புதன், 18 மே, 2016

சாதிக் பாட்சா தற்கொலை அல்ல, கொலை..! - வைகோ

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது. இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது.

தமிழக் தேர்தல் பெட்டிங் ..பலகோடிகள் புரளும் ரகசிய பேரம்

தமிழகத்தில், ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்' கட்டியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சில இடங்களில், தங்கம், வெள்ளி மற்றும் நிலம் போன்றவற்றை பந்தய பொருளாக வைத்து, தேர்தல் சூதாட்டம் கனஜோராக நடக்கிறது.
'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்குமா; பிடிக்காதா? தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்குமா; அமைக்காதா? மக்கள் நலக் கூட்டணி, ஒரு இடத்திலாவது வெற்றி பெறுமா; பெறாதா? அன்புமணி ஜெயிப்பாரா, மாட்டாரா?' என, பல வகைகளில், இந்த
பெட்டிங் கட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தொகுதி அளவிலும், இந்த சூதாட்டம் துவங்கி உள்ளது. எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது குறித்தும், ஓட்டு வித்தியாசம் குறித்தும், பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுகிறது.

பழ 'பார்சல்' போல மரப்பெட்டியில் பயணமான ரூ.570 கோடி

நல்ல வேளை சாக்குப்பையில் அனுப்பி மானத்தை வாங்கவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டும்..... கோவை:திருப்பூரில் சிக்கிய, 570 கோடி ரூபாய் ரொக்கம், மூன்று கன்டெய்னர் லாரிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கோவை வந்தன. ரூபாய் நோட்டுகள் வங்கியில் எண்ணி சரிபார்க்கப்பட்டன.
லாரிகளில் பணத்தை அனுப்பி வைத்த விவகாரத்தில், விதிமீறல்கள் நடந்துள்ளதாக, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவையில் இருந்து ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு, 570 கோடி ரூபாயை எடுத்துச் சென்ற மூன்று, 'கன்டெய்னர்' லாரிகளை, திருப்பூர் தேர்தல் அதிகாரிகள், கடந்த 14ம் தேதி பறிமுதல் செய்தனர்.    ஆந்த்ரா - திராட்சை பழம் - தேர்தல் நேரம் - கண்டெய்னர் லாரி - கோடி கோடியா பணம் - விதி மீறல்கள் - 18 மணி நேரம் - அருண் ஜெட்லி - யோவ் இதுக்கு மேல என்னய்யா க்ளூ வேணும் உங்களுக்கு?.... சரி போகுது.. புரியலைன்னா இன்னும் கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்க்கலாம்...... ஊழலம்மா - ஐவர் அணி - வீட்டுக்காவல் - 30,000 கோடி - சிறுதாவூர் பங்களா - கண்டெய்னர் லாரி - ஆந்த்ரா - திராட்சை........ - அருண் ஜெட்லி... இப்பவாவது புரியுதா? ஆங்.. அது.

சு.சாமி : ரிசேர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்யவேண்டும்.. அவர் அமெரிக்க குடியுரிமை....


ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு, டெல்லி மேல்-சபை எம்.பி.யும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியசாமி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள ரகுராம் ராஜன், மனோரீதியாக முழுமையான இந்தியராக இல்லை. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, வேண்டும் என்றே அதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்கிற அவருடைய சிந்தனையும் ஆபத்தானது. மேலும், கடந்த 2 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டது. எனவே அவரை உடனடியாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும்.  இந்த  பார்பானுக்கு( தமிழ் அய்யர்)  அந்த பார்ப்பானை( தமிழ் அய்யங்கார்)  பிடிக்காதது ஏன்? உள்குத்து ஒன்று இருக்கிறது விரைவில் வெளியே வரும் ... இருவருமே அமெரிக்க காப்பரெட் இந்தியர்கள் ..

தற்கொலை செய்ய வேண்டாம் - மாணவர்களுக்கு சகாயம் வேண்டுகோள்

சென்னை: தேர்வில் மார்க்குகள் குறைவாக பெற்ற மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வில் தோல்வி பயத்தினால் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தில் இன்று சக்தி கணேஷ் என்ற மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறியிருப்பதாவது: தோல்வி என்பது வெற்றியின் வழிகாட்டியே , மாணவர்கள் யாரும் மனம் தளரக்கூடாது. குறைந்த மார்க்குகள் பெற்றாலும் அறிவியல், கலை உள்ளிட்ட பிரிவுகளில் பல வாய்ப்புகள் உள்ளன. மாணவ, மாணவிகள் யாரும் தற்கொலை செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர் மழை.. அரக்கோணம், நெல்லூரில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை வருகை

 சென்னையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அரக்கோணம், நெல்லூரில் இருந்து பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 270 பேர் சென்னை வந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கே 120 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், இன்று காலை 5.30 மணிக்கு சென்னை கடற்கரையை ஒட்டி கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், தியாகராய நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர், பாரிமுனை, கிண்டி, ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சென்ட்ரல், பாரிமுனை, திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Trafic ராமசாமி : ரூ.570 கோடி....சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது...கண்டுபிடிக்கும் வரை...

திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ரூ.570 கோடி பறிமுதல் சட்டசபை
தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதில் 50 சதவீதம் முறையான கணக்கு இல்லாதவை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.570 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. தற்போது இந்த பணம் தங்களுடையது என்று பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் உரிமை கோரியுள்ளது.

9/11 சவுதி அரேபியாவுக்கு எதிரான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது

நியூ யார்க் மற்றும் வாஷிங்டனில், கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபியா மீது வழக்குத் தொடுக்க வழிசெய்யும் மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியுள்ளது.
 9/11 தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர் இதையடுத்து அத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சவுதி அரேபிய அரசு மீது வழக்கு தொடுக்க முடியும்.
 விமானத் தாக்குதல் மூலம் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது எனினும் இந்த மசோதா குறித்து அதிபர் ஒபாமாவுக்கு ஆழ்ந்த கவலைகள் உள்ளன என்றும் அவர் அதில் கையெழுத்திட்டு சட்டமாக்குவார் என்பதை கற்பனை செய்துக்கூட பார்ப்பது கடினமாகவுள்ளது என்றும் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுப.வீரபாண்டியன் : தேர்தல் தெருக்களில் ஒரு பயணம்....

கைநீட்டிக் காசு வாங்கிட்டோம், மாத்திப் ஓடுவது தருமமில்லை என்ற எண்ணம் போய்விட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வலிமை என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இந்தத் தேர்தல் கண்டிப்பாய் உதவும்.
 தேர்தல் தெருக்களில் ஒரு பயணம் "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்" என்பார் கண்ணதாசன். தேர்தல் என்றால் இன்னும் பல்லாயிரம் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது - எங்கள் பயணம் தந்த அனுபவம். கடந்த இரண்டாம் தேதி தொடங்கி 14ஆம் தேதி மாலை வரை, தி.மு.கழகக் கூட்டணியை ஆதரித்து நடைபெற்ற எங்கள் தேர்தல் பயணத்தில் மக்களுக்குச் சொன்னதை விட, மக்களிடமிருந்து நாங்கள் பெற்றவைகள் மிகுதி!

செவ்வாய், 17 மே, 2016

வைகோ சொல் அத்தனையும் அமிர்தம்... டவுட்டு இருந்தா பிறேமலதா கிட்ட கேட்டு பாருங்க ..

வைக்கோ செய்த புண்ணியம்..
அவரு போற இடமெல்லாம், பொன் துலங்கும்....
அவரோடு சேருற எல்லாருமே
அவரை போலவே சொக்க தங்கமா
தகதன்னு மின்னுவாங்க...
அவரு அப்படி ஆக்கிடுவாரு..
அவரோட ராசி அப்படி.....
மகராசன், கைராசிக்காரன்...
ஆனா என்ன ஒன்னு...
சத்தம் மட்டும் பெருசா கேக்கும்,
வண்டி நகரவே நகராது.....
அப்படி ஸ்ட்ராங்கா புதைகுழியில் நிக்கிற மனுஷன்.....
முன்னே போறவங்களையும் கூப்பிட்டு
'நான் கிங் ஆக்குறேன் வாங்க' என்று
ஆசை வார்தையெல்லாம் காட்டி,
தன்னோடவே புதைகுழியில் கொண்டு
வந்து நிலையா நிக்க வச்சிருவாரு....

அப்படி புதைகுழியில் கூப்பாடு போட்டு
கொண்டு நிற்கும் ஸ்ட்ராங்கான மனிதன் தான்
வைக்கோ என்ற அதிபுத்திசாலி....
வெளியில் மழை பெய்தால்,
வீட்டுக்குள் குடை பிடிப்பார்...

570 கோடி..... சி.பி.ஐ விசாரிக்காது... டீல்... பங்கு... கமிஷன்... ப்ளாக் மெயில் .. பிடிபட்டதும் பேச்சு வார்த்தை . பேசிக்கிறாய்ங்க

ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க...
 இந்த பணம் முழுக்க  உயிரை பறித்த டாஸ்மார்க் பாவப்பணம். இதை மதுவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கவேண்டும். 
 கண்டெய்னர்களில் சிக்கி ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம். கோவத்தில் அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள இட்லியை தோழி தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன கெஞ்சினாராம். இட்லி பிடிபட்ட 3 கன்டைனர்களிலும் ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும் 30 பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம். மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் இட்லி. ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் sbiக்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில் 30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.

அதிமுக தனிப்பெரும் கட்சி: தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று தந்திடிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி 3 இடங்களையும், பாமக 2 இடங்களையும், பாஜக 1 இடத்தையும் கைப்பற்றும். மற்ற 16 தொகுதிகளில் இழுபறி நிலவும் என்று தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளை இந்த கருத்துகணிப்பில் சேர்க்கப்படவில்லை.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்பதால் இது கவனம் பெறுகிறது.
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் , மே 16-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் : மிக கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு அருகே 240 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வந்த நிலையில், சனிக்கிழமையன்று தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரைக்கு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அது தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, திங்கள்கிழமை வட மேற்கு நோக்கி நகர்ந்தது.

கன்டெய்னர் ரகசியத்தைக் காக்கும் ரிசர்வ் வங்கி! -மவுனம் கலைப்பாரா ரகுராம்ராஜன்? Deal making process...

vikatan.com திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னர் பணம் குறித்து நாள்தோறும் வெளியாகும் தகவல்கள், உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 'எங்களிடம் ஆவணம் இருக்கிறது'  என ஸ்டேட் வங்கி சொன்னாலும், 'உரியமுறையில் பணம் கையாளப்படவில்லை. இது தனிநபரின் பணமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்' என அதிர வைக்கிறது வங்கி ஊழியர்கள் சங்கம். மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை, இடம் பொருள் பார்க்காமல் விமர்சிப்பதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தயங்கியதே இல்லை. ' அவரை மாற்றிவிட்டாலே போதும்' என பா.ஜ.கவின் தலைவர்கள் பகிரங்கமாக பேட்டியளித்து வந்தனர்.
"திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னர் பற்றி  ரகுராம் எந்த தகவலும் சொல்லாமல் இருப்பதன் பின்னணியில் சில விஷயங்கள் நடந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

பென்சில் தயாரிப்பாளர் ஆடிப்போய் விட்டார் ... கோடம்பாக்கம் இவ்வளவு மோசமா?

'படம் நல்லா வந்திருக்கு. ஆனாலும், சங்கடம்தான்..!’’ - இது ‘பென்சில்’ பஞ்சாயத்து!" வழக்கமாக பணம் படைத்த பலரின் மகன்கள்  'அப்பா  நான் ஹீரோவாக நடிக்கணும் " என்று அடம்பிடித்து நடித்து வெளிவந்த படங்கள் பல. அவற்றில் ரிலீஸான உடனே பல படங்கள் சுவற்றில் எறிந்த பந்தாக திரும்பி வந்தது.  கோடம்பாக்கத்தில் கோடீஸ்வரன்களாக திவான் மாதிரி வந்தவர்கள் திவால் ஆகிப்போன கதைகள் ஏராளம். 'பென்சில்"  தயாரிப்பாளரின் பங்களா போயஸ்கார்டனில் இருக்கிறது.  டாக்டரான  சண்முகம் மகனுக்கு  சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்பது கனா.  பெற்ற மகன் ஆசைக்காக 'பென்சில்" எடுத்து  இப்போது பிளேடால், தன் கையை தானே கீறிக்கொண்டதுபோல நிற்கிறார், சண்முகம்.  படம் நன்றாக வந்திருக்கிறது. நன்றாகப் போகும்.  ஆனால் படத்தைத் தயாரித்த நாங்கள் மட்டும் நட்டப்பட்டிருக்கிறோம்” என்கிறார் வேதனையுடன்.ஏழு லட்சத்துக்கு ஒப்பம்தமான இயக்குனர் மணிகண்டன் அப்புறம் இருபது லட்சம் கறந்து விட்டாராம் ...இனி மணிகண்டனை  யாரும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள் 

570 கோடி ரூபாய் பணத்துடன் 3 லாரிகள் பலத்த பாதுகாப்புடன் கோவை கொண்டு செல்லப்பட்டது

கடந்த 13ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பாதையில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற அந்த லாரிகள் நிறுத்தி சோதனையிடப்பட்டது. லாரிகள் வந்த விதம், ஆவணங்கள் இல்லாதது, லாரிகளில் இருந்தவர்களின் நடவடிக்கைகள், பதிலில் சந்தேகம் இருந்ததால் 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 3 லாரிகளும் கடந்த  3 நாட்களாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணமானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் கூறினர். எனினும் தேர்தல் நடைமுறை அறிவிக்கப்பட்டு அமலில் உள்ள தமிழகத்தில் இருந்து இவ்வளவு பெரும் தொகையை கொண்டு சென்றது ஏன் என்கிற சர்ச்சை உண்டானது.

அருந்ததி ராய் :எனது அரச துரோக இதயம் 2

ஆபத்தானதைச் சொல்வது போன்று உள்ளது. எனவே, பீமராவ் அம்பேத்கர் பின்னால் ஒளிந்து கொள்ள நினைக்கிறேன். சாதி ஒழிப்பு எனும் நூலில் 1936-ம் வருடம் அவர் எழுதும்போது, 'முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், இந்து சமூகம் என்பது ஒரு கற்பனை. இந்து என்பதே ஒரு அந்நிய பெயர். முஸ்லிம்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக பூர்வகுடிகளுக்கு (சிந்து நதியின் கிழக்கில் வாழ்ந்தவர்கள்) வழங்கிய சொல். எப்படி, ஏன் சிந்து நதியின் கிழக்கில் வாழ்ந்தவர்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம். பேரரசன், மன்னர் வகை அரசியல் 19ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் முடிவுக்கு வந்தது. பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல் செல்வாக்குப் பெற தொடங்கியது. முரண்நிலையாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய அரசுதான் இதை தனது காலனி நாடுகளில் அறிமுகப்படுத்தியது.

மழையையும் மீறி வாக்கு பதிவு எகிறியது...கட்சிகள் திகிலில் ? யாருக்காக? யாருக்காக? இது யாருக்காக?

தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 73.85 சதவீதஓட்டுகள் பதிவாகின. வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த போதும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து ஓட்டளித்தனர். இதனால் யாருக்கு வாய்ப்பு என தெரியாமல் கட்சிகள் பீதி அடைந்துள்ளன.தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட புகாரால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி
தொகுதிகளுக்கான தேர்தல் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மீதமுள்ள 232 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்தத் தொகுதிகளில் 65 ஆயிரத்து 486 ஓட்டுச்சாவடிகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் அதிகாலையிலே மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க குவிந்தனர்.

திமுக முன்னணியில் .. தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பு.. 4 Exit polls for clear DMK victory... one Exit poll for ADMK victory

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகளில் 4 திமுகவுக்கு ஆதரவாகவும் 1 அதிமுகவுக்கு ஆதரவாகவும் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. கனத்த மழை பெய்தபோதும் சுமார் 70% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் 5 நிறுவனங்கள் வெளியிட்ட இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் திமுகவுக்கு 4; அதிமுகவுக்கு 1 ஆதரவாக இருக்கிறது

நியூஸ்நேஷன் நடத்திய எக்ஸிட் போல் முடிவின் படி திமுக கூட்டணி 114 முதல் 118 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 95 முதல் 99 இடங்களில் வெல்லும்; தேமுதிக- மநகூ 14; பாஜக- 4 இடங்களிலும் இதர கட்சிகள் 9 தொகுதிகளிலும் வெல்லும் என்கிறது.

ஜெர்மனியின் நாஜிகளைவிடவும் மோசமானவர்களாக இந்துத்துவர்கள் இருக்கிறார்கள்

ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு சார்பாக 'ஜனநாயகத்தின் அச்சுறுத்தல்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்தில், டில்லி ஜாமியா மிலியா கல்லூரியின் ஆசிரியர் மனிஷா சேத்தி, ஆந்திராவைச் சேர்ந்த புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் கல்யாண் ராவ், சென்னை எம்.ஐ.டி.எஸ்.ஐச் சேர்ந்த பேராசிரியர் லஷ்மணன் மற்றும் ஜெஎன்யு மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஷேலா ரஷீதா ஆகியோர் உரையாற்றினர். ஷேலா ரஷீதாவின் உரை அனைவரையும் ஈர்த்தது. அதன் முக்கியப் பகுதிகள் வருமாறு:கல்வி காவிமயம் குறித்து நாம் முன்பு பேசியபோது, 'எங்கே நடக்கிறது?' என்று கேட்டார்கள். இப்போது நம் கண்முன்னே அது நடந்து வருவதைப் பார்க்கிறோம். பாஜக ஆட்சியின் பாசிசம், முஸ்லிம்களை வேட்டையாடுவதில் மட்டுமல்ல; அனைத்து மட்டத்திலும் அது நடக்கிறது.

திங்கள், 16 மே, 2016

தபால் வாக்கு நிலவரத்தால் கலவரமானதா ஆளுங்கட்சி.......இது காவல்துறை கலகம்

தமிழகத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், போலீஸ் உயரதிகாரி ஒருவர் போட்ட ஒரு உத்தரவும், அதே உத்தரவை அவரே கேன்சல் செய்ததும் காவல்துறை வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் முடிவுகளை பொறுத்து இது பெரியளவில் எதிரொலிக்கும் என்று போலீஸ் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.
தமிழகக் காவல்துறை அதிகாரிகளில் சிலரை எதிர்க்கட்சியினர் பணியிடம் மாற்றக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் புகார் அளித்து இருந்தனர். அதில், சென்னையில் முக்கியப் பொறுப்பிலிருந்த ஒருவரும் அடக்கம். இதையடுத்து இடமாற்ற வேலையை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதில் அந்த உயரதிகாரி மீது தேர்தல் ஆணையம், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக நடவடிக்கை எடுத்தது.

கேரளாவில் 71 சதவீத வாக்குப்பதிவு: அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 78.49 சதவீத வாக்குகள் பதிவு

கேரளாவில் இன்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் சராசரியாக 71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 140 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் இருந்தே ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். கேரள கவர்னர் சதாசிவம், முதல் மந்திரி உம்மன் சாண்டி, கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, மத்திய முன்னாள் மந்திரி சசிதரூர், மாநில பா.ஜ.க. தலைவர் ஓ.ராஜகோபால், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

மேக்கப் இல்லாமல் வந்து ஒட்டு போட்ட சினிமா பிரபலங்கள்

தினமணி.com: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் 5.77 கோடி வாக்காளர்கள், தேர்தலில் போட்டியிடும் 3,728 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், அங்குள்ள 4 லட்சத்து 68 ஆயிரத்து 113 வாக்காளர்களைத் தவிர்த்து, 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 574 வாக்காளர்கள் திங்கள்கிழமை வாக்களிக்க உள்ளனர். அவர்களில், ஆண்கள், 2 கோடியே 86 லட்சத்து 36 ஆயிரத்து 94, பெண்கள் 2 கோடியே 90 லட்சத்து 92 ஆயிரத்து 778, மூன்றாம் பாலினத்தவர் 4ஆயிரத்து 702.

ஒரு வங்கிக் கிளைக்கு ரூ. 570 கோடியா?… ப.சிதம்பரம் ஆச்சரியம்


சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி அருகே உள்ள தனது சொந்த ஊரான கண்டனூரில் இன்று காலை ஓட்டுப் போட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் திமுக காங்கிரஸ் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். காரைக்குடி அருகே கண்டனூரில் ப.சிதம்பரத்திற்கு வாக்கு உள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அவர் வாக்களித்தார்.

கடைசி நிமிடத்தில் கண்டெய்னர் கடத்தல் ஏன்?' -எகிறும் 8 ரகசியங்கள்

திருப்பூரில் 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட மூன்று கண்டெய்னர்கள் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. 'பிடிபட்ட அன்றே எஸ்.பி.ஐ வங்கியின் மூத்த அதிகாரிகள் வெளியூருக்கு தப்பிச் சென்றது ஏன்?' என அதிர வைக்கிறார்கள் வங்கி ஊழியர்கள் சிலர். கோவை, ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து மூன்று கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை, திருப்பூர் வடக்குத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தார். அதிகாரிகள் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள்? என்று தெரிந்ததும் மூன்று லாரிகளும் வேகமாகச் சென்றுள்ளன.