புதன், 23 நவம்பர், 2016

மோடியை நேரில் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள் இந்த மக்கள்! பாருங்கள்

சென்னை சைதாப்பேட்டையில் கூவம் நதிக்கருகில் இருக்கிறது சலவைத்துறை குடியிருப்பு. அதிகமும் சலவைத் தொழில் செய்யும் மக்கள் வாழும் இடமிது. இதர வேலைகளை அதாவது அன்றாடம் உழைத்தால் கூலி கிடைக்கும் வேலைகளை செய்யும் மக்களும் இங்கே கணிசமாக இருக்கிறார்கள்.
மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு குறித்து இம்மக்கள் சொல்வது என்ன?
கருப்புப் பணத்தை பதுக்கிய பணக்காரர்கள் எவரும் வங்கி வரிசைக்கு வருவதில்லை. நாங்கள்தான் வேலையை விட்டுவிட்டு நிற்க வேண்டியிருக்கிறது. கருப்புப் பணத்தை பதுக்கியவர்களை விட்டுவிட்டு எங்களை ஏன் வதைக்க வேண்டும்? மழைத் தண்ணியில் நாங்கள் மூழ்கிய போது மோடியோ இல்லை லேடியோ வந்தார்களா? நாங்கள்தானே ஏதோ தப்பிப் பிழைத்தோம்? இருக்கும் ஒரு ஆயிரம் அல்லது ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ஒரு நாள் முழுவதும் சுற்றியும் மாற்ற முடியவில்லை.

வங்கிக் கணக்கை விடுங்கள், கையெழுத்தே போட தெரியாத மக்களிடம் வங்கிக்கு வாருங்கள் என்று சொல்வது ஏன்?
இன்னும் அவர்களது ஆதங்கம் குறையவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளிகள், பெண்கள் அனைவரும் பேசுகிறார்கள். கோபப்படுகிறார்கள். மோடியை நேரில் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள் இந்த மக்கள்! பாருங்கள் – பகிருங்கள்!  வினவு

கருத்துகள் இல்லை: