புதன், 23 நவம்பர், 2016

சசிகலா - பிரதாப் ரெட்டி முறுகல்? ஒண்ணு கிடக்க ஒண்ணாச்சுனா அம்மாலோவை சுத்தி உள்ள ர ராக்கள் துவம்சம் பண்ணிடுவாய்ங்களே?

அ.தி.மு.க vs அப்போலோ! சீறும் சசிகலா... பின்வாங்கும் பிரதாப் ரெட்டி த மிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், இப்போதும், “அப்போலோ நிலவரம் என்ன? எப்படி இருக்கிறார் ஜெயலலிதா? அவர் வீடு திரும்பப்போவது எப்போது?” என்ற கேள்விகள் ஐ.சி.யூ-விலேயே இருக்கின்றன.
அப்போலோ - பொதுமக்கள் - அ.தி.மு.க
ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல் 15 நாட்கள் அவருடைய, உடல்நிலையை மையமாக வைத்து அப்போலோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. அடுத்த 15 நாட்களில் அப்போலோ அரசியல்களமாக மாறித் தகித்தது. தமிழக அரசியலும் இந்திய அரசியலிலும் அப்போலோவை மையமிட்டுச் சுற்றி வந்தன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைப்பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் வருகைக்குப் பின்னால், அவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருந்தன. அதன்பிறகு, காவிரிப் பிரச்னை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதும், செய்தி ஊடகங்களில், அப்போலோவின் ஒளிவட்டம் கொஞ்சம் மங்கத் தொடங்கியது.

செல்லாத நோட்டு விவகாரம் மோடி நடத்தும் கருத்துக் கணிப்பு :ஆதிவாசிகள் பழங்குடிகள் தங்கள் கருத்துக்களை twitter மூலம் தெரிவிக்கலாம்

மோடியின் 10 கேள்விகள்
நரேந்திர மோடி, 'ஆப்'பில் நடத்தப்படும் கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டுள்ள, 10 கேள்விகளின் விபரம்:
1. இந்தியாவில் கறுப்புப் பணம் உள்ளது என்று நினைக்கிறீர்களா?
2. கறுப்புப் பணத்துக்கு எதிராக போராட வேண்டும், அதை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
3. ஒட்டுமொத்தமாக, கறுப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
4. லஞ்சம், ஊழலுக்கு எதிரான, பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
5. 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
6. சில நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பால், கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
7. செல்லாத நோட்டுகள் அறிவிப்பால், ரியல்< எஸ்டேட், உயர் கல்வி, மருத்துவம் ஆகியவை, சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றம் ஏற்படுமா?

ஒவ்வொரு முறையும் மத்தியரசு ஏழைகளை மிக மோசமாக ஏமாற்றியுள்ளது…

நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன் என்கிறார் அந்த வங்கி ஊழியர்.
bastar-demonetisation
கிராமப்புற இந்தியாவின் நிலைமை படுமோசமான நிலையை அடைந்துள்ளது. ஒப்பீட்டளவில் குறைவான பணத்தாள்களே கிராமப்புற வங்கிகளுக்குச் சென்றடையும் நிலையில் நிலைமையைச் சமாளிக்க வங்கி ஊழியர்கள் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் உள்ள கிராமம் ஒன்றில் உணவுப் பொருட்கள் தீர்ந்து போன நிலையில் பணமும் தீர்ந்து போய் மக்களால் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மோடியை நேரில் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள் இந்த மக்கள்! பாருங்கள்

சென்னை சைதாப்பேட்டையில் கூவம் நதிக்கருகில் இருக்கிறது சலவைத்துறை குடியிருப்பு. அதிகமும் சலவைத் தொழில் செய்யும் மக்கள் வாழும் இடமிது. இதர வேலைகளை அதாவது அன்றாடம் உழைத்தால் கூலி கிடைக்கும் வேலைகளை செய்யும் மக்களும் இங்கே கணிசமாக இருக்கிறார்கள்.
மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு குறித்து இம்மக்கள் சொல்வது என்ன?
கருப்புப் பணத்தை பதுக்கிய பணக்காரர்கள் எவரும் வங்கி வரிசைக்கு வருவதில்லை. நாங்கள்தான் வேலையை விட்டுவிட்டு நிற்க வேண்டியிருக்கிறது. கருப்புப் பணத்தை பதுக்கியவர்களை விட்டுவிட்டு எங்களை ஏன் வதைக்க வேண்டும்? மழைத் தண்ணியில் நாங்கள் மூழ்கிய போது மோடியோ இல்லை லேடியோ வந்தார்களா? நாங்கள்தானே ஏதோ தப்பிப் பிழைத்தோம்? இருக்கும் ஒரு ஆயிரம் அல்லது ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ஒரு நாள் முழுவதும் சுற்றியும் மாற்ற முடியவில்லை.

பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு சசிகலா அல்ல அல்ல முதல்வர் ஜெ.ஜெயலலிதா அனுதாப செய்தி !

சென்னை: பிரபல இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல கர்நாடக இசை விற்பன்னரும் திரைப்பட பின்னணிப் பாடகருமான டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இன்று (22.11.2016) உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். தனது ஆறாவது வயதில் இசைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், கஞ்சிரா, மிருதங்கம், வயலின் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவராக திகழ்ந்தார்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: 60 சதவீத விற்பனை சரிவு பரிதவிக்கும் வாழை வியாபாரிகள், விவசாயிகள்

ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணமாக 60 சதவீதத்துக்கும் மேலான விற்பனை குறைந்ததால், வாழை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவையில் தடாகம் ரோடு, ரத்தினபுரி, காந்திபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம் உள்ளிட்ட இடங்களில் வாழை மண்டிகள் உள்ளன.
இவற்றுக்கு திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, கோபி, சத்தியமங்கலம், சிறுமுகை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், தடாகம், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத் தார்கள் வருகின்றன.
ரஸ்தாளி, மோரீஸ், செவ்வாழை, பூவன், நேந்திரன், நாடன், மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள், தினமும் சுமார் 25 லோடுகளில் கோவைக்கு வருகின்றன.

காசிக்கு போகவில்லை .. வர்ஷாவின் வீட்டில் தவம் செய்த வேந்தர் மூவிஸ் மதன்

காசியில் சமாதி ஆகபோவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தலைமறைவாகிப் போன வேந்தர் மூவிஸ் மதனை நேற்று திருப்பூரில் ஒரு வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். சென்னை எஸ்.ஆர்.எம் குழுமத்தில் கல்லூரி சீட் வாங்கித் தருவதாக, 100க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ரூ.80 கோடி வசூலித்த மதன், திடீரெனெ கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார். அவரை கண்டுபிடிக்கும் படி, அவரது தாயார் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார். எனவே, அவரை கண்டுபிடித்து ஒப்படைக்க, போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றமும் கெடு விதித்திருந்தது. இந்நிலையில்தான், நேற்று திருப்புரில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த பெண்ணின் பெயர் வர்ஷா.

தேர்தல் ஆணையத்தின் அனுசரணையுடன் வெற்றி பெற்ற அதிமுக?


அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளநிலையில், மூன்றிலும் திமுக-வை வீழ்த்தி அதிமுக வெற்றிபெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவு பற்றி கருத்து வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘ஆளுங்கட்சியினரின் அராஜகம், பண விநியோகம் மற்றும் அமைச்சர்களின் விதிமீறலோடு அதிமுக பெற்றிருக்கும் இந்த வெற்றியானது, தற்காலிகமானது’ என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ‘ஆளுங்கட்சியினரின் அராஜகம், அமைச்சர்களின் முறைகேடுகள், பணப் பட்டுவாடா அதோடு இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் துணையோடு ஆளுங்கட்சியாகிய அதிமுக பெற்றிருக்கும் இந்த வெற்றி, தற்காலிகமானதே. இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் வரும் காலங்களில் அதிமுக ஒரு மிகப்பெரிய தோல்வியைத் தழுவவேண்டிய சூழல் வரும். இவ்வளவு அராஜகங்களையும் தாண்டி திமுக இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருப்பதே அதற்குச் சான்று’ என்று கூறினார். minnambalam.com

கிராம கூட்டுறவு வங்கிகளை ஒழித்துவிட்டு பிக் பஜார் ,ரிலையன்ஸ் போன்றவற்றுக்கு பொருளாதாரம் தாரை வார்ப்பு !

big-bazaar-stores16052015ரூ. 500. ரூ. 1000 நோட்டுகள் தடை அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக, மத்திய அரசு பெட்ரோல் பங்குகளில் செல்லாத நோட்டுக்களுக்கு சில்லறை பெறலாம என அறிவித்திருந்தது. இந்நிலையில் பிக் பஜார் என்ற தனியார் ரீ டெயில் நிறுவனம் மூலமாக டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெறலாம் என பிக் பஜாரின் நிறுவனர் கிஷோர் பியானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். நாளை மறுநாள் முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் புற பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் கூட்டுறவு வங்கிகளை ஒழித்துவிட்டு பிக் பஜார், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களை வளர்த்துவிடுவதாக கண்டனம் எழுந்துள்ளது.

பாலமுரளி கிருஷ்ணா காலமானார்.. கர்நாடக இசை மேதை


பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (வயது 86) சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் காரணமாக சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள இல்லத்தில் இன்று பாலமுரளி கிருஷ்ணா உயிர் பிரிந்தது. ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுபதம் கிராமத்தில் பாலமுரளி கிருஷ்ணா பிறந்தார். இவர் 6 வயதில் கச்சேரி செய்து தனது இசைப்பயணத்தை தொடங்கியவர். கவிக்குயில் படத்தில் அவர் பாடிய சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடல் மிக பிரபலம் ஆகும். இதேபோல் திருவிளையாடல் படத்தில் பாடிய ஒரு நாள் போதுமா உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலம் ஆகின. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாலமுரளி கிருஷ்ணா இசை அமைத்தும் உள்ளார். மத்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருதும் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. -அரவிந்த் நக்கீரன்.இன்

தஞ்சையில் இனி பாலும் தேனும் ஓடும் ..

தஞ்சை மக்கள் ஜெயாவிற்கு வாக்களித்துள்ளார்கள்...
பணம் கொடுத்தார்கள் என்பது ஒரு காரணமாக சொல்லாதீர்கள்
வறண்டு போன காவேரி....பொய்த்துப்போன மூன்றுபோக சாகுபடி...செத்துப்போன விவசாயம்.....அன்றாடம் செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்...வற்றிப்போன நிலத்தடி நீர்...குடிநீர் பஞ்சம்...இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் ....மக்கள் அவற்றைப்பற்றி துளிகூட சிந்திக்கவே இல்லை...கவலைப்படவும் இல்லை.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடந்த போராட்டங்களில்.....திமுகவினருக்கு சில விவசாய சங்கத்தின் பொறுப்பாளர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்...பொதுமக்களில் யாரும் கலந்துகொள்ளவில்லை ...அந்த போராட்டங்களை திமுகவின் தேவையற்ற போராட்டமாகத்தான் நினைத்துக்கொண்டார்களோ என்னவோ ?
தஞ்சை மக்கள் விரும்பியபடி...ஜெய வென்றுவிட்டார்...தஞ்சை மக்களுக்கு இனி பாலும் தேனும் ஆறாக ஓடும் என்று நம்புவோம்.
தஞ்சை மக்கள் விதைத்ததை அறுவடை செய்யட்டும்...
இனி காவேரி...விவசாயம்...வெங்காயம் என்றும் யாரும் கூப்பாடு போடவேண்டாம்.எல்லாம் சரியாகிவிட்டது...போங்க போயி உங்க ஜோலியை பாருங்க முகநூல் பதிவு சென்னை தாமோதரன்

சவேரா :போலி வாக்குகளுக்கு வெற்றி ! அரவக்குறிச்சி,தஞ்சாவூர் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக வெற்றி .

2014 இல் 60 லட்சமாக இருந்த #admk infused கள்ள ஓட்டை 2016 இல் 40 லட்சமாக சுருங்கிய TNElectionsCEO acknowledged கள்ளஓட்டை நீக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக ?!..
ஒரு பூத்துக்கு சுமார் 66 வாக்காளர்கள் என்ற விகிதத்தில்
துல்லியமாக சேர்க்கபட்ட போலி வாக்காளர்கள் அடிப்படையில் அதிமுக அரசு தேர்தலை வென்று வருகிறது ..சுமார் 17000 போலி வாக்குகளை ஒரு தொகுதிக்கு சேர்ந்து தேர்தல் கமிசன் உடன் சேர்ந்து ஜனநாயகத்தை கேலி கூத்தாகி வருகிறது
முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால் சாமி "தமிழ்நாட்டில் யாராலும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாது' என்று கூறுகிறார். பிறகு ஏன் உங்களுக்கு தண்டச் சம்பளம்... தேர்தல் ஆணையத்தைக் கலைத்து விட்டுப் போவதுதானே என்று ஊடகத்தில் கேள்வி கேட்க ஆள் இல்லாதது அவர்களின் புண்ணிய கணக்கு.

எங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?”: ‘கக்கூஸ்’ என்றொரு ஆவணப்படம்


மதுரையைச் சேர்ந்த சமூக-அரசியல் செயற்பாட்டாளரான திவ்யபாரதி, மலக்குழியில் இறந்தி உயிர்விட்ட தொழிலாளிகள் குறித்து  ‘கக்கூஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.  மக்களிடம் நிதி பெறப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் படமாக்கப்பட்டது இந்த ஆவணப்படம்.
“நானும் ஒளிப்பதிவாளர்களாக குமார், கோபால் என மூவருமாக மட்டுமே தமிழகம் முழுக்க சுற்றி இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள், தோழர்கள், முகநூல் மூலமாக நிதி திரட்டினோம். நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். என்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போகும்போது குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரமாவது செலவாகும்.  இத்தனைக்கும் ஒரு நண்பர் கேமராவையும் இன்னொரு நண்பர் மைக்கையும் ஆவணப்படம் முடியும்வரை பயன்படுத்தக் கொடுத்தார்கள்.

மதன் எப்போது கைது செய்யப்பட்டார்? சிலநாட்களுக்கு முன்பாகவே கைது?

vendhar-2சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த வேந்தர் மூவீஸ் மதனை சென்னை காவல்துறை கைது செய்திருக்கிறது. காவல்துறையினரின் கைது நடவடிக்கை தாமதிக்கப்பட்டது தான் என்றாலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அவசியமான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஆனால், மதன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ஏராளமான மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. மதன் எங்கு, எப்போது, எந்த வகையில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்த துல்லியமான விவரங்களை  காவல்துறையினர் வெளியிடவில்லை. காவல்துறையினர் வெளியிட்ட விவரங்கள் நம்பும்படியாகவும்  இல்லை” என சந்தேகம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஜேஎன்யு மாணவர் நஜீப்பை தாக்கியது ஏபிவிபி அமைப்பினரே; முதற்கட்ட விசாரணையில் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் பட்துவான் பகுதியை சேர்ந்தவர் நஜீப் அகமது(27). இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்துறையில் ஆய்வுப் படிப்பினை மேற்கொண்டு வந்தார். பொதுவாக பல்கலைக்கழகத்தில் நல்ல நடத்தை யைக் கொண்ட மாணவராகவும், கல்வியிலும்சிறந்த மாணவராகவும் விளங்கி வந்துள்ளார். இதுவரை அப்பல்கலை.யில் ஒழுங்கீன செயல் உள்ளிட்ட எவ்விதமான குற்றச்சாட் டும் நஜீப் மீது கிடையாது. இந்நிலையில், மாணவர் நஜீப் மாயமானது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழும்பியது. அரசியல் காரணங்களுக்காக ஏபிவிபி யினரால் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டியதாக தெரிவிக்கிறது தீக்கதிர் நாளிதழ். மேலும் தீக்கதிர் வெளியிட்டுள்ள செய்தியில்,

களையெடுப்பு அரசியலும் ஜெயமோகனின் வன்மம் தோய்ந்த நாஜி வரிகளும்.. நான் கடவுள் படத்தின் கரு?

digi-jeya-008Dr.அரவிந்தன் சிவக்குமார் “The construction of a lunatic asylum costs 6 million marks. How many houses at 15,000 marks each could have been built for “ஒரு மனநலக்காப்பகம் கட்டுவதற்கு 6 மில்லியன் மார்க்குகள் செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே தொகை இருப்பின் 15000 மார்க்குகள் வீதத்தில் எத்தனை வீடுகள் கட்டியிருக்க முடியும்?”- (1934ஜெர்மானிய பள்ளி கணக்கு பாடப்புத்தகத்திலிருந்து)
அரவிந்தன் சிவக்குமார்முதலாம் உலகப்போர் முடிந்த தருவாயில், ஜெர்மனியில் ஒரு புத்தகம் வெளிவந்தது. 1920-ல் நீதிபதி காரல் பைண்டிங், மனநல மருத்துவர் ஆல்ப்ரெட் ஹோக் ஆகியோர் எழுதிய அந்தப் புத்தகம், 30-களின் இறுதியில் தொடங்கவிருந்த யூதர்களின் ’ஹொலோகாஸ்ட்’ மற்றும் ‘இறுதித் தீர்வு’க்கான விதையாக இருக்கும் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாமலேயே இருந்தது.
‘வாழ்வதற்குத் தகுதியில்லாதவரின் வாழ்வைச் சிதைப்பதற்கான அனுமதி’ என்ற தலைப்பில் வெளிவந்த அந்த புத்தகத்தின் சாரம் இதுதான்:
வாழ்வதற்கு லாயக்கற்றோர் பட்டியலில் இருக்கும் மனநோயாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், ஊனமுற்றவர், வயது முதிர்ச்சியினால் முடங்கிக் கிடப்பவர்கள் ஆகியோருக்கு பொருளாதார ரீதியில் செலவு செய்வது தேவையற்றது; எனவே அவர்களுக்கு ’விடுதலை’ அளிக்க கருணைக்கொலை என்ற வழிமுறையே சிறந்ததாகும் என்று அந்த புத்தகத்தில் கார்ல் பைண்டிங்கும் ஹோக்கும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

கீரோக்களில் நடிகர் விஜய் மட்டும்தான் (ரூபாய் செல்லாது ) கொஞ்சமாவது மனசாட்சியுடன் விமர்சிக்கிறார்



2000 நோட்டை பிச்சைகாரர்கள் கூட வாங்க தயங்குவார்கள். மன்சூர் அலிகான் ஒரு தீர்க்கதரிசி !



கறுப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி வகுத்த திட்டத்துக்கு நாடு முழுக்க பலத்த எதிர்ப்பும், ஒரு சில இடங்களில் ஆதரவும் நிலவி வருகிறது. ரூபாய் 500, 1000 தாள்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூபாய் 500, 1000, 2000 தாள்களை அறிமுகம் செய்வதுதான் மோடியின் திட்டம். இதில் ரூபாய் 500, 1000 தாள்களை முதலில் வெளியிடாமல் ரூபாய் 2000 தாள்களை முதலில் வெளியிட்டது ஒரு சீரிய சிந்தனை. இந்த ரூபாய் 2000 நோட்டுகள் மிகவும் தரமான முறையில் அமெரிக்கன் டாலர் தரத்துக்கு அச்சிடப்பட்டுள்ளது என்று மோடி அரசு தெரிவித்திருந்தது. இதில் GPS வசதி உள்ளது. யாரும் ஒளித்து வைக்க முடியாது மீறி ஒளித்து வைத்தால் செயற்கைக்கோள் உதவி கொண்டு கண்டுபிடித்து விடலாம் என்று S.Ve.சேகர் அவர்கள் மனம் நெகிழ ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
ரூபாய் 2000 தாள் சாயம் போகத் தொடங்கியது, தரமாக இல்லை என மக்கள் கூவினார்கள்.

ஒரே தேர்தல்: மோடி உறுதி! சீனாவும் பாகிஸ்தானும் காணும் கனவை நம்மாளு நிறைவேற்றுவார் ? மக்கழே நன்னா தூங்குங்க!


நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால் அதிகளவில் நிதி செலவாகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் தடைகள் ஏற்படுகின்றன. எனவே, நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அதுகுறித்து பொது விவாதம் தேவை என பிரதமர் மோடி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டது. அப்போது சில கட்சிகள் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

முதல்வர் ரங்கசாமி வெற்றி ! அரவக்குறிச்சி ,தஞ்சாவூர்,திருப்பரங்குன்றத்தில் அதிமுக முன்னிலையில்


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வென்றுள்ளார். புதுச்சேரி முதல்வரான நாராயணசாமி ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்வாக வேண்டும் என்னும் நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுக வேட்பாளராக ஓம்சக்தி சேகர் போட்டியிட்ட நிலையில் இன்று காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று சுற்றுகள் நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.
நாராயணசாமி மொத்தம் 18,709 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 7,526 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஓம்சக்தி சேகரை 11,183 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் நாராயணசாமி. இடைத்தேர்தலில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ள நிலையில் தன் முதலமைச்சர் பதவியை தக்க வைத்துள்ளார்.

BJP = 1 சதவீத காபரெட் முதலைகளை போஷிக்க 99 வீதம் மக்களை தெருவில் வீசிய மிருகங்கள்

Modi succeded in his mission.. Indian Intellectuals failed to address..
மோடியை விமர்சிக்கும் பலரும் மோடியினுடைய இந்த செயல்முறை தோல்வியடைந்து விட்டது என்றும், முட்டாள்தனமானது என்றும் விமர்சிப்பதை பார்க்க முடிகிறது.
மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை அறிவிப்பு நிச்சயம் முட்டாள்தனமான ஒன்று கிடையாது. இந்த எமர்ஜென்சியை அறிவிப்பதால் நாட்டில் மிகப் பெரிய சிக்கல்கள் உருவாகும். பல மக்கள் இறக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதெல்லாம் மோடிக்கோ, மோடியை இயக்குபவர்களுக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இதனால் கருப்புப் பணத்திற்கோ, கருப்புச் சந்தைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பதும் மோடிக்கு நன்றாகவே தெரியும்.
பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லக் கூடிய பொருளாதார அடியாட்கள் அத்தனை பேரும் "Short term loss..long term gain" னு ஒரே டயலாக்கை பேசுவதெல்லாம் எதேச்சையாக நடக்கின்ற ஒன்றல்ல.
GST மசோதா எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்ட போதே, இந்த நடவடிக்கைக்கான தேதி என்பது குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இன்று இவர்கள் பேசுகின்ற Cashless Transcation என்பதற்கான அத்தனை விடயங்களும் GST மசோதா நிறைவேற்றப்பட்ட கணத்திலிருந்தே உருவம் பெற்று விட்டன.
இந்தியாவின் பொருளாதாரத்தினை கிராமப் பொருளாதாரமாக சுய சார்புடையதாக இருக்கிறது. அதனை முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றுவதன் உட்சபட்ச நடவடிக்கையே இந்த தடை நடவடிக்கை.
சிறு வணிகர்கள், காய்கறி விற்பவர்கள், டீக்கடைக்காரர்கள், ஆட்டோ, லாரி ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள் என அனைவரின் Transactionம் வங்கி மூலமாகத் தான் நடைபெற வேண்டும் என அறிவித்து அனைவரையும் வரிவருவாய்க்குள் தள்ளியிருக்கிறார்கள். இனி இவர்கள் எல்லோரும் Tax Payers.

கும்பகோணம் கும்பாபிஷேகம் 260..கோடி ஒதுக்கீடு! தமிழக வெள்ள..நிவாரண பணிகளுக்கு.. 500 .. கோடி ஒதுக்கீடு!

கபட நியாயம் ..பேசும் ..அயோக்கியர்களை ..கேட்கிறோம்! > Alakarasan VB
கும்பகோணம் கும்பாபிஷேக..ஏற்பாடு! 260..கோடி ஒதுக்கீடு!
வெள்ள..நிவாரண பணிகளுக்கு.. 500 .. கோடி ஒதுக்கீடு!
ஏன்யா!...ஒட்டு மொத்த... தமிழகத்துக்கு..500 ..கோடி?
ஒரே ஒரு..கோவில் கும்பாபிஷேகத்துக்கு..260..கோடி தகுமா?
அப்போ...
ஒருசில கோடிகள்ல செம்மொழி மாநாடு..உலகத்தமிழ் மாநாடு நடத்துனதுக்கே..அரசுப்பணம் வீணாவுது!... இவுங்க மாநாடு போட்டுத்தான் தமிழ் வளரப்போவுதா?..தமிழ் தானா வளரும்!
அதை இவுங்க ஒண்ணும் வளக்கத்தேவையில்ல! 2000.
வருஷமா இவுங்க மாநாடு போட்டுத்தான் தமிழ்..வளந்துதா? அதை யாரும் காப்பாத்த தேவையில்ல சும்மாஇருந்தா போதும் தமிழ்.. தமிழ்ன்னு... இவுங்களைதான் வளத்துகிட்டாங்க!
அப்பிடில்லாம்..பொங்குன பொறம்போக்கு பத்திரிக்கைகள்...
இப்போ....
நூத்துக்கணக்கான..கோடிகளை கொட்டி ..கும்பாபிஷேகம் பண்ணாதான்..கும்பகோணம் வாழுமா?..கடவுளை இவுங்க வளத்தாதான் வளருமா? கடவுள் தானா வாழாதா?..இத்தனை ஆயிரம் வருஷமா கடவுள்..கடவுள்ன்னு...இவுனுங்கதானே
கொழுத்திருக்காங்க! கடவுளுக்கு தன்னை காப்பாத்திக்க தெரியாதா?.. அப்டின்னு.. ஒருபயலாவது ..எழுதுனானா?
ஆக...தமிழ் வளர்ச்சின்னா..தப்பு!..
ஆரிய ஆதிக்க.. விரிவாக்கம்ன்னா..சரியா? தவிர
பக்திக்கு..பலநூறு கோடிகளை செலவுபண்ணும் அரசாங்கம்..
பகுத்தறிவுக்கு...பத்து நயா..பைசா செலவு பண்ணுதா?
எவனாவது கேட்டானா? நல்ல..போங்கு..நியாயம்யா..இது!
>Alakarasan VB.

RSS (கறுப்பு) பணத்தை எங்கே மாற்றும் , ஒரு மில்லியன் டாலர் கேள்வி..??

RSS தனது பணத்தை எங்கே மாற்றும் ,
ஒரு மில்லியன் டாலர் கேள்வி..??
ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல, ஒரு என்.ஜி.ஓவும் அல்ல, ஒரு டிரஸ்ட்டும் அல்ல அல்லது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியும் அல்ல.
ஆக ஆர்.எஸ்.எஸ் எந்த விதத்திலுமே அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பு. ஆனால் அந்த அமைப்புக்கு “சரவா” என்ற பெயரில் ஒவ்வொரு விஜயதசமியன்றும் நாக்பூரில் நடக்கும் பிரம்மாண்ட பேரணியில் தொண்டர்கள் தரும் காணிக்கைகள் 500 அல்லது 1000 நோட்டுக்களில் வந்து மலை போல குவிவது உண்டு.
இந்த 500, 1000 நோட்டுக்களை எப்படி எந்த கணக்கில் மாற்றும்? அந்தப் பணம் எங்கே போகும்?

பள்ளி வாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடைக்கு அரசாணை

சென்னை: ‛தமிழகத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்த அரசாணையை மாநில அரசு வெளியிட வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. தடை கோரிக்கை: சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு என்பவர்,‛ கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை விதித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, போலீஸ் தரப்பில்,‛ கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக, செப்.,20 முதல், நவ.,20 வரை 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது. தடை உத்தரவை செயல்படுத்த அரசாணையை வெளியிடும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜன.,11ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.dinamalar.com

6 மாதங்களாக 8 மாநிலங்களில் சொகுசுகார்களில் வாழ்ந்து வந்த மதன்!

எஸ்.ஆர். எம். மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் வாங்கித்தருவதாக கூறி 84 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக 123 பேர் வேந்தர் மூவிஸ் மதன் மீது புகார் அளித்தனர். இதையடுத்து காசிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு கடந்த மே மாதம் 27ம் தேதி மாயமானார் மதன். பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அழுத்தம் கொடுக்கவே, விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டு செல்லவே, மதனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு போட்டது. மதனைப்பிடிக்க கமிஷனர் தனிப்படை அமைத்தார். டிசி சுதாகரன் தலைமையில் ஏசி நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ்மில்லர், சரவணன், மஞ்சுளா உட்பட 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில், மதன் வழக்கறிஞர் மூலமாக மதனிற்கு வேண்டப்பட்ட சுதிர், குணா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வடமாநிலங்களில் மதனை தீவிரமாக தேடினர். இதற்கிடையில் மதனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று மீண்டும் உயர்நீதிமன்றம் கெடுபிடி கொடுத்தது.