்!

ஏப்ரலில் புதிய கட்சி- பொதுமக்களை சந்திக்க ரஜினி தயார் ஆகிறார்மாலைமலர் : வருகிற ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை தொடங்கி பொதுமக்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த தயார் ஆகிறார். 8 ஊர்களில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார். சென்னை: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் வருகை யை அறிவித்தார்.
தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.
ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 ஆண்டுகள் முழுமையாக கடந்த நிலையில் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் இந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் பரபரப்புகளை ஏற்படுத்தியே வருகிறார்.

A.R. முருகதாஸை கிழித்த T.R! வீடியோ


மின்னம்பலம் : ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு, நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவரான டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று(பிப்ரவரி 9) மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் உரையாற்றும் போது, “லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டத்தை சந்தித்ததாக விநியோகஸ்தர்கள் பல்வேறு சங்கங்களிலும் புகார் அளித்து வருகின்றனர். அதே புகாரை எங்கள் சங்கத்திலும் அளித்திருந்தனர். விநியோகஸ்தர்கள் விளக்கில் விட்டில் பூச்சி விழுவதை போல் விழுந்துவிட்டார்கள். தர்பார் படத்தை அதிக விலைக்கு வாங்கி இருக்கக் கூடாது.

சீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ்சை பெருவுடையார் கோயில் தரிசனம்


தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு செய்த சீமான்.தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் தரிசனம்: சீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம்   மாலைமலர்:  தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வழிபட்டதற்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான புகாரை அளித்தவர் ‘பிரண்ட்ஸ்’ பட நடிகை விஜயலட்சுமி.
தன்னுடன் பழகிவிட்டு ஏமாற்றியதாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்கும் போடப்பட்டது.
இந்த நிலையில் அவர் சிமானை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடவுள்களை விமர்சனம் செய்துவிட்டு இப்போது பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று சீமான் வழிபட்டது வடிவேலு காமெடியை விட பெரிய காமெடி என்று கூறியுள்ளார்.
விஜயலட்சுமி வீடியோவில் பேசி இருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அவருக்கு லிங்கத்தின் முன்னால் மரியாதை செய்வது போன்ற வீடியோவை நான் பார்த்தேன். இதைவிட அசிங்கம் வேறு எதுவும் இருக்க முடியாது.

டெல்லி தேர்தல் முடிவுகள் தாமதம் .. EVM மோசடி? . தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? அதிர்ச்சி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால்!

tamil.oneindia.com : டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த சதவிகிதம் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த சதவிகிதம் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது என்று டெல்லி தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.வரும் 11ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் மொத்த சதவிகிதம் குறித்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலைதான் அறிவிக்கப்பட்டது. இந்த தாமதம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், எனக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஏன் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
தேர்தல் முடிந்து பல மணி நேரம் ஆகிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். இவரின் இந்த டிவிட் டெல்லி தேர்தல் களத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரின் கருத்துக்கு பின்பே டெல்லி தேர்தல் ஆணையம் இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டது.

விப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்ஜித்த மாநிலங்களவை உறுப்பினர்


மாநிலங்களவையில் கர்ஜித்த விப்லவ் தாக்கூர் - யார் இவர்? பேசியவை என்ன? - 5 தகவல்கள்மாநிலங்களவையில் கர்ஜித்த விப்லவ் தாக்கூர் - யார் இவர்? பேசியவை என்ன? - 5 தகவல்கள்BBC: விப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்ஜித்த மாநிலங்களவை உறுப்பினர் – யார் இவர்? பேசியவை என்ன? – 5 தகவல்கள்">விப்லவ் தாக்கூர்: ‘மோதி, அமித்ஷா, பாகிஸ்தான்’’ கர்ஜித்த மாநிலங்களவை உறுப்பினர் – யார் இவர்? பேசியவை என்ன? – 5 தகவல்கள் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை விப்லவ் தாக்கூராகதான் இருக்கும்.
புதன்கிழமை வரை பெரும்பாலான தமிழர்கள் விப்லவ் என்ற பெயரைக் கூட கேட்டிருக்கமாட்டார்கள். ஆனால், வெள்ளிக்கிழமை அதிகம் பேர் நாடாளுமன்றத்தில் வில்பவ் பேசிய பேச்சின் காணொளியை பகிர்ந்தார்கள்.
சரி யார் இந்த விப்லவ்?விப்லவ் தாக்கூர் – 76 வயதான இந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். 1943 அக்டோபர் மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பிறந்தார். அரசியலில் முதுகலை வரை படித்துள்ளார். இவரது பெற்றோர் சுதந்திரப் போராட்ட வீரர்கள்.
இவரது தந்தை பரஸ் ராம், இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர். இவரது தாய் சர்லா சர்மா காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்தவர்.

ரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகேடு: 14 தமிழக போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழக காவல் துறைக்கு ரூ.84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகேடு:  14 போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை  லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை  தினத்தந்தி :  தமிழக காவல் துறைக்கு ரூ.84 கோடிக்கு வாக்கி-டாக்கி உள்ளிட்ட கருவிகள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக 14 போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை, 2017-18-ம் ஆண்டுக் கான தமிழக அரசின் பட்ஜெட்டில் போலீஸ்துறையை நவீனமயமாக்க ரூ.47 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி மூலம் தமிழக காவல்துறைக்கு 10 ஆயிரம் ‘வாக்கி-டாக்கி’ உள்ளிட்ட கருவிகள் வாங்குவதற்கு போலீஸ்துறையில் இயங்கும் தொழில்நுட்ப பிரிவு முடிவு செய்தது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மாறாக ரூ.83 கோடியே 45 லட்சம் ‘டெண்டர்’ ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், 10 ஆயிரம் கருவிகளுக்கு பதில் 4 ஆயிரம் கருவிகள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பாரதிராஜாவுக்கு வலைவீசிய பாஜக .. ஆசைவார்த்தைகள் கூறினார்களாம்

tamil.oneindia.com : சென்னை: பாஜகவில் இணைய தம்மிடம் பேசினார்கள்.. நிறைய செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர் என இயக்குநர் பாரதிராஜா பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு பல்வேறு பிரபலங்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது.
திரைத்துறை பிரபலங்களை இழுப்பதை தொடர் நடவடிக்கையாக பாஜக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாரதிராஜா கூறியதாவது: தமிழகத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் கர்நாடகா, கேரளாவில் அந்த மண்ணின் மக்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் நிச்சயம் ஜெயித்துவிடலாம்.;
கை நீட்ட சொல்லும் அரசியல் ஆனால் தமிழர்கள் ஒன்று சேரும் போது யார் தலைவர் என நினைக்கிறார்கள்.. அதேபோல் எல்லோரும் முன்னால் நிற்க வேண்டும் என விரும்புகின்றனர்.
பாதரசம் போல் இருக்கும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதும் கஷ்டமான ஒன்று. நான் இதுவரை அரசியல் கட்சி தொடங்கலாம் என நினைத்தது இல்லை. ஏனெனில் அரசியல் என்றாலே கை நீட்டத்தான் வேண்டும். அதிகாரம், அரசியல் இதுவரை நல்ல கலைஞனாக இருந்துவிட்டேன். போகும் போது நல்ல கலைஞன் போகிறான் என சொல்ல வேண்டும். கரப்டெட் போகிறான் என சொல்லக் கூடாது. அதிகாரங்கள் நம்மை அச்சுறுத்தும் போது நமக்கு இயல்பாகவே கோபம் வரும்.. அதனால்தா ஏன் அந்த அதிகாரத்தைக் கையில் எடுக்கக் கூடாது என சிந்திக்கிறார்கள்.

கொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழப்பு


`ராம் பிரசாத்  - விகடன் : லீ... நீங்கள்தான் எங்கள் ஹீரோ!’ -கொரோனா வைரஸைக் கண்டறிந்த
சீன மருத்துவருக்கு நேர்ந்த கதி
கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை முதலில் கண்டறிந்த சீன மருத்துவர், நோயின் தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் (Li Wenliang) கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார். சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் லீ வெண்லியாங் பணியாற்றிவந்துள்ளார். அவரிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், தீராத காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடல் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முதலில், இது கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது அவருக்குத் தெரியவில்லை. புதிய வகையான காய்ச்சல் என்பதை மட்டும் உறுதிசெய்துகொண்டார்.
2003-ம் ஆண்டு, உலக நாடுகளை அச்சுறுத்திய சார்ஸ் (SARS) வைரஸ் போன்றது என நினைத்துள்ளார். இதுதொடர்பாக, அவரது நட்பு வட்டத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு, டிசம்பர் 30-ம் தேதி WECHAT மூலம் இதுகுறித்த தகவல்களை அனுப்பியுள்ளார். நோயாளிகளைக் கையாளும்போது பாதுகாப்புக்காக மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள் என நண்பர்களை அறிவுறுத்தியுள்ளார்.

‘விஜய் , அன்புசெழியன். ஏஜிஎஸ் திடீர் ரெய்டு’’ ‘.. ரஜினி அண்டு குருமூர்த்தி கேங் பின்னணி?

- ஜூனியர் விகடன் : ‘‘ஏன் இந்தத் திடீர் ரெய்டு?’’
‘‘ரஜினிதான் காரணம் என்கின்றனர். `தர்பார்’ படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சில விநியோகஸ்தர்கள் தரப்பில் போர்க்கொடி உயர்த்தப்பட்டது. ரஜினியை நேரில் சந்தித்து நஷ்டஈடு பெறவும் முடிவெடுக்கப்பட்டது. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த விநியோகஸ்தர்களைத் தூண்டிவிட்டதே, அவர்களுக்கு ஃபைனான்ஸ் செய்த அன்புச்செழியன்தான் என்று கூறப்படுகிறது.’’
‘‘ஓஹோ...’’
‘‘இதுகுறித்து பிரபல ஆடிட்டரிடம் ரஜினி விவாதித்ததாகவும் கூறப்படு கிறது. ரஜினிக்குத் தெம்பூட்டிய அந்த ஆடிட்டர், டெல்லிக்கும் தகவலை பாஸ் செய்துவிட்டாராம். இதன் பிறகே ரஜினியைச் சீண்டிய அன்புமீது வருமானவரித் துறை பாய்ந்ததாம். சமீபத்தில் ரஜினியின் பெரியார் பற்றிய பேச்சுக்கு
ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தனர். `அப்படிப் பேசக் கூடாது’ என்று அவர்களுக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம்.’’

சனி, 8 பிப்ரவரி, 2020

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவு ... உங்களுக்கு மனதை உறுத்தி இருக்க வேண்டும்.

சிவசங்கர் எஸ்.எஸ் : மாண்புமிகு அமைச்சர் (டாக்டர்) விஜயபாஸ்கர்,
உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இந்நேரம் பதவி விலகி இருப்பீர்கள். ஆனால் வாய்ப்பே இல்லை.
டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவு உங்களுக்கு மனதை உறுத்தி இருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி வகையறாவான உங்களுக்கு அதெல்லாம் உறுத்தவே உறுத்தாது.
நாடு எக்கேடு கெட்டால் என்ன, நாட்டு மக்கள் எப்படி சீரழிந்தால் என்ன, என் கல்லா தான் முக்கியம் என ஆட்சியை நடத்தும் கல்லாபெட்டி பழனிசாமியின் கம்பெனி தானே நீங்கள்...
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, டாக்டர் லட்சுமி நரசிம்மன் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் வழி நடத்தினார். அதற்கு அவரைப் பழி வாங்கினீர்கள். ராமநாதபுரத்திற்கு மாற்றல் செய்தீர்கள். அவர் அசரவில்லை. தனக்காக கவலைப்படவில்லை. தன்னோடு போராடியவர்களுக்கும் மாறுதல் வந்தது தான் அவருக்கு வருத்தம் தந்தது.
சங்கத்து நிர்வாகிகள் மாறுதல் செய்யப்படுவது அரசியல் வழக்கம் என்பது அவரும் அறிவார். ஆனால் அதைத் தாண்டி 200க்கு மேற்பட்டோர் மாறுதல் செய்யப்பட்டது தான் அவருக்கு மன அழுத்தம் வர காரணம். தன்னால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்களோ என்ற வருத்தம் தான் அது.

காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை


தினகரன் : சென்னை: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தபின்னர், காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவர்கள், பிரிவினைவாத தலைவா்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.  இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை அடக்குமுறை சட்டமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல்- எந்தக் கேள்வியும் கேட்காமல் முன்னாள் முதல்வர்களையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பது, ஜனநாயகத்திற்கு கைவிலங்கும் கால்விலங்கும் போடும் கொடுமையான நிகழ்வு ஆகும்.

சினிமா வாய்ப்புக்காக - லீக்கானது ரகசிய ஆடியோ!


 வெப்துனியா :  பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் தர்ஷன். இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் கூறியிருந்தார். தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சனம் ஷெட்டி. இதையடுத்து பேட்டி ஒன்றில் இது குறித்து கூறிய தர்ஷன்..... " ஆம் எங்கள் இருவரும் நிச்சயம் நடந்தது உண்மை தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால், நான் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது பிகினி உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

2 கோடியை தாண்டிய கையெழுத்து: ஸ்டாலின்


மின்னம்பலம் : சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டோர் குறித்த தகவலை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கியது. சிஏஏவின் பாதிப்புகளை விளக்கி ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் கையெழுத்து பெறப்பட்டு வந்தது. இந்த கையெழுத்துக்கள் அனைத்தும் திமுக கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

7 பேரும் விரைவில் விடுதலை! மத்திய அரசிடம் ஆலோசிக்கும் கவர்னர் மாளிகை!

7 tamilsnakkheeran.in - இரா. இளையசெல்வன் : சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் சுதந்திரமாக முடிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதால் அவர்களின் விடுதலையில் வெளிச்சம் உருவாகியிருக்கிறது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கும் நிலையில் விடுதலை விவகாரத்தில் முக்கிய ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

டெல்லி Exit poll ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்

BBC :டெல்லி சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 54.15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலில் அதாவது 2015 தேர்தலில் 67.12 சதவீதமாக இருந்தது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில், கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி அனைத்து கருத்திக்கணிப்புகளிலும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.
டைம்ஸ் நவ் கருத்து கணிப்பானது ஆம் ஆத்மி 44 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றுமென்றும், பா.ஜ.க 26 தொகுதிகளை கைப்பற்றுமென்றும் கூறுகிறது.
நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 50 - 56 இடங்களை கைப்பற்றும் என்றும் பா.ஜ.க 10 - 14 இடங்களை கைப்பற்றுமென்றும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்லாது என தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் -ஜான் கி பாத் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 48 -61 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க 9 -21 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 0- 1 தொகுதியில் வெல்லும் என்றும் கூறுகிறது.
ஏ.பி.பி மற்றும் சி - வோட்டர் கருத்து கணிப்பானது ஆம் ஆத்மி 49- 63 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும், பா.ஜ.க 5 - 19 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும், காங்கிரஸ் 0 -4 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும் கணித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு : சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க சீனா உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு : சந்தேகத்திற்கிடமானவர்களை  தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க  சீனா அதிரடி உத்தரவு தினத்தந்தி : சீனாவின் வுகான் நகரில் சந்தேகத்திற்கிடமான அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளையும் சுற்றி வளைத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க சீனா உத்தரவிட்டு உள்ளது. வுகான்< கொரோனா வைரஸ் சீனாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் மையமான ஹூபே மாகாணத்தின் தலைநகரமான வுகான், தமிழக தலைநகர் சென்னையை விட பெரிய நகரம். கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் வுகான் நகரை விட்டு இப்பொது யாரும் வெளியே வரவோ அல்லது உள்ளே செல்லவோ முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுகான் நகரத்தில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில், இப்படி அறிவிக்கப்படும் 6-வது முறை என்கிற தகவல்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
மத்திய சீனாவில் உள்ள அழகான நகரங்களில் ஒன்றுதான் வுகான். இது ஹூபே மாகாணத்தின் தலைநகரம்.  இந்த நகரத்தில்  இருந்துதான் முதன் முதலில் கொரோனோ வைரஸ்  கண்டறியப்பட்டது.  இங்கிருந்துதான் உலகம் முழுவதும் பரவியது என்பதால் இந்த நகரத்தை இப்போது மக்கள் வெறுக்கத் தொடங்கி உள்ளனர்.

மதிமாறன் : ரஜினிகாந்தை பார்த்து திமுக அல்ல டி.ராஜேந்தர் கூட பயப்படமாட்டார்


jkநக்கீரன் : குடியுரிமை சட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு என்றால் நான் முதலில் குரல் கொடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எழுத்தாளர் வே. மதிமாறனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின்அதிரடியான பதில்கள் வருமாறு,
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நீங்கள் பேசி வருகிறீர்கள். அதற்கு எதிராக நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறீர்கள். குடியுரிமை சட்டத்திருத்தத்தை பற்றி ரஜினி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் கழுகு: ரஜினிக்கு டிக்... விஜய்க்கு செக்!

; விஜய் வீட்டில் ரெய்டு நடந்தபோது...விஜய் - ரஜினிvikatan - கார்த்திகேயன் மேடி - சு.குமரேசன் - என்.ஜி.மணிகண்டன் - கே.ஜெரோம் - வி.ஶ்ரீனிவாசுலு 2021... பி.ஜே.பி ஆட்டம் ஆரம்பம் ‘‘ஜனரஞ்சகமாகத் தொடங்கிய ஜனவரி, பிகில் கிளப்பும் பிப்ரவரி... என 2020 அமர்க்களமாகப் போகிறதே!’’ என்று பரபரப்பான ‘இன்ட்ரோ’வுடன் சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். இளநீர்ப் பாயசத்தைப் பருகக் கொடுத்தோம். ரசித்து ருசித்த கழுகார், ‘‘வருமானவரித் துறை பலருக்கும் பாயசம் ஊற்றிக் கொண்டிருப்பதால், எனக்கும் பாயசம் அளித்தீரோ?’’ என்ற கிண்டலுடன் செய்திக்குள் தாவினார். ">விஜய் வீட்டில் ரெய்டு நடந்தபோது...
‘‘உம்மிடம் நாங்கள் எதிர்பார்க்கும் பாயசம் என்னவென்று உமக்குத் தெரியாதா?’’
‘‘சினிமா ஃபைனான்ஷியர், கோபுரம் ஃபிலிம்ஸ் உரிமையாளர், சினிமா விநியோகஸ்தர் என்று பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான அன்புச்செழியனின் மதுரை அலுவலகம், வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ரெய்டு, சினிமா உலகையும் தாண்டி அரசியல் அரங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பிப்ரவரி 5-ம் தேதி, மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள அவருடைய தலைமை அலுவலகம், காமராஜர் சாலையில் உள்ள அவரின் நண்பர் சரவணனின் வீடு, கீரைத்துறையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் சென்னையிலிருந்து வந்த ஐ.டி டீம் ரெய்டு நடத்தியது. அவரது சென்னை தி.நகர் வீடும் சோதனையிலிருந்து தப்பவில்லை.’’
‘‘அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் அவர் நெருக்கமானவர்தானே?’’

சீனாவில் கொரோனா வைரஸ் 717 பேர் இதுவரையில் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் ; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு தினத்தந்தி :  கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது. பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

ரஞ்ஜீத் பச்சன் (40) '' விஸ்வ ஹிந்து மகா சபா '' தலைவரை ஆள் வைத்து சுட்டுகொன்ற இரண்டாவது மனைவி .


Mohamed Rafi : உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த ரஞ்ஜீத் பச்சன் (40) '' விஸ்வ ஹிந்து மகா சபா '' என்ற அமைப்பின் தலைவர். சென்ற
ஞாயிற்றுக்கிழமை வாக்கிங் சென்ற போது இவரை அடையாளம் தெரியாத நபர் மண்டையில் சுட்டுக்கொன்று விட்டார்.
வழக்கம் போல முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்டது. இவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்ததாகவும், இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் செய்திருப்பார்கள் என்றும் இவர் மனைவி களிந்தி சர்மா தெரிவித்தார்.
ரூ. 50 லட்சம் பணம், வீடு , இவர் மனைவிக்கு அரசு வேலை வழங்கும்படி சங்கீகள் கோரிக்கை வைத்தார்கள்.
இந்தநிலையில் போலீஸ் விசாரணையில், செத்துப்போன ரஞ்சித் பச்சனின் இரண்டாவது மனைவி ஸ்மிருதி ஸ்ரீவத்சவா தன் கணவரை விவகாரத்து செய்துவிட்டு தேவேந்திரா என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். விவகாரத்துக் கேட்டு 2016ல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. விவகாரத்து வழங்க ரஞ்சித் பச்சன் மறுத்து வந்துள்ளார்.

சில்லுக்கருப்பட்டி .. A Wonderful Feel Good Movie

Bilal Aliyar : அரைவட்டமாக கரிய நிறத்தில் இருக்கும் கருப்பட்டியின்
சுவையை நாம் உணர முடியாது .. அதே நேரத்தில் அதை சில்லு சில்லாக சிறிய பாகங்களாக உடைத்து சில்லுக்கருப்பட்டியாக்கி வாயில் போட்டால் அதன் சுவையை நீண்ட நேரம் உணர முடியும் ... அதைப்போல தமிழ் சினிமாவில் பல குறும் படங்களை ஒன்றிணைத்து, தித்திப்பான ஒரு உணர்வை, ஹைக்கூ கவிதைகளாக மாற்றி சில்லுக்கருப்பட்டியாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹலீதா சமீம் ...
சின்ன சின்ன காட்சியமைப்புகள், வீரியமான எளிய வசனங்களை போகிற போக்கில் பேசுவதன் மூலம் நடைமுறை வாழ்வின் சிக்கல்களை, எதார்த்த நிலையை வெகு இயல்பாக பேசுகிறது இந்த படைப்பு... நாடகத்தன்மையுடன் உணர வைக்கும் சில காட்சியமைப்புகளை தாண்டி உறவுகளுக்குள் நிகழும் உணர்வு பூர்வமான எதிர்பார்ப்புகளை அவரவர் பார்வையில் நிறுத்தி பேச வைக்கிறது இந்த படம்....
சமீபகால தமிழ் சினிமாவில் 25 வயது நிரம்பிய நாயகிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டதும், முதிர்பருவ உணர்வுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்தியதும், காதல், திருமண உறவு, சமூக அடுக்குகளில் பெரிய இடைவெளியுடன் கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசுவதும் மிகுந்த கவனிப்பை பெறுகிறது..
A Wonderful Feel Good Movie

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

விஜய் வீட்டு ஐடி ரெய்டில் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யவில்லை.

எவ்வளவு முதலீடு tamil.oneindia.com : சென்னை: நேற்று நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் முடிவில் அவரின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரின் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. நேற்றும் நேற்று முதல் நாளும் தமிழகம் முழுக்க 38 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. 
ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் நேற்று நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது.
இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஒரு ரூபாய் கூட விஜய் வீட்டில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றவில்லை. அவரிடம் பொதுவான விசாரணை மட்டும் நடத்தப்பட்டது.

7 பேர் விடுதலையில் முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- மத்திய அரசு

மாலைமலர் : சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதன் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கவர்னர் அமைதியாக உள்ளார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக அமைச்சரவை எங்களை (7பேரை) முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்து தீர்மானம் இயற்றி பல மாதங்களாகியும், அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இதனால், நாங்கள சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை நீதிபதிகள் தாமாக முன்வந்து ஒரு எதிர்மனுதாரராக சேர்த்தனர்.
இந்த வழக்கிற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

குழந்தையை காப்பாற்ற 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த கர்நாடக ஆம்புலன்ஸ்

குழந்தையை காப்பாற்ற 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மாலைமலர்:  குழந்தையின் உயிரை காக்க 360 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 20 நிமிடத்தில் டிரைவர் கடந்து சென்றதால், அக்குழந்தைக்கு டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த பிறந்து 40 நாட்களே ஆன சைப்புல் அஸ்மான் என்ற குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தைக்கு பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ஆபரே‌ஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக அந்த குழந்தையை ஏற்றிக் கொண்டு மங்களூருவில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்புலன்ஸ் புறப்பட்டது. அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற போலீசாரும் ஒத்துழைத்தனர்.

அரசு மருத்துவ மனைகளை அதானிக்கு கொடுக்க அமைச்சர் விஜபாஸ்கர் கொடுத்த அழுத்தத்தால் மருத்துவர் மரணம்?

Don VS : அரசு மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் அவரகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அதிகமான புற அழுத்தத்தினால் ஏற்பட்ட மாரடைப்பால் 52 வயதில்
கொல்லப்பட்டிருக்கிறார்.
என்ன புற அழுத்தம்?
இரண்டு வருடங்களாக அரசு அவர் பார்த்த வேலைக்கு சம்பளம் தரவில்லை ; கட்டாய டிரான்ஸ்பர் ; அதிகப்படியான பணி நெருக்குதல்.
ஏன்? என்ன காரணம்?
அமைச்சர் விஜயபாஸ்கர் ஒத்துக்கொண்டு கையெழுத்து போட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி போராடியதால்.
அரசு மருத்துவமனைகளை அதானிக்கு கொடுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்ததால்.
அட, நமக்கு இதுவா முக்கியம், பாருங்க விஜயபாஸ்கர் சட்டையில சேறு ஒட்டிட்டு இருக்கு ; இன்னும் பாருங்க, விஜயபாஸ்கர் சைக்கிள்ல போறார்..
வாழ்க அமைச்சர் விஜயபாஸ்கர் ; வாழ்க எடப்பாடி பழனிச்சாமி

Bilal Aliyar : · குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க முடியாத உபி அரசை காப்பாற்ற கஃபில்கானை கூண்டில் ஏற்றினார்கள் அந்த நிலைமை தமிழகத்தில் வந்துவிடக்கூடாது என்று போராடிய மருத்துவர் லட்சுமி நரசிம்மனை இன்று இழந்து நிற்கிறோம். தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு ஸகாண்டிநேவியன் நாடுகளுடன் தான் ஒப்பிட பட வேண்டுமே தவிர மற்ற வடஇந்திய மாநிலங்களுடன் அல்ல என்று அரை நூற்றாண்டுகளாக எழுதிய பொருளாதார வல்லுனர்களின் கூற்றை, எடப்பாடி தலைமையிலான அடிமை அதிமுக அரசு மாற்றி வருகிறது... ஒரே இந்தியா என்று சொல்லி உத்திர பிரதேசத்தை போல தமிழகத்தை மாற்றி கொண்டிருக்கின்றனர்