செவ்வாய், 12 செப்டம்பர், 2017

தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!. அதிமுகவை சாய்த்து விட்டார்கள் ..அடுத்து திமுகவை ......

அவர்கள் வேர்விட ஆரம்பித்து விட்டார்கள். “நான் தூங்கும் போது என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்று சொல்கிற பெண்ணையோ தேசத்தையோ யாரும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். இதைச் சொன்னால் கம்யூனிஸ்ட் என்பார்கள். ஆனால் இதைவிட சொல்வதற்கு என்னிடம் உதாரணங்கள் எதுவும் இல்லை.
thetimestamil : சரவணன் சந்திரன் : வெளிப்படையாகவே உடைத்துப் பேசலாம். பா.ஜ.க என்ன செய்ய நினைக்கிறது இங்கே? முகநூல் வழியாக ஒரு தேர்தல் வைத்தால் இதில் எந்தக் கட்சிகளெல்லாம் பெரும்பான்மை பலம் கொண்டு வெற்றி பெறும் என்று யோசித்தால், வேடிக்கையாக இருக்கிறது. ஜெ.தீபாவின் கணவர் மாதவன் மிகப் பெரும்பாலான முகநூல் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்து விடுவார். ஆனால் கள யதார்த்தம் முற்றிலும் வேறாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை பா.ஜ.கவை எப்படி மதிப்பிட்டார்கள் இங்கே? தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மேடையில் ஒரு திண்டொன்றில் ஏறி நின்று உரையாற்றுவதைக் கிண்டலடித்து நிறையப் பதிவுகளைப் பார்த்தேன்.
கேலியும் கிண்டலுமாய் நிறைய புகைப்படங்களைப் பார்த்தேன். அவர் குமரி ஆனந்தனின் பெண் என்ற ஒரு காரணத்திற்காகவே அந்தப் புகைப்படக் கிண்டல்களைப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து என இந்தயிடத்தில் சொல்லுவதற்கு உண்மையிலேயே அச்சமாகத்தான் இருக்கிறது. துப்பாக்கிக் குண்டுகளுக்கு இன்னும் உடல் பழக விரும்பவில்லை.

பாஜக பேச்சாளரே நீதிபதி! அவரே தமிழக நவோதயவுக்கு அனுமதி கொடுத்த நீதிபதி சுவாமிநாதன்!

மத்திய அரசு நடத்தும் உண்டு உறைவிட  ஜவஹர் நவோதயா பள்ளிகள்
மும்மொழி திட்டத்தை கடைப்பிடிப்பதால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை. இருமொழிக் கொள்கையை பின்பற்றிவரும் தமிழக அரசுகள் இவற்றை கொள்கை முடிவாக அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தமிழ்வழியிலும் படிக்கலாம் என்ற நிபந்தனை தளர்வுடன் மத்திய அரசு நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறது. பொதுநல வழக்காக குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கோரும் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவு போட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து தமிழக அரசு எட்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டவர்கள் நீதிபதி கே.கே. சசிதரன் மற்றும் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன்.
நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதன் மூலம் மறைமுக ஹிந்தி திணிப்பையும் மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகவும் உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!

எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. செப்.10ல் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி கோரி 7 நாட்கள் ஆளுநருக்கு கெடு விதித்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சட்டமன்றத்தை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு தான் உள்ளது, ஆளுநர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். சட்டமன்றத்தை கூட்டினால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும். பெரும்பான்மை இருப்பதாக கூறும் முதல்வர் பழனிசாமி அதனை நிரூபிக்க வேண்டும். அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் தலையிட விரும்பவில்லை. திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி எனக்கூறி டிடிவி தினகரன் விளம்பரம் தேடப்பார்க்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நக்கீரன்

கலைஞர், எம்ஜியார் ,ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட நவோதயா! வீரமணி

ஹிந்தித் திணிப்புக்காக மட்டும் அதனை எதிர்க்கவில்லை:வீரமணி . நவோதயா கல்வி எங்கள் மாநிலத்துக்குத் தேவையில்லை என்று 1986இல் தமிழ்நாடு அரசால் அறுதியிட்டு அறிவித்த பிறகு அரசின் இந்த கொள்கை முடிவில், உயர்நீதிமன்றம் தலையிட்டு, நவோதயா கல்விக் கூடத்தை திறக்கச் சொல்லி உத்தரவிடலாமா? இதன் மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு அரசு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றி வரும் கொள்கை - இருமொழிக் கொள்கையாகும். தமிழ் - ஆங்கிலம் ஆகிய மொழிகள் தான் பாடத்திட்டமாக இருக்கும்; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தித்திணிப்பை. ஏற்கவே முடியாது என்று 1967ஆம் ஆண்டே அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் திட்டவட்டமான கொள்கை முடிவாக இதனை அறிவித்தார்.

அ.தி.மு.க- பொதுகுழுவில் 12 தீர்மானங்கள் .. ஜெயலலிதாவே நிரந்தர பொது செயலாளர் ...

நெற்றிக்கண் அவதூறுக்கு அனிதாவின் அண்ணன் பதில். கிருஷ்ணசாமி, தமிழிசைகளுக்கும் இது தான் பதில்.

அனிதாவை நேரில் பார்த்து பழகிடாத தமிழக மக்களே கொந்தளித்துள்ளனர்.
உடன் பிறந்த அண்ணன் எவ்வளவு மனம் நொந்து போய் இருப்பார். அவரையே குற்றம் சொல்ல துணிந்த ஜென்மங்களை என்ன சொல்ல...
அவதூறு செய்தி வெளியிட்டுள்ள 'நெற்றிக்கண்' இதழுக்கு அனிதாவின் அண்ணன் மணிரத்தினத்தின் பதில். கிருஷ்ணசாமி, தமிழிசைகளுக்கும் இது தான் பதில்.
-------------------------------------
நெற்றிக்கண் முருகன், என் தங்கையின் இழப்பிலிருந்து வெளிவர முடியுமா என்று தெரியவில்லை?? இருப்பினும் தமிழகத்தின் தங்கை அனிதாவிற்காக நான் பேசித்தான் ஆக வேண்டும்.
நெற்றியில் கண் என்பது அறிவியலுக்கு எதிரானதல்லவா? அறிவியலுக்கு புறம்பானது அனைத்தும் உண்மைக்கு புறம்பானதே, உங்களின் நெற்றிக்கண்ணும் அப்படித்தான்.
திமுகவின் செந்துறை ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி என்று தெரியும் அவரை நான் பார்த்திருக்கிறேன் இதுநாள் வரை சந்தித்தது இல்லை. இருக்கட்டும் ஞானமூர்த்தி அண்ணன்தான் என்னை சிவசங்கர் அண்ணனிடம் அழைத்துச் சென்றதாக சொல்கிறீர்கள், நான் முதன் முதலாக சிவசங்கர் அண்ணன் அவர்களை சந்தித்தது ஜூலை 12 அன்று தி.க தலைமையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில்தான், அங்கு கூட நான் ஞானமூர்த்தி அண்ணனை பார்க்கவில்லை.

நவோதயா பள்ளிகள் என்பது சமூகநீதிக்கு எதிரானது! அதனால் தமிழகம் எதிர்கிறது!

கேள்வி : நவோதயா பள்ளி என்றால் என்ன? அதை ஏன் எதிர்க்கின்றீர்கள்? அது இந்தி பள்ளி என்பதாலா?
பதில் : முதலில் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.. நவோதயா பள்ளி என்பது முழு இந்தி பள்ளிக்கூடம் அல்ல. அதில் இந்தி ஒரு பாடமாக மட்டுமே இருக்கும். மாநில அரசின் பள்ளிகளில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்பதைத்தான் திராவிட இயக்கம் எதிர்க்கிறதே தவிர அவர்களின் மத்திய அரசின் பள்ளிகளில் அவர்கள் நடத்திக் கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை.
கேள்வி : அப்படி என்றால் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருப்பதைப் போல தமிழகத்தில் நவோதயா பள்ளிகளும் இருந்து விட்டு போகட்டுமே! பிறகு ஏன் அதை எதிர்க்கின்றீர்கள்?
பதில் : ராஜீவ் காந்தி காலத்தில் 1986 இல் உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கையில் "மாவட்டம் தோறும் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு அதில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை இனம் கண்டு சேர்த்து அவர்களுக்கு மேலும் சிறப்புப் பயிற்சி அளிப்பது" என்ற கொள்கை உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்டது தான் நவோதயா பள்ளிகள். இதில் சேர்க்கையில் இடஒதுக்கீடும் பின் பற்றப்பட்ட மாட்டாது.

கமல்ஹாசன் மாக்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியில் ...? தோழர்கள் பேச்சு வார்த்தை?


சென்னை, நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் குதிக்க தயாராகி
இருக்கிறார். இதற்கான ஆயத்த பணிகளை டுவிட்டரிலும், சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தொடங்கி மக்களை நெருங்கி வருகிறார். விரைவில் புதிய கட்சி தொடங்கும் முடிவை ரசிகர்கள் கூட்டத்தை கூட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திராவிட கொள்கை கமல்ஹாசன் தேசிய சிந்தனையில் இருந்தாலும் திராவிட கொள்கைகளிலும், மாநில சுயாட்சியிலும் அக்கறை கொண்டு அதற்கு ஆதரவான கருத்துகளையே வெளியிட்டு வருகிறார்.
நீட் தேர்வு பிரச்சினையிலும் பல மொழிகள், பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் கல்வி சம்பந்தமான அதிகாரங்கள் மாநில அரசுகள் கையில்தான் இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார். எனவே திராவிட கொள்கைகளை சார்ந்தே அவரது புதிய கட்சி அறிவிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் கமல்ஹாசனை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் அவர் நெருக்கத்தை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கேரளாவுக்கு சென்று அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முதல்-மந்திரி பினராய் விஜயனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

நீட்: மருத்துவப் படிப்பில் வெளிநாட்டு மாணவர்கள்!

மின்னம்பலம் :‘  நீட் என்னும் போர்வையில் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கதவு திறந்து
விடப்பட்டுள்ளது. நீட்டினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லுவது பச்சையான பொய்; உண்மை நிலவரம் என்ன என்பதைப் புள்ளிவிவரம் சொல்கிறது’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுக்கவும் போராட்டங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தின் இன்னொரு கோணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் கி.வீரமணி.
“தமிழ்நாட்டில் நீட் என்ற பெயரில் சமூகநீதியை வெட்டி வீழ்த்தி, முன்னேறிய பார்ப்பனரும், ஏனையோரும் - முன்பு போலவே, கல்வியை தமது ஏகபோக ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரக் கூடிய ஆயுதத்தை மருத்துவக் கல்வியிலிருந்து தொடங்கியுள்ளனர், மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆளும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஆட்சியின்மூலம்.
நீட் தேர்வின் மறுபக்கத்தில் வெளிநாட்டு மாணவர்களை நம் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கவைக்கும் திட்டம் இருக்கிறது. பாஜகவினரும் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட நம் இனத்து விபீடணர்களும் மட்டும்தான் நீட் என்ற அகில உலக நுழைவுத்தேர்வினை சிலாகித்துப் பேசி வருகின்றனர்.

சசிகலா டிஸ்மிஸ் என்றால் ஆட்சியும் டிஸ்மிஸ்? பதிலடி கொடுக்க தினகரன் தயார்.!

அதிமுக பொதுகுழு இன்று கூட எந்தவொரு தடையும் இல்லை என்று நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. எனவே தினகரன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. நாம் பார்த்து முதலமைச்சராக்கிய ஒருவரே நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார் இதனால் டிடிவி தினகரன் ரொம்பவே அப்செட் ஆகி இருக்கிறார். இந்நிலையில் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் சசிகலா கட்சியில் இருந்தும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என தெரிகிறது. சசிகலா டிஸ்மிஸ் என்றால் தினகரனின் துணை பொதுச்செயலாளர் பதவியும் காலி என்றுதான் அர்த்தம். இதனால் கடைசி ஆயுதமாக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைக்கும் வகையில் தனக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சியை கலைக்க தினகரன் முடிவு செய்துவிட்டதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 4 வருட பதவியை எம்.எல்.ஏக்கள் துறக்க முன்வருவார்களா?என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.லைவ்டே

வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை... ஏனுங்க கேரளா கர்நாடகா தினம் எல்லாம் கிடையாதா?

தங்கை ராஜா: வரலாறு ரொம்ப முக்கியம் பிரதமரே. தொட்டிலாட்டும்
கலையில் டாக்டரேட் வாங்கிய உங்களை விமர்சிக்கும் தகுதி எனக்கு கிடையாது. அண்மையில் ஏ ஆர் ரகுமான் எனும் தமிழன் நடத்திய நிகழ்ச்சியில் தமிழில் சில பாடல்களை பாடினான் என்பதற்காக நிகழ்ச்சியை புறக்கணித்ததோடு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதோடு வழக்கும் தொடர்ந்த வடமொழி வெறியர் கூட்டத்தை எந்த தேச பக்தர்களும் கண்டிக்கவில்லை. வந்தேமாதரம் பாடலை உலகளவில் கொண்டு சென்ற ஒரு தமிழனுக்கே இந்தக்கதி. வேற்றுமையில் ஒற்றுமை என்பது திணிப்பினால் வரக்கூடாது. ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் மரியாதையிலும் அவரவருக்கு உள்ள உரிமையில் தலையிடாமையிலும் இருக்க வேண்டும் .
ரமேஷ் :செய்ய வேண்டிய வேலைய விட்டுப்புட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ன்னு புத்தி எப்படியெல்லாம் வேலை பாக்குது, மோடிஜி இன்னும் 20 மாதம் தான் உள்ளது அப்புறம் குஜராத் ல கூட இடம் கிடைப்பது கஷ்டம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே நல்லது இதற்கு மேக் இன் தமிழ்நாடு என்று பெயர்  வைப்பீரோ
Raman தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வரை என்ன கேவலமான வேலையும் செய்யும் இந்த  ஜென்மம்..
Raju : வாயால வடை சுடாதீங்க மோடிஜி . காவிரியில் தண்ணிய காட்டுங்க ப்ளீஸ். 
 E.PATHMANABAN செய்ய வேண்டிய வேலைய விட்டுப்புட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ன்னு புத்தி எப்படியெல்லாம் வேலை பாக்குது, மோடிஜி இன்னும் 20 மாதம் தான் உள்ளது அப்புறம் குஜராத் ல கூட இடம் கிடைப்பது கஷ்டம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே நல்லது
"வேற்றுமையில் ஒற்றுமையே நம் சிறப்பு. வட மாநிலங்களில், தமிழ்நாடு தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது," என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன், 125வது ஆண்டு மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, மாணவர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். டில்லியில் நடந்த நிகழச்ச்யில், 'வீடியோ கான்பரஸ்' மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மாணவர்களிடம், தமிழில் வணக்கம் கூறி, அசத்தினார் மோடி.நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் பெருமை. ஆனால், அதை நாம் முறையாக கொண்டாடுகிறோமா, கடைபிடிக்கிறோமா? ஒவ்வொரு மாநிலம் குறித்தும், ஒவ்வொரு மொழி குறித்தும், நாட்டு மக்கள் அனைவரும் பெருமை அடைந்தால் தான், அது சாத்தியமாகும்.

வெளிநாட்டில் கார்த்தி சிதம்பரத்துக்கு 25 சொத்துக்கள்..Karti.. 25 properties abroad in name of shell companies: CBI

Sutha Oneindia Tamil டெல்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாட்டில் ஷெல்
நிறுவன பெயர்களில் 25 சொத்துக்கள் உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இத்தகவலை அது உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நேற்று கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், கார்த்தி சிதம்பரம் மீதான விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், விசாரணை விவரங்களை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.
இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான கபில் சிபல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். கார்த்தி சிதம்பரத்தின் தாயார், தந்தை, மனைவியின் பெயரை சீர்குலைக்கும் வகையில் சிபிஐ செயல்பட்டு வருவதாகவும், அனைத்துமே அவதூறான புகார்கள் என்றும் அவர் வாதிட்டார். மேலும் அவர் வாதிடுகையில், கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தபோது, அவரது சொத்துக்கள் குறித்து ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.

அதிமுக பொதுக்குழு நடக்காது ...? முதலில் வழங்கிய தடையை மீற முடியாது? வழக்கறிஞர் கூறுவதென்ன?



கொள்ளைக்காரன் கேதான் தேசாய் ... (M.C,I) இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் ... இவனும் குஜராத்திதான்

The CBI recovered 1.5 kg of gold and 80 kg of silver from Desai's premises. Further, gold worth ₨ 35 lakhs were recovered from Desai's bank lockers in Ahmedabad.] CBI told that he had more than 35 lockers which were then yet to be opened and contents noted. He also was reported to own more than 400 properties across the country. But surprisingly Mr. Gulam Nabi Azad the then Union Minister of Health commented that the Government had no control over MCI and cannot take any action.
  இவன் பெயரில்  35 வங்கி  லாக்கர்கள் அதில் கிலோ கணக்கில் தங்கம் , இந்தியா முழுவதும் 400 மேற்பட்ட சொத்துக்கள் ...
Durai Ilamurugu : இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதான் தேசாய் பற்றி
முன்னர் எழுதிய பதிவில் கூறியிருந்தேன். தொடரும் என்றும் எழுதியிருந்தேன். கொஞ்சம் இடைவெளி ஆகிவிட்டது. இந்திய மருத்துவக் கவுன்சில்) (M C I) "இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நடைபெறும் கல்வியை தரக்கட்டுப்பாட்டு செய்யும் ஒரு அமைப்பு அவ்வளவுதான். அதிலும் காசு பார்க்கலாம் என்று கற்பித்தவர் திரு. தேசாய். காசு என்றால் அப்படி இப்படி இல்லை. சி பி ஐ காவல் துறை யே அதிர்ந்து போய்நின்றுவிட்டார்கள். அதுவும் 2000 - 2010
அவரது ஊழலை செயலலிதா ஊழலுடன் மட்டும் தான் ஒப்பிட இயலும் இவ்வளவு பணம் புழங்கும் M C I "இன்று புத்தரை போல நீட் தேர்வு, மருத்துவ படிப்பு உன்னதம் என்று பேத்துகிறது அப்பொழுது குலாம் நபி ஆசாத் நல்வாழ்வு துறை அமைச்சர் மன்மோகன் சிங் பிரதமர். எனவே தேசாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். 10 நாள் ஜெயிலில் இருந்து விட்டு பிணையில் வந்து விட்டார்.

நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு தமிழிசைக்கு முன்கூட்டியே எப்படி தெரிய வந்தது ?

Damodaran : பெரிய சதி நடக்கிறது......  திமுக செப்டெம்பர் 20 க்கு பிறகு "திஹார்
முன்னேற்ற கழகம்" ஆகும் # தமிழிசை நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு இவளுக்கு முன்கூட்டியே எப்படி தெரிய வந்தது ? பாஜக அரசு எழுதி கொடுத்த அந்த தீர்ப்பைத்தான் நீதிபதி வாசிக்கப்போகிறாரா ? எல்லா வழக்கிலும் மோடியும் அமித்ஷாவுமே நேரடியாகவே தீர்ப்புகளை வழங்கலாமே ?ஒப்புக்கு நீதிமன்றங்கள் எதற்கு ? இந்தியாவில் ஜனநாயகமும் செத்துவிட்டது நீதி முறையும் செத்துவிட்டது. ஆணவமும் சர்வாதிகாரமும் கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறது

ஒரே ஒரு மாணவருக்கு வகுப்பு எடுத்த வேலூர் சி எம் .சி மருத்துவ கல்லூரி

ஒரே ஒரு மருத்துவ மாணவருக்காக வகுப்பு எடுத்த சி.எம்.சி கல்லூரி. வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்று வந்த ஒரு மாணவருக்காக வகுப்பை தொடங்கியது. சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு நிறுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சி.எம்.சி. சார்பில் தனியாக ஒரு தேர்வு நடத்தும் அதில் வெற்றி பெறுபவர்கள் தங்கள் கல்லூரி மூலம் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது. இது பற்றி உச்சநீதிமன்றத்தில் சிஎம்சி சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் வழக்கின் தீர்ப்பு அக்.11ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் ஒரு மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த மாணவருக்காக சி.எம்.சி முதலாமாண்டு வகுப்பை தொடங்கியுள்ளது.லைவ்டே

நீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் - பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம்!

 இதோ ஒரு புள்ளி விவரம் பாரீர்!

சென்ற ஆண்டில் (2016-2017) எம்.பி.பி.எஸ். இல் சேர்ந்தோர் பட்டியல்
மாநில பாடத் திட்ட மாணவர்கள் - 3546
சி.பி.எஸ்.இ. மத்திய பாடத் திட்ட மாணவர்கள் - 62 மட்டுமே
2017-2018 இவ்வாண்டு எம்.பி.பி.எஸ். இல் சேர்ந்தோர் பட்டியல்
மாநில பாடத் திட்ட மாண வர்கள் - 2314
சி.பி.எஸ்.இ. மத்திய பாடத் திட்ட மாணவர்கள் - 1220 பேர்!
இதில் இவ்வாண்டு பிளஸ் 2-வில் படித்து, எம்.பி.பி.எஸ். இல் இடம்பெற்றவர் 1310 பேர் மட்டுமே
மற்ற 1004 பேர், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்று, பல லட்சம் செலவழித்து பயிற்சி  (Coaching Class) 
பெற்று வெற்றி பெற்றவர்கள்.
இதில் 250 பேர் பெரிதும் பார்ப்பனர் + முன்னேறிய ஜாதியினர் சிலர் மட்டும்.

2016 - சென்ற ஆண்டு முன் னேறிய ஜாதி - பார்ப்பனர் - 108-2.99 சதவிகிதம் (3 சதவிகிதம்)
2017 - இவ்வாண்டு, நீட்டி னால் வந்தவர்கள் (FC) - 353
அதாவது (9.99%) 10 சத விகிதம்.
இதனால், பெரிதும் மருத்துவ இடங்களை இழந்த வர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள்.
எப்படி? இதோ:

கடந்த 2016 ஆம் ஆண்டு -  BC - 1781 இடங்கள்
2017 ஆம் ஆண்டு -  BC  - 1501 இடங்கள்
MBC  மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் சென்ற 2016 ஆம்ஆண்டு பெற்ற இடங்கள் - 854
இவ்வாண்டு 2017 இல் - 621
SC -  தாழ்த்தப்பட்டோர்
2016 இல் 572 இடங்கள்
2017 இல் 557 இடங்கள்

புரட்டுகளைத் தோலுரிப்போம்!

திங்கள், 11 செப்டம்பர், 2017

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை இல்லை! உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது

சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெறுகிறது. எடப்பாடி -ஓபிஎஸ் அணியின் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி தினகரன் அணியின் வெற்றிவேல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளூபடி செய்யப்பட்டது. நீதிமன்றம் நேரத்தை வீணடித்ததாக ஒரு லட்சம் அபராதமும் வெற்றிவேலுவுக்கு விதிக்கப்பட்டது. தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் வெற்றிவேல் மேல்முறையீடு செய்தார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் தீர்ப்பை தள்ளிவைத்தனர். பின்னர் 9 மணீக்கு மேல் தீர்ப்பு வழங்கினர். அத்தீர்ப்பில், ‘’நாளை அதிமுக பொதுக்குழு நடத்த தடை இல்லை. பொதுக்குழுவில் எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது. பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்பிற்கு கட்டுப்பட்டது’’என்று தெரிவித்தனர். நக்கீரன்

ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: தினகரன் பேட்டி

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: தினகரன் தடாலடி பேட்டி மதுரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் அளித்தனர். அவர் ஒரு எம்.எல்.ஏ. மனுவை வாபஸ் பெற்ற நிலையில், புதிதாக மூன்று எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்றும், ஆட்சி கவிழ்வதை விரும்பவில்லை என்றும் டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வந்தார்.

பிறந்த குழந்தை கீழே விழுந்து உயிரிழப்பு ! மருத்துவர்கள் அலட்சியம்:.. ஹைதராபாத்


ஹைதராபாத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் ஒருவர் பெஞ்சிலேயே குழந்தை பெற்று, அந்த குழந்தை கீழே விழுந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்மம் மாவட்டம் அருகே பல்லேகுடம் பகுதியைச் சேர்ந்தவர் நாகமணி. நேற்று (செப்டம்பர் 10) நாகமணிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால், அவருடைய கணவர் கம்மம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.ஆனால், பிரசவ தேதி அக்டோபர் 26ஆம் தேதிதான் என்பதால் தற்போது குழந்தை பிறக்க வாய்ப்பில்லை, மருத்துவமனையை விட்டுக் கிளம்புங்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வலி அதிகமாக இருந்ததால் நடக்க முடியாமல் நாகமணியை மருத்துவமனை வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவரது உறவினர்கள் படுக்கவைத்தார்கள். இது குறித்து நாகமணியின் கணவர் மருத்துவர்களிடம் எடுத்துக் கூறியும், அவர்கள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கடைசியில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சிறிய பெஞ்ச் என்பதால் இடப்பற்றாக்குறையால் குழந்தை உருண்டு கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.

உயர்நீதிமன்றத்தில் தினகரன் - எடப்பாடி தரப்புக்கள் கடுமையாக வாக்கு வாதம்

மின்னம்பலம் : பொதுக்குழு கூட்டத்தை நடத்த யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தரப்புக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே கடுமையான வாதம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாளை செப்டம்பர் 12 சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டுவதை எதிர்த்து தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இன்று காலை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,'பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவதை விட, தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதே சிறந்தது. பொதுகுழுவில் கலந்துகொள்ள விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம்" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார் உயர்நீதிமன்ற நீதிபதி. மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக வெற்றிவேலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டியது என்ன?

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில், ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து, திமுக ஒரு மவுன புரட்சியை நடத்தியிருக்கிறது.
தோழர் கீற்று நந்தன், மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டியது என்ன என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். எனக்கு அந்த பட்டியலில் பெரிதாக உடன்பாடு இல்லை.
முதலில் நாம் இந்த நீட் சிக்கலில் எப்படி தோற்றோம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்துதான் நாம் எப்படி இதிலிருந்து மீண்டு வெற்றிபெரும் வழியை கண்டறிய முடியும்!
ஒப்பீட்டளவில், இந்த நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதென்பது, சாதாரணமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய ஒரு விசயம். மாநில அரசுக்கு இது ஒரு பிரச்சனையாகவே இருந்திருக்கக் கூடாது!
கல்வி என்பது concurrent பட்டியலில் இருக்கிறது.
அதாவது மாநில அரசுக்கு, கல்வி சம்பந்தமான முடிவு எடுப்பதில், சம உரிமை இருக்கிறது. மத்திய் அரசுக்கு முழு அதிகாரம் கிடையாது. அந்த அடிப்படையில்தான், மாநில சட்டமன்றத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
நிறைவேற்றப்பட்ட அந்த சட்டத்தை மத்திய அரசிடம் கொடுத்து, ஒப்புதல் பெற வேண்டியது மாநில அரசின் கடமை. ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல, ஏழு மாதங்கள் மாநில அரசுக்கு அவகாசம் இருந்தது அந்த ஒப்புதலை பெற. ஆனால் மாநில அரசு அதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததுபோல தெரியவில்லை!

‘நீட்’ தேர்வு தேவைதானா? கல்வியல் மாணவர்களின் கருத்து

thetimestamil.com காயத்ரி நரசிம்மன் : நானும் பிரியங்காவும் முதுகலை கல்வியியல் துறை மாணவர்கள்(ஆம் அப்படி ஒரு பட்டப்படிப்பு இருக்கிறது‌. அது பி.எட் பட்டத்தில் இருந்து வேறுபட்டது)‌. எங்கள் பாடத்திட்டத்தில் ‘பாடப் புத்தகங்களைப் புரிந்து கொள்ளுதல்’ என்று ஒரு பிரிவு உண்டு. அதன்மூலம், தற்செயலாய் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிடுகிற பாடப்புத்தங்களை மதிப்பீட்டு நோக்குடன் அணுகக் கூடிய வாய்ப்பு கிட்டியது. அதில் பங்கேற்ற எங்கள் பேராசிரியர்களும்(அவர்கள் பாடத்திட்ட, பாடப்புத்தக வடிவமைப்பிற்கான கலந்தாய்வு அமைப்புகளில் முக்கியப் பங்காற்றுபவர்கள்), 20 மாணவர்களும்(என்னையும் பிரியங்காவையும் தவிர மற்ற பதினெட்டு பேருமே தமிழ்நாடு பாடத்திட்டத்திற்குத் தொடர்பில்லாதவர்கள்) ஒப்புக்கொண்ட ஒரு‌ விஷயம் என்னவென்றால். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின்‌ அறிவியல் பாடப்புத்தகங்கள், அதே வகுப்பிற்கான சி.பி.எஸ்.சி பள்ளிகள் பின்பற்றும் என்.சி.ஈ.ஆர்.டி அறிவியல் பாடப்புத்தகங்ளை விட நன்றாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

லண்டன் .. அனிதாவுக்கு நீதி கேட்டு இந்திய தூதரகம் முன்பாக முழங்கிய பறை!


Gajalakshmi. Oneindia Tamil : லண்டன் : அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்விற்கு தடை கோரியும் லண்டன் தமிழர்கள் இந்திய தூதரகம் முன் பறையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வால் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவ கனவு கலைந்ததால் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அனிதாவின் மரணத்தையடுத்து கல்வியில் சம வாய்ப்புகளை வழங்காத நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்களும், அரசியல் கட்சியினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு வெளிநாடு வாழ் தமிழகர்களும் தொடர்ந்து தங்களது ஆதரவுக் குரலை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஈராக் என்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஏழை மாணவி அனிதாவிற்காகவும், அவர் போன்ற பிற மாணவர்களுக்காகவும் சேர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடராஜன் அவசர நோயாளர் பிரிவில் ... சசிகலா பார்க்க வரமாட்டார்! அனுமதி கோரவில்லை!

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ள அவர் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார் சசிகலா. அவரது கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது அவருக்கு. இந்நிலையில் தற்போது அவர் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுக்கப்பட்டுள்ளார். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நடராஜனின் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் அவருக்கு நுரையீரல் அடைப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகள் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 8 மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு டயாலிசிஸ் நடந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  வெப்துனியா