
இவன் பெயரில் 35 வங்கி லாக்கர்கள் அதில் கிலோ கணக்கில் தங்கம் , இந்தியா முழுவதும் 400 மேற்பட்ட சொத்துக்கள் ...
Durai Ilamurugu : இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதான் தேசாய் பற்றி
முன்னர் எழுதிய பதிவில் கூறியிருந்தேன். தொடரும் என்றும் எழுதியிருந்தேன். கொஞ்சம் இடைவெளி ஆகிவிட்டது. இந்திய மருத்துவக் கவுன்சில்) (M C I) "இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நடைபெறும் கல்வியை தரக்கட்டுப்பாட்டு செய்யும் ஒரு அமைப்பு அவ்வளவுதான். அதிலும் காசு பார்க்கலாம் என்று கற்பித்தவர் திரு. தேசாய். காசு என்றால் அப்படி இப்படி இல்லை. சி பி ஐ காவல் துறை யே அதிர்ந்து போய்நின்றுவிட்டார்கள். அதுவும் 2000 - 2010
அவரது ஊழலை செயலலிதா ஊழலுடன் மட்டும் தான் ஒப்பிட இயலும் இவ்வளவு பணம் புழங்கும் M C I "இன்று புத்தரை போல நீட் தேர்வு, மருத்துவ படிப்பு உன்னதம் என்று பேத்துகிறது அப்பொழுது குலாம் நபி ஆசாத் நல்வாழ்வு துறை அமைச்சர் மன்மோகன் சிங் பிரதமர். எனவே தேசாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். 10 நாள் ஜெயிலில் இருந்து விட்டு பிணையில் வந்து விட்டார்.
ஆனாலும் அப்பொழுதும் தேசாய் தான் M C I தலைவர். அவர் ஒப்புக் கொண்டு கையொப்பம் இடாமல் மருத்துவ கல்லூரிகள் இயங்காது. ஆனால் அவரை பதவி நீக்கம் செய்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல. குலாம் நபி ஆசாத் முயற்சி செய்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனே குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கையெழுத்து வாங்கி ஒரு வழியாக தேசாய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தேசாய் அவ்வளவு எளிதில் அடங்கும் ஆள் இல்லை குசராத் மாநிலத்தில் பிறந்தவர் அல்லவா. அவர் தனது பவரை காட்ட ஆரம்பித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக