
இந்த போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சேகர், சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் வசித்து வந்தவர் மதனுடன் தொடர்புடையவர் என்று போலீசார் கண்காணித்தனர். அவர் பின் தொடர்ந்து சென்று மணிப்பூரில் கடந்த வாரம் கைது செய்தனர். சேகரின் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மாநிலம் விட்டு மாநிலமாக இரண்டு சொகுசுகார்களில் மதன் வலம் வந்துகொண்டிருக்கிறார் என்பதை அறிந்தனர்.
இதன்பின்னர் தனிப்படையினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தேடினர். அப்போது மதன் தமிழ்நாட்டில் இருப்பதாக சிக்னல் கிடைத்தது . சிம்கார்டு இல்லாத செல்போனில் வாட்ஸ் அப்பில் ஒருவருடன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. வாட்ஸ் அப்பில் பேசியது திருப்பூர் சிக்னல் வந்தது. அந்த சிக்னலின்படி திருப்பூரில் வர்ஷா என்கிற தொழிலதிபர் மனைவி வீட்டை சுற்றி வளைத்தனர் போலீசார். வர்ஷா வீட்டில் சோதனை நடத்தினர்.
வர்ஷா செல்போன் மூலம் போலீசார் மதன் இருக்கும் இடத்தை அறிய முற்பட்டனர். இந்த முயற்சியில் திருப்பூரில் பூண்டி இடத்தை காட்டியது சிக்னல். அதன்படி அதிகாலையில் திருப்பூரில் பூண்டியில் கடந்த சனிக்கிழமை அன்று மதனை போலீஸ் கைது செய்தது. மதனிடம் போலீசார் விசாரித்ததில், கடந்த 6 மாதங்களாக, போலி நம்பர் பிளேட் கொண்ட 2 சொகுசு கார்களில் 8 மாநிலங்களில் வலம் வந்து, காருக்குள்ளேயே பெரும்பாலும் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. - அரவிந்த் nakkeeran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக