ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

சீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம் .. தஞ்சை பெருவுடையார் கோயில் தரிசனம்


தஞ்சை பெரிய கோவிலில் வழிபாடு செய்த சீமான்.தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் தரிசனம்: சீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம்   மாலைமலர்:  தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வழிபட்டதற்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான புகாரை அளித்தவர் ‘பிரண்ட்ஸ்’ பட நடிகை விஜயலட்சுமி.
தன்னுடன் பழகிவிட்டு ஏமாற்றியதாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்கும் போடப்பட்டது.
இந்த நிலையில் அவர் சிமானை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடவுள்களை விமர்சனம் செய்துவிட்டு இப்போது பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று சீமான் வழிபட்டது வடிவேலு காமெடியை விட பெரிய காமெடி என்று கூறியுள்ளார்.
விஜயலட்சுமி வீடியோவில் பேசி இருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அவருக்கு லிங்கத்தின் முன்னால் மரியாதை செய்வது போன்ற வீடியோவை நான் பார்த்தேன். இதைவிட அசிங்கம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த நேரத்தில் சின்னதாக வரலாறு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். பெரியார் வழியை பின்பற்றி கட்சி நடத்துபவர் சீமான். சிவபெருமானை பற்றி குறிப்பிட்ட சாதியை குறிப்பிட்டு பேசியவர் பார்வதியையும் அது போன்றே கூறி உள்ளார்.
நான் ருத்ராட்சரம் அணிந்துள்ள சிவபக்தை. என்னுடைய குலதெய்வம் சிவன்.
சிவபெருமான் பற்றி ஒரு வி‌ஷயம் சொன்னாலே எனக்கு நிறைய கோபம் வரும். சிவபெருமான் பற்றி சீமான் கூறிய கருத்து பெரிய தப்பு. ஆண்-பெண் உறுப்பாக இருக்கும் லிங்கத்துக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபடுகிறார்கள். அய்யோ கருமம் என்றும் பேசியுள்ளார்.
எப்போதுமே நமது பேச்சில் உண்மை இருக்க வேன்டும். பெரியார் வழியை பின்பற்றினால் அந்த வழியிலேயே செல்ல வேண்டும். சாமி இல்லை என்று கூறிய சீமானுக்கு முருகன் எப்படி முப்பாட்டன் ஆனார். அவர் பெரியாரின் மகன் அல்ல. சிவபெருமானின் மகன்.
கடவுள் இல்லை என்று சொல்லும் உங்களுக்கு முருகன் எப்படி பாட்டன் ஆனார். இதன் மூலம் நீங்கள் இளறி உளறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை தைரியமாக சொல்வேன்.
இந்து சமயத்தில் உள்ள வழிபாடுகளின் படி பொய் சொன்னால் கற்பூரத்தை கொளுத்தி வாயிலும் போடுவார்கள். அதற்கு நீங்கள் தயாரா?
என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்க்கிறதா? விஜயலட்சுமி யார் என்றே எனக்கு தெரியாது என பல முறை கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் படம் நடித்த போது எனது வீட்டில் எவ்வளவு பெரிய லிங்கம் இருந்தது என்று உங்களுக்கு தெரியும்.
வீட்டில் சிவ வழிபாடு செய்ததற்காக என்னை எவ்வளவு துன்பப்படுத்தினீர்கள்? என்பது சிவனுக்கு தெரியும். எங்கள் குடும்பத்தினரை பார்த்து காலையிலேயே பட்டையை அடித்துக்கொண்டு வந்துவிடுவீர்களா? என்றும் கேட்டுள்ளீர்கள். நீங்கள் எதற்கு இப்போது பிரகதீஸ்வரர் கோவிலுக்கு பட்டை அணிந்து கொண்டு சென்றீர்கள்.

அடேங்கப்பா... இதுதான் பெரிய காமெடி. வடிவேலு சார் காமெடியை விட நீங்க பண்ணுவதுதான் பெரிய காமெடி. எனக்கு ஒரே ஒரு வி‌ஷயம் மட்டும் சொல்லுங்கள். நான் ரொம்ப தைரியமானவள், உண்மையானவள். சிவன் மேல் சத்தியமா சொல்கிறேன். நீங்கள் என்னை நிறைய துன்படுத்தி உள்ளீர்கள்.
எனக்கு ஒரே ஒரு சத்தியம் செய்து சொல்லுங்கள். விஜயலட்சுமி யார் என்பது தெரியாது என்று சொல்லுங்கள். எனது சிவ வழிபாட்டை நீங்கள் தடுக்கவே இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். உங்கள் ஆட்டம் அதிகமாக உள்ளது.
முருகப்பெருமான் வழி பாட்டில் அலகு குத்தி தேர் இழுப்பார்கள். ராமநாத புரத்தில் இருந்து வடபழனி முருகன் கோவில் வரை அலகு குத்தி தேர் இழுப்பீர்களா? அப்படி இழுத்தால் அவரை பாட்டன் என்று சொல்லுங்க.
சிவனைப்பற்றி இவர் என்னவெல்லாம் பேசியுள்ளார் என்பது தெரியாதா?
ரஜினிகாந்த் இமயமலை சென்றதை விமர்சித்தீர்களே? நீங்கள் எதற்கு பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றீர்கள். என்ன விளையாட்டா... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்த போது என்னை எவ்வளவு துன்பப்படுத்தினீர்கள் என்பது ஞாபகம் இருக்கிறதா?
ஒரு பெண்ணோட வாழ்க்கையை சீரழித்தவருக்கு சிவன் மரியாதை தரமாட்டார். தில்லா நில்லுங்க சார். பெரியார்னு சொன்னா அவர் வழியிலேயே நில்லுங்க. கோவிலுக்கு எதுக்கு போறீங்க இந்துக்களை ஏமாற்றவா? தஞ்சை கோவிலில் உள்ள சாமிகள் எல்லாம் எப்படி சீமானை நிற்க வைத்து மரியாதை செய்தீர்கள்?
சீமான் சார் நிங்கள் கிறிஸ்தவர் தானே. எதற்காக கோவிலுக்கு சென்றீர்கள். உங்களோடு இருந்த போது என்னையே கிறிஸ்டின் மாதிரி இருக்க சொல்வீங்க. உங்க ஆட்டத்தை எல்லாம் நிறுத்திவிடுங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இதே சீமானால் எனது வாழ்க்கையில் நிறைய தொந்தரவுகளை சந்தித்தேன். அப்போது எனக்காக யாரும் நிற்கவில்லை. சீமானை போன்ற ஆட்களை ஊக்கப்படுத்தாதீர்கள்.
இவ்வாறு விஜயலட்சுமி வீடியோவில் பேசியுள்ளார்

கருத்துகள் இல்லை: