திங்கள், 13 நவம்பர், 2017

புதுவை முதல்வர் நாராயணசாமி : பாஜக கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்


புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி அரசுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் ஆரம்பம் முதலே பிரச்சனை இருந்து வருகிறது. ஆளுநர் கிரண்பேடி அரசு விவகாரங்களில் தலையிடுவதாகவும் அரசை செயல்படாமல் தடுப்பதாகவும் அவர் மீது அரசு தரப்பில் குற்றச் சாட்டு எழுந்தது. ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். அரசின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு உரிமையில்லை என்றும் அவர் கூறினார். மக்கள் நலத்திட்டத்தை நிறைவேற்ற மக்களால் தேர்வானர்வர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். மேலும் வருமான வரித்துறைக்கு சோதனை நடத்த அதிகாரம் உண்டு என்று கூறிய நாராயணசாமி, ஆனால் அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். /tamil.oneindia.com

ரெயிடு முடிந்து விவேக் விசாரணைக்கு அழைத்து (இழுத்து?) செல்லப்பட்டார்

ரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்மாலைமலர் :சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெற்ற ரெய்டு முடிவடைந்த நிலையில், ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். ரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் சென்னை: சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9-ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை இன்று நிறைவுபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள், வங்கிக்கணக்குகள் குறித்த விபரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியிருந்தனர். கையகப்படுத்தப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக கூறிய அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தப்படுவர் என தெரிவித்திருந்தனர்.

”ஜெ. சிகிச்சை சிடி”க்காகவே ரெய்டு… இன்பத்தமிழன் ,,, தாமரைக்கனியின் மகன்...

 அமைச்சரான இன்பத் தமிழன்
 தாமரைக்கனியை எதிர்த்த இன்பத்தமிழன் tamiloneindia :சசிகலா குடும்பம் சம்பாதிக்கவே இல்லை; சொத்து குவிக்கவே இல்லை; தற்போதைய ஐடி சோதனை என்பது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிடியை கைப்பற்றி அழிப்பதற்காக மட்டுமே என கூறி அதிர வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன். எம்ஜிஆரின் முரட்டு பக்தராக இருந்தவர் தாமரைக்கனி. விருதுநகர் மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாதவராக இருந்தார். சட்டசபையில் தாமரக்கனியின் நடவடிக்கைகள் எப்போதும் ரணகளமானவைதான். 1991-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் பாமக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுவதற்கு குறுக்கீடாக பண்ருட்டி ராமச்சந்திரன் எழுந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்.
தாமரைக்கனியின் செல்ல தட்டு அப்போது தம்முடைய இருக்கையை விட்டு எழுந்து வந்து பண்ருட்டியாருக்கு பின்னால் நின்று கொண்டார் தாமரைக்கனி. திடீரென பண்ருட்டி ராமச்சந்திரன் தோளில் ஓங்கி தட்டினார் தாமரைக்கனி. இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்போது இருவருமே சட்டசபையில் இருந்து 3 நாட்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

சசிகலா சிறையில் சலுகை பெற்றது உண்மை.. கர்நாடக விசாரணை கமிஷன் அறிக்கை!

tamiloneindia -Veera Kumar" பெங்களூர்:

4 மாதங்களுக்கு பிறகு அறிக்கை பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என்று கர்நாடக அரசிடம் தாக்கல் செய்த விசாரணை குழு அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சசிகலா வெளியே ஷாப்பிங் சென்றதாகவும், சிறைக்குள் அவருக்கு சிறப்பு சமையல், மெத்தை விரிப்புகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி பரபரப்பு அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. யாக இருந்த சத்தியநாராயணராவிடம் வழங்கினார்.

மீண்டும் காங்கிரஸில் வாசன்? அங்கிட்டு சரத்து ,,, இங்குட்டு வாசு !

 மின்னம்பலம்  தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை 2014ஆம் ஆண்டு தனது தந்தை பாணியில் தொடங்கிய ஜி.கே.வாசன், இப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வருவாரா என்ற பேச்சு டெல்லி வட்டாரத்தில் இருந்து மெல்லக் கேட்கத் தொடங்கி இருக்கிறது.
1996ஆம் ஆண்டு காங்கிரஸ் தேசிய தலைமையின் கூட்டணி முடிவை எதிர்த்து தமாகாவைத் தொடங்கினார் மூப்பனார். அக்கட்சி பின்பு 2002ஆம் ஆண்டு ஜி.கே.வாசனால் காங்கிரஸில் இணைக்கப்பட்டது. 2002 முதல் 2014 வரை ராஜ்ய சபா எம்.பியாக மத்திய அமைச்சராக இருந்த வாசன், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் தமாகாவைத் தொடங்கினார்.

Magnitude 7.3 earthquake ஈரான், ஈராக் கடுமையான நிலநடுக்கத்திற்கு 135 பேர் உயிரழப்பு

மாலைமலர் : ஈரான், ஈராக் நாடுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 135 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். ஈரான்-ஈராக்கில் கடும் பூகம்பம்: 135 பேர் உயிரிழப்பு தெஹ்ரான்: ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில், ஈரான் பகுதிக்குட்பட்ட கெர்மன்ஷா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாடுகளிலும் எல்லைப்பகுதிகள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர்.

மகாகவி பாரதியார் ... அந்த காலத்து RSS தலைவர்... காவி கவிஞர்.. நெட்டீசன் ஆய்வு?

திராவிட வாசிப்பு - பாரதியார் ஜாதி இல்லைன்னு தானே சொன்னாரு என்பவருக்கு
பாரதியாரின் ஜாதி ஒழிப்பு பாட்டு
" வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல வித்தைகள் தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தாவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி
பிறர் பட்டினி தீர்பவன் செட்டி
நாலு வகுப்புபின்கு ஒன்றே - இங்கு
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறி சிதைந்து -செத்து
விழ்ந்திடும் மானிட சாதி ! "
இந்த பாடலில் பார்பானின் நாலு வர்ண கொள்கையை தூக்கி பிடிக்கிறார் , வர்ண கொள்கை அழிந்து விட்டால் மனித இனமே அழிந்து விடுமாம் .அதாவது பூணூல் போட்டவர்கள் வேர்வை சிந்தி உழைத்து சாப்பிட கூடாது சூத்திரனை வேலை வாங்கி சாப்பிட வேண்டும் .
இது டீஸர் தான் இன்னும் நிறைய பாடல் உள்ளது
இனிமேலும் பாரதி ஜாதி இல்லையடி பாப்பா சொன்னானா மூடிட்டு ஓடுறி பாப்பானு சொல்லு
முண்டாசு காவி பாரதியார் , நன்றி: எருமை மாடு

சாருநிவேதிதா : இந்தியா பற்றி ஏன் திட்டி எழுதுகிறீர்கள்?..... கேட்டால் ..... நட்பை முறித்து கொள்வேன்!

Charu Nivedita : இதயத்தைப் போல் காண்பித்துக் கொண்டிருக்கும் இந்தப் பையன் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான். பதினோரு கத்திக் குத்துக்கள் அவன் உடம்பில் இருந்தன. அம்மா தேநீர் போட்டுக் கொண்டிருந்தாள். பால் இல்லை. இதோ போய் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டுக் கடைக்குப் போனவன். வெளியே வந்த போது அவன் நண்பன் சமீயுல்லா ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தான். டேய், எங்கடா போறே என்றான் சமீயுல்லா. பால் வாங்கப் போறேண்டா. சரி வா, வண்டீல ஏறு. கடை அந்தத் தெரு முனையில் இருந்தது.
நம் வீட்டுப் பையன் போல் இருக்கிறான் இல்லையா? ஒரு கும்பலே அடித்துக் கொன்றது. அடியில் சாகவில்லை போல என்று நினைத்துக் கத்தியால் குத்திக் கொண்டே இருந்தது கும்பல். செய்த தப்பு என்ன தெரியுமா? பார்ப்பதற்கு முஸ்லீம் போல் இருந்தான். புகைப்படத்தை நன்றாகப் பாருங்கள். உங்கள் பையன் மாதிரி இருக்கிறானா, உங்கள் தம்பி மாதிரி இருக்கிறானா? அப்பா பீடி சுற்றும் தொழிலாளி. இந்தப் பயலுக்குப் படிப்பு வரவில்லை. culture of poverty. பயலின் அப்பா அரசாங்கத்தில் செக்‌ஷன் ஆபீசராக இருந்தால் படிப்பு வந்திருக்கும். அப்பா பீடி சுற்றும் தொழிலாளி. பயல் எலெக்ட்ரீஷியனாகப் போனான். ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான்.

ஞாயிறு, 12 நவம்பர், 2017

ம.பி இடைதேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி மக்களின் கோபத்தை காட்டுகிறது.. அகிலேஷ் யாதவ்!

ம.பி. இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி: மக்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறது - அகிலேஷ் யாதவ்மாலைமலர் :மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வி, மக்களின் கோபத்தை காட்டுவதாக அமைந்துள்ளது என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ம.பி. இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி: மக்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறது - அகிலேஷ் யாதவ் லக்னோ: மத்திய பிரதேசம் மாநிலத்தின் சித்ரகூட் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட 12 கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கிடையே, வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இறுதியில், பா.ஜ.க. வேட்பாளர் சங்கர்லால் திரிபாதியை 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி வெற்றி பெற்றார்.

ஐரோப்பிய அடைக்கலத்தில் 33 ஆயிரம் பேர் மரணம்..! அதிர்ச்சி புள்ளிவிவரம்

அகதிகள்அகதிகள்அய்லன் குர்திவிகடன் :ஜெ.அன்பரசன்'அய்லான் குர்தி' இந்தப் பெயரை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? கடந்த 2015 ஆம் ஆண்டு துருக்கி கடற்கரையில், படகு விபத்தினால் இறந்து கரை ஒதுங்கிய சிரியா நாட்டைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன். 'தான் எதற்காக கடும்குளிரில் கும்பலாக இவ்வளவு நாள் படகில் பயணம் செய்கிறோம்' என்பதுகூட அவனுக்குத் தெரிந்திருக்காது. 'எங்கு செல்கிறோம்...' என்றும் அவனுக்குத் தெரிந்திருக்காது. அதுவரை ஐரோப்பியாவுக்கு அகதிகளாகச் செல்பவரின் ஆபத்துப் பயணங்களைப் பற்றி நம்மில் பலருக்கே தெரியாது. துருக்கியின் கோஸ் கடற்கரையில் அய்லான் குர்தியின் உடல் கரை ஒதுங்கியபோது ஒட்டுமொத்த உலகநாடுகளும் கண்ணீர் வடித்தன. அதன்பின்பே ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளைப் பற்றி பலருக்குத் தெரியவந்தது.

ராஜீவ் காந்தியை தாக்கியவருக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்த ராஜபக்ஷ கட்சி

Sarawanan Komathi Nadarasa : மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் மகிந்த அணிக் கட்சியான “பொது ஜன பெரமுன” கட்சியில் 1987 முன்னால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையைப் பிளந்த விஜித ரோகன விஜேமுனிக்கு இன்று அங்கத்துவம் கொடுத்தார் பசில் ராஜபக்ச.
ராஜீவ் மீதான தாக்குதலால் இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வீரனாக கருதப்படுபவர் விஜேமுனி. அது மட்டுமன்றி விஜெமுனியின் அரசியல் முதலீடே அந்த சம்பவம் தான். 2015 பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோது விஜெமுனியின் போஸ்டர்கள் அதை உங்களுக்கு உறுதி செய்யும்

விவேக் வீட்டில் சோதனை உச்சகட்டத்தை நெருங்கிவிட்டது !

மின்னம்பலம் : நான்கு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறையின் வேட்டை கிட்டத்தட்ட முடிந்து சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள விவேக்கின் வீட்டில் இன்று( நவம்பர் 12) மாலை க்ளைமேக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சசிகலா தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என்று 190 இடங்களில் சோதனை இடப்பட்டாலும் அவற்றில் முக்கியமான மையங்கள் சென்னையும், மன்னையும்தான். மன்னையில் திவாகரன் என்றால்... சென்னையில் விவேக்தான் இந்த ரெய்டின் ஹிட்லிஸ்டில் முதல் நபராக இருக்கிறார்.
சுமார் 80 மணி நேர சோதனையில் விவேக் வீட்டின் ஒவ்வொரு கதவிடுக்குகள், பீரோக்கள், தரை விரிப்புகள், தலையணைகள் என்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து கத்தை கத்தையாக ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

பொன்.ராதாக்கிருஷ்ணன் :மோடி - கலைஞர் சந்திப்பு திமுக ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

நக்கீரன் :பிரதமர் மோடி - கலைஞர் சந்திப்பு திமுக ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றை மக்கள் புரிந்து கொண்டு வரவேற்பு அளித்துள்ளனர். பாமர மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வரி குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஜிஎஸ்டியின் தேவையை, அனைத்து வியாபார மக்களும், சிறு குறு தொழில் செய்வோரும் உணர்ந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் என நம்புகிறேன். தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. சுய அதிகாரம் படைத்த அமைப்பு நடத்தும் சோதனையை அரசியலாக்க வேண்டாம். மற்ற மாநிலங்களிலும் வருமான வரி சோதனை நடந்துள்ளது. வருமான வரித்துறை கட்சி பாகுபாட்டுடன் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறுவதில் உண்மை இல்லை. பிரதமர் மோடி - கலைஞர் சந்திப்பு திமுக ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் : நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு!


tamilthehindu :நடிகர்கள் அரசிலுக்கு வருகை தருவது நாட்டுக்கு பேரழிவு என்று பிரகாஷ் ராஜ் கூறியது சர்ச்சைக்குள்ளான நிலையில் தான் கூறியதன் அர்த்தம் என்னவென்பதை விளக்கியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்த பிரகாஷ் ராஜ், எப்படி திரித்து விட்டார்கள் என்று பாருங்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கூறியது இதுதான்:
நடிகர்கள் தாங்கள் பிரபலமானவர்களாக இருப்பதாலேயே அரசியலுக்கு வருதல் கூடாது. இது பேரழிவு.
நாட்டை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த தெளிவான பார்வையுடன் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். நாம் ரசிகர்களாக வாக்களிக்கக் கூடாது, மாறாக பொறுப்புள்ள குடிமக்களாக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் பிரகாஷ் ராஜ்

விஜய் சேதுபதி சாட்டை அடி ! முதல்வர் கனவில் மிதக்கும் ரஜினி கமல் விஜய் மற்றும் ....

Velmurugun :முதலமைச்சர் ஆக துடிக்கும் the rajinikanth கமலஹாசன் விஜய் போன்றவர்கள் நடிகர் விஜய் சேதுபதியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஒரு இளம் கதாநாயகனாக நடிக்க வந்து ஐந்து வருடங்கள் ஆன இளம் நடிகர் கண்ணெதிரே நடக்கும் சமூக அவலங்களை கண்டு கொதித்து தன்னாலான ஒரு சிறு உதவியாக ஓர் விளம்பரப் படத்தில் நடித்து பெற்ற ரூ 50 லட்சத்தை ரசிகர் மன்றம் என்ற பெயரில் விளம்பரப்படுத்தாமல் அந்த பணத்தை மாவட்ட நிருவாகத்திடமே கொடுத்து அரியலூர் மாவட்டத்திற்கு விளக்கேற்றி வைத்துள்ளார்.
அம்பது கோடி 26 கோடி 100 கோடி என்று பணம் வாங்கும் சூரப்புலிகள் இவரின் இந்த தியாகத்திற்கும் வெட்கி தலை குணிந்து நிற்க வேண்டும்.
சமூகத்தை செப்பனிடுவதற்கு முன் நீ என்ன தியாகம் செய்தாய்? என்று உங்கள் மனசாட்சியை இன்றிரவு நடிகர் விஜய் சேதுபதி உருக்கி எடுத்திருப்பார் என நம்புகிறோம்.
மக்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிட்டுத் முதலமைச்சர் கனவில் மல்லாந்து படுத்திருக்கும் அசிங்கமான நடிகர்களே உங்களுக்கு வெட்கம் manam ரோசம் இருந்தால் இனிமேலாவது அரசியல் பேச வேண்டாம்.

டெல்லியை முற்றுகை இட்ட செங்கடல் ...தொழிலாளி வர்க்கம், ஊடகங்கள் இருட்டடிப்பு

Su Po Agathiyalingam    :  சேனல்களும் சரி... செங்கோட்டையையே திணறடித்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் செங்கடலைப் பற்றி மூச்சுவிடவில்லை. மூன்று நாட்களும் மூச்சுவிடவில்லை.மகா முற்றுகை
நிறைவேற்று அல்லது வெளியேறு!
அது தில்லி மாநகரின் மையப்பகுதி. நாடாளுமன்றத்திலிருந்து ஓரிரு கிலோமீட்டர் தூரம்தான்.கண்ணுக்கெட்டும் தொலைவு வரை ஒரே சிவப்பு.செங்கடல் என்று சொல்லலாம்.36 மணி நேரமும் முழக்கம். இன்குலாப் ஜிந்தாபாத். புரட்சி நீடூழி வாழ்க.தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக. மோடி அரசே வெளியேறு!தில்லியின் அசுத்தம் நிறைந்த காற்றில் உயர் மத்திய தர வர்க்கத்தினர் வாழ்வதற்கு கஷ்டப்படுவது குறித்து பக்கம் பக்கமாக செய்திகளும் கட்டுரைகளும் தீட்டுகிற தில்லி நகரத்து பத்திரிகைகளும் சரி, தேசிய ஊடகங்கள் என்று பீற்றிக் கொள்ளும் செய்திச் சேனல்களும் சரி... செங்கோட்டையையே திணறடித்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் செங்கடலைப் பற்றி மூச்சுவிடவில்லை. மூன்று நாட்களும் மூச்சுவிடவில்லை.மகா முற்றுகை. இந்தி மொழியில் மகா படாவ் என்கிறார்கள்.

மூழ்கும் நிலையில் கொழும்பு?

மூழ்கும் நிலையில் கொழும்பு!
மின்னம்பலம் :கடும் மழை பெய்தால் கொழும்பு நகரம் முழுவதும் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று மாநகரச் சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்தின் விவாதத்தில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், “100 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியர்களால் கட்டப்பட்ட அம்பத்தனை மற்றும் நாகலகம் வீதி அணைக்கட்டுகள் மிகவும் சீர்கேடு அடைந்துள்ளது. அதை யாரும் சரியாகப் பராமரிப்பதில்லை, தற்போது உடையும் ஆபத்தில் உள்ளது.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் கறுப்பு தினம்’,,, கடுமையாகச் சாடிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் .. நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்

மின்னம்பலம் :இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்பான ஊழல் வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ‘இது உச்ச நீதிமன்ற வரலாற்றில் கறுப்பு தினம்’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலுடனே, இந்தியாவில் எந்தவொரு மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி கிடைக்கும். சில கல்லூரிகளை ஆய்வுசெய்த பின்னர், அதற்கு அனுமதி மறுப்பதும் நடப்பதுண்டு. இதற்கு எதிராக, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும்.
லக்னோவைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளையின் சார்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது. முன்னதாக, அந்த கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்திருந்தது. இதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, சி.பி.ஐ. விசாரணையில் இறங்கியது. இதுதொடர்பாக, முன்னாள் ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.குடூசி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் ஜாமீனில் விடுதலையாகினர். இதுபற்றி விசாரிக்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் விரைவில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டனர்.

ப.சிதம்பரம் : தேசம் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக ஆகிவிட்டது

மோடிக்காக ப.சி. சொன்ன 551ஆவது குறள்!காங்கிரஸ் கட்சியின் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது அக்கட்சி. அந்த வகையில், நேற்று (நவம்பர் 11) தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் இந்திரா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் நடந்தேறியது. இந்த மண்டபம் ரெய்டு நடவடிக்கைக்கு உள்ளாகிவரும் நடராஜனுக்குச் சொந்தமானது என்பதால் இங்கேயும் ரெய்டுக்கு வருவார்களா என்ற பதற்றம் இருந்தது. ஆனாலும் அப்படி எதுவும் நடக்காததால் நிகழ்வு நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முன் வரிசையில் பார்வையாளராக அமர்ந்திருந்தார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா.

நல்லகண்ணு : கலைஞர் என்னை அடையாளம் கண்டுகொண்டு என் கையைப் பிடித்து வரவேற்றார்”

கருணாநிதியுடன் நல்லகண்ணு சந்திப்பு!
மின்னம்பலம் :சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். ஓராண்டுகளாக எவ்வித நிகழ்விலும் கலந்துகொள்ளாத திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் முரசொலி பவள விழா கண்காட்சியைக் காண வந்திருந்தார். தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, இன்னும் சில மாதங்களில் தொண்டையிலுள்ள குழாய் அகற்றப்பட்டு பேசும் நிலைமைக்கு வந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஜெயா டி.வி.யின் 100க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் முடக்கம்:

தினத்தந்தி :ஜெயா டி.வி. சி.இ.ஓ. நிர்வகித்து வந்த 100க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிகாரிகள் தகவல்
சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலூரில் கடல் சீற்றம்; 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தினத்தந்தி : கடலூர், தமிழகத்தில் கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைந்தன. கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. பள்ளி செல்லும் மாணவ மாணவியர், பணிக்கு செல்வோர் அதிக பாதிப்படைந்தனர். இதேபோன்று கடல் சீற்றத்தினால் நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில், கடலூரில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. புதுச்சேரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றத்தினால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் 100க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

சவுக்கு : கருப்பர் நகரம்.... மெட்றாஸ்... அட்டக்கத்தி... இயக்குநர் ரஞ்சித்

savukkuonline.com :   மெட்றாஸ்.   இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி, பரவலான ஆதரவைப் பெற்று வெற்றி பெற்ற படம் இது.  நடிகர் சிவக்குமாரின் மகன், கார்த்தி நடித்துள்ள படம்.
சமூக வலைத்தளங்கள் பிரபலமானது முதற்கொண்டே, திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், சமூக வலைத்தளங்களின் மூலமாக தங்கள் திரைப்படங்களை பிரபலமாக்க வேண்டும் என்று முனைப்பாக இருக்கின்றனர்.   ஏனென்றால், சன் டிவியின் தர வரிசை, ஆனந்த விகடனின் மதிப்பெண்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் அரசியலை, மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
அதனால்தான், முகநூல் மற்றும் ட்விட்டரில் வரும் சில வரி விமர்சனங்களையே மக்கள் அதிகம் நம்புகின்றனர்.   இதனால், திரைப்படங்களின் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், முகநூல் மற்றும் ட்விட்டரில் அதிக பின்தொடர்பாளர்களை வைத்திருப்பவர்களை அணுகி, தங்கள் திரைப்படத்தைப் பற்றி பாராட்டி எழுதுமாறு, கேட்டுக் கொள்கின்றனர்.  அதன் அடிப்படையில் சில சமூக வலைத்தள பிரபலங்களும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மெட்றாஸ் திரைப்படம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி வெளியானது.   அந்த திரைப்படம் வெளியானதுமே சமூக வலைத்தளங்களில் இது ஒரு புரட்சிகரமான திரைப்படம் என்று பாராட்டப்பட்டது.   இத்தகைய பாராட்டுக்களுக்கான காரணமாக அவர்கள் சொன்னது, இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு தலித் என்பதும்.

BBC வானிலை அறிக்கை! புயல் வருகிறது.. தென் மாநிலங்களில் வெள்ள அபாயம்.

tamiloneindia.com: சென்னையில் கனமழை வெளுக்குமாம்…வானிலை மையம்! வார்னிங்- பெரும் சேதம் சென்னை: வெள்ளம் ஏற்படுத்தும் வகையில் தென் இந்தியாவில் மழை பெய்யும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது. 2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது. ஒரே நாளில் தாம்பரத்தில் 50 செ.மீ மழை பதிவாகி எச்சரிக்கையை ஊர்ஜிதப்படுத்தியது. அன்றும் சொன்னது பெரும் சேதம் பல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. சென்னையில் வெள்ளம் அன்றும் சொன்னது அதேபோல கடந்த சில நாட்கள் முன்பாக, பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டது.

தினமலர் அள்ளினால் சுரங்கம் : திவாகரனிடம் நள்ளிரவில் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை

 சசி, கும்பல், மீதான, பிடி,இறுகுகிறது!திருவாரூர்: நள்ளிரவில் சசிகலாவின் உறவினர் திவாகரன் வீட்டில் ஐ. டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் சுந்தரகோட்டையில் உள்ள சசிகலாவின் உறவினர் திவாகரனின் வீட்டில் அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அவர் நடத்தி வரும் கல்லூரியில் ரெய்டு நடத்திய அதிகாரிகள் 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே அவரிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் மீண்டும் விசாரணை நடந்து வருகிறது.மத்திய அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும், விசாரணைக்கு ஆயத்தமாகி வருகின்றன.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்க மானவர்கள், தமிழகத்தில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு மற்றும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதனால், அவர்கள் நிழல் பட்டவர்கள் கூட, கடவுளின் வரம் பெற்றவர் போல, திடீர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். சொத்துக்களின் அளவும், மதிப்பும் உயர உயர, சசிகலா குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என, அனைவரும், தொழிலதிபர் களாக வலம் வரத் துவங்கினர்.