சனி, 8 பிப்ரவரி, 2020

டெல்லி Exit poll ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்

BBC :டெல்லி சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 54.15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலில் அதாவது 2015 தேர்தலில் 67.12 சதவீதமாக இருந்தது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில், கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி அனைத்து கருத்திக்கணிப்புகளிலும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.
டைம்ஸ் நவ் கருத்து கணிப்பானது ஆம் ஆத்மி 44 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றுமென்றும், பா.ஜ.க 26 தொகுதிகளை கைப்பற்றுமென்றும் கூறுகிறது.
நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 50 - 56 இடங்களை கைப்பற்றும் என்றும் பா.ஜ.க 10 - 14 இடங்களை கைப்பற்றுமென்றும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்லாது என தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் -ஜான் கி பாத் கருத்து கணிப்பு ஆம் ஆத்மி 48 -61 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க 9 -21 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 0- 1 தொகுதியில் வெல்லும் என்றும் கூறுகிறது.
ஏ.பி.பி மற்றும் சி - வோட்டர் கருத்து கணிப்பானது ஆம் ஆத்மி 49- 63 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும், பா.ஜ.க 5 - 19 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும், காங்கிரஸ் 0 -4 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும் கணித்துள்ளது.

கடந்த தேர்தல்

கடந்த தேர்தலில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஆம் ஆத்மி 3 - 50 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க 20 - 33 தொகுதிகள் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 0 - 5 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கூறி இருந்தன.
இவை அனைத்தையும் பொயாக்கும் வண்ணம், ஆம் ஆத்மி 54.3 சதவீத வாக்குகளுடன் 67 இடங்களில் வென்று இருந்தது. பாரதிய ஜனதா மூன்று இடங்களில் வென்று இருந்தது. காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியையே தழுவியது

கருத்துகள் இல்லை: