சென்னை: ‛தமிழகத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்த அரசாணையை மாநில அரசு வெளியிட வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தடை கோரிக்கை:
சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு என்பவர்,‛ கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த தடை விதித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' ஏற்கனவே
உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, போலீஸ் தரப்பில்,‛ கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக, செப்.,20 முதல், நவ.,20 வரை 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது.
தடை உத்தரவை செயல்படுத்த அரசாணையை வெளியிடும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜன.,11ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக